நனைகின்றது நதியின் கரை 20(8)

ன்று இரவு பார்டி செலிப்ரேஷன் என எல்லாம் முடிந்து தங்கள் அறைக்கு திரும்பினர் அரணும் அவன் மனைவியும்.

“ஹயா தூங்கிட்டு தான இருப்பா ஜீவா….”

பார்ட்டியிலிருந்து குழந்தையை தங்களுடன் எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தனர் அனவரதனும் புஷ்பமும்.

“அடுத்த ரூம்தான விதுமா…ஹயா நம்ம தேடினா கண்டிப்பா ஆன்டியும் அங்கிளும் நம்ம எழுப்பிடுவாங்கடா” சொல்லியபடி புடவையில் இருந்தவளை பின்னிருந்து அணைத்தான் தன்னோடு.

“அதெல்லாம் மாட்டாங்க….இன்னைக்கு அம்மாவே சமாளிச்சு தூங்க வச்சுடுவாங்க…”

“ஏன்…இன்னைக்கு என்ன…?”

“இன்னைக்கு நான் புடவை கட்டி இருக்கனே”

“சோ?”

“நான் அம்னீஷியால அம்மா வீட்ல இருந்தேன்ல அப்ப நீங்க வீட்டுக்கு வந்தப்ப நான்  புடவை கட்டி இருந்தேன்… எனக்கு வீட்ல வச்சு சாரி கட்ட எவ்ளவு பிடிக்காதுன்னு உங்களுக்கே தெரியும்.”

அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பிப் பார்த்தான் கணவன்.

“எதுக்கு கட்டினேன்னு ரீசன்லாம் கிடையாது..ஜஸ்ட் அன்னைக்கு தோணிச்சு கட்டினேன்….அது தான் உண்மை…என் ஹஸ்பண்ட் பத்தி அப்ப எதுவும் எனக்கு  நியாபகம் இல்லை…ஆனா கூட ஏதோ ஒரு வகையில உங்க ஞாபகமாத்தான்  நான் சாரி கட்டியிருப்பேன்னு என் அம்மாவுக்கு நம்பிக்கை….ஏன்னா நீங்க வேற அன்னைக்கு வேஷ்டி சட்டைனு அதுக்கு மேட்சா வந்து என்னை தூக்கிட்டு போனீங்க… “

“சோ?’

“என்ன சோ…உங்களுக்கு சாரின்னா ரொம்ப பிடிக்கும்னு அவங்களா புரிஞ்சு வச்சுறுக்காங்க…..அதனால இன்னைக்கு நம்மள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு..”

அதற்கு மேல் அவளும் பேசவில்லை. அவனும் தான்.

ங்கு ப்ரபாத் அறையில்….கிட்டத்தட்ட பொழுது விடிய தொடங்கி இருந்த நேரத்தில்….

“ஏன்பா இன்னும் கூட தூக்கம் வரலையா உங்களுக்கு?” அவன் மார்பில் சாய்ந்திருந்த மனைவிதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இல்ல….ரொம்ப சந்தோஷமா இருக்குது பொங்கல் ஃபேக்ட்ரி….இன்னைக்கு முழுக்க தூக்கம் வராது….”

டுத்த வாரம் அனைவரும் இந்தியா வந்த பின் ஒரு நாளில் ப்ரவிர் சரநிதா திருமணம் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட சின்னதாய் ஒரு நிச்சயம். மூன்று மாதம் கழித்து திருமணம் என முடிவானது.

மூன்றாம் மாதம்

அவர்கள் திருமணம் முடிய சங்கல்யாவுடன் சரநிதாவும் சேர்ந்து நியூஸ் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர். அதன் பின் சங்கல்யாவின் முப்பது கை பத்திரிக்கை துறையில் காணப்பட்டது…நீதி கொணர்ந்தது ஆனால் அவள் அக வாழ்வில் அது தலையிடவே இல்லை.

ஒரு வருடத்திற்குப் பின்:

டென்னிஸ் அகடமி ஒன்றை துவக்கி இருந்தாள் சுகா. அதோடு அரண் க்ரூப்ஸின் அத்தனை செயலிலும் திரியேகனுக்கு உதவியாக இவள். அரணுக்கும் அவளுக்குமிடையில் தோன்றிய காதலெனும் அன்பு நதி அவளது மனதின் பலவீனங்களை  மட்டுமல்ல அவளது தந்தையான அனவரதனின் மனதின் குறைகளை கூட நீக்கி சுகம் சேர்த்திருந்தது.

