நனைகின்றது நதியின் கரை 3(5)

ஒருவழியாக என்னவெல்லாமோ செய்து ஒருவழியாக மகளை தூங்க வைத்த பின் குளித்து உடை மாற்றி படுக்கையில் விழுந்தவள் தூங்கிப் போனாள். மெல்ல விரிந்தது ஒரு கனவு.

இதே வீட்டின் வெளியிலிருக்கும் பரந்த புல் வெளியில் அந்த மாபெரும் கோட்டை சுவரை நோக்கி ஓடுகிறாள். சாக்லெட் நிறத்தில் ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருக்கிறாள்…..

அவ்வப் பொழுது தன்னை யாரும் துரத்துகிறார்களா என பின்னால் திரும்பி திரும்பிப் பார்த்து ஓடுகிறாள். ஆனால் பயத்திலோ தவிப்பிலோ அல்ல. மகிழ்ச்சி, குதுகலம், கும்மாளம், குறும்பு அனைத்தும் அவளிடமாக…..

அந்த கோட்டை சுவருக்கு சற்று அருகில் சென்றவள் அதன் அருகிலிருக்கும் அந்த ராட்ஷச மரங்களின் கிளையில் எதைக் கண்டாளோ…அதை ஒரு பார்வையும் பின் புறம் துரத்தும் நபரை தேடும் ஒரு பார்வையுமாய்….சட்டென அவள் நின்ற புல்வெளியில் அங்கெங்கு தரையிலிருந்து எழும்புகிறது சாரல்…..

சில்லென இவள் நனைய துவங்க முழு சிரிப்புடன் மீண்டுமாக பின்புறமாக கண் தேடுகிறது….ஆனால் பக்கவாட்டிலிருந்து எதிர் பாராமல் இவள் மீது பாய்ந்தவன் கரங்களில் மறுநொடி இவள். உணரும் முன் இவளை கைகளில் ஏந்தி இருந்தான் அவன். அரண்.

இவ்வளவு சிரிப்பவளா இவள்…அப்படி ஒரு சிரிப்பு அவளிடம்.

ஒரு டார்க் க்ரே ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட்டும் ஷார்ட்ஸுமாக அவன். அவனும் நனைந்து இருக்கிறான் இவளைப் போல.  நனைந்திருந்த அவன் அடர் சிகை அவன் முன் நெற்றியில் சில குட்டை கற்றைகளாக பிரிந்திருக்க….அதிலிருந்து அவன் முகத்தில் வடிகின்றன நீர் துளிகள்.

இவள் பார்வையின் மொத்த எல்லை அவன் முகம் மட்டுமே…..மகிழ்ச்சியின் மொத்த உருவமாக அவன். ஆண் என்ற பதத்தின் வரையறை இவன் தான்…. என்னவன்….

அவன் கழுத்தை சுற்றி இரு கைகளையும் அவள் கோர்க்க “மை சாக்கலேட்…” கைகளில் இருந்தவளை அப்படித்தான் அழைக்கின்றான் அவன் .

புரண்டு படுத்தாள் சுகவிதா. மெல்ல புரிகின்றது கண்டது கனவென….ஆனால் மனதிற்குள் இன்னும் அந்த கனவின் ரம்யமும் நிறைவும்….அனாதையாகிவிட்டேன் என்ற உணர்வு அடியோடு காணாமல் போயிருந்தது இப்பொழுது.

பெற்றோர் வீட்டிலிருக்கும் போது கணவன் என்ற ஒரு நினைவில் மனதில் நிறையும் அந்த நிறைவு இந்த நொடி இவளுள் பொங்கி வழிகின்றது…..

கனவிற்கும் நினைவிற்கும் ஏன் இத்தனை எதிர்மறை? ஏன் இப்படி ஒரு கனவு வருகின்றது இவளுக்கு????

ங்கல்யா தன் திட்டத்தை நிறைவேற்ற கிளம்பிவிட்டாள். வெள்ளையில் நீல வண்ணத்தில் சிறு சிறு வட்டங்களும் கொடிகளுமாய் வரையப் பட்டிருந்த அந்த காட்டான் சுடிதாரில் தான் எப்படி இருக்கிறோம் என சில முறை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டாள் கண்ணாடியில். பார்த்தால் மரியாதை வரவேண்டும். இறக்கி இறுக்கிப் போட்டிருந்த போனிடெய்ல் ஓகே.

கறுப்பு நிற ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பியவள் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்த குறிப்பிட்ட நேரத்தில் நுழைந்தது சுகவிதாவின் தந்தை அனவரதன் அலுவலக அறையில்.

ஒரு ப்ராஜக்ட் பத்தி பேச வேண்டும் என்று தான் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தாள்.

அனவரதன் ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் இஞ்சினியர். யு எஸ்ஸில் வேலை பார்த்தவர் சில வருடம். பின் சென்னையில் வந்து ஏ எஸ் சொல்யூஷன்சை ஆரம்பித்து இருந்தார்.

அது இன்று ஆல மரமாக வளர்ந்திருந்தது. அதோடு மகளின் சம்பாத்யம் வேறு. தமிழ்நாட்டில் பெரும் செல்வந்தர்களில் முக்கிய இடம் வகிப்பவர்.

