நனைகின்றது நதியின் கரை 5 (3)

நொடி நேரத்திற்குள் ப்ரபாத்தின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியை தாண்டி எகிறி ஏறியது சங்கல்யாவின் கோபம்.. அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தவள் எப்பொழுது எழுந்தாள் என அவளுக்கே தெரியவில்லை. ஆனால் எழுந்திருந்தாள்.

அவள் கண்ணில் தெரிந்தது முன்னிருந்த டேபிள். அதன் மீதிருந்த இரும்பாலான சிறு கிரிகெட் பேட். அலங்காரத்திற்காக வைக்கப் பட்டிருந்தது போலும். இப்போதைக்கு இது உதவும்….சட்டென உருவி கையில் எடுத்தாள். ஓங்கி அவனை நோக்கி….அடுத்த நொடி அதை தடுத்துப் பிடித்திருந்தான் ப்ரபாத்.

“வாய்ட்ட பேசிட்டு இருக்கப்ப கைக்கு என்ன வேலை….?” சற்று கடுத்திருந்தது அவன் குரல். வெப்ப மூச்சுகளாய் கோபம் மூச்சிரைக்க தன் முழு பலம் கொண்ட மட்டும் அந்த பேட்டை அவன் கைபிடியிலிருந்து உருவப் போராடினாள் சங்கல்யா. இப்பொழுது அதன் மீதான தன் கைப் பிடியை ப்ரபாத் ஒரு சுழற்று சுழற்ற அவன் கையோடு போனது அந்த இரும்பு பேட்.

“சம்மதம்னா சரின்னு சொல்லு….இல்லைனா இல்லைனு சொல்லு….இது என்ன கை நீட்ற பழக்கம்….?”

“என்னைப் பார்த்தா எப்டி தெரியுது….?” கர்ஜித்தாள் அவள்.

“ம்….பணத்துக்காக என்ன வேனாலும் செய்றவன்னு தெரியுது…..”

“வாட்…?”

“பிறகு…..இப்ப பணத்துக்காகதான இவ்ளவு தூரம் என்னை தேடி வந்திருக்க?”

இருந்த கோபத்தில் இதற்கு என்ன பதில் சொல்லவென்றே தெரியவில்லை சங்கல்யாவுக்கு. அறைக் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினாள் அவள். அவள் சென்ற பின்பும் ஆடிக் கொண்டிருந்த கதவைப் பார்த்தான் ப்ரபாத்.

ண்மண் தெரியா கோபத்தோடு வேக வேகமாக நடந்து கொண்டிருந்தாள் சங்கு. பக்கத்தில் ஆட்டோ எதுவும் தட்டுபடுதா? என்ன இந்த அனவரதன் இவ்வளவு கேவலாமா இப்டி ஒரு பொறுக்கிட்டப் போய் மாட்டிவிட்டுட்டு போய்டாரே…?

அதே நேரம் அவளது மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். வல்லராஜன் ….அவளது சேனல் ஓனர். இணைப்பை ஏற்றாள்.

“குட்….” இவள் தொடங்கும் முன் வெடித்தார் அவர்.

“என்ன குட்…ஒன்னும் குட் இல்ல….எல்லாம் நாசமா போச்சு…. நல்லா வருது வாய்ல….உன்னை என்ன சொன்னா நீ என்ன செய்து வச்சிருக்க….?”

“சார்…”

“என்ன சாரு…மோர்லாம்….என்னை நடுத்தெருவுல நிப்பாட்ட எத்ன நாளா திட்டம் போட்ட…?”

“அப்டில்லாம் இல்ல சார்…”

“ஓ அப்டினா அதோட நிறுத்தாம கொன்னு குழிலயே இறக்கிடலாம்னு திட்டமோ…?”

“சார் என்ன விஷயம்னு சொல்லுங்க…இல்லனா லைன கட் பண்ணிடுவேன்….” இவ்ளவுதான் சங்கல்யாவின் பொறுமை.

“ஏய் என்ன நீ….ஒரு மரியாதை…”

“சார் விஷயத்துக்கு வாங்க…”

“என்ன விஷயம்னு சொன்னாத்தான் தெரியுமோ…சின்னதாவா செய்து வச்சிருக்க…..?”

