நனைகின்றது நதியின் கரை 19(5)

“சங்கல்யா இங்க எதுக்காக வந்ததா சொன்னியோ உண்மையில் அதுக்காக வந்தது நீதான்….உனக்கு ஹாட் நியூஸ் வேணும்….வல்லராஜன் நீ எல்லாம் வல்லமை சேனல் பார்ட்னர்ஸ்….….தமன் ஸ்கோட்டா முன்னமே உங்களுக்கு பழக்கம்….

அவன் பேனானதுக்கு அரணை ரிவெஞ்ச் எடுக்கனும்னு ரொம்ப நாளா புலம்பிட்டு இருந்தான்….அதுக்காக அவன் தர பேமென்ட்….ஹாட் நியூஸால மீடியால கிடைக்கிற காசு…..சேனல் க்ரோத்னு உங்களைப் பொறுத்த வரை ஹெவி ஃப்ராஃபிட் ப்ராஜக்ட் இது….

சங்கல்யா உங்க சேனலுக்கு நியூ கம்மர்…படு டேலன்டட்…. அவங்களை இந்த ப்ராஜக்ட்ல யூஸ் செய்துக்கனும்னு முடிவு செய்து அவங்களுக்கு முன்னமே நீ அரண் வீட்டுக்குள்ள வந்துட்ட….சங்கல்யாட்ட அரண் சுகா  பத்தி உள்ள போய் டீடெய்ல் ஸ்டடி செய்துட்டு வான்னு அனுப்பி வச்சான் வல்ல ராஜன். நீ வல்லராஜன் ஆள்னே சங்கல்யாவுக்கு தெரியாது….

சங்கல்யா உன்னை மாதிரி எதாவது ஒரு வேலை தேடிகிட்டு அரண் வீட்டுக்குள்ள வருவாங்கன்னுன்னு தான் நீங்க எதிர் பார்த்தீங்க……அவங்க வரவும் பாம் ப்ளாஸ்ட் செய்துட்டு….இப்படி அவங்க காது கேட்க சுகாவை  குறை சொல்லிட்டு அதை சேனல்ல இன்டர்வியூவா கொடு…

நல்ல பேமண்ட் தரேன்னு சொன்னா அப்படி சங்கல்யா இன்டர்வியூ தருவாங்கன்னு நம்புனீங்க…. அடுத்து காசுக்காக, அப்படி ஹாட் நியூஸ் உண்டு பண்ண சங்கல்யாதான் பாம் ப்ளாஸ்ட்டே செய்தான்னு போட்டுவிட்டுட்டு நீங்க தப்பிச்சுகிடனும்னு ப்ளான்….

சோ பாம் ப்ளாஸ்ட் செய்ய ஹயர் செய்த டீம்ல இருந்து எல்லோர்ட்டயும் சங்கல்யா பேசுறது போல நீயே பேசுன…..

உங்க ப்ளான்ல முதல் ட்விஸ்ட் சங்கல்யா அனவரதன் மூலமா ப்ரபாத்ட்ட சொல்லிட்டே உள்ளே வந்தாங்க…..மாட்டிபமோன்னு முதல்ல பயம் இருந்தாலும் இதுல உங்களுக்கு ஜாக்பாட் சங்கல்யா ப்ரபாத்தோட ஃபியான்சின்னு ஆனதுதான்…..அது சங்கல்யா ப்ரபாத்தோட  ட்ராமான்னு தான் முதல்ல நம்புனீங்க….சோ எங்கேஜ்மென்டுக்கு பிறகும் நீங்க கேட்டா சங்கல்யா சுகா பத்தி போட்டு கொடுப்பான்னு கனவு கண்டீங்க….அப்படின்னா  ப்ரபாத்தோட ஃபியான்சி அரண் வைஃபை கல்ப்ரிட்னு சொன்னதா நியூஸ் வரும்….

அப்றம் ப்ரபாத் ஃபியான்சி அரண் ஃபேக்ட்டரிக்கு பாம் செட் செய்ததா நியூஸ் வரும்….சோ நீங்க ஆசைப்பட்ட ஹாட் நியூஸ் இப்ப சூப்பர் டூப்பர் ஹாட் நியூஸாகிரும்னு சந்தோஷப் பட்டீங்க…..

அடுத்துதான் ப்ரபாத் நிஜமாவே சங்கல்யாவை விரும்புறதா நீங்க நம்ப ஆரம்பிச்சது….சோ சங்கல்யாவை ஈசியா கல்ப்ரிட்னு கைய காமிச்சுட்டு தப்பிச்சு போக ப்ரபாத் விடமாட்டாங்கன்னு உன் டீமுக்கு தோணிட்டு…….அதனால சங்கல்யாவுக்கு எதிரா இன்னும் இன்னும் எவிடென்ஸ் செட் செய்ய நினைச்சீங்க…..

அதே நேரம் தப்பி தவறி சங்கல்யா தப்பிச்சு, உங்க டீம்  மாட்டிகிடும் போல இருந்தா ப்ரபாத் மேல காதல்னு கால்ல விழுந்து நீ தமனை காப்பாத்திவிடனும்னு உங்களுக்குள்ள டீல்……தமன் நேம் வெளிய வந்தா உனக்கு அவன்ட்ட இருந்து வர்ற மேஜர் அமவ்ண்ட் அடிவாங்கிடுமே…. அதோட காதலை தொலச்சுடுவனோன்ற வலியில இப்படி செய்துட்டேன்னு நீ கால்ல விழுந்துட்டா சுகா மைன்ட் செட்டுக்கு உன்னை காப்பாத்திவிட்டுடுவான்னு உனக்கு நம்பிக்கை…..அதுக்கு நீ ப்ரபாத்தை படு தீவிரமா லவ் பண்ணினங்கிற மாதிரி எவிடென்ஸ் வேணும் உனக்கு….

ப்ரபாத் மேல லவ் அதனால சங்கல்யா கூட அவனை சேரவிடலைனு நீ சொன்னா எந்த பொண்ணும் ஈசியா நீ ப்ரபாத்தை லவ்பண்ணதா நம்பிடுவான்னு உனக்கு நினைப்பு….அதுதான் உன் காதலுக்காக சுகாக்கு நீ காமிக்க நினச்ச எவிடென்ஸ்

அதே நேரம் சங்கல்யா ப்ரபாத்தை பிரிச்சு வைக்றதால நாளைப் பின்ன ப்ரபாத் சுகா அரண் எல்லோருமே சங்கல்யா ப்ரபாத்தை நிஜமா லவ் பண்ணலைனு நம்பவும் வசதியா இருக்கும்னு உனக்கு பிலிஃப்……

அப்படின்னா பிளாஸ்ட்டுக்கு பிறகு அவங்க யாரும் சங்கல்யாவை காப்பாத்த ட்ரை பண்ண மாட்டாங்கன்னு கணக்கு போட்ட…. சோ நீ மாட்டிக்கிறதுக்கான சான்ஸ் ரொம்பவே குறஞ்சிடும்னு கால்குலேட் செய்த…..அதனாலதான் நீ பொன்மேடு தேடிப் போய் அந்த சர்ச் வெட்டிங் கதை கிளப்பிவிட்டது…..வெட்டிங் நைட்ல எமிடிக்‌ஸ் கொடுத்தது எல்லாம்….

எங்கேஜ்மென்ட் நகையை திருடினது….சங்கல்யா கழுத்துல இருந்த செயினை கட் செய்துட்டு போக நினைச்சது எல்லாமே….சங்கல்யா பண ஆசை பிடிச்சவங்க….மத்தபடி ப்ரபாத்தை லவ் பண்ணலைனு காமிக்கவும்…..இல்லைனா நீ ஒருவேளை பின்னால மாட்டிகிட்டனா, ப்ரபாத் மேல வச்சிருக்க காதல்னால பொறாமைல திருடிட்டன்னு காமிச்சுகவோ எவிடென்ஸ் செட் செய்ய செய்த வேலை….”

