நனைகின்றது நதியின் கரை 19(3)

“சுகா மேம் நீங்க படு ஷார்ப்….அதோட என் மனசை உங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்….” தானா அழத் தொடங்கி இருந்தாள்.

“இப்படி அழத் தான் போறன்னா செல்க்கு வந்து அழுதுக்கோ….நவின் இவளை கிளப்புங்க” ப்ரெஷர் போட்டான் ப்ரவிர்.

“நான்….நான் ஜோனை….அதாவது ப்ரபாத்தை விரும்புறேன்….” தன் செயலுக்கு விளக்கம் சொல்ல முனைந்தாள் தானா.

“அவங்க க்ரிகெட் விளையாட ஆரம்பிச்சதுல இருந்தே அவங்கள பிடிக்கும்….ஐ லவ் ஹிம்…..வாழ்க்கைனா அது அவங்க கூடதான்னு தோணிட்டு…..அவங்கள மீட் பண்ண நான் எவ்ளவோ ட்ரைப் பண்ணிப் பார்த்தேன்….பட் அவங்க ரீச்சபிளே இல்லை… எப்பவும் அரண் சுகவிதான்னு இவங்க கூடவே இருப்பாங்க….அதான் இங்க வந்து ஜாய்ன் செய்தேன்….எப்படியாவது அவங்கள மீட் பண்ணி என் விருப்பத்தை புரிய வைக்கனும்னுதான் வந்தேன்…..

பட் அவங்கட்ட நான் ஒரு வார்த்தை பேசுற அளவுக்கு கூட சிச்சுவேஷன் அமையுறதுக்கு முன்னமே இந்த சங்கல்யாவை தன் ஃபியான்ஸின்னு கூட்டிட்டு வந்துட்டாங்க ஜோன்….எனக்கு உயிரே போய்ட்டுது…. அதோட இம்மிடியட் எங்கேஜ்மென்ட்….அதான் சங்கல்யாவை ஜோன்ட்ட இருந்து பிரிக்கனும்னு……”

“பிரிக்கனும்னு…?” ப்ரவிர் எடுத்துக் கொடுத்தான்.

“அரண் பேக்ட்ரில பாம் செட் செய்து…சுகா அதை செய்த மாதிரி சங்கல்யாவை நம்ப வச்சு அவ மூலமா அதை மீடியாவுக்கு கொண்டு வந்தா….அரணும் சுகாவும்தான் தன் லைஃப்ன்ற மாதிரி நினைக்கிற ஜோன் சங்கல்யாவை வெறுத்துடுவாங்கன்னு நினச்சேன்…. அதான் சுகாதான் செய்றதுன்னு நம்பனும்கிற மாதிரி ஃபினான்ஷியல் லாஸை மட்டும் எய்ம் செய்து ப்ளாஸ்ட் அரேஞ்ச் செய்தேன்….”

“தென்?”

“இதுக்கு இடையில அனெக்‌ஸ்பெக்ட்டடா ஜோனோட அம்மா சிக் ஆகிட்டாங்க….சங்கல்யா வீட்டில் இல்லை….என் ஜோன் எனக்கு தர வேண்டியதுன்னு தாங்க முடியாம அரண் வீட்டுக்கு  டூப்ளிகேட் கே செய்து, அவங்க சங்கல்யாவுக்கு கொடுத்த அந்த எங்கேஜ்மென்ட் ஜுவல்ஸை எடுக்க போனப்ப, சங்கல்யா ஜோனை பிரியிரதா எழுதி வச்சுட்டு போன லெட்டர் கிடைச்சு நான் சந்தோஷப்பட்ட நைட் ஜோனுக்கும் சங்கல்யாவுக்கும் மேரேஜே ஆகிட்டுது….எனக்கு பயங்கர ஷாக்தான்….

ஆனா என் திட்டம் மேல இன்னும் நம்பிக்கை இருந்துது….அதோட லெட்டர்ல இருந்த, சங்கல்யா அரண் டைரிய விக்க ட்ரை பண்ண நியூஸும் எனக்கு கான்ஃபிடென்ஸ் தந்தது…. அதோட ஜோனையும் சங்கல்யாவையும் மானிடர் செய்தப்ப அவங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குதுன்னும் தோணலை….தே வேர் நெவர் டுகதர்….எனக்கு இருந்த ஒரே ஆறுதல் அதுதான்….என் ஜோன் என் ஜோனாதான் இருந்தாங்க”

“சோ?”.