“சார்…”

“அந்த அனவரதன்ட்ட போய் வல்லமை சேனல்ல இருந்து அவர் மகளோட வீட்டை உளவு பார்க்கப் போறதா சொல்லி வச்சிருக்க….அவருக்குத் தெரியாம செய்யுன்னு சொன்னா…அவர்ட்டயே சொல்லிருக்க….”

“அது சும்மா…அப்டின்னா …” இவளை பேச விடவில்லை அவர்.

“சும்மாவா…..அதுவும் நீ பேசுறதை வீடியோ ரெக்கார்ட் வேற செய்யவிட்டுறுக்க”

“வாட்…?” இது நிச்சயம் சங்கல்யா எதிர்பாராதது. அவள் தான் யார் என சொல்லாமல்தான் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தாள் அனவரதனைப் பார்க்க. அப்படி இருக்க இவ்வளவு முன்னேற்பாடாய் அவர் எப்படி..?

“என்ன சத்தம் மூச்சை காணோம்…? அவர் அதை வச்சுகிட்டு இப்போ நம்ம சேனல் மேல கேஸ் போட போறாராம்….300 கோடி நஷ்ட ஈடு கேட்க்றார்….”

“என்னது…?”

“ஆங்…இப்ப கேளு நொன்னது…? இது அவர் மகள் மருமகனோட மன நிம்மதியை கெடுக்குமாம்…அதனால அவங்க விளையாட்டு திறமை பாதிக்கப் படுமாம்….அதனால அவங்க ரெண்டு பேரோட வின்னிங் ரேட் குறையுமாம்…

ப்ரைஃஸ் மணி குறையுமாம்….அதனால அவங்களுக்கு கிடைக்கிற கமர்சியல்ஸ் குறையுமாம்…இது அவங்களுக்கான நஷ்டமாம்…அதோட நம்ம இன்டியன் ஃபேன்ஸ் டிசப்பாய்ண்ட் ஆவாங்களாம்…அது இவங்க ஸ்பான்ஸர்சை பாதிக்குமாம்….இப்டி என்னலாமோ சொல்லி முன்னூறு கோடி கேட்கிறாங்க….”

“அதுக்கு நீங்க என்ன சார் சொன்னீங்க…?”

“ம்…வீட்டுக்கு வாங்க செக்கோட வெய்ட் செய்றேன்னு சொல்லிருக்கேன்….”

“சார்…”

“அட என்னமா நீ…? 300 கோடிக்கு நான் எங்க போக? இப்போதான் வளர்ந்து வர்ற சேனல் நம்மளோடது……ஊழலை துப்பறிய போனோம்னு இருந்தால் கூட பிரவாயில்லை….இப்டி காசிப்க்காக போனோம்னு தெரிஞ்சா…ஆடியன்ஸ் மத்தியிலயும்தான் நமக்கு என்ன நேம் இருக்கும்….இதோட என் சேனல் காலி…”

“என்ன சார் செய்யலாம்…?”

“என்ன செய்யலாமா…? ஒழுங்கா போய் அந்த அனவரதன்ட்ட இருந்து நீ அந்த விடியோவை காலிசெய்துட்டு வா…அத அவர் கால்ல விழுந்து செய்வியோ இல்லை கழுத்த பிடிச்சு செய்வியோ….ஆனா அவர் இனிமே என்னை தொந்தரவு செய்யக் கூடாது.

அவர் எதோ உனக்குன்னு ஒரு வேலை கொடுத்தாராமே அதை மட்டும் முடிச்சு கொடுத்துட்டன்னா கேஸ் போட மாட்டேன்னு சொன்னார்….அத வேணும்னாலும் செய்……அதுக்கு உனக்கு சம்பளத்தோட லீவ் வேணும்னாலும் தாரேன்…”

“இல்ல…அது என்னால முடியாது….”

“ஓ அப்டியா….அப்படினா உன்னையும் அந்த அனவரதனையும் சேர்த்து தப்பு தப்பா நம்ம சேனல்ல நானே நியூஸ் போடுவேன்….அதுல உங்களுக்குள்ள வந்த சண்டைல தேவை இல்லாம சேனலை இழுக்கீங்கன்னு ரீசன் சொல்வேன்….எது வசதின்னு நீயே டிசைட் செய்துக்கோ…”

விக்கித்துப் போய் நின்றாள் சங்கல்யா. இந்த வல்லராஜன் ஒரு ஓநாய் என அவளுக்குத் தெரியும். அது தன் கோரப் பற்களை இப்பொழுது இவளிடமே காண்பிக்கிறது. இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

கெஞ்சுவதால் இரக்கப்பட அனவரதனோ வல்லராஜனோ பெண் இல்லையே….ஆனால்…? இரண்டு  பெரிய ஜந்துகளிடமிருந்து இவள் தப்ப வேண்டுமானால் ஒரே வழி…அந்த ஜந்துகளை தங்களுக்குள் மோதவிடுவதுதான்….

மீண்டுமாய் அனவரதன் அலுவலகம் நோக்கி ஆட்டோ எடுத்தாள். அவரிடம் இந்த வல்லராஜன் மிரட்டலை சொல்லலாம்.

அப்படி ஒரு செய்தி ஒளிபரப்பாகினால் இவளுக்கு மட்டுமா அவமானம்? அவருக்கு ஒன்றும் இல்லையாமா?

ஆனால் மான அவமானத்தைப் பத்தி பயப்பட அவர் என்ன பெண்ணா? அவர் அலுவலகத்தை சென்றடையும் போது நம்பிக்கை காணாமல் போயிருந்தது சங்கல்யாவுக்கு.

நிச்சயமாய் வழி தெரியவில்லை. ஆனாலும் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது பேசிப் பார்க்கலாம். குறைஞ்ச பட்ச்சம் நல்லா திட்டவாவது செய்யலாம்….

அனுமதியின்றி அவர் அறைக் கதவை பட்டென்று திறந்துகொண்டு நுழைந்தாள். “உங்க பொண்ணு நியூஸ் மட்டும் மீடியாவுக்குப் போய்ட கூடாது….ஆனா என்னைப் பத்தி யார்னாலும் என்ன வேணாலும் நியூஸ் போடலாம் என்ன?” வெடித்துக் கொண்டே கதவை தன் பின் அறைந்து சாத்தினாள்.

அந்த கதவு தாழ்போடும் சத்தம். தூக்கிவாரிப் போட அவள் திரும்பிப் பார்த்தால் தாழிட்ட கதவின் மீது சாய்ந்தபடி மார்புக்கு குறுக்காக கட்டிய கைகளுடன் நின்றிருந்தான் ப்ரபாத்.

எதிரில் இருந்த அனவரதன் இருக்கையோ காலியாய்…கண்மண் தெரியா கோபத்தில் இதை இவள் கவனிக்கக் கூட இல்லை. இப்படி வந்து மாட்டிக் கொண்டாளே…

“டேய்…..கதவ திறடா….நான் சத்தம் போடுவேன்….” உள்ளுக்குள் உதற ஆரம்பித்திருந்தது சங்கல்யாவுக்கு. ஆனால் மகா தைரியமாய் காண்பித்துக் கொண்டாள்.

“உனக்கு எப்டியோ……?என்னோடவள தவிர யாரையும் என் மனசால கூட நான் தொடமாட்டேன்…..”

வாய் பேசியதே தவிர சிறு அசைவு கூட அவனிடம் இல்லை.

என்ன சொல்லிவிட்டான் இவன்? முதலில் பணத்திற்காக எதையும் செய்பவள் என்று சொன்னவன் இப்பொழுது????

“ ஆமா…நான் கண்டிப்பா உங்கள மாதிரி கிடையாது…..இப்டி உள்ளவிட்டு பின்னால பூட்டிட்டு…. உத்தமி நான்னு டயலாக் அடிக்க……”

“ம்…பேசிகிட்டு இருக்கப்பவே ஓடிப் போறவங்கட்ட பேசனும்னா கதவை பூட்டதானே  வேண்டி இருக்குது”

“ம்…ஓட வைக்றமாதிரியான விஷயத்த பேசாம இருந்தா கூட போதும்….ஏன் ஓடுறாங்களாம்?”

“நான் உன்ட்ட என்ன சொன்னேன்…..?” மிக மிக அமைதியாய் கேட்டான் அவன்.

கோபம் அக்னியாய் சங்கல்யாவிற்குள் கொழுந்துவிட்டு எரிந்தாலும் கவனம் அவன் கேள்வியில் சென்றது. அதை அவன் கேட்டவிதம் காரணமாயிருக்கலாம்.

அடுத்த பக்கம்