நனைகின்றது நதியின் கரை 20(2)

“அப்படி ஒரு  முட்டாளா அவள் இருந்தா அதுக்கு நீ ஏன் விதுமா வருத்தப்படுற…? வீட்ல அவளை நம்பி வேலைக்கு வச்சது நாங்க…ப்ரவிர் கூட அவள சந்தேகப்படலை….பெர்பெக்ட் நடிப்பு அவளோடது…..ஆனாலும் அவள கல்ப்ரிட்னு கண்டு பிடிச்சது நீதான்…”

தன்னவன் தோளில் சாய்ந்திருந்தவள் விழி உயர்த்தி மலர்ந்த முகத்துடன் அவன் பார்வையை ஒரு நொடி சந்தித்துவிட்டு மீண்டுமாய் கண் மூடிக் கொண்டாள்.

“நம்ம காதலோட பலம் அவளுக்கு புரியலைடா…அதை அவ பலவீனம்னு நினச்சுட்டா….காதல்ங்கிற பேர்ல ஈசியா ஏமாத்தலாம்னு….உலகமே மறந்துட்ட போதும் நம்ம காதல் மட்டும் அப்படியே இருந்துச்சு உன் மனசுல….அதுதான் நம்ம லைஃபை மீட்டும் கொடுத்துது…..முன்னால எல்லாத்துக்கும் எவ்ளவு பயப்படுவ…பால்குட்டி இன்சிடென்ட்ல எனக்கே பக்கத்துல ப்ரபு இருந்ததாலதான் ஏதோ ஹேண்டில் செய்ய முடிஞ்சுது….பட் நீ எவ்ளவு நேரம் தனியா சமாளிச்சுறுக்க….அன்புங்கிறது எப்பவுமே பலம் தான்….”

அடுத்து செமிஃபைனல்ஸ் முடிந்திருந்தது. ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்றிருந்தனர் மென் இன் ப்ளூ.

ரவு ஸ்பெஷல் டின்னர். அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் ஒரு சிறு ஹாலை புக் செய்திருந்தனர். அன்று அனவரதன் புஷ்பம் வெட்டிங் அனிவர்சரி. ஆக அரண் ப்ரபாத் குடும்பத்திற்கு மட்டுமேயான விருந்து. ப்ரவிரும் வந்து சேர்ந்திருந்தான்.

பெரியவர்கள் அனைவரும் ஒரு டேபிளை எடுத்துக் கொண்டு  இளையவர்கள் அனைவரையும் அடுத்த டேபிள்ளுக்கு அனுப்பினர். “எங்களுக்கு சாப்பாடுல ரெஸ்ட்ரிக்க்ஷன் இருக்கும்…நீங்க என்ஜாய் பண்ணுங்க “ என்றபடி.

கிட்நாப் டைமில் உதவிய சாங்கல்யாவின் ஜர்னலிசம் க்ளாஸ்மேட் & ஃப்ரெண்ட் சரநிதாவையும் டின்னருக்கு அழைத்திருந்தனர் அன்று. ஆக இயல்பாய் தம்பதிகள் தங்கள் தங்கள் துணையுடன் அமர்ந்த விதத்தில்  ப்ரவிருக்கு அடுத்த இடத்தில் சரநிதா.

படு கல கலவென கேலியும் கிண்டலுமாய் தான் சென்றது பொழுது. ஆனால் யாரும் பெரிதாய் கவனிக்காத விஷயம் சங்கல்யாவின் கண்ணில் பட்டது.

எந்த கிண்டல் கேலியிலும் ப்ரவிரிடம் சரநிதா நேருக்கு நேர் பதில் சொல்லவே இல்லை. சரநிதாவின் குணத்திற்கு அது இயல்புதான். சங்கல்யா அளவிற்கு கடும் வெறுப்பு ஆண்கள் மேல்  இல்லையெனினும் சரநதாவிற்கும் ஆண்கள் மேல் மரியாதையோ ஈடுபாடோ கிடையாதுதான். சட்டென நம்பி பழகிவிடல்லாம் மாட்டாள்.