“ஆனாலும் சங்கல்யா என் ட்ராப்ல மாட்டலை…. அவ வல்லராஜன்ட்ட நோ சொல்லிட்டு வந்துட்டா….வல்லராஜனும் அதுக்கு மேல எனக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன்னுட்டார்.. ஏன்னா அனவரதன் அவரோட கிட்ஸை கிட்நாப் செய்துடுவேன்னு மிரட்டினாராம்…..அப்பதான் இந்த ப்ளான் எனக்கு தோணிச்சு…..ஹயாவை கிட் நாப் செய்து…சங்கல்யா செய்ற மாதிரி நம்ப வச்சு….அரணை பெட்டிங்ல மாட்டிவிட்டா கண்டிப்பா என் ஜோன் சங்கல்யாவை திரும்பி கூட பார்க்க மாட்டாங்கன்னு தோணிச்சு….

குழந்தை மேல கைவைக்க என் மனசுக்கு சுத்தமா இஷ்டம் இல்லைதான்….சுகாவையும் அரணையும் வேற எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும்….ஃபேக்ட்ரி லாஸ்ன்றது இன்ஷுரஸ் மூலமா திரும்பி வந்துடும்ன்றதாலதான் அதில் கை வச்சேன்….

பட் ஹயாவை திருப்பி படு பத்திரமா கொடுத்தால் கூட அவங்க மனசு எவ்ளவு பாடுபடும்…..? சோ ரொம்பவே தயக்கமா இருந்துச்சு….ஆனா ஜோன்…..அவங்க….அவங்க சங்கல்யாவை பார்க்கிற விதத்தை என்னால தங்க முடியலை…..அவங்க ஹனிமூன் பத்தில்லாம் பேச ஆரம்பிச்சாங்க….வேற ஆப்பர்சுனிடிகாக நான் வெயிட் பண்ண எனக்கு டைம் இல்லைனு தெரிஞ்சிது….

அதான் இந்த ப்ளானை எக்சிக்யூட் செய்யலாம்னு முடிவு செய்தேன்…….இதுக்கு இடையில ஜோன் சங்கல்யாவை பொன்மேடு வேற கூட்டிட்டுப் போய்ட்டாங்க……இங்க அரண் சார்ட்ட சிக் லீவ் வாங்கிட்டு நான் அவங்களை ஃபாலோப் பண்ணி போய்….சர்ச் வெட்டிங் கதை சொல்லி அவங்களை பிரிச்சு வைக்றதுக்குள்ளயும் நான் உயிரோட செத்துட்டேன்….”

“அப்ப வாய்ஸை மாத்திப் பேசுறது நீயேதானா?”

“ம்…ஆமாம்…..சின்ன வயசுல இருந்து அது என் ஹாபி….மேல் வாய்ஸ் ஃபீமேல் வாய்ஸ்னு எதுனாலும் மாத்திப்பேன்…..சங்கல்யா அன்னைக்கு வர்றப்ப சுகா க்ளாஸ்ஹவுஸ்ல நின்னு பேசிகிட்டு இருந்ததைப் பார்த்ததும் நான்தான் ரெண்டு வாய்ஸ்லயும் பேசினேன்….. சுகாவை பாம்ப் ப்ளாஸ்ட் செய்த மாதிரியும் ஜோன் ஒரு வுமனைசர்ன்ற மாதிரியும்…..

ரிவெஞ்ச் எடுக்கதான் அவங்க சங்கல்யாவை கூட்டி வந்து வச்சுறுக்க மாதிரியும்…..மாத்தி மாத்தி பேசினேன்….செய்த எல்லாமே நான் தனியாதான் செய்தேன்…அப்பப்ப பணம் கொடுத்து யாரையாவது ஹயர் செய்துப்பேன்தான் மத்தபடி யார் கூடயும் சேர்ந்து செய்தேன்லாம் கிடையாது….

