நனைகின்றது நதியின் