நனைகின்றது நதியின் கரை 5 (5)

அங்கே போய் இவன் என்ன சொல்லப் போகிறான்? என்னதையும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்கள் இவனைப் பற்றி இவளிடம் பேசுவார்கள் தானே அப்பொழுது இவள் எப்படி முழிக்கப் போகிறாளாம்?

“அங்க உங்களப் பத்தி கேட்டாங்கன்னா நான் என்ன சொல்றதாம்….?”

“என்ன பத்தி அவங்களுக்கு தெரியாத விஷயம்ன்னு எதுவுமே கிடையாது…..அதனால அவங்க உன்ட்ட வந்துதான் என்ன பத்தி கேட்கனும்னு அவசியம் இல்லை…”

“ப்ச்….நீங்க சொல்லப் போற கதைக்கு…”

“கதையா….?”

“உங்க ஃபியான்சின்னு சொன்னா…..நமக்கு எப்டி பழக்கம்….என்ன ஏன்ன்னு எவ்ளவு கேட்பாங்க…..அதுவும் உங்கள பத்தி அவங்களுக்கு தெரியாத எதுவுமே கிடையாதுன்றப்ப…..எப்படி திடீர்னு லவ் அப்டின்னு….…”

திரும்பி அவளைப் பார்த்தான்.

“நம்ம ரெண்டு பேரும் ஓரளவாவது ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு தெரிஞ்சிருக்கனும்….மாத்தி மாத்தி உளரக் கூடாதே….”

வாவ்…..இதத்தான் இதையேத்தான் எதிர்பார்த்தேன் என் செல்ல சிக்ஸர்…..நானா என்னைப் பத்தி சொன்னா காதுகுடுத்து கேப்பியா நீ….

“நான் பிறந்தது நியூயார்க்ல…..” இயல்பாய் தன்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான் ப்ரபாத். முதன் முறையாக ஒரு ஆணிடம் அவன் சொந்த வாழ்க்கை பற்றி பேசினாள் சங்கல்யா.

“ அப்பா அங்க ஒரு  இண்டியன் ரெஸ்ட்டரண்ட் வச்சுருந்தாங்க…சின்னது….சுகா ஃபாமிலியும் நாங்களும் ஒரே அப்பார்ட்மென்ட்ல தான் இருந்தோம்….எனக்கு இளையவ அவ…ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம்…தென் நான் ஃபிஃப்த் க்ரேட்ல இருக்றப்ப அப்பா தவறிட்டாங்க….. அப்புறம் அம்மா அங்க ரெஸ்ட்டரண்டை சேல் செய்துட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க….

அதுவரைக்கும் அம்மா ஹவ்ஸ் வைஃப்….அம்மாவால அங்க தனியா சமாளிக்க முடியலை….இங்க வந்து டீச்சரா ஜாய்ன் செய்தாங்க…

அதே ஸ்கூல்ல நானும் படிச்சேன்….அங்க அரண் எனக்கு க்ளாஸ்மேட்…..6த்ல  இருந்து அவன் எனக்கு ஃப்ரெண்ட். தென் ஃப்யூ இயர்ஸ்ல சுகா அப்பாவும் இங்க மாறிவந்துட்டாங்க..”

“ஏன்…?”

இதற்குள் அவன் கார் அருகில் வந்திருந்தனர். தன் கார் கதவை திறந்து விட்டான் அவளுக்கு.

“ அவங்களுக்கு இங்க பிஸினஸ் எஸ்டாப்ளிஷ் செய்யனும்னு ஆசை…..அதுவரைக்கும் அவங்க ஒரு கம்பெனில எம்ளாயீதான்…அதோட அவங்களுக்கு யு எஸ் ல செட்லாகிறது பிடிக்கலை….”

“ஓ…” காரில் ஏறி அமர்ந்தாள் சங்கல்யா.

“அப்போ சுகா சிக்ஸ்த்  எங்க ஸ்கூல்ல ஜாய்ன் செய்தா….” அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவாறு சொன்னான்.

“சிக்‌ஸ்த்ல இருந்தே அரணுக்கும் சுகாக்கும் பழக்கமா….?”

“ம்….” சிரித்தான் ப்ரபாத். “அது ஒரு பெரிய கதை. அதை அப்புறமா பேசுவோம்……”

கார் சாலையில் ஓடத்தொடங்கியது.

ப்ரபாத் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனான். அவன் கிரிகெட் இன்ட்ரெஸ்ட், அவன் ரசனைகள், குழந்தைகால குறும்புகள், அவன் படிப்பு….முக்கிய நிகழ்ச்சிகள் என என்னவெல்லாமோ….