மூன்றாம் வருடம்

மெல்ல விழிப்பு வர இருந்த சோர்வை தாண்டி அருகில் இருந்த தன் குட்டி பொக்கிஷத்தை கண்களால் தேடினாள் சங்கல்யா. மூன்று நாள் குழந்தை ஆலயாவைக் காணவில்லை.

அவள் எங்கு இருப்பாள் எனத் தெரியும் இவளுக்கு. எழுந்து மெல்ல நடந்து அடுத்த அறைக்கு வந்தாள். தன் வெற்று மார்பில் மகளை  படுக்க வைத்தபடி சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவளது கணவன்.

அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தவன்

“கூப்ட வேண்டியதான லியாமா..ஏன் நடந்து வர்ற…” என்றபடி எழுந்தான்.

“தூங்கலையா நீங்க?”

“இல்ல…..இப்படி குழந்தைய  நம்ம மேல படுக்க வச்சா…அதோட அவளுக்கு குளிர்றப்ப பார்த்து கவர் பண்ணி…டயப்பர் ஈரமாகிட்டா மாத்தி…பசிக்றப்ப ஃபீட் பண்ணி… இப்டில்லாம் அவ கஷ்டமா ஃபீல் பண்ற விஷயங்கள்லலாம் நாம உதவியா இருந்தோம்னா….அப்படி இருக்றவங்க மேல  குழந்தைக்கு நம்பிக்கையும்  ஆழமான இமோஷனல் பாண்டும் டெவலப் ஆகுமாம்…ஃபீட் பண்றத தான் நீ பார்த்துகிறியே அதான் மத்தது என்னால முடியுறப்பல்லாம் நான் தான் பார்த்துப்பேன்….அப்பா கூட அட்டாச்சா வளர்ற பொண்ணு பின்னால தன்னைம்பிக்கையுள்ள, தைரியமான, ஆரோக்கியமான மனப்பான்மையுள்ள பொண்ணா வளருவாளாம்….”

தன் அப்பாவை இன்று வரை பார்த்தறியாத சங்கல்யா அருகில் வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

முன்பு அரண் சுகா ப்ரபாத் இவர்களுக்கு இடையில் அவள் பார்த்த காதல் நட்பு பாசம் என்ற அன்பாகிய ஜீவ நதி  அதன் அருகில் சென்ற வறண்ட பாலையான இவள் மனதை நனைத்து ஜோனத்துடன் இணைத்து காலப் போக்கில் இவளை இவள் வாழ்வை உள்ளும் புறமுமாய் எத்தனையாய் செழிக்க வைத்திருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் செய்யும் இந்த அன்பு நதி….பாயுமிடமெல்லாம் செழிப்பிக்கும்…

முற்றும்

Friends இந்த சீரிஸ்க்கு ஆரம்பத்திலிருந்து உறுதுணையாய் நின்று உதவிய உங்கள் அனைவருக்கும், கருத்து பதிவு செய்து உங்கள் வார்த்தைகளால் இந்த நதிக்கு வளம் சேர்த்த ஒவ்வொருவருக்கும்….. தவறாது வாசித்த வாசக அன்பர்களுக்கும்…. என் உளம் நிறைந்த நன்றிகள்.

14 comments

 1. Nanainthathu Nathi matum ila…enga nenjamum than ka…😅😘😘😘😘😘😍😍😍 evergreen pair🎉✨🎈🎉🎆🎇podu dakidatha tha……♥️
  Thank you for a wonderful story

 2. Where to start?🤔
  Oru 2 days continuous a padichu story ya complete panen.😍..
  In short,You changed my view towards marriage life.
  All de best for your future endeavour.

 3. Wow…. its simply awesome…Enala intha story character la iruthu veliya vara mudiyala…oru oru episode um apdi padichi rasichen….then cricket pathi describe panathu elam sema…. thz is one of my fav story inimae…. thanks for the story…

Leave a Reply