இவள் ப்ராஜக்ட் என்றதும் ஏதோ எண்ணி இருப்பார். சங்கல்யாவோ நேராக விஷயத்தை ஆரம்பித்துவிட்டாள்.

“சார்…மீடியால இருந்து உங்க ஃபாமிலியை டார்கட் செய்துருக்காங்க…..அதை பத்தி உங்கட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்…”

ஒரு கணம் அதிர்ந்து பின் கடுமையாய் கொத்தித்தவர் முகம் இரு நிமிடத்தில் இரும்பு நிலை கண்டிருந்தது.

கோபம் வந்தாலும் பொண்ணுங்களை திட்ட மாட்டாரா? இல்லைனா மீடியாவுக்கு அவலாகிட கூடாதேன்னு முன்னெச்செரிக்கையா? எதோ ஒன்னு நான் தப்பிச்சேன்

“இதுல உனக்கென்ன லாபம் மிஸ்…?”

“சங்கல்யா….மிஸ்.சங்கல்யா….எனக்கு இதுல நிச்சயமா ப்ராஃபிட் இருக்குது சார்….பட் அதை உங்களுக்கும் ஃப்ராஃபிட்டாக்கத்தான் வந்தேன்…”

“சொல்லு…”

“ரொம்ப நாளாவே உங்க மகளுக்கும் மருமகனுக்குமிடையில் எதோ நடக்குது…அப்பப்ப சில சில மீடியாவுக்கு வந்திருந்தாலும் அவங்க ரெண்டு பேர் லைஃபும் மக்களை பொறுத்தவரை அறியாத விஷயம்தான்.அதோட மக்கள் அறிஞ்சுக்க துடிக்கிற விஷயமும் கூட. எந்த சேனல்ல இருந்து அவங்களை பத்தி, அவங்க பெர்சனல் லைஃப் பத்தி ப்ரோக்ராம் செய்தாலும் ஃஸ்பான்ஸர்ஸ் கொட்டி கொடுப்பாங்க…ஏன்னா மக்கள் ஸ்டார்ஸ் ரெண்டு பேர் மேலயும் அவ்ளவு க்ரேஸா இருக்காங்க….

சோ நான் இந்த ப்ரோக்ராம் செய்து தரலைனு சொன்னாலும் எங்க சேனல்ல இருந்து இன்னொருத்தரை அனுப்பி இதே ப்ரோக்ராமை செய்து டெலிகாஸ்ட் செய்வாங்க…அதனால நான் இதை செய்து தராதா ஒத்துகிட்டு இங்க உங்களைப் பார்க்க வந்திருக்கேன்……

உங்களுக்கு உங்க மகள் விஷயம் இப்டி மீடியாவுக்கு வரது பிடிக்காதுன்னு எனக்கு தெரிஞ்சிது….அதான் உங்களை மீட் செய்ய வந்தேன்….நான் என் சேனல் கேட்கிற மாதிரி உங்க டாட்டர் லைஃப் பத்தி ஒரு ப்ராஜக்ட் செய்து உங்கட்ட கொண்டு வந்து கொடுக்கிறேன்…

அதில் எது எங்க மீடியாவுக்கு வரனும்னு நீங்க சொல்றீங்களோ அதை மட்டும் நான் மீடியாவுக்கு கொடுக்கிறேன்…..நீங்க வேண்டாம்னு சொல்றது வெளிய வராது….எங்க சேனல் எனக்கு இதுக்கு ஃபிக்ஸ்‌ செய்துருக்க பேக்கேஜை நீங்க எனக்கு கொடுத்துடுங்க… அதோட எனக்கு இன்னொரு ஹெல்ப்பும் வேணும்…” நிறுத்தி அவர் முகத்தைப் பார்த்தாள்.

“டீல் ஓகே….மேல சொல்லு…வேற என்ன…?” நிச்சயமாக அவர் இவ்ளவு எளிதாக இதற்கு சம்மதிப்பார் என எதிர்பார்த்திருக்கவில்லை சங்கல்யா. இதில ட்ராப் எதுவும் இருக்குமோ…? உள்ளே யோசித்துக் கொண்டே

“உங்க பொண்ணு வீட்டுக்குள்ள நான் போறதுக்கு நீங்க எனக்கு ஒரு பாஸ் அரேஞ்ச் செய்து கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்….” கேட்டாள்.

“இதுக்காகத்தான் நீ என்னைப் பார்க்க வந்துருப்ப….ஆம் ஐ ரைட்…? இல்லைனா இந்த கேள்விக்கு நான் சொல்ற பதிலை வச்சு எங்க ரிலேஷன்ஷிப் எப்டி இருக்குதுன்னு ஆழம் பார்ப்ப?”

“……….”

“பட் எனக்கும் இப்போ உன்னை மாதிரி ஒரு ஆளோட தேவை இருக்குது….சோ நீ கேட்ட மாதிரி உன்னை உள்ள அனுப்பி வைக்கிறேன்…..அதோட உன் வார்த்தையை எப்படி என்ட்ட காப்பாத்த வைக்கிறதுங்கிறதும் எனக்கு தெரியும்…

நீ சொன்ன படி உண்மையா இருக்கிற வரைக்கும் என்னால உனக்கு எந்த ப்ரச்சனையும் கிடையாது….”

“கண்டிப்பா சார்…”

அடுத்த பக்கம்