நனைகின்றது நதியின் கரை 18(9)

சென்னை:

“சுகா லியா அண்ணி அண்ட் ஹயாவை ரெஸ்க்யூ செய்ய ட்ராக்கிங் ஸ்டிக்கர் சிக்னல் ட்ரன்ஸ்மிஷனை ஃபாலோ பண்ணி போறேன்…..…சூன் திங்க்ஸ்’ல் பி ஆல்ரைட்….யூ பீபுள் பி சேஃப்… “ சொல்லிய ப்ரவிர் கிளம்பினான்.

“அன்பரசி ஆன்டியை ஹாஸ்பிட்டல்ல தங்க வச்சுட்டு நான் வீட்டுக்கு கிளம்பலாமா ப்ரவிர்…?எங்களுக்கு செக்யூரிட்டி ஓகேவா இருக்குதா?” சுகா கல்ப்ரிட்டை பிடிக்கும் நூல் முனை இருக்கும் இடம் தன் வீடாயிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

இந்த மொபைல் வில்லி லியா சொல்லும் லூசு என்ற வார்த்தை, குரல் வகையில் சங்கல்யாவைப் போல இருந்தாலும், சொல்லும் தொனியும் டோனும் ,விதமும் .முன்பு ஒரு நாள் அரண் இவள் அம்னீஷியாவிற்கு பிறகு முதல் முறை வீட்டிற்கு கூட்டி வந்த புதிதில் இவள் தோட்டத்தில் கேட்ட சாயலில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது….

லியாவுக்கும் ப்ரபாத்துக்கும் நடக்காமல் போன முதலிரவு இவளுக்கு ஏதேச்சையாய் தெரிந்தது போல் ஏதேச்சையாய் தெரிந்த கொள்ள முடிந்த அந்த நபரும் அந்த தோட்டத்தில் உள்ள சர்வென்ட் க்வார்ட்டஸில் தங்கி இருப்பதாகத்தான் இவளுக்குப் படுகிறது. அந்த தானா பெண்ணின் குரல் இந்த மொபைல் வில்லி லியா போலோ அந்த தோட்ட லூசு குரல் போலோ இல்லை தான்…..ஆனால் இங்குதான் எத்தனை வாய்ஸ் மாடுலேஷன் பார்த்தாச்சு….? சோ குரல் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது….

அன்று திருமண மறுநாள் ப்ரபு “லியாவைப் பார்க்க உடனே வா…..இங்க கொஞ்சம் ப்ரச்சனை”னு கூப்பிட்ட போது “எதாவது டெலிகேட் விஷயமா இருக்கும்டா…..நான் கூட வந்தா லியாக்கு கஷ்டமா தோணலாம்… மனசுவிட்டு பேச ஹெஸிடேட் செய்வா…..அதனால நீ மட்டும் போய்ட்டு வா” என அரண் அனுப்பி வைத்ததால்,   ஹயாவும் இவளுமாக வருவதால் எதுக்கும் துணைக்கு இருக்கட்டும் என இவள் அந்த சர்வென்ட் தானாவை கூப்பிட்டு வந்திருந்தாள்.

லியா முகத்தை வைத்தே முந்திய இரவு என்ன நடந்திருக்காது என தானாவுக்கு தெரிய பெரிய துப்பறியும் மூளை எதுவும் தேவை இல்லை….மற்றபடி லியா திருமண இரவிலும் தானா இவளுடன் ப்ரபாத் வீட்டிற்கு வந்திருந்ததோடு மட்டுமல்லாமல்…ப்ரபாத் வீட்டிற்கு வந்திருந்த அனைவரையும் சொந்த ஊர் மக்களை அடுத்த ஊரில் கண்டவள் போல் ஓடி ஓடி உபசரித்தாள்…காஃபி குடிக்கலைனா பாலாவது சாப்டுங்கன்னு பானம் பரிமாறினாள்…..எதாவது எமிடிக்‌ஸை பாலில் கலந்து லியாவுக்கு கொடுத்திருக்க ஏராள வாய்ப்பு நிச்சயம் அவளுக்கு கிடைத்திருக்கும்.

அதற்கு முன்பும் லியா இவளது அரண் வீட்டிற்கு வந்ததிலிருந்து ப்ரபுவுக்கும் லியாவுக்கும்மிடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உளவு பார்க்க அதே வீட்டில் தங்கி இருக்கும் இந்த தானாவுக்கு ஒன்றும் முடியாத காரியமில்லைதான். கொஞ்சம் ட்ரை செய்திருந்தால் சாத்தியம் தான்….

லியா செயின் ஸ்னாசிங்…..ஃபேக்ட்டரி பாம் ப்ளாஸ்ட் பற்றி இவள் மீது குற்றம் சுமத்திய குரல் …இதெல்லாம் வீட்டில் தங்கியிருக்கும் சர்வென்ட் உதவி இருந்தால் கல்ப்ரிட் கை வரிசை காட்ட படு பாஸிபிளே… இவளுக்கு தெரியாத லியாவின் டெல்லி விசிட்தான் ப்ரபு லியா ப்ரெக்னன்சி பத்தி யோசிக்க காரணமாய் இருந்திருக்க முடியும்….அது  சீக்ரெட் விசிட் என்பதால் இவளைப் போல அந்த தானா அண்ட் கோவிற்கும் தெரியாமல் இருந்திருக்க வேண்டும்….

இப்படி ஒரு யூகம் தோன்றிய பிறகு தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் சுகா.

இந்த தானா கல்ப்ரிட்டை பிடிக்கும் நூல் முனைதானா?

