நனைகின்றது நதியின் கரை 4(5)

ரளவிற்கு மேல் தூக்கம் வராமல் இருட்டு அறையில் படுத்திருக்க முடியவில்லை.லைட்டை ஆன் செய்தால் ஹயா விழித்துவிடுவாளே. ஆக தூங்கும் மகளை விலகி ஒரு முறைக்கு இரு முறை பார்த்து அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள் என உறுதி செய்து கொண்டு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

என்ன செய்யலாம்? சிறிது நேரம் அங்கேயே நின்றாள்.

வெளியே தோட்டத்திற்கு போகலாம். ஆனால் கதவு பூட்டி இருக்குமே…மாடி நோக்கி சென்றாள். அங்குள்ள அறை பால்கனியில் போய் நிற்கலாம் சிறிது நேரம்.

மாடியில் இருந்த அறைகளில் இரண்டாவது அறைக்கு சென்றாள். அங்கிருந்து தான் தோட்டம் நன்றாக தெரியும் என்று தோன்றியது.

அறை ஏனோ வெறுமையாய் இருப்பதாய் தோன்றியது. ஒரு சோஃபாவும் கம்ப்யூட்டர் ஏந்திய மேஜையும் அவ்வளவே…..மற்றபடி இருந்த பொருட்கள் அகற்றபட்டிருந்த அடையாளங்கள்.

போட்டோக்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இவர்களும் இவள் அப்பா போல்தானோ…?

இவளுக்கு தானாக விஷயங்கள் நியாபகம் வர வேன்டும் புகைப் படங்களை காண்பிக்க வேண்டாம் என சொன்னதும் அவரும் மருத்துவ மனையிலிருந்து இவளை வீட்டிற்கு கூட்டிச்செல்லும் முன் வீட்டிலிருந்த எல்லாவற்றையும் இப்படித்தான் கழற்றி மறைத்திருந்தார்.

ஆனால் இவளுக்கு இப்படி ஒரு நிலை என இந்த அரண் வீட்டிற்கு எப்படி தெரியும்??

யோசிச்சு ஒரு ப்ரயோஜனமும் இல்ல….பால்கனிக்காவது போகலாம்…

இவள் பால்கனி கதவின் தாழ்பாளை நீக்கும் போதே காதில் ஏதோ பேச்சுக் குரல் கேட்கிறது வெளிபுறம் தோட்டத்திலிருந்து.

கிசு கிசு ஆண் குரல். “யாரோ வர்றாங்க…..அந்த லூசு போல…..அவட்ட மாட்டினா அவ்ளவுதான்…” சொல்லிக்கொண்டே எங்கோ யாரோ ஓடும் சத்தம். இவளைத்தான் சொல்கிறான் போலும்…இவள் கதவு திறந்து பால்கனி சென்று பார்க்கும் போது சுவர் ஓரத்திலிருந்த புதர் போன்ற க்ரோட்டன்ஸ் அசைவது தெரிகிறது அங்கு யாராவது நிச்சயம் இருக்க வேண்டும்.

யார் அது? அதுவும் இந்த நேரத்தில்? நேரத்தைப் பார்த்தாள் இரவு 2 மணி. ஏன் ஓடி மறைகிறார்கள்? கதவை திறந்து வெளியில் போய் பார்க்கலாமா? வெளிக் கதவின் சாவி எங்கு இருக்கும்?

யோசனையுடன் வரவேற்பறை அடைந்த போது சாவி கதவில் ஆடிக் கொண்டிருந்தது. அதோடு கதவும் சற்று இடைவெளியிட்டு திறந்திருக்க அதன் வழியே கசிந்து கொண்டிருந்தது தோட்ட மின் கம்பங்களின் வெளிச்சம். அப்படியானால்????

மெல்ல பூனை நடையிட்டு தோட்டத்திற்கு வந்தாள் சுகவிதா. அவள் கழுத்தில் வந்து அமர்ந்தது ஒரு கை.

தொடரும்

நனைகின்றது நதியின் கரை 5

One comment

  1. Nice update sweeetu
    Liya voda pala mugangal arumai
    Ana paaavam braba Paiyan enna senjan
    Padiyilaye travel panna vachi avana oru vali pannitayp ha ha

Leave a Reply