நனைகின்றது நதியின் கரை 19(7)

ஹோட்டலிலும் தன் அம்மாவுடன் அவருக்கு ஏற்பாடு செய்திருக்கும் அறைக்குத்தான் முதலில் சென்றான். இவள் எங்கு செல்ல வேண்டும்? ஒன்றும் புரியாமல் அவனை பின் தொடர்ந்து அன்பரசியின் அறைக்குள் சென்றாள்.

அம்மாவுக்கு தேவையான எல்லாம் இருக்கிறதா எனப் பார்த்து செட்டில் செய்துவிட்டு அவன் கிளம்ப… இவள் அன்பரசியின் அறையில் அடுத்து என்ன செய்ய என புரியாமல் விழித்தபடி நின்றாள்.

“நீயும் கிளம்பு லியாமா….நான் இப்ப தூங்க தான் போறேன்…எதுனாலும் உங்களை கூப்டுறேன்…இப்ப என்னைப் பத்தி யோசிக்காம போமா…..” என்றார் மாமியார்.

அவருக்கு நடந்த கிட்நாப் பத்தி எதுவும் தெரியாது. ஆக மிக இயல்பாக இருந்தார். ஆனால் ஜோனத்திற்கு தெரியும். ஒருவேளை அவன் இவளை நம்பவில்லையோ?  ஆனால் அந்த நினைவு எழும்போதே அதை கிள்ளி எறிந்தாள். சே அப்படின்னா எதுக்கு இங்க வரை கூட்டிட்டு வரனும்?

ஆனாலும் அடுத்து எங்கு செல்ல என்று புரியாமலே நீ போமா என சொல்லும் அன்பரசியிடம் “தூங்கி ரெஸ்ட் எடுங்கம்மா…எதுனாலும் கூப்டுங்க” என்றபடி அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அங்கு இவளைப் அழுத்தமாய் பார்த்தபடி அவன். அடுத்த நொடி அவளை இழுக்காத குறையாய் இழுத்துக் கொண்டு அடுத்திருந்த அறைக்குள் நுழைந்து கதவை பூட்டியவன் அணைத்த வேகத்தில் அவன் உடலை துளைத்து உள்ளே போய்விடுவாளோ என்று தோன்றிவிட்டது இவளுக்கு. மனமெங்கும் நிம்மதி மழை மங்கைக்குள் இந்த கணம்.

“உயிரோட செத்துட்டேன் லியாப்பொண்ணு…..உன்னை என்ன பாடு படுத்றாங்களோன்னு….ஹயா குட்டியையும் உன்னையும் எங்காவது கொண்டு போய் வித்து…..அதுக்கு மேல் அவனுக்கு பேச முடியவில்லை. அவன் குரல் கரகரத்து நின்று போனது.

அவன் என்னவெல்லான் நினைத்து தவித்திருக்கிறான்…?

“ஒன்னுமில்லபா…சின்னதா கூட யாரும் எங்கள கஷ்டப்படுத்தல…..நான் நல்லா இருக்கேன்..அதுவும் இப்ப ரொம்பவே நல்லா இருக்கேன்….”

வெகுநேரம் அவன் புறம் மௌனம். இன்னும் அவன் உடல் மொழியிலோ மன நிலையிலோ எந்த மாற்றமும் வந்ததாக தெரியவில்லை.

அவனது அம்மா ஹாஸ்பிட்டலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது கூட அவன் இத்தனையாய் உடைந்து போனதாய் அவளுக்குத் தோன்றவில்லை…

“என்னப்பா நீங்க….? அதான் வந்துட்டேன்ல……அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப கூட இதைவிட தைரியமா இருந்தீங்க…”

“அப்பா இறந்ததுல இருந்தே மனுஷங்கன்னா சாவு ஒருநாள் வரும்….அதோட அவங்க கஷ்டம் வலி எல்லாம் முடிஞ்சு போயிரும்னு ஒரு மாதிரி மனசை அதுக்கு தயார் பண்ணியாச்சு…ஆனா இது மொத்தமா வேற…”.

