நனைகின்றது நதியின் கரை 3 (6)

அடுத்த அரை மணி நேரத்தில் சங்கல்யா ஒரு அலுவலகத்தில் யாருக்காகவோ காத்து நின்று கொண்டிருந்தாள். அழைத்துச் சென்றிருந்தது அனவரதன்.

“வாங்கப்பா சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே….” ஆச்சர்யமும் ஆனந்தமுமாய் வரவேற்றான் அவன் அந்த எதிர்பாராத விருந்தாளியை. வரவேற்றவன் ப்ரபாத் ஜோனதன் வரவேற்கபட்டவர் அனவரதன்.

“இல்ல…எனக்கு ஹெல்ப் வேணும்னா நான்தான் வரணும்….நீதான் இப்போ ரொம்ப பெரிய ஹீரோ ஆகிட்டியே….நான் தான் வில்லனாச்சே….”

“சே…ஒரு நாளும் நாங்க யாருமே உங்களை அப்டி நினச்சது இல்லப்பா….சுகா வீட்டுக்கு வாங்களேன்…”

“ ம்…பார்ப்போம்….அதுக்குத்தான் இப்போ ஒரு ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன்…”

“சொல்லுங்கப்பா…. செய்ய முடிஞ்ச எதுனாலும் செய்து கொடுக்கிறேன்…”

சங்கல்யா பற்றி சொல்லி முடித்தார். “சுகாவும் கூட வந்து தங்க ஆள் கேட்கிறா….ஒரு பேபி சிட்டரையும் இந்த ஜர்னலிஸ்ட் பொண்ணையும் நீ தான் உள்ள கொண்டு போய்விடனும்….இந்த ஜர்னலிஸ்ட் கொடுக்கிற ரிப்போர்ட்டை பார்துட்டு அப்புறமா நான் வரதா வேண்டாமான்னு முடிவு செய்யலாம்…”

“என்னப்பா இதுக்கு போய் ஜர்னலிஸ்ட்லாம்…..சுகாவோட பெர்சனல் மொமன்ட்ஸ்லாம் மீடியாவுக்கு போனா…..? நல்லா இருக்காதுப்பா….”

“அப்படி எதுவும் போகாம இருக்க வழி இருக்குது… என்னால முடிஞ்சதை நான் செய்றேன்……அதே மாதிரி நீயும் பார்த்துக்கோ…. இப்போதைக்கு அவ கைல மொபைல் தவிர எதுவும் இல்லை…..செக்யூரிட்டி செக் செய்துதான் கூட்டிட்டு வந்தேன்…”

சற்று நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு அவளை உள்ளே அழைத்தார் அனவரதன்.

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சங்கல்யா சற்றும் எதிர்பார்க்காத ப்ராபாத்தைப் பார்த்து அதிர்ந்து போனாளாயின் ப்ரபாத்தின் கண்களிலோ ஆச்சர்யமும் சிறுகுறும்பும் வந்து நின்றது. ஏனோ  ‘கிணறுதான் தேடி வந்து தாண்டனும்’ என்று அவன் சொன்ன வார்த்தைகள் இப்பொழுது ஞாபகம் வருகின்றது அவனுக்கு……

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 4

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply