நனைகின்றது நதியின் கரை 19(4)

“அவ செய்தது தப்புதான் ப்ரவிர்….பட் மனசுக்கு பிடிச்சவங்க நமக்கு இல்லைனு தோணுறப்ப வர்ற வலி என்னன்னு எனக்கும் தெரியும்….அதுல அவ கொஞ்சம் ஓவரா ரியாக்ட் செய்துட்டா….அப்படி ஒரு சிச்சுவேஷன்ல நானே சூசைட் பண்ணத்தான் நினைச்சேன்…..

நீ அந்த பாய்ஷனை மொதல்ல அவட்ட இருந்து வாங்குடா….கவ்ன்சில் செய்தா…காலம் போனா அவ மனசு ஆறிடும்….அவளே சரியாகிடுவா…..ப்ளீஸ் ப்ரவிர்….ஜீவாட்ட சொல்லிப் பாரு அவங்களும் அப்படித்தான் சொல்லுவாங்க…” சுகா தான்..

இப்போது அமைதியாய் அந்த தானாவைப் கேட்டான் ப்ரவிர். “சோ அட் த என்ட் ஆஃப் இட் சுகாவும் அரணும் இப்படித்தான் ரியாக்ட் செய்வாங்கன்ற வரைக்கும் தெரிஞ்சுதான் ப்ளான் செய்துறுக்க என்ன? சர்ச் வெட்டிங்னு சொன்னா ப்ரபாத் எப்படி நடந்துப்பான்….அந்த ப்ரபாத்தை பொறுக்கின்னு சொன்னா சங்கல்யா எப்படி நடந்துப்பா….அவங்க மனசுல .

பணத்தோட இடம் என்ன….ஆண்கள் மேல உள்ள வெறுப்பு என்ன…. அவங்க பேக்ரவ்ண்ட்… அதுவும் அவளுக்கே தெரியாத அவங்க பேக்ரவ்ண்ட்…ட்ரெய்ன்ல வச்சு ப்ரபாத்தை  வெளிய விட்டு லாக் செய்த விஷயம் வரைக்கும் தெரிஞ்சுதான் ப்ளான் செய்துருக்க இல்லையா……யார் நீ?”

சுகா இப்பொழுது யோசிக்கத் தொடங்கி இருந்தாள்….

“சங்கல்யாவை கல்ப்ரிட்னு காமிக்க அவ்ளவு மோசமா அவங்களைப் பத்தி கதை சொல்லிட்டு ஒழுக்க விஷயத்தில் மட்டும் ரொம்ப உயர்வா நீ சொன்னப்பவே நான் கெஸ் செய்துட்டேன்….

சங்கல்யாவ ப்ரபாத்ட்ட இருந்து  பிரிச்சு வச்சதுல கல்ப்ரிட்டோட ஹேண்ட் இருந்திருக்குது….அதுக்கு காரணமே கைல மாட்டினா காதல்ல செஞ்சுட்டேன்னு கால் விழுந்து தப்பிச்சுகிற திட்டமாத்தான் இருக்கும்னு…..உண்மையில் உனக்கும் காதலுக்கும் கண்டிப்பா எந்த லிங்கும் கிடையாது….. அதோட சுகா காதுல விழாதுன்னு நினச்சுட்டு முதுகுக்குப் பின்னால கார்டன்ல வச்சு அவளைப் பத்தி பேசுறப்ப லூசுன்னு சொல்லுவ….முகத்துக்கு நேர கால்ல விழுவ…உன்னைய நான் நம்பனும் என்ன?  ”

அவனை இறுகிய முகபாவத்துடன் பார்த்தாள் தானா.

“எல்லாம் நான்தான் செய்தேன்…எனக்குன்னு டீம் யாரும் கிடையாது……இத எத்தனை விதமா ரிப்பிட் செய்துறுக்க தெரியுமா?…இவ்ளவு அழுத்தி சொல்றப்பவே தெரியுது உன் பின்னால ஒரு டீம் குறஞ்ச பச்சம் ஒருத்தனாவது நிச்சயம் இருக்கான்னு….யார் அவன்?”

“……….”

இப்பொழுது அடுத்த கால் வந்தது ப்ரவிருக்கு…..பேசி முடித்தவன்

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? நீ ஹயர் செய்த பாம் ப்ளாஸ்ட் டீமை எப்பவோ நான் பிடிச்சுட்டேன்…ஐ மீன் என் மானிடரிங்லதான் அவனுங்க இருக்காங்க…பட் அது அவங்களுக்கும் தெரியாது….உன்னை இங்க அனுப்பினானே உன் பார்ட்னர் இன் க்ரைம் க்ரிகெட்டர் தமன் ஸ்கோட்டா, அவனுக்கும் தெரியாது….

இந்த தடியனுங்க வாங்கின காசு காலி போல ….. நீ அவனுங்களை கான்டாக்ட் செய்த நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்… கிரிமினல்ஸ் தானே அவனுங்க…..நீ அவங்களை கான்டாக்ட் செய்த நம்பர்க்கு இன்கமிங் கால் எந்த நம்பர்ல இருந்து அதிகமா வந்திருக்குன்ற டீடெய்லை அந்த நம்பர் சர்வீஸ் ப்ரவைடர்ட்ட இருந்து  திருட்டுத்தனமா வாங்கி, அந்த நம்பரை,  இன்னொரு பேமேன்ட் கேட்டு மிரட்ட கூப்டுறுக்காங்க……..இப்பதான் மெசேஜ் கிடச்சுது…..பைதவே இந்த எவிடென்ஸுக்காகத்தான் நான் உன் பாம் டீமை அரெஸ்ட் செய்யாம ஃப்ரீயா விட்டதே…..”

இப்பொழுது துள்ளி எழுந்துவிட்டாள் தானா….

“அரணை பெட்டிங்ல மாட்டிவிட ட்ரைப் பண்ணதுமே இதுல தமன் ஸ்கோட்டா கை இருக்கும்னு எனக்கு ஒரு சந்தேகம்….இப்ப கன்ஃபர்ம் ஆகிட்டுது…கூடவே உனக்கும் அந்த தமன்க்கும் உள்ள லிங்கை விசாரிச்சு சொல்லிட்டாங்க நம்ம பசங்க….”

கார் டயரில் நசுங்கிய காலி கோக் டின் போல போனது தானாவின் முகம்….

“ஆக தமன் பெட்டிங்க்ல மாட்டி டீமைவிட்டு டிஸ்மிஸானதுக்கும், பேனானதுக்கும் அரண் கொடுத்த சாட்சிதான் காரணம்னு நம்புறான்…அதுக்கு ரிவெஞ்ச் இது…..அது அவன் பக்க காரணம்….நீ எதுக்கு இதை செய்தன்னு தெரிய வேண்டாமா சதானா?”

தலை குனிந்து நின்றாள்  அவள். அவளது பெயரை சதானா என சொன்னதிலே தன்னைப் பற்றி அவனுக்கு நிறையவே தெரிந்திருக்கிறது என அவளுக்கும் தெரிகிறதுதான்…

“ஆக்சுவலி நீ ஒரு ரிப்போர்ட்டர்….” ப்ரவிர் நடந்தவைகளை சொல்ல தொடங்கினான்.

அடுத்த பக்கம்