நனைகின்றது நதியின் கரை 18(7)

“அப்ப அந்த வல்லராஜன் ப்ளாஸ்ட் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கித் தாரேன்னு சொன்னப்பவே நீ ஒத்துகிட்டு இருக்கலாமே….அதைவிடவா இப்ப உனக்கு பெருசா கிடச்சுட போகுது இதுல?….எதுக்காக இப்படி நடிக்க சங்கல்யா?…ஜஸ்ட் கிவ் மி ய ஹின்ட்….உன்னை இப்படி மிரட்டுறது எத்தனை பேர்…எந்த இடத்துல உன்னை அடச்சு வச்சுறுக்காங்கன்னு தெரியுதா? ஹயா உன் கைல தான இருக்கா?”

சுகாவிற்கு ஏதோ புரியத் தொடங்குகிறது… ஆனாலும்….

“ஹோய்….நீ முழு லூசுதான்…..அந்த வல்லராஜனை நான் பார்க்கப் போனப்ப நீ கூட வந்தியாமா? சும்மா அதெல்லாம் ஒரு ட்ராமா….உன் ஃபேக்டரி பாம்ப்ளாஸ்ட் நியூஸ் கிடைக்கவும் வந்த ஐடியா இது…. உங்களுக்கு சந்தேகமே வராம என்னை நம்ப வைக்றதுக்கு அப்படி ஒரு சீன் போட்டேன்…….அப்பதான முக்கியமான நேரத்துல என்னை நம்பி என்னை ஃப்ரீயா மூவாகவிடுவ? இல்லைனா ஹயாவ என்ட்ட தந்துட்டு போவியா? ஐ’ம் ஆல்வேஸ் பெர்ஃபெக்ட் இன் ப்ளானிங்…..சரி இப்ப அந்த கதை எதுக்கு…..அரணுக்கு கால் பண்ணு….” அந்த நாள் அழுது வீங்கிய முகமும் ப்ரச்சனை சால்வ் ஆனதில் வந்து விட்ட முழு மலர்ச்சியுமாய் டின்னருக்கு வந்து நின்ற லியா முகம் ஞாபகம்.

சுகாவின் மனது காரண காரியங்களை அலசுகிறது.

“ஸ்பீக்கர் ஆன்ல இருக்கா லியா? எனக்கு சரவ்ண்டிங் சவ்ண்ட் எதுவும் உன்பக்கத்துல இருந்து அவ்ளவா இல்லைனதும் ஸ்பீக்கர் ஆஃப்னு நினச்சேன்…நீ பயப்படாத லியா….வி’ல் டூ த நீட் ஃபுல்…”

“லூசு…” சங்கல்யா ஏதோ தொடங்க….

இதற்குள் புயலாய் அங்கு வந்திருந்த ப்ரவிரின் சைகை படி காலை கட் செய்தாள் சுகா.

இந்த லூசு பதம் ஏதோ ஏனோ நெருடியது சுகாவிற்கு…..

“ சுகா ஜஸ்ட் கிவ் மி ஃப்யூ மினிட்ஸ்……ஐ நோ வேர் ஷி இஸ்…..ஷி இஸ் ஆன் மூவ்… எந்த வெகிகிள்னு மட்டும் பார்த்துடுறேன்……தென் இம்மீடியட்லி ஹயாவையும் அண்ணியையும் ரெஸ்க்யூ செய்துடலாம்…..அரண் மச்சானை அதுவரைக்கும் சமாளிக்க சொல்லு…. முதல்ல அவங்க ரெண்டு பேரும் கைக்கு வரட்டும்…..அப்றமா அந்த கல்ப்ரிட் யார்னு ட்ரேஸ் செய்யலாம்..….….” சொன்னவன் பார்க்கிங்கை மானிடர் செய்யும் cctv விடியோ ரெக்கார்டிங்கைப் பார்க்க ஓடினான்.

அவனோடு சேர்ந்து ஓடினாள் சுகா…. “ கல்ப்ரிட் கூட இல்லையா லியா?….நம்மட்ட லியா வாய்ஸ்ல வேற யாரோதான் பேசுறாங்களா? ஹயா லியாட்ட சேஃபா தான இருப்பா ப்ரவிர்…?….ஒருவேளை குழந்தை கல்ப்ரிட் கைல இருந்தா?” அவளது தாய்மை தவித்தது.

“பயப்படாத சுகா என் கெஸ் குழந்தை அண்ணிட்ட தான் இருப்பா…… இத செய்ற திடுட்டு நாய்  எப்பனாலும் குழந்தையும் கையுமாதான் அண்ணி நம்மட்ட மாட்டனும்னு நினைப்பான்….ஏன்னா அரண் மச்சானை மாட்டிவிட எந்த அளவுக்கு அவன் எஃபர்ட் எடுத்றுக்கானோ….அந்த அளவுக்கு லியா அண்ணிதான் கல்ப்ரிட்னு மாட்டனும்னும் அவன் எஃபெர்ட் எடுத்துறுக்கான்….அதான் பை சான்ஸ் நாம இப்ப அண்ணியை ட்ரேஸ் செய்துட்டா கூட குழந்தை அவங்க கைல இருந்தாதான் அண்ணி ஹயாவை கடத்திட்டு ஓடுறப்ப நாம பிடிச்சுட்டோம்னு ப்ரூவ் பண்ண முடியும்னு யோசிப்பான்….”

