“என்ன செய்துமா….? கதவை திறடா….ப்ளீஸ் மா… தலை வலிக்குதாடா..?”
“அந்த டேபிள் ட்ரால உன் டேப்லட்ஸ்லாம் காமிச்சேனே….. அதுல உள்ள அந்த பீச் கலர் கேப்சூலை சாப்டு…ப்ளீஃஸ் எதாவது சொல்லேன்….”
அதோடு இப்பொழுது அவன் தந்தை மற்றும் ப்ரபாத்தின் குரலும் அவனருகில்…..
“உன் ரூம்ல போய்….”
”இல்ல என் ரூம் கீ யும் அவட்ட தான் இருக்குது….பால்கனிக்கு கூட ஏணி வச்சு கீழ இருந்து ஏறினாதான் உண்டு….”
இவன் விளக்கமும் “தென் ஐ ‘ல் டூ தட் “ என்ற ப்ரபாத்தின் சத்தமும் கேட்க போய் கதவை திறக்கிறாள் சுகவிதா.
“ஐ ம் ஆல்ரைட்…..பெல்லை குழந்தை கீழ போட்டுட்டா….”
அவள் பதிலில் மற்ற இருவரும் மௌனமாக திரும்பிப் போக இன்னுமாய் நின்ற அரணிடம்
“ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டு இப்டி ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்து உயிரெடுத்தா என்ன செய்றதாம் ?” என கொதித்தாள்.
அவன் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சி பரவுவதை அவளால் உணர முடிகிறது.
“தேங்க்ஸ் சுகவிமா….அவங்க போன பிறகு திட்னதுக்கு….”
“அது உங்க மரியாதைக்காக இல்லை..”
“தெரியும்…எதோ ஒரு வகையில் அவங்க மேல உனக்கு ஒரு மதிப்பு இருக்குதுன்னு புரியுது..”
அவன் சொல்வது சரிதானோ…?
“டேக் கேர்மா…” அரணும் சென்றுவிட்டான்.
உண்மையில் இவன் அறை சாவிதானா அது என முன்பு இருந்த சந்தேகம் இப்பொழுது தெளிவாக தீர்ந்திருந்தது.
இப்டில்லாம் நடிச்சா ஏமாந்துடுவாளாமா?
மீண்டும் தன் தந்தையை தொடர்பு கொள்ள முயன்றாள். ஏறத்தாழ அரை மணி நேர முயற்சிக்குப் பின் இணைப்பை ஏற்றார்.
“என்ன?” அவர் குரலில் இருந்தது கோபமா வெறுப்பா? ஆனால் நிச்சயமாக பாசம் கடுகளவு கூட இல்லை. இவளுக்காக துப்பாக்கி தூக்கி நின்றவர்….?
“வீட்டுக்கு வர்றியா?”
“இல்லைப்பா அவங்க …”
இவள் சொல்ல வந்ததை அவர் முழுவதுமாக கேட்க கூட இல்லை.
“தெரியுமே…” அவர் இணைப்பை துண்டித்திருந்தார்.
நொந்து போனாள் சுகவிதா. ஏன் இந்த அப்பா இப்படி இருக்கிறார்?
மீண்டும் சில முயற்சிக்குப் பின் இணைப்பை ஏற்றவர் “ஏன் உயிரை எடுக்ற?” வெடித்தார்.
“என் கூட அரணும் நம்ம வீட்ல வந்து இருப்பேன்னு சொல்றார்ப்பா… குழந்தையை தரமாட்டேன்னு அவங்க சொல்லுவாங்களோன்னும் இருக்குதுப்பா….ப்ளீஃஸ் கட் செய்துறாதீங்கப்பா…எனக்கு வேற யார்ப்பா ஹெல்ப் செய்ய முடியும்?”
“…………………..”
“டாடி….”
“நிஜமாத்தான் சொல்றியா?”
“ஆமா டாடி”
“இதை எப்டி நம்ப…?” இப்படி ஓரு கேள்வியா? கேள்வியின் தாக்கம் நொடியில் அனாதையாய் உணர வைத்தது அவளை.
“ஏன்பா….இப்டி கேட்டுடீங்க…? என் ஹெல்த் பத்தி உங்களுக்கு தெரியாதா டாடி…? அதோட உங்க கண்ணு முன்னாடி தான வந்து இழுத்துட்டு வந்தார்…? நான் கூப்ட முன்னால நீங்களே தேடி வந்திருக்கனும்……ஆனா இங்க நான் இத்தனை தடவை கூப்ட பிறகும்….இப்டி கேட்கிறீங்களே டாடி….?”
ஒரு நிமிடம் மௌனம்.
“டாடி…”
“ம் ..சொல்லு உனக்கு என்ன வேணும் இப்போ…? “
“எனக்கு தனியா இங்க சமாளிக்க முடியாது டாடி….ஹயா குட்டிய அந்த கூட்டத்தோட கைல என்னால விடவும் முடியாது….உங்க வீட்ல இருந்து யாரை வேணும்னாலும் கூட வந்து கூட்டி வந்து வச்சுக்கோன்னு சொல்றாங்க இங்க…..
நீங்களும் அம்மாவும் இங்க என் கூட வந்து தங்குங்களேன்பா….ப்ளீஸ்பா….எனக்கும் சேஃபா இருக்கும்….சீக்கிரமா ப்ரச்சனை இல்லாம என்னையும் ஹயாவையும் கூட்டிட்டு போய்டுங்கப்பா இங்க இருந்து….”
“……………..”
“டாடி…ப்ளீஸ் டாடி….பதில் சொல்லுங்க டாடி….”
“ம்….எதாவது அரேஞ்ச் செய்றேன்…”
“தாங்க் யூ டாடி…சீக்ரம் வங்க…வர்றப்ப என்னோட…”
“ ரொம்ப கற்பனை செய்யாத….நாங்க யாரும் அங்கல்லாம் வர மாட்டோம்….ஆனா உனக்கு கூட இருக்க நான் யாரையாவது ஒரு பொண்ணை ஏற்பாடு செய்றேன்…. அவ உங்க வீட்டு நிலமை பத்தி என்ன சொல்றாங்கிறதை வச்சு,அப்புறமா அடுத்து என்ன செய்யலாம்னு பார்ப்போம்….”
“டாடி….?”
“இதுக்கு மேல எதிர்பார்க்காத சுகா..என்னால இவ்ளவுதான் முடியும்….” இணைப்பை துண்டித்திருந்தார் அப்பா.