நனைகின்றது நதியின் கரை 2

மே ஐ கமின் சார்?” கதவை தட்டிவிட்டு உள்ளே பார்த்தாள் சங்கல்யா.

“வாம்மா வா….உனக்காகத்தான் வெய்டிங்…” சற்றே வழுக்கை தலையுடன் இருந்த சீஃப் வல்லராஜன் முகத்தில் புன்னகை.

எதோ ஒரு பெரிய பட்ச்சி சிக்கிட்டுப் போலநினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“குட் மார்னிங் சார்..”

“வெரி வெரி குட் மார்னிங் ”

அப்டின்னா?

“சொல்லுங்க சார்…”

“சங்கல்யா….இது மாதிரி ப்ராக்ஜட்டை நான் சின்னபிள்ளைங்கட்டல்லாம் கொடுக்கிறதில்லை…இருந்தாலும் இத உன்ட்ட தாரேன்னா….அதுக்கு அர்த்தம் இது சின்ன விஷயம் இல்லை…..ஆனா இந்த ப்ராஜக்டுக்கு எனக்கு புது முகம் வேணும்….அதுவும் போல்ட் அண்ட் ஷார்ப்…..உன்ன மாதிரி…”

“தேங்க்ஸ் சார் சொல்லுங்க…”

“அந்த ஸ்டார் கப்புள் அரண் அண்ட் சுகவிதா பத்தி மெயின் ஸ்லாட்ல ஒரு ப்ராஜக்ட் ரிலீஸ் செய்யலாம்னு ப்ளான்….ரெண்டு பேருக்கும் இருக்கிற பாப்புலாரிட்டிக்கு பெரிய பெரிய ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பாங்க ….உனக்கும் பேக்கேஜ் நல்லா செய்து தருவேன்….”

“ம்”

“அவங்களுக்குள்ள எதோ கசமுசா நடக்குது…..ஆனா என்ன விஷயம்னு யாரும் வாய திறக்க மாட்டேன்றாங்க….நீ அவங்க வீட்டுக்குள்ளயே போய் ஒரு ஹால்ஃப் அன் அவர் டெலிகாஸ்ட் செய்ற மாதிரி என்ன நடந்துகிட்டு இருக்குதுன்னு ஒரு ப்ரோக்ராம் ரெடி செய்து தர்ற….உனக்கு தேவையான ஹெல்ப் நம்ம டீம் செய்யும்… “

“வீட்டுக்குள்ளயேவா…?”

“ஆமா அதான் நியூ ஃபேஸ் கேட்டேன்….அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராம உள்ளே போய் தங்குற மாதிரி ஏற்பாடு செய்துகோ…. நீ கொண்டு வர ஸ்டோரிய பொறுத்து பேக்கேஜ் இருக்கும்..மினிமம் 2 கேரண்டி….…”

“டன் சார்..தேங்க்ஸ் ஃபார் திஸ் ஆப்பர்சுனிடி சார்…”

“ஆல் த பெஸ்ட் சங்கல்யா…”

சங்கல்யா இப்பொழுதுதான் ஜார்னலிசத்தில் முதல் டிகிரி வாங்கிவிட்டு, இந்த வல்லமை நியூஸ் சேனலில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். இதுவரை இது போன்ற மூன்று ப்ராஜக்டுகளுக்கு உதவியாளராக பணி செய்த அனுபவம் தவிர பெரிதாக அனுபவம் ஏதுமில்லை.

இருந்தாலும் வல்லராஜன் சொன்னது போல் அவளது தைரியமும் புத்திசாலித்தனமும் அவளுக்கு சேனல் நிர்வாகத்திடம் நல்லபெயர் வாங்கித் தந்திருந்தது.

இந்த துறை என்று இல்லை எதிலாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியும் நன்கு சம்பாதித்து, நல்ல நிலையில் செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளும் உள்ளவள் சங்கல்யா. சிறு வயதிலிருந்து வரவுக்கும் செலவுக்கும் இடையில் போராடும் நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையில் வளர்ந்தவளுக்கு தன் எல்லைகளை விரிவாக்க ஆசை.

அவளைப் பொறுத்த வரை இந்த ப்ராஜக்ட் நல்ல வாய்ப்பு.

தீவிரமாக அந்த அரண் மற்றும் சுகவிதா பற்றி தகவல்களை திரட்டிப் படித்தாள்.

அரண் ஆதித்யா…

1.மிக சிறு வயதில் வேர்ல்டு கப் ஜெயித்த கிரிகெட் வீரர்,

2.இப்போதைய கேப்டன், பிறந்து வளர்ந்தது சென்னை….வயது 26

3.படித்தது ஸ்கூல்…செய்ன்ட் பால்’ஸ்,  10 த் 12 இரண்டிலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட்…. கலேஜ் அண்ணா யுனிவர்சிட்டி

(வாவ்…ஸ்டடிஸ்…ஸ்போர்ட்ஸ் ரெண்டிலும் கலக்கிருக்கார் சார்……ப்ரெய்னி பாய்…கவனமா ஹேண்டில் செய்யனும்…)

  1. ஒன்லி சன்…கூடப்பிறந்தவங்க யாரும் இல்லை….அப்பா பிஸினஸ் மேக்னட் திரியேகன். சி இ ஓ அரண் க்ரூப்ஸ்… (ஓ அரண் க்ரூப்ஸின் ஏக வாரிசா நம்ம ஹீரோ…? பரவாயில்லையே இவ்ளவு பணம் இருக்றப்பவும் ஒழுங்கா படிச்சு…ஒழுங்கா விளையாடி….எங்கயோ உதைக்குதே….இதெல்லாம் நேரான வழியில வந்த புகழா? இல்ல காசு குடுத்து கடையில வாங்கின விஷயமா…..? ஆனா 10 த் 12 மார்க்கை கூடவா காசு கொடுத்து வாங்கி இருப்பாங்க…? அதுக்கு அவசியம் இல்லையே ….பார்ப்போம்…)

5.ஃப்ரெண்ட்ஸ்…ப்ராபாத் ஜோனதன்..( ம்…வைஸ் கேப்டன்தான்  ஃப்ரெண்டா…அதுவும் ரெண்டு பேரும்  காலேஜ் மேட்ஸ்…அப்ப இவனும் ப்ரய்னி பாயா இருப்பான்….கேர்ஃபுல் சங்கு…இல்லனா உனக்கு சங்கோ சங்கு…)

6.எக்‌ஸ் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ்… நில்….(அட யாருமே இல்லையா…24இயர்ஸ்ல கல்யாணமா..? ம்….அப்டி என்ன அவசரம்?)

  1. இப்போ முக்கியமான விஷயம் மேரேஜ்…..ஒரே மேரேஜ்….ஃஸ்பவ்ஸ் நேம் சுகவிதா…… சுகவிதாவுக்கு ஒரு ஃபெலிக்ஸ் கூட வீட்ல ‌மேரேஜ் அரேஞ்ச் செய்திருக்காங்க….கல்யாணத்துக்கு போற வழியில பொண்ணை கடத்திட்டதா சுகவிதா அப்பா கேஸ் ஃபைல் செய்துருக்காங்க….

தொடர்ந்து அவனைப் பற்றி வாசித்து முடித்தாள்.

அடுத்த பக்கம்