ப்ரவிரின் வியூவை அல்மோஸ்ட் ஏற்க முடிகிறதுதான் சுகாவால்……இத்தனை நீள கான்வர்சேஷனில் அத்தனை எஃபெர்ட் எடுத்து லியாதான் குற்றவாளி என இவளை நம்ப வைக்க அழைப்பின் நோக்கத்திற்கு தேவை இல்லாத எத்தனையோ இன்ஃபர்மேஷன் கொடுக்கப்பட்டதாக இவளும் உணர்கிறாள்தான். ஆனால்….அந்த சங்கல்யா ப்ரபாத்தை தவிர்த்ததாக சொன்ன விஷயம்? அது பலமாக நெருடுகிறது…..

லியாவை மோசமாக காண்பிக்க நினைக்கும் ஒருத்தி பணத்துக்காக மட்டும் தான் லியா இதை செய்வதாகவும் மற்றபடி ஒழுக்க விஷயத்தில் தவறவில்லை என ஏன் காண்பிக்க முயல வேண்டும்?

அதுவும் லியாவிற்கும் ப்ரபாத்துக்கும் எதேச்சையாய் இவளுக்கும் தெரிந்த ஒரு விஷயம் இந்த ஃபோன் பேசும் கிரிமினல்க்கு எப்படி தெரிந்ததாம்? சோ பேசுவது லியாவாகவே ஏன் இருக்கக் கூடாது? முன்பு ஆஸ்த்ரேலியா போய் வர இவள் சொன்ன போதும் லியா மறுத்திருக்கிறாளே…..வெட்டிங்கை வேண்டாம் என்றாள்…..கையில் எங்கேஜ்மென்ட் ரிங் கூட கிடையாது…..வெட்டிங் பின்னும் ப்ரபாத் ஹாஸ்பிட்டலிலும் இவள் வீட்டிலுமாய்….அவனைப் பார்க்க லியா ஆர்வம் காண்பித்தது கிடையாதே….. செக்யூரிடி ஆலன்வேறு லியா விருப்பத்துடன் தான் காரில் ஏறியதாக சொல்கிறார்.

“அவங்க ரெண்டு பேருக்கும் ரிலேஷன்ஷிப் எதுவும் இல்லைனு இந்த ஃபோன்ல பேசுறவ சொல்றாளே ப்ரவிர்? அத எதுக்கு இப்ப சொல்லனும்? அதோட அது உண்மையான இன்ஃபோ…..” ப்ரவிரிடம் இதை இதற்குமேல் என்னவென்று சொல்லி கேட்பதாம்….கேட்க முடிந்தவண்ணம் கேட்டாள் சுகா.

“ஹேய் அதிலெல்லாம் எந்த உண்மையும் இல்ல….அண்ணா கிளம்பினப்ப அண்ணி எவ்ளவு டவ்ண் தெரியுமா? அதைப் பார்த்துட்டு நான்தான் அவங்க டெல்லி போய் அண்ணாவை சென்டாஃப் பண்ணிட்டு வர அரேஞ்ச் செய்து கொடுத்தேன்…..எவ்ளவு சந்தோஷப்பட்டாங்க தெரியுமா? அதைவிட முக்கியமான விஷயம் தன் மேல உள்ள ட்ராக்கரை அண்ணி இன்னும் ரிமூவ் பண்ணலை….அதிலயே தெரியலையா நம்மட்ட இருந்து அவங்க தப்பிச்சு ஓடிட்டு இல்லைனு….நாம ரெஸ்க்யூ பண்ண வருவோம்னு அவங்க நம்புறாங்க…”

அதற்கு மேல் சுகா ப்ரவீரை கேள்வி எதுவும் கேட்கவில்லை…… அரணை அழைத்திருந்தாள்.

“விதுக் குட்டி”

அத்தனையாய் துடித்துக் கொண்டிருந்தாலும் அது வரை ஏதோ ஓரளவு தன்னைக் கட்டுபடுத்தி சூழலை கையாள முயன்று கொண்டிருந்த சுகா தன்னவனின் குரலைக் கேட்டதும் உடைந்து கொண்டு போனாள். ஆனாலும் எப்படியோ சமாளித்து விஷயத்தை சொல்லிமுடித்தாள்.

“விதுமா ப்ரவிர் சொல்ற மாதிரி நடந்துக்கோடா….பயப்படாத….நீ பேனிக் ஆகிற டைப்னு நினச்சு தான் உன்னை கூப்டு பேசுறா அந்த கிரிமினில்….சோ டோன்’ட் ஈல்ட் டூ இட்…..ஐ’ல் பை டைம்….அதுக்குள்ள பால்குட்டி லியா ரெண்டு பேரும் சீக்கிரமா நம்ம கைக்கு சேஃபா வந்துடுவாங்க….நீ ப்ரபு லியா ரிலேஷன்ஷிப் பத்தி அந்த கிரிமினல் சொல்றதெல்லாம் வச்சு மனச குழப்பிக்காத….லியா கன்சீவா இருக்றாளோன்னுலாம் இடையில் ஒரு சஷ்பிஷன் போய்ட்டு இருந்தது அவங்களுக்குள்ள….. அப்போ கூட லியாக்கு சந்தோஷம் தான்….இவன்தான் லியாவுக்கு இவ்ளவு சின்ன வயசுல குழந்தையான்னு  புலம்பிட்டு இருந்தான்….. “

அரண் அடுத்து போட்டி முடியும் வரைக்குமே இவளிடம் மட்டுமல்ல யாரிடமும் பேசமுடியாது. ஆனால் அவன் இப்போது சொல்லிய தகவலே கல்ப்ரிட்டை ட்ராக் செய்ய தேவையான நூல் முனையை இவள் கையில் பிடித்து கொடுத்ததாக உணர்ந்தாள் சுகவிதா.

அடுத்த பக்கம்