“உன்னைப் பத்தி சொல்லு….” இப்பொழுது இவளைப் பற்றி விசாரித்தான்.

“ம்…என்னப் பத்தி சொல்ல பெருசா ஒன்னுமில்லை…..எனக்கு அம்மா அப்பா கிடையாது….பாட்டி மட்டும்தான்…கொஞ்சம் முன்னால அவங்களும் போயாச்சு…இப்ப நான் அக்மார்க் ஆர்ஃபன்….”

திரும்பி அவளைப் பார்த்தான். “இப்டித்தான் உன்னைப் பத்தி இன்ட்ரோ குடுப்பியா…?”

பதிலின்றிப் பார்த்தாள் அவள். “அங்க போய் பாசிடிவா பேசு…அப்பதான் நீ சந்தோஷமா இருக்றமாதிரி தோணும்….”

இது எல்லாமே ஒத்திகை என்பதே மெல்ல அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வருகிறது.

“சாரி….இது ரிகர்சல்னு மறந்துட்டேன்…”

ப்ரபாத் தன் ஆர்வத்தை அவளுக்கு காட்டாமல் மறைப்பதில் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றான் என அவனுக்கே புரியவில்லை. ஆனால் முடிந்தவரை அதை காட்டாமல் அடக்கிக் கொண்டு மீண்டுமாய் அவளைப் பார்த்தான்.

ப்ரபாத் காரை அரண் வீட்டிற்குள் சென்று நிறுத்திய போது அவர்கள் எவ்வளவோ பேசி இருந்தார்கள். அவனை ஜோனத் என அழைக்கப் பழகி இருந்தாள் சங்கல்யா. காரணம் அரண் சுகவிதா வீட்டில் போய் திடீரென இவளால் அவனை ஜோனத் என அழைக்க எப்படி வரும்?

அனவரதன் மீதும் வல்லராஜன் மீதும் அடக்க முடியா கோபம் கொதித்துக் கொண்டு இருந்தாலும் அன்று அவளுக்கு ப்ரபாத் மேல் அப்படி எதுவும் பெரிதாக இருக்கவில்லை. அவன் ஒரு  குடும்பத்தை இணைக்கத்தானே இதை செய்கிறான் என்ற நினைப்பு

ஆனால் மறுநாள் அவனோடு கோலாகலாமாக நிச்சயதார்த்தம் நடந்தபோதும் அதன் உள்நோக்கத்தை சங்கல்யா அறிந்தபோதும் உலகில் உள்ள அனைத்து மனிதர்களைவிடவும் அவனை அதிகமாக பிடிக்காமல் போனது அவளுக்கு.

ரவில் ஹயா தூங்கியபின் அவளை அவளுக்கான பேபி பெட்டில் படுக்க வைத்துவிட்டு அரண் படுத்திருந்த அதே மெத்தையில் படுக்கச் செல்லும் போது, இனம் புரியா ஒரு தயக்கம் இருந்தாலும், சுகவி மனதிற்குள் பரவி இருந்தது ஒரு வகை திருப்தியும் தாய்மையுமே.

மீண்டும் விழிப்பு வரும் போது மனதில் அத்தனை ஒரு இலகுவான உணர்வு, பாதுகாப்பு நிலை. நிம்மதி. சுகம். கண் திறக்கும் முன்னே வந்த அரை குறை உணர்விலேயே புரிந்துவிட்டது அவள் படுத்திருக்கும் நிலை.

அரணை அரணாக்கி அவன் மார்புக்குள் இவள் முதுகை பதித்து, அவனுக்குள் இவள் சுருண்டிருக்க, இவள் இடைவழியாய் ஓடிய அவன் கை இவளை அரவணைப்பாய் தாங்கி என் நிலையிலும் உன்னை கைவிடேன், விலகேன் என்ற காதல் செய்தியை செயலாய் பகர்ந்திருக்க

அந்த அவன் கை மீதே அவன் செய்திக்கு பதில் செய்கையாய் இவள் கை ஓடி அவன் கையை இவள் இடையோடு சேர்த்து இணைத்திருந்தது. தூக்கத்தில் அவளை அறியாமல்…..

கிழக்கிலிருந்து மேற்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் விலகிப் போயிருந்தது மனதிலிருந்த காயம் கோபம், கேள்வி குழப்பம் யாவும். அவர்களுக்குள் உள்ள  காதல் தவிர அனைத்தும் கண்காணா செவி கேளா தொலைவு தூரமாகிப் போயிருக்க

மெல்ல கண்விழித்துப் பார்த்தாள். அவன் முகத்தை எப்படி எதிர் கொள்வதாம்? வெட்கம் வருகிறதே…..

அடுத்த பக்கம்

Advertisements