நனைகின்றது நதியின் கரை 2 (4)

வெறித்துப் பார்த்தாள் சுகவிதா.

“ரொம்ப குழப்பிக்காத சுகவிமா….மெல்ல மெல்ல அதா எல்லாமே தெரிஞ்சுடுமாம்…கொஞ்சம் பொறுமையா இருடா….நம்ம வீட்டுக்கு வரவும் பாரேன்…உனக்கு இன்னும் நிறைய ஞாபகம் வரும்…”

ம்…இருக்கலாம்…அப்படி ஞாபகம் வரும் விஷயம் இன்னும் மனசுக்கு எவ்ளவு வேதனையா இருக்கப்போகுதோ….இவள் நினத்துக் கொண்டு இருக்கும்போதே இவர்களது கார் நின்றது.

இவர்கள் ஹம்மர் அருகில் வந்து நின்றது அந்த கறுப்பு நிற கார்.

அரண் அவசரமாக இவளுக்கு அருகில் இடம் மாற இவர்களது காரின் ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்தான் அந்த அவன். ப்ரபாத்.

சற்றுமுன் அவளுக்கு நினைவுக்கு வந்த அந்த கடத்தல் நிகழ்வில் இப்படி அரண் இவள் அருகில் வந்து அமர்ந்தது ஞாபகம் வர பக்கென்றது மனம். ஆனால் அரணின் கவனமோ அவள் மடியில் இருந்த மகள் புறம்

எடுத்த எடுப்பில் சீறியது இவர்கள் வாகனம்.

இவள் மடியில் இருந்த குழந்தையை தன் கைக்கு மாற்றிக் கொண்டான் அவன்.கொடுக்க மனமே இல்லாமல் குழந்தையைக் கொடுத்தாள் “ புஜ்ஜுமா…6 மந்த்ஸ்ல எவ்ளவு பெரியாளா ஆகிடீங்க நீங்க…” அரணின் கொஞ்சலுக்கு ஆ என வாய் திறந்து சிரித்தாள் ஹயா.

எப்படி உணர வேண்டும் என புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகவிதா.

“ஹாய் அரை டிக்கட் இப்போ எப்டி இருக்குது உனக்கு…?” இவளைப் பார்த்துக் கேட்டான் ப்ரபாத். ஓட்டுனர் இருக்கையில் இருந்தவன்.

“இப்ப வரைக்கும் நல்லாதான் இருந்தேன் பால் பாக்கெட்….”

ஃப்லோவில் வந்ததை சொல்லிவிட்டு விழித்தது இவள் என்றால் கார் ஒரு முறை கன்னா பின்னாவென்றாகி சீரானது கேட்டிருந்தவன் கையில்.

டேய்ய்ய்ய்ய்ய்ய்…..அதட்டினான் அரண்.

“ஏய் அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துட்டா….?”

“இல்ல இது எப்டியோ வாய்ல வந்துட்டு “

பதில் வந்தது அவளிடமிருந்து.

மெல்ல அவள் கையை எடுத்து தனக்குள் வைத்தான் அரண்.

சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்…”

வெடுக்கென கையை உருவிக் கொண்டாள் சுகவிதா.

அதை கவனித்திருந்த மூன்றாமவன் சொன்னான் “மாப்ள…எனக்கென்னமோ  நீ பாதி கிணத்துல மாட்டி இருக்கியோன்னு தோணுது….’

“ம்…முன்னால தாண்டுன கிணறுதான, திரும்பவும் தாண்டினா போச்சு…” சின்னதாய் சிரித்துக் கொண்டான் அரண்.

எரிச்சல் ஏறியது இவளுள்.

“உன் பொண்னு தேடுற கதை எப்படிடா இருக்குது..?” அரண் கேட்டான்.

“ம்…நம்மளல்லாம் கிணறு தேடி வந்து தாண்டுனாத்தான் உண்டு போல….ஒரு ப்ரபோசலும் மனசுக்கு பச்சுனு பதிய மாட்டேங்குது…”

இப்போது ஒரு பெரிய கோட்டைச்சுவர் போன்ற சுவரின் முன் இவர்கள் கார் செல்ல….அதுவாக திறந்தது அங்கிருந்த ராட்ஷச கேட்…….உள்ளே நுழையவும் கேட் திரும்பவுமாய் மூடிக் கொள்ள தூரத்தில் தெரிந்த அந்த மாடர்ன் மாளிகையை நோக்கி பயணித்தது வாகனம்.

சிறைக்குள் சிக்குவதாய் இவளுக்கு உணர்வு.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 3

One comment

Leave a Reply