பாம்ப்ளாஸ்டுக்கு ஒரு டீம் ஹயர் செய்தேன்…அதுவும் சங்கல்யா நேம்லதான் அவங்கட்ட டீல் பேசினேன் நான்….அப்றம் இப்ப கிட்நாப் டைமும் சிலரை சங்கல்யா நேம்ல ஹயர் செய்தேன்…..மத்தபடி நான் மட்டும்தான் என் டீம்…”

“மேல சொல்லு….”

“ஜோன் டெல்லி கிளம்புற வரைக்கும்…… அவங்க பிரிஞ்சிருக்கனும்னு சங்கல்யாவுக்கு எமிடிக்‌ஸ் கொடுத்ததும் நான் தான்….அப்றம் இப்ப இந்த கிட்நாப்…போன்ல பேசுனது….எல்லாம் நான் தான்…..ஆனா எப்படி ட்ராக் செய்தீங்கன்னுதான் தெரியலை….பட் எல்லாமே என் காதலுக்காக மட்டுமே செய்த காரியம் இது…தயவு செய்து மன்னிச்சுடுங்க…..

பாம்ப்ளாஸ்ட் லாஸ் உங்களுக்கு இன்ஷுரன்ஸ் கம்பெனி திருப்பி கொடுத்துடும்…. மத்த எல்லா கஷ்டத்துக்காகவும் மன்னிப்பு கேட்கிறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை….ஆனா எப்ப என் ஜோன் எனக்கு இல்லைனு ஆச்சுதோ இனி நான் என்ன ஆனாலும் உயிரோட இருக்கப் போறது இல்லை….சோ நீங்க எனக்கு என்ன பனிஷ்மென்ட் ப்ளான் செய்தாலும் வேஸ்ட்…..” பயங்கர விரக்தியாய் முடித்தாள் தானா.

“தட்ஸ் குட்” என்றான் கேட்டிருந்த ப்ரவிர்.

“நவின்…அங்க கார்டன்ல உள்ள குடோன் தெரியும் தானே உங்களுக்கு…உள்ள ஒரு பெஸ்டிசைட் கேன் பார்த்தேன் எடுத்துட்டு வாங்க… வர்றப்ப ஒரு க்ளாஸ்ல ஊத்திக் கொண்டுவாங்க…குடிக்க வசதியா இருக்கும்….” எந்த சலனமுமில்லாமல் ஒரு டீ கொண்டு வந்து கொடுங்கப்பா என்ற டோனில் அவன் பேசிக் கொண்டு போக

அதிர்ந்து போய் விழித்தது தானா என்றால் அலறியது சுகா….

“ஏய் என்ன நீ….?” என ஆரம்பித்தவள் ப்ரவிரின் பார்வையில் மௌனமானாள். ஓகே ஏதோ ப்ளான் செய்றான் போல.

ஆனாலும் அந்த நவின் ப்ரவிர் சொன்னதைப் போல ஒரு லஸி க்ளாஸில் கிட்டதட்ட அரைலிட்டர் அளவில் அந்த பெஸ்டிசைடை ஊற்றிக் கொண்டு வந்த போதும்……அந்த அறை முழுவதும் அதன் ஸ்மெல் மூச்சுத் திணற செய்த போதும் பொறுமையாய் இருக்க முடிந்த சுகாவால்….ப்ரவிர் அதை அந்த தானாவின் கைகளில் திணித்த போது அப்படி இருக்க முடியவில்லை.

“ஏய்….அவ குடிச்சுடப் போறா ப்ரவிர்…..லவ் பண்றவன் கிடைக்கமாட்டான்னு மனசு உடஞ்சு போய் இருக்கா ஏற்கனவே…..விடு நீ அவளை….” பதறி ஓடி வந்த சுகாவை ஒற்றைக் கையால் பிடித்து நிறுத்தினான் ப்ரவிர்.

“நீ சரிப்பட மாட்ட….இடத்தை காலி பண்ணு…போ…” சுகாவிடம் சொன்னவன்…நவினை நோக்கி “சுகா மேடத்தை வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் இங்க வராத மாதிரி கதவை லாக் செய்துட்டு வாங்க….” அசராமல் ஆர்டர் கொடுத்துவிட்டு ஆனாலும் பிடித்திருந்த சுகா கையை இன்னும் விடாமல், மீண்டுமாய் அந்த தானாவைப் பார்த்து

“சீக்கிரம் குடி… நேரமாகுது…” என்றான்.

அடுத்த பக்கம்