நனைகின்றது நதியின் கரை 6 (2)

“என்னாச்சு ஜோனத்….சுகவிக்கு ஒன்னுமில்லையே….பாப்பாக்கு பசிக்குதா…?”

அவனை நோக்கி குழந்தைக்காக இயல்பாக நீள்கிறது இவள் கை. கண்ணில் நீர் முத்துக்கள் வடிய ஆட்காட்டி விரலை வாயில் வைத்து அழுத படி ஹயா, பார்த்தவுடன் புரிகிறது பசியில் குழந்தை.

“இல்ல நான் பார்த்துப்பேன்….உன்னை நம்பி குழந்தைய எப்டி கொடுக்க?” ஒற்றை கையில் குழந்தையை ஏந்தி அவளை ஆறுதல் படுத்த முயன்றபடியும், சுகவிதா அம்மாவுக்கு மொபைலில் அழைத்து ஏதோ கேட்ட படியும் அவன் கடந்து செல்ல….

அடிவாங்கியது போல் நின்றிருந்தாள் சங்கல்யா. இத்தனை நேரம் இவனோடுதான்  காரில் வந்தாளா? ஏதோ வேற்று உலகத்திலிருந்து தரை திரும்புவது போல் உணர்வு….சுகவியின் உடல் நிலை குறித்து கூட பதில் சொல்லாமல் போய்விட்டானே…

மெல்ல உறைக்கிறது தன்விஷயத்தில் இவளிடம் சற்று இலகுவாக இருப்பவன் அரண் சுகவிதா விஷயத்தில் இவளை நம்ப தயாராக இல்லை என. இவளை செக்யூரிட்டியை செக் செய்ய அனுமதித்தானே ….அதுவும் சரி தானே…..தான் வந்த வேலை ஞாபகம் வருகிறது.

‘சே…எதுக்கு வந்துட்டு…எதை பார்த்து ஏமாந்து போய் நிக்றேன்… அரணே இவ முன்னால நடிச்சுகிட்டு இருக்கலாம்…இவ வர்றதை இந்த ஜோனத் அவன்ட்ட சொல்லிருக்கலாம்… மாமனார்ட்ட இருந்து மீதி சொத்தையும் பிடுங்க கூட திட்டமா இருக்கலாம்…ஆம்ளைங்கள நம்பவே கூடாது….’ நினைத்துக் கொண்டவள்

‘இதவிட இந்த வீட்டை குடைய பெட்டர் ஆப்பர்சுனிட்டி எப்ப கிடைக்க..? ‘ தன்னைத் தானே உந்திதள்ளியபடி அவசர அவசரமாக அதே நேரம் சர்வ ஜாக்கிரைதையாக மாடியை நோக்கி சென்றாள்.

தரை தளத்திலிருக்கும் ஜோனத்தைவிட்டு விலகி இருக்க வேண்டும். பெரிய புத்திசாலி…..குழந்தைய தரமாட்டானாம்…நான் இப்ப மாடிக்குப் போறேன்…என்ன செய்வியாம் நீ….

மனதிற்குள் அவனிடம் மல்லுக்கட்டியபடி மாடியை அடைந்தாள்.

வீட்டிற்குள் வேலையாட்களே இல்லை போலும்…இவளை தடுக்க யாரும் இல்லை…

அங்கிருந்த அறைகளை ஆராய தொடங்கினாள். முதல் அறை வாசல் வழியை எட்டிப் பார்த்தாள் நத்திங் இன்ட்ரெஸ்ட்டிங்

அடுத்த அறை அரண் உடைமைகள்….உள்ளே நுழைந்து குடைய தொடங்கினாள். அவள் கையில் கிடைத்தது அந்த மெடிகல் ஃபைல்….அரணுடையது தான். அந்த ஆக்‌சிடெண்ட் பற்றியது.

நிச்சயமாக உருப்படியாக ஏதாவது கிடைக்கும்….எத்தனை பெரிய விபத்து அது. ஆனால் இவன் மட்டும் எளிதாய் தப்பிக் கொண்டான். இவனே திட்டமிட்டு செய்ததென்ற முழு நம்பிக்கை சற்றுமுன் வரை  இவளுக்கு உண்டு. இப்போது அதற்கு இன்னும் கொஞ்சம் ஆதாரம் தேவையாய் தோன்றுகிறது.  ஃபைலை திறக்கப் போனாள். அப்பொழுதுதான் அந்த செல்ஃபில் உள்ளிருந்த அந்த டைரி கண்ணில் பட்டது.