“நீ, தமன் ஸ்கோட்டா, வல்லராஜன் மூனு பேரும் எதிர்பார்க்காத அடுத்த மெகா ட்விஸ்ட் சங்கல்யா ப்ரபாத்தை விரும்ப ஆரம்பிச்சதுதான்….எத்தனை பெரிய அமவ்ண்டுக்கும் எந்த மிரட்டலுக்கும் சுகாவை காட்டிக் கொடுக்க சங்கல்யா ஒத்துகலைனதும் ஆடிப் போய்ட்டீங்க….உங்க ப்ளான் படு ப்ளாப்….

அதே நேரம் அனவரதன் மிரட்டல்ல வல்லராஜனும் கழன்டுகிட…தமனும் நீயும் சேர்ந்து செய்த ப்ளான்தான் இந்த ஹயா சங்கல்யா கிட்நாப் ப்ளாட்…பழிக்கு பழி, நியூஸ்க்கு நியூஸ்….பெட்டர்ஸ்ட்ட இதுக்கு கமிஷன் வேற எக்கசக்கமா வாங்கி இருக்க…. ஒரு சேனல் தனியா தொடங்கிரலாம்னு உனக்கு தோணிட்டு…..பட் இப்ப எல்லா ப்ளானும் அட்டர் ப்ளாப்….”

முகம் செத்து உடல் இறுகி தரையைப் பார்த்து நின்றாள் சதானா. தப்பிக்கவே முடியாமல் மாட்டிக் கொண்டாளே….

“அதெல்லாம் சரி எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு உன்னை திரியேகன்ட்ட ரெக்கமென்ட் செய்த பெப்பிய எதுக்கு ஆக்சிடென்ட் மாதிரி செட் செய்து அடிச்சு போட்ட? உன்னை மாட்டிவிட்டுடுவான்னா? இல்லை பணம் அதிகமா கேட்டு மிரட்டுனாளா? மத்த எல்லா கிரைம விட அது அட்டெம்ட் ஆஃப் ப்ளான்ட் மர்டர் அதுக்குதான் உனக்கு பெனால்டி அதிகமா இருக்கும்”

“ஐயோ அப்படில்லாம் இல்ல…..தான் மேல சந்தேகம் வந்துடக் கூடாதுன்னு அவ ரொம்ப பயந்துட்டா….தமன் தான் அப்படி நடிக்க ஐடியா கொடுத்தது….அவ பயங்கர தமன் ஃபேன்….லூசு…அவன் என்ன சொன்னாலும் செய்வா…….அதோட இதுன்னா வேலை எதுவும் செய்யாம ஜாலியா இருக்குது…..

இல்லைனா ஆஃபீஸ் வா வேலையப் பாருன்னு உயிர எடுப்பாங்கன்னு சொல்லிகிட்டு இருக்கா…..அவ கூட தான் சுகவிதா வீட்டுக்கு வந்த முதல் நாள் பேசிட்டு இருந்தேன்….அதுலயே நீங்க புரிஞ்சுக்கலாம் அவ முழு ஹெல்த்ல தான் இருக்கா”

தனக்குள் சிரித்துக் கொண்டான் ப்ரவிர். உண்மையில் சதானா இப்பொழுது ஒத்துக் கொள்ளும் வரை அவன் சொன்ன அனைத்துமே யூகம் தான்….சதானா சங்கல்யா பத்தி சொன்ன கதையை சதானாவுக்குப் பொறுத்திப் பார்த்து அவன் செய்த யூகம்…..ஜஸ்ட் கெஸ்….அந்த பாம் டீம் கூட இவன் சொன்னது போல் சதானாவின் எண்ணின் கால் லாக் லிஸ்டை ட்ரேஸ் செய்து,

நம்பரை தேடி அழைத்திருக்கிறதுதான்…பட் அந்த அழைப்பை யாரும் ஏற்கவில்லை..அந்த எண் தமன் எண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை….அரணை பெட் செய்ய மிரட்டியதால் பெட்டிங்கில் பேனான தமன் மீது இவனுக்கு சந்தேகம் அவ்வளவே….

அவனோடு செஸ் கிளப்பில் இந்த சதானாவும் வல்லராஜனும் அடிக்கடி செஸ் விளையாடுவார்கள் என்பதுதான் அவனுக்கு தானா பத்தி கிடைத்த ஒரே வெளி தகவல்….

அடுத்த பக்கம்