நனைகின்றது நதியின் கரை 3 (2)

அவன் கைகளிலிருந்து விடுதலையாக ஒரு தவிப்பும், அதை முழுதாக உணரமுடியாத அரை மயக்க நிலையிலுமாய் அவள்.

அப்பொழுது அவன் நுழைந்த வாசலில் இழைக்கப்பட்டிருந்த இந்த வெண் மார்பிள் அவள் பார்வையில் விழுந்தது இப்பொழுது ஞபகம் வருகின்றது.

இன்று தாண்டும் இதே வாசல் தான் அது. ஆக முன்பும் இவளை கடத்தி இதே வீட்டிற்குத்தான் கொண்டு வந்திருக்கிறான். உயிரின் எல்லை வரை கொட்டப்படுகிறது கொதி அமிலம்…

இவனை கண்டிப்பாக சும்மாவிடக்கூடாது……

அவள் முகத்தைக் பார்த்த அரண் என்ன கண்டானோ…”சுகவிமோ நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ….வா ரூமைக் காண்பிக்கிறேன்” என கரிசனையாய் அழைத்தான். சுகவிதவுக்குமே தனிமை தேவைப் பட்டது படு அத்யாவசியமாக.

ஆனால் குழந்தையை இந்த கூட்டத்தின் கையில் தனியேவிட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை. எப்பேர்பட்ட கூட்டம்…..ஒரு பெண்ணை அவள் விருப்பமின்றி கடத்தி வந்து…..அப்பேர்பட்ட பொறுக்கியை கொஞ்சி கொஞ்சி வைக்கும் பேய்கூட்டம்….அவள் கண்கள் அதுவாக மாமானாரின் மடியில் இருந்த மகளின் மீது போய் அமர்கின்றது.

அதைக் கண்டான் போலும்….தன் தந்தையின் கையிலிருந்த மகளை சென்று கையில் எடுத்தான்.

“ நீங்க போய் அம்மாவை தூங்க வைப்பீங்களாம் பால்குட்டி…..அப்பா கொஞ்ச நேரத்தில வந்துடுவேனாம்…” தத்தாவின் சட்டை பட்டனை படு தீவிரமாக திருகி ஆராய்ந்து கொண்டிருந்த குழந்தை இந்த குறுக்கீடை விரும்பாமல் முகம் கசக்கி இதழ் பிதுக்கி சிணுங்க தொடங்க

“ஏன்டா….அவ இங்க இருக்கட்டுமே…என ஆரம்பித்த திரியேகனும் மருமகளை ஒரு நொடி பார்த்தவர் ‘பவளம்” என குரல் குடுத்தார்….உள்ளிருந்து  ஒரு 3 அடி உயரமுள்ள ஒரு பெண் ஓடி வந்தாள். வயதோ பின் நாற்பதுகளில் இருக்குமாயிருக்கும்…

“ஐயா…..தம்பி சொன்ன மாதிரி அவர் கொடுத்த மருந்தை கைலலாம் போட்டுட்டேன் ……பாப்பாவ என்ட்ட தாரீங்களாய்யா…”. கையை தியேகனை நோக்கி நீட்டினாள். அவரோ அதென்னடா  மருந்து என்பது போல் மகனைப் பார்த்தார்.

“ஸ்டெரிலைசர்பா…” சிறு புன்னகை அவர் முகத்தில்.

“இல்ல குட்டி செல்லம் அவங்க அம்மா கூட ரெஸ்ட் எடுக்க போறாங்க…நீங்க ஒரு சிஸர்ஸும் நூலும்  கொண்டு வாங்களேன்….” அடுத்த நிமிடம் பவளம் கொண்டு வந்த சிஸர்ஸை வைத்து தன் ஷர்ட் பட்டனை கட் செய்து  பார்வையில் படும்விதமாக குழந்தையின் உடையில் அதை கட்டி வைத்தவர்,

“ என்ன இருந்தாலும் குழந்தை இதை வாய்ல போட்றாம பார்த்து எடுத்து வச்சிருமா” என மருமகளிடம் சொல்லியபடி பேத்தியை அருகில் நின்ற மகனிடம் கொடுத்தார்.

இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என புரியாமலே அரணை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள் சுகவிதா.

அவரிடம் குழந்தையை விட்டுச் செல்ல விருப்பமில்லாத ஒரே காரணத்தினால் தான் அவள் குழந்தையை எடுத்துப் போகிறாள் என அவருக்கும் புரிந்திருக்கும்.

ஆனால் ஒரு சிறு மறுப்பும் இல்லாமல், வர மறுத்த குழந்தையையும் சமாதானபடுத்தி……இத்தனை மென்மையான மனிதன் தன் மகனின் அரக்க தனத்தை சிறிதும் ஞாபகம் கூட இல்லாமல் மறந்து போவாரா?

சொந்த பேத்தியின் மேல் வருகின்ற உருக்கம் அவளைப் பெற்றவளான பெண்ணாகிய என் மீது துளி கூடவா வராமல் போகும்? எத்தனை இயல்பாய் மகனோடு மனம் ஒத்து நான் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்?

“இது தான் நம்ம ரூம் சுகவிமா….” அரணின் வார்த்தையில் நடப்புக்கு வந்தவளுக்கு அந்த அறையை நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் வரவில்லை.

என்ன கொடும் ஞாபங்களை கொண்டு வந்து கொட்டுமோ….

”நோ…நோ…..இங்கல்லாம் என்னால முடியாது…..தற்கொலை செய்துக்க கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக நான் உயிரோட இருக்கிற மாதிரி ஒரு நிலைமல என்னை வந்து நிறுத்தாதீங்க…..உங்கள கெஞ்சி கேட்டுகிறேன் எனக்கு தனி ரூம் தந்துடுங்க…..உங்க கூடல்லாம் கண்டிப்பா என்னால முடியவே முடியாது….தலையே வெடிச்சிடும்….”

அறையைவிட்டு துள்ளி விலகிப் போய் அவள் அழுகையும் வலியுமாய் தன் இருகைகளால் தலையைப் பிடித்தபடி கெஞ்ச, திடீர் என அவளிடம் இப்படி ஒரு நடவடிக்கையை எதிபார்க்காதவன் அவள் வார்த்தையில் அவள் அளவு வேதனை தானும் கொண்டான் முகத்தில்.

“இந்த வீட்ல எதுனாலும் உன் இஷ்டம்தான் சுகவிமா….தயவு செய்து இப்டி பதறாத…..கெஞ்சாத….இப்போ தலைல என்ன செய்து…? ஜஃஸ்ட் அ மினிட் …இப்பவே டாக்டரை கூப்டுறேன்…”

ஒரு கையில் குழந்தையை பாதுகாப்பாய் பற்றிய படி தன் மொபைலை அவசரமாக  தேடினான்…

“இல்ல…..ஒன்னும் இல்ல…எனக்கு தனி ரூம் தாங்க போதும்….”

“ஓகே…ஓகேடா…நெக்ஸ்‌ட் ரூம் எடுத்துக்கோ…” அடுத்த அறையின் கதவை திறந்து வைத்தான் வேகமாக.

தயங்கி தயங்கி இவள் உள்ளே நுழைய அதன் பின் உள் வந்தவன் ஒரு சுவர் முழுவதும் பரவி இருந்த வாட்ரோபை ஒவ்வொன்றாக திறந்து குழந்தைக்கான எதுவெல்லாம் எங்கிருக்கிறது என காண்பித்தான்.

“இந்த ரூமை…..இந்த ரூம் ஹயாக்குன்னு அரேஞ்ச் செய்த ரூம் சுகவிமா…உன்னோட திங்க்ஸையும் இங்க கொண்டு வரச் சொல்றேன்…” என்றவன் மறுபுற சுவரிலிருந்து ஆள் உயர ஓவியத்தை திறக்க அது கதவாக திறந்தது.

அடுத்த பக்கம்