ப்ரச்சனை நடந்து கொண்டிருந்த நேற்று க்ரவ்ண்டில் இவன் எத்தனை ஆளுகையோடு நின்றான்? என்னமாய் விளையாடினான்? இப்பொழுது இவளைக் கண்டதும் இதென்ன இத்தனை தவிப்பும் வலியும்?

ப்ரவிர் சொன்னது ஞாபகம் வருகிறது இவளுக்கு.

“பெரியப்பா சின்ன வயசிலேயே தவறிட்டதால பெரியம்மாவுக்கு ஒரு மாதிரி பயம்…அண்ணாவ ரொம்ப ரெஸ்ட்ரிக்ட் செய்வாங்க…..ஸ்வீட் சாப்ட கூடாது…காரம் சேர்க்க கூடாது…ஆயில் ஐட்டம் சேர்க்க கூடாதுன்றதுல இருந்து, கோப படக்கூடாது…ரொம்ப சிரிக்க கூடாது…. இங்க போக கூடாது…அங்க நிக்க கூடாதுன்னு ஆயிரம் கண்டிஷன்ஸ்…யாரா இருந்தாலும் எரிச்சலாயிடுவோம்……

அப்ப டீன்ல அண்ணா அதுக்கு திருப்பி கோபபட ஆரம்பிச்சாங்களா….ஒரு தடவை அண்ணா பதிலுக்கு பதில் கத்த பெரியம்மா  மயங்கிவிழுந்துட்டாங்க. அது அண்ணாவ எப்படியோ அஃபெக்ட் செய்துட்டு….அதுல இருந்து அண்ணா பெரியம்மா சொல்றது பிடிக்குதோ பிடிக்கலியோ அப்படியே செய்து கொடுத்துடுவாங்க….எந்த அப்ஜெக்க்ஷனும் காமிக்க மாட்டாங்க…மனசுல என்ன இருக்குன்னு வெளிய காமிச்சுக்கவே மாட்டாங்க…….க்ரவ்ண்ட்ல கூட எந்த எமோஷனும் இல்லாம நிக்ற மாதிரிதான் இருப்பாங்க…. பட் பாலும் பேட்டும் கதறும்….”

ஆக மத்த எல்லா சூழலிலும் இடம் பொருள் பார்த்து பழகும் இவள் கணவன்  இவளிடம் அவன் அவனாக இருக்கிறான் என்று தானே அர்த்தமாகிறது. கோபமோ கொண்டாட்டமோ எப்போதும் அவன் அதை அப்படியேதானே இவளிடம் வெளிக் காட்டி இருக்கிறான். மனதுக்கு நிறைவாய் இருக்கிறது இவளுக்கு.

“பசிக்குதுடி….உன்னைப் பார்க்ற வரை பசியே தெரியலை…எதாவது சாப்டுவமா…? இல்லை உனக்கு ட்ரவல் செய்தது டயர்டா இருந்தா தூங்கு….” ஒருவகையில் தவிப்பெல்லாம் அடங்கி நிதானத்துக்கு வந்திருந்தான் ஜோனத் இப்பொழுது.

இவள் கேட்ட டிஷ்ஷசையும் சேர்த்து ஆர்டர் செய்தவன்….”ஏர்போர்ட்ல உன்னைப் பார்த்ததும் இருந்த நிலமைக்கு எதாவது கன்னா பின்னானு செய்துடுவனோ, எதுவும் ப்ரச்சனையோன்னு அம்மாவுக்கு சந்தேகம் வர மாதிரி நடந்துப்பனோன்னுதான் உன்னை நேருக்கு நேர் பார்க்கவே இல்லை லியப் பொண்ணு தப்பா எடுத்துக்காத….”

“புரிஞ்சுதுபா…..ப்ரவிர் சொன்னாங்க”

“ப்ரவிரா….அவன் என்ன சொன்னான்?” ஆச்சர்ய தொனி ஜோனத் குரலில்.

ப்ரவிர் சொன்னதை சொன்னாள்.

சின்னதாய் சிரித்தான் ஜோனத்.

“இதெல்லாம் கவனிச்சு ஞாபகம் வச்சுறுக்கானா அந்த வாலு….” என்று சிலாகித்தவன்

அடுத்த சொன்ன விஷயம் சங்கல்யாவின் வாழ்வை மாற்றிப் போட்டது.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 20

Leave a Reply