அதோடு ப்ரவிரும் அவளிடம் அதிகமாய் பேசினான் என்று சொல்வதற்கில்லை…இயல்பான உரையாடலில் தவிர்க்க முடியாமல் வரும் நேரடி பேச்சுகளைத் தவிர அவன் அவள் புறம் திரும்பக் கூட இல்லை.

ஆனால் அது இயல்பின்றி சங்கல்யாவுக்கு உறுத்த காரணம், ப்ரவிர் அவ்வபொழுது எதாவது ஸ்வீட் டிஷ்ஷை வெகு இயல்பாய் சரநிதாவுக்கு பாஸ் செய்வதும் அதை அவள் தொட்டுக் கூட பார்க்காமல் விலக்கி வைப்பதும்….அதிலும் கடைசியில் அவள் ஐஸ்க்ரீமைக் கூட தவிர்த்ததில் தலை சுற்றிப் போயிற்று பார்த்திருந்தவளுக்கு.

ப்ரவிரை விடவும் அதிகமான ஸ்வீட் பைத்தியம் இந்த சரநிதா. அதிலும் ஐஸ்க்ரீம் சாக்லெட் என்றால் அவ்வளவுதான்….ப்ரவிருக்கு சரநிக்கு ஸ்வீட் பிடிக்கும் என்பது வரை தெரிந்திருக்கிறது….அதுவும் டில்லியில் வளர்ந்தவன் அவன். சரநிதா பக்கா தமிழ்நாட்டு ப்ராடக்ட். என்ன நடக்குதுபா இங்க?

டின்னர் முடிந்து எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க ஒரு நேரத்தில் இயல்பாய் சரநிதா ரெஸ்ட் ரூமுக்கு சென்றவள் திரும்பி டின்னர் நடந்த ஹாலுக்கு வரும் வழியில் அவளுக்காக காத்திருக்கும் ப்ரவிரைப் பார்த்து நின்றாள்.

“வெல்….அன்னைக்கும் நீ இப்படி இருந்திருந்திருந்தன்னா அப்படி ஒரு தப்பு நடந்திருக்கவே நடந்திருக்காது…..”

ஒன்சைடட் என சொல்லப்படும் வலப்புற காதோரமாய் பின்னப்பட்டிருந்த ஓரளவு நீண்ட ஒற்றை சடையும்…தோள் தொடும் அளவில் காதில் இடம் பிடித்திருந்த அந்த பெரிய டைமன்ட் ஷேப்  இயர் ரிங்கும்….. கழுத்தை மட்டுமாய் சுற்றிக் கொண்டு ஓடிய மென் துப்பட்டாவும், லைட் சேமன் (salmon) கலர் பார்ட்டி வேர் சல்வாருமாய் நின்றவளை தலை முதல் கால்வரை பார்த்தபடி சொன்னான்.

“உங்க சாரி ஒன்னும் எனக்கு வேண்டாம்” வெட்டினாள் சரநிதா.

சின்னதாய் சிரிப்பு வந்திருந்தது அவன் முகத்தில்…. “நான் சாரில்லாம் கொண்டு வரலை…..பட் இது உனக்கு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்… …” சொன்ன படி அவளிடம் எடுத்து நீட்டினான் டெய்ரி மில்க் பபுள்ஸ்.

இப்பொழுது நன்றாக முறைத்தாள் சரநிதா. “என்னப் பத்தி என்ன நினச்சுகிட்டு இருக்கீங்க?”

“உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு வரைக்கும் தெரிஞ்சு வச்சுறுக்கேன்னா….உன்னைப் பார்க்கனும்ங்கிறதுக்காக இங்க வரை வந்துறுக்கேன்னா நான் என்ன நினச்சுகிட்டு இருக்கேன்னு உனக்கே புரியுமே…”

அவள் கண்களில் பார்வை நிறுத்தி சொன்னவன் அவள் அருகில் அந்த சாக்லெட்டை வைத்துவிட்டு திரும்பினான்.

டஸ்ட் பின் தேடி அவள் அதை போட்டுவிட்டு திரும்புவது அவன் பார்வையில் பட்டது.

அடுத்த பக்கம்