அது மட்டும் அரணுடையதாய் இருந்தால்….??? ஜாக்பாட் ….வேக வேகமாக அதை எடுத்து திறந்தாள். வாவ்…..வாவ்….வாவ்….வானத்தில் பறந்தாள். அது அரணுடைய இந்த வருட டைரிதான்… செல்ஃபில் வேறு என்னவெல்லாம் இருக்கிறதாம்? மீண்டுமாய் உள்ளே பார்த்தாள். முந்தைய வருடங்களுக்குடையதும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

இப்பொழுதைய டைரியை திறந்தாள். ஐயோ யாரும் வந்திடக்கூடாதே…..கட கடவென வாசிக்க ஆரம்பித்தாள்.

விது இன்னைக்கு முழுக்க உன்னைப் பத்தி நினைச்சுகிட்டு இருந்தத தவிர நான் வேற ஒன்னுமே செய்யலை தெரியுமா….? இப்படித்தான் தொடங்கியது அந்நாள் குறிப்பு.

அதென்ன அரசியல்வாதியின் சொத்து கணக்கு அட்டவணையா….? அதுக்கு மேல் படிக்க மனம் மறுகுகிறது அவளுக்கு.

காதல் வயப்படாத, ஏன் கன்னிநிலை கூட அடையாத வெம்பிய குழந்தை மனமல்லவா அவளது….அதில் காதலான ஆண் மன உணர்வுகளை எப்படிப் படிப்பதாம்? அதுவும் ஏதோ ஒருவகையில் சகோதரனாக உணரச் செய்பவனின் வார்த்தைகள் இவை……ஆனால் அனவரதனுக்கு பதில் இதைவிட வேறெங்கிருந்து கொடுத்துவிட முடியும்.

அப்பா கூட சொன்னாங்க….இதுக்கு எதுக்குடா அவள அனுப்புனன்னு…..நீ உங்கம்மாவுக்காக எவ்ளவு ஏங்குறன்னு புரியுது விதுக் குட்டி….அதனால மட்டும் தான் வேற வழி தெரியாம உன்னை  அங்க போகச் சொன்னேன்…..

இவள் கை நடுங்குகிறது. இதற்கு மேல் கண்டிப்பாய் முடியாது. தனக்கு வேர்த்துக் கொட்டுவதை அப்பொழுதுதான் உணர்கிறாள். உடலுக்கோ ஜுரம் வந்தது போல் உணர்வு.

அதே பக்கத்தில் கண்ணில் ப்ரபு என்ற வார்த்தைப் படுகிறது.

ப்ரபுட்ட சொன்னனா அவன் நீ சுகாவ அங்க அனுப்புனதுக்குப் பதிலா பேசாம ஆன்டிய கிட்நாப் செய்துட்டு வந்திருக்கலாம்னு இவ்ளவு லேட்டா ஐடியா குடுக்கான்….

அவளையும் அறியாமல் சிறு சிரிப்பு வருகிறது.

டைரியை மூடி வைத்துவிட்டாள். இதற்கு மேல் ம்கூம்.

அந்த மெடிகல் ஃபைலை திறந்து படித்தாள். அந்த விபத்திற்குப் பின் ஆறுமாதம் கோமாவிலிருந்திருக்கிறான் அரண். தெய்வமே! மீடியாவில் அரண் மூன்றே நாளில் வீடு திரும்பிவிட்டார் என்றல்லவா வந்தது?

ஆறுமாதம் கோமாவிலிருந்தவன் எழுந்த அடுத்த நாளே தன் மனைவியை தேடிப் போயிருக்கிறான்.

தன் தகப்பனின் ஞாபகம் வருகிறது. குமுறிக் கொண்டு வருகிறது இதயம். மீண்டுமாக டைரியின் சில பக்கங்களைப் படித்துப் பார்க்கிறாள். இப்படி பொய்யாய் கற்பனையாய் கதை எழுதக் கூட அன்பை அறிந்த ஒரு இதயம் வேண்டும்….

அடுத்த பக்கம்