நனைகின்றது நதியின் கரை 5 (6)

அவள் கண்ணில் தெரிந்தது எதிரிலிருந்த வாற்றோபிலிருந்த கண்ணாடி. அதில் இவள் முகமும், இவள் பின் படுத்திருக்கும் அவன் முகமும். அவன் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான்.

எழுந்திரு என்கிறது நியாயம்…..ம்கூம் என்கிறது காதல்….அவன் இதை எப்படி கையாள்வான் என பார் என்கிறது அறிவு.

அறிவும் காதலும் அரை விழுக்காடு ஒத்துப் போனதால் அப்படியே கண்மூடிப் படுத்துக் கொண்டாள்.

அவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். என்னதான் கண் மூடிப் படுத்திருந்தாலும் விழித்த பின் சலனமின்றி எவ்வளவு நேரம் படுத்திருக்க முடியும்? இவள் சலனம் உணர்ந்தோ அல்லது இயல்பாகவோ அவனும் விழித்தான்.

இவளைப் போல விழித்தபின்தான் அவனும் நிலை அறிந்தான் போலும். சிறு கீற்றாய் கண் விழித்து கண்ணாடியில் அவன் முக பாவம் பார்த்திருந்தவளுக்கு அது சந்தேகமின்றி புரிகிறது.

முதலில் ஒரு கணம் பதறியவன் மெல்ல எட்டி இவள் முகம் பார்த்தான். கண்களை மூடி தூங்கும் பாவம் இவளிடம். இவள் தூங்குவதை உறுதி செய்து கொண்டவன் மீண்டுமாய் அவன் படுத்திருந்த அதே நிலையில் படுத்துக் கொண்டான். அவன் முகத்தில் இப்போது  நிம்மதி.

அதே நேரம் இவள் மனமெங்கும் சந்தோஷம். அவன் எதிலும் நடிக்கவில்லை. இவளைப் போல இயல்பாக இந்த வினோத சூழ்நிலையை, இவர்கள் உறவை எதிர்கொள்ளத்தான் முயல்கிறான் என்ற புரிதல்.

மெல்ல தன் கையை அவள் மேலிருந்து மென்மையாக எடுத்துக் கொண்டான். பின் குழந்தை படுக்கை இருந்த திசையை திரும்பிப் பார்த்தான் அரண். ஹயா அழகாய் தூங்கிக் கொண்டிருந்தாள். மீண்டுமாய் தன் அருகில் தூங்கும் மனைவியைப் பார்த்தான்.

“ஐ லவ் யூடா விதுக்குட்டி….” வார்த்தைக்கு வலிக்குமோ என்பதுபோல் மிக மிக மென்மையாய் சொன்னான். பின் ஒரு பெருமூச்சு ஒன்று புறப்பட்டது அவனிடமிருந்து.

“ரொம்ப கஷ்டமா இருக்குது விது…..நீ என்னையவே அடையாளம் தெரியாம அன்னியமா பார்க்கிறதும்……அதோட நானே உன்னைய ஒரு தூரம் விலக்கி நிறுத்தி, எதையும் மனசுவிட்டு பேச முடியாம பழக வேண்டி இருக்கிறதும்….தாங்க முடியலைடா…..” சொல்லியவன் மெல்ல அவள் நெற்றியை நோக்கிக் குனிந்தான்

“விலகி நில்லுங்கன்னு யார் சொன்னதாம்…..?” எதிர்பாரா நேரத்தில் கண்விழித்துக் கேட்டாள் சுகவிதா.

நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருந்திருக்கவில்லை அரண். ஒரு கணம் அதிர்ந்து விலகியவன் பின்தான் அவள் வார்த்தையின் பொருள் உணர்ந்தான் போலும்….

உச்ச நிலை சந்தோஷம் அவன் முகத்தில்.

“விது!!!!!!!!!!! உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துட்டா விது….? என் விது….என் விது” அவளை நோக்கி சந்தோஷ புயலாக குனிந்தான்.

“இல்ல…..” இவள் எதிர்மறை சொல்லில் அவன் அப்படியே நின்று போனான்.

“பட் நீங்க என்னை லவ் பண்றீங்கன்னு புரியுதே….”

அப்படியே அசந்து போய் அவளைப் பார்த்தான்.

“நான் உங்களை லவ் பண்றேன்னு தெரியுதே…..”

“விதுக் குட்டி…” அவன் குரல் காதலின் விம்மலாய் வெளி வந்தது.

ஏனோ இவளுக்கு இன்னொரு “விழனும் டி நீ” கொடூரமாய் காதில் கேட்டது. சில்லிட்டது முதுகுத் தண்டு.

இப்பொழுது நிஜத்தில் இவளை நோக்கி காதல் கணவனாய் குனிகிறான். முகம் காதல் உரு. “காதல் இவ்ளவு பவர்ஃபுல்லானதுன்னு எனக்கு தெரியாது விதுக் குட்டி”

ஆனால் மனதிலோ வேறு ஒரு காட்சி. மன காட்சியில் இவளைப் பிடித்து இழுக்கிறான் அரண். மீசை முளைக்கா அவன் முகம் முழுவதும் கோப தாண்டவம் கொடூரம்.

நிகழ்வில் முத்திரையிட மிக அருகில் வந்த அவன் இதழ்கள் பாதியில் நின்றன. “பால்குட்டி இருக்ற இடத்துல…………..இது சரியில்லடா…….அதனால…..” சொல்லியபடி படுக்கையைவிட்டு இறங்கி இவளை கைகளில் அள்ளினான்.

மன காட்சியில் தரையில் அமர்ந்து “ஐயோ விடுங்க என்ன…….எனக்கு தண்ணினா பயம்…” என கத்தி கதறும் இவளை தரதரவென இழுத்துச் செல்கிறான்.

“நம்ம பெட் ரூம் போகலாமாடா….? பெருசா எதுவும் இல்ல… ஜஸ்ட் வான்ட்டு பி வித் யூ….அதோட அங்க உன் மனசு கஷ்டபடுற மாதிரி எதுவும் நடந்ததே கிடையாது…..வெளிய போகாம அடுத்த ரூம் போக அது மட்டும்தான் வழி….” இவள் அறையின் பக்க கதவிலிருந்த லாட்ச்சை திறக்கிறான் நிகழ்வில்.

மன காட்சியில் பள்ளி நீச்சல் குளத்திற்கு இழுத்துப் போகிறான். அவனும் பள்ளி சீருடையில், இவளும் தான். டார்க் க்ரே ஸ்கர்ட், வைட் ஷர்ட், டை.

நிகழ்வில் அடுத்த அறை அதாவது இவர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்து படுக்கையில் வைத்தான் இவளை மெத்தென மெதுவாக.

“ஐயோ…ப்ளீஃஸ்…..என்ன விட்றுங்க….எனக்கு ஸ்விமிங்க் தெரியாது….தண்ணினா ரொம்ப பயம்…ப்ளீஸ்….ப்ளீஸ்…” கெஞ்சியபடி இவளை பிடித்து ஸ்விமிங் பூலின் உள் தள்ள முயலும் அவன் கரத்தை பிடித்துக் கொண்டு போராடுகிறாள்.  பயம்….. தவிப்பு…..

நிஜத்தில் மெல்ல குனிந்து நெற்றியில் முத்த விதைகள் நட்டான். “விதுக் குட்டிமா….” காதல் தாய்மையுடைத்து.

மனதில் “விடுறி என்ன…..விடு நீ….” அவன் கையைப்பிடித்துப் போராடியவள் கையை ஆக்ரோஷமாக உதறினான்.

இங்கு பெண்ணவள் கன்னங்கள் கண்டன கொண்டவன் இதழ் ஸ்பரிசங்கள்….”விதூ…..” தாய்மைக் காதல் நிறமாறும் இடம் மனைவியின் கன்னம்.

அன்று அவன் போராடிய இவள் இரு கைகளை ஒரு கையால் பிடித்து தன் பலத்தால் குளம் பக்கமாக திருப்புகிறான். தெரிந்துவிட்டது சுகவிதாவிற்கு இனி அவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என….ஆக குளத்தில்தான் இவள் மரணமா……அப்பா மடியில இனிமே படுக்க முடியாது…….அம்மாவ இனிமே பார்க்கவே முடியாது……மரணத்தை மனதில் அனுபவித்தாள்.

இதோ பிடித்து தள்ளியே விட்டான். “அப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆ”

அவன் சிரிப்பு சத்தம் தெளிவாக கேட்கிறது.

இங்கு இவள் இதழ்கள் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான் நிகழ்வில்……சங்கமக் காதல் தலைவன் மனதில்..

அன்று அதோடு முடியவில்லை அக் கொடூரம் எப்படி செய்தான் என தெரியவில்லை. அவள் முதுகுபுறம் அவன் பற்றியிருந்த அவள் சட்டை பகுதி கிழிந்து அவன் கையோடு…………உயிர் போவதை விட அதிகமாக வலிக்கிறது இது…..

அரணைத் பிடித்துத் தள்ளிக் கொண்டு எழும்புகிறாள் சுகவிதா இப்பொழுது….ஃஸ்கூல் டைம்ல என்ன செய்துருக்கான் இவன்?.” என்ன விடுங்க….”

”சாரிடாமா….உனக்கு பிடிக்கலைனா வேண்டாம்….” அரணுக்கு இவள் மனகாட்சி தெரியாது  என்றாலும் அவள் மறுப்பைக் கணடதும் உணர்ந்தவனாக விலகுகிறான்.

அடுத்த பக்கம்