நனைகின்றது நதியின் கரை 5 (4)

என்ன சொன்னான் இவன்? அவன் சொன்ன எங்கேஜ்மென்ட் கதை ஞாபகம் வரும்போதே இங்கு அவன்  பேசத்தொடங்கிவிட்டான்.

“என் ஃபியான்சிங்க்றத தவிர வேற என்ன காரணத்தை சொல்லி உன்னை நான் என் ஃப்ரெண்ட் வீட்ல தங்க வைக்க முடியும்? அதுவும் சுகா பிறந்ததுல இருந்தே எனக்கு பழக்கம்ங்கிறப்ப….” அதே அமைதியான பேச்சு.

சங்கல்யாவின் மூளை கொஞ்சமாய் இவன் சொல்லிய கோணத்தில் யோசிக்கத் தொடங்கியது. ஆமால்ல….இல்லைனா எப்டி இவளை அரண் உள்ள சேர்க்கிறதாம்…?

“ஸோ நீங்க கேட்டது ஆக்டிங்க் தானா…?” பல்ப் பாவத்துடன் லுக்விட்டாள் சங்கல்யா.

அவனோ அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்.

தேவையில்லாம இவன்ட்ட சண்டைபோட்டு இப்போ ரெண்டு ஜந்துங்கட்ட போய் மாட்டிகிட்டேனா…? சங்கல்யா மனதிற்குள் மாநாடு.

இது கோர்ட்ஷிப் மைடியர்..…இதெல்லாம் உன்ட்ட சொல்ல முடியுமா ஸ்வீட்ஹார்ட் மனதிற்குள் சிரிப்போடு நினைத்துக் கொண்டான் அவன். வெளியே அதே அழுத்தமான லுக்.

இவள் மனதில் வல்லமை ராஜன் சொன்னது ஞாபகம் வந்தது. ஆக அந்த வல்லமை ராஜன் அனவரதன் இருவரிடம் இருந்தும் தப்பிக்க இதுதான் வழி. அனவரதன் சொல்வதை செய்து கொடுத்துவிடலாம்.

அதேநேரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இவள் பற்றிய வீடியோ வைத்து அவர் மிரட்ட முடியாயாதவாறு அவர்வீட்டு காரியங்கள் குறித்து இவள் எதாவது விடியோ செய்து வைத்துக் கொள்ள வேண்டும்…

பின்னால் இவள் இந்த வேலையை செய்து கொடுத்த பின்பும் அவர் இவளை மிரட்டாமல் இருக்க அது உதவும். ஆம்பிளைங்கள மட்டும் நம்பவே கூடாது

“அரண்ட்டயும் சுகவிதா மேடத்திட்டயும் மட்டும் அப்டி சொல்லப் போறீங்களா?” டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் தெரிந்தாக வேண்டுமே இவளுக்கு.

“சுகாவை விட அரண் மூத்தவன்..”

ஓ அவனை பேர் சொல்லகூடாதாமா? புரிந்துவிட்டது சங்கல்யாவுக்கு.

“அரண் சார்ட்டயும் சுகவிதா மேடத்திட்டயும்…மட்டும் சொ…”

“ என் ஃபியான்சி அரணை அண்ணானு சொல்ல வேண்டி இருக்கும்…” சொல்லிக் கொண்டே போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் ப்ரபாத். மேஜைக்கு எதிரிலிருந்த நாற்காலியைக் காண்பித்தான் இவளுக்கு.

‘ஆங்…..அண்ணாவா…..? ஹூம்….நாய் வேஷம் போட்டா குரைக்கத்தான செய்யனும்…?’ உள்ளுக்குள் நொந்து கொண்டாள் சங்கல்யா.

“அதோட இன்னொரு விஷயம்” இவள் போய் உட்காரவும் ஆரம்பித்தான் அவன்.

“அவங்க என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஃஸ்…..அவங்க நம்பனும்னா…. நீ  அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும்…”

கிட்டதட்ட முறைத்தாள். “தப்பா எதுவும் சொல்லலை….மத்தவங்க என்னை கூப்ட்ற அதே நேம்ல நீயும் கூப்டாதே….கொஞ்சம் ஸ்பெஷலா எதாவது நேம் வச்சுக்கோ….அங்க நான் இருக்கிறப்ப முடிஞ்சவரை நான் இருக்கிற இடத்துல நீயும் இரு…..அவங்க முன்னால என்ட்ட ஒழுங்கா பேசு….”

“ம்….”

“ஸோ இப்ப கிளம்பலாமா?”

குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள். “இப்பவேவா….?”

சின்னதாய் புன்னகைத்தான் ப்ரபாத். “நீட்டாதான் இருக்க….கிளம்பலாம்……” அழகா இருக்கன்னு சொன்னா ஆடிற மட்டியா?

இப்பொழுதும் முறைத்தாள்.

“என்ன?“

“அங்க போய் ஸ்டே பண்றதுன்னா நான் ஒன்னுமே எடுத்துட்டு வரலையே…..”

“அப்டி எதையும் எடுத்துட்டு வரக் கூடாதுன்னுதான் இப்பவே கிளம்புறதே….”

பல்லைக் கடித்தாள் அவள்.

“நோ கேமிரா…..நோ மொபைல்…..நோ கன்….நோ…” அவன் சொல்லிக் கொண்டு போக

“ஷட் அப்….நான் சொன்னது என் ட்ரெஸ்….”

“அதுக்கு நான் பொறுப்பு….”

“வாட்…?”

“ஆன் த வே ஷாப்பிங் கூட்டிட்டுப் போறேன்…யு ஷுட் பி இன் மை ஐ சைட் அதுதான் கண்டிஷன்….எந்த ஷாப் போகனும்…?”

“உங்க கூடயா…? நோ நோ….” இன்னர்கார்மென்ட்லாம் இவனை வச்சுகிட்டு எப்டி வாங்றதாம்? மனதிற்குள் தவிப்பு.

“அப்ப அரண் வீட்டுக்கு கிளம்பு….”

“எனக்கு ட்ரெஸ்?”

“ம்….அதுக்கு நான் என்ன செய்ய முடியும்…நீ தான் வரமாட்டேன்றியே… ?”

மாத்த ட்ரெஸ்ஸே இல்லைனு சொன்னா இவன் ஃப்ரெண்ட்ஸ்லாம் சந்தேகமே படமாட்டாங்களாமா? அந்த அனவரதன் ப்ளான் இவனால சொதப்புனா இவளுக்கென்னவாம்?

கடுகடு முகத்துடன் அவன் பின் நடந்தாள். அவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

“உன் மொபைல மட்டும் என்ட்ட குடுத்று….” நூல் அவன் கையில். இவள் பொம்மை. பொம்மலாட்டம் ஆடித்தானே ஆக வேண்டும்.

மௌனமாக அவனிடம் நீட்டினாள். அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து தன் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டான்.

அடுத்த பக்கம்