நனைகின்றது நதியின் கரை 5 (7)

முந்திய மனகாட்சியின் தாக்கத்தை இவள் முழுதாக உணரும் முன்னமே, இப்பொழுது இந்த உனக்கு பிடிக்கலைனா வேண்டாமில் தொடங்குகிறது இன்னொரு காட்சி…….

“எனக்கு இந்த மேரேஜ் அரேஞ்ச்மென்ட் பிடிக்கலைனு சொல்லிகிட்டு இருக்கேன் மிஸ்டர். ஃபெலிக்ஸ்……..நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க….?”

“ம்……நீ தான் என் வைஃப்னு நான் யார்ட்டல்லாம் சொல்லிருக்கேன்னு சொல்லிகிட்டு இருக்கேன்….புரிஞ்சுகோ இது என் ப்ரெஸ்டீஜ் இஷ்யூ….என் சைட்ல இருந்து கல்யாணத்தை எந்த காரணத்தைக் கொண்டும் நிப்பாட்ட மாட்டேன்…..இனி உன் பக்கத்துல இருந்தும் நிப்பாட்ட விடமாட்டேன்….”

“ என்ட்ட சம்மதமே கேட்காம இதென்ன பைத்தியகாரத்தனம்?”

“உன் வீட்டைப் பொறுத்தவரை உன் அப்பாதான் ஃபைனல் அத்தாரிட்டி…அவரே சொன்ன பிறகுதான் அனவ்ன்ஸ் பண்ணேன்….”

“பட் நான் வேற ஒருத்தரை லவ் பண்றனே….”

“அது உன் ப்ராப்ளம்…நீ யாரையோ லவ் பண்ணிட்டங்றதுக்காக நான் அவமானப் படனுமா…? நோவே…. அதோட ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது பேப்பர்ல சுகவிதா அனவரதன் இதை செய்தா, கிரிகெட்டர் அரணை அப்டி திட்டினா…..இப்படி இன்டர்வியூ கொடுத்தா இந்த மாதிரி ட்ரஸ் போட்டானு நியூஸ் வருது….

இனிமே சுகவிதா ஃப்ராங்ளின் இப்படி செய்தா….அரணை அப்டி மூக்க உடைச்சான்னு வருமே….யூ வில் கேரி மை நேம் த்ரூ அவ்ட் த க்ளோப்….அதை என்னால விட்டுகொடுக்க முடியாது….….பை த வே எனக்கும் அரணை பிடிக்காது…”

“இப்டி கட்டாயத்துக்காக இஷ்டமே இல்லாம செய்ற கல்யாணத்தால உங்க நிம்மதியும் தான சேர்ந்து போகும்…?”

“ஐ’ம் லீஸ்ட் பாதர்ட் அபவ்ட் இட்…”

நினைவில் வந்த இரண்டு நிகழ்ச்சியில் சுகவிதாவுக்கு மொத்தமாய் புரிந்தது ஒன்று.

அவள் யாரையோ காதலித்து இருக்கிறாள். இவளுக்கும் அரணுக்கும் இடையில் பகை இருந்திருக்கிறது. அவள் அப்பா இவளுக்கு  திருமணம் ஏற்பாடு செய்த நேரத்தில் இவளைப் பழி வாங்கவென தூக்கிவந்து திருமணம் செய்திருக்கிறான் அரண்.

ஆனால் உள்ளத்திற்குள் அரண் மீது வரும் இந்த காதல் உணர்வுக்கு என்ன காரணம்????

ஒரு வேளை இவளுக்கு வினோதமான மனநோய் எதுவும் வந்திருக்கிறதோ…..? கடும் வெறுப்பை காதலாக உணருகிறதோ பிரண்டு போன மனம்?

கனவில் வந்த காட்சியை தவிர இவனைப் பற்றி ஏதாவது நல்லதாக நினைவு வந்திருக்கிறதா? நினைவில் வரும் இவன் செயல் யாவும் கொடூரம்….

ஐயோ இவள் நினைவில் வரும் யாரும் நல்லவர்களாக நம்பதகுந்தவர்களாக இல்லையே…..இவள் யாரைக் காதலித்தாள்? அவனுக்கு என்னவாயிற்று?

சட்டென பின் மண்டையில் ஒரு கீற்றாய் கோடாரி வெட்டாய் தொடங்கியது வலி.

‘ஓ தலை வலி வரக் கூடாதுன்னு……’

அடுத்த கோடாரி வெட்டு…..”ஆஆஆஆஆஅ” அலறினாள்.

‘டாக்டர் சொன்னாங்களே….’ அடுத்த வெட்டு….

தலையை இரு கைகளால் பிடித்துக் கொண்டு துள்ளினாள் அவள்.

பாய்ந்து வந்து அவளைப் பிடித்திருந்தான் அரண். “சுகவி….சுகவிமா…..என்ன ஆச்சுடா…”

“விடு…என்ன விடு….” அவள் இப்படி உதறுவாள் என அரண் எதிர்பார்த்திருக்கவில்லை, நிலை தடுமாறினான்.

அதற்குள் அவன் பிடியிலிருந்து விடுபட்டு கதவை திறந்து வெளியே ஓடினாள் சுகவிதா.

“என்னை பழி வாங்றதுக்காக வாட் அன் எக்ஸ்‌டண்ட் யூ’வ் கான்?…சாடிஸ்ட்….”கையில் கிடைத்த பூ ஜாடி ஒன்றை தூக்கி அரண் மீது எறிகிறாள்.

அதிலிருந்து தண்ணீர் அவன் முகத்தில். வெண்கல ஜாடியோ நங் என்ற சத்தத்துடன் தரையில் விழுகிறது.

“உன்ன அதுக்கு பே பண்ண வைக்காம விடமாட்டேன்…” அரணைப் பார்த்து கத்திக் கொண்டே நகர்ந்தவள் தான் யார் மீதோ இடிப்பதை உணர்கிறாள். திரும்பிப் பார்த்தால் ப்ரபாத் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டு இருக்கிறான்.

பின் தலையில் அடுத்த கோடாரி வெட்டாய் வலி.. இப்பொழுது மயங்கி விழுந்துவிட்டாள் சுகவிதா.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 6

 

One comment

Leave a Reply