மெல்பர்ன்: ஃபர்ஸ்ட் ஓவர் முடிந்திருந்தது. ஸ்கோர் போர்ட்……4, 6, 6, 4, 6, 3 என்றது. ப்ரபாத் மீண்டும் ஸ்ட்ரைக்கிங் என்ட்டில்.

சென்னை:

தன் டேபில் மெல்பெர்ன் மேட்ச்  லைவ் டெலிகாஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே வீட்டைப் பார்த்து போய்க் கொண்டிருந்த சுகாவிற்கு இந்த மேட்ச் சூழ்நிலை அரணை கட்டிப் போட்டு அடிப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது அவளுக்கு…. தகப்பனாய்….கேப்டனாய்….நண்பனாய்….உண்மை சிட்டிசனாய்…எத்தனையாய் அவன் போராட வேண்டிய நிலை….

மனதில் லேபில் வைத்து அவனைப் பூட்டிய அந்த நிகழ்வு முதல் அவனுடனான அத்தனை அத்தனை சண்டைகள்…இவள் அவன் பற்றி கொடுத்த ப்ரஸ் ப்ளாஸ்டுகள்….இவள் அவன் மனம் நோக செய்த அத்தனை நினைவுகள்……..அவளது ஃபுல் மெமரியும் ரிகவராகி இருந்தது….

சென்னை: அந்த ஆப்பிள் க்ரீன் நிற வால்வோவிற்கு இணையாக வர தொடங்குகிறது ஒரு வெண்ணிற வால்வோ…..அதே 170 kmh ஸ்பீட்…..அதன் அத்தனை ஜன்னல்களிலிருந்தும் பறக்கிறது வித வித வர்ண கொடிகள். ஒவ்வொன்றும் சில அடி நீளத்தில்.

இந்த வால்வோவின் பயணிகள் பகுதியில் ஒரே ஒருவர் “சார் உள்ள ட்ரைவர் தவிர ஒருத்தன் தான் இருக்கான்…” யாருக்கோ சொன்னான்.

மெல்பர்ன்: ஷாட் பிட்ச்சாகிய பால் பேட்டில் கனக்ட்டாகும் என நினைத்து ப்ரபாத் பேட்டை சுழற்றிய வேகத்தில் பந்து எட்ஜ் வாங்கி பவ்ண்ட்ரிக்கு பறக்காமல் ஆஃப் சைடில் இருந்த பீல்டரைத் தாண்டி தரையில் பட்டு செல்ல வேண்டிய வேகத்தைவிட சற்று மெதுவாக ஓட….ஒரு ரன் எடுத்து முடித்து சற்று திரும்பிய அரணும் ப்ரபாத்தும் அதோடு தங்கள் ஓட்டத்தை நிறுத்த வேண்டியதாயிற்று…..இப்பொழுது அரண் தன் ஃபர்ஸ்ட் பாலை எதிர் கொள்கிறான்…..

சென்னை:

இப்பொழுது இந்த வெண்ணிற வல்வோவிற்கு முன்பாக சென்று கொண்டிருந்த ரெட் கலர் ஐ 20 ஸ்லோடவ்ன் ஆக அதன் மீது இடிப்பதை தவிர்ப்பதர்காக அந்த பச்சை வல்வோவை பக்கவாட்டில் வெகுவாக நெருங்குகிறது இந்த வெண்ணிற வல்வோ அதன் காரணமாக க்ரீன் பஸ்ஸின் லெஃப்ட் சைட்டில் டென்டகிள் போல் நீட்டிக் கொண்டிருந்த சைட் மிரரில் இப்பொழுது விழுகிறது ஒரு சிறு இடி….காரணம் வைட் பஸ்ஸின் கொடிகள்…..விளைவு கீழ்புறம் பார்த்து வளைந்திருந்த டென்டகிள் உயர்த்திய தும்பிக்கைப் போல் மேல்பக்கமாய் அப் வர்ட் டர்ன்….

சட்டென ஸ்பீடை குறைத்து பக்கவாட்டு ஜன்னலை திறந்து கத்துகிறான் க்ரீன் பஸ் ட்ரைவர்….

“டேய் அறிவிருக்காடா முட்டாள்……சைட்ல வர்றத நான் எப்படி பார்க்கிறதாம்…?”

“சாரிண்ணா சாரிண்ணா அந்தப் பக்கம் கார்….” வைட் பஸ்ஸும்  ஸ்பீடை குறைத்து அதன் ஒற்றை  பேசங்ஜர் கதவை திறந்து படியில் நின்று மன்னிப்புக் கேட்டான்……

இதற்குள் பக்கவாட்டு சாலையிலிருந்து இவர்களுக்கு முன்னான சாலையில் ஏறியது இரண்டு மணல் லாரிகள். இரண்டும் இந்த இரண்டு பஸ்களுக்கு முன்பாக…..பாரம் காரணமாக 30 km ஸ்பீடில் அவைகள்……

ஆக க்ரீன் அண்ட் வைட் பஸ் இருவருக்கும் இல்லை வழி….சோ இவை இரண்டும் கூட இப்போது 30km ஸ்பீடில் லாரிகளை பின் தொடர்கின்றன…..

தன் பஸ்ஸில் சைட் மிரர் அப்வர்ட் பொஷிஷனில்……வைட் பஸ்ஸின் படியில் நிற்கும் பேசஞ்சர்….அதில் பறக்கும் கொடிகள்…..க்ரீன் பஸ் ட்ரைவருக்கு இடப் புறம் பக்கவாட்டில் நடக்கும் எதையும் பார்க்க வாய்ப்பின்றி போனது….

அடுத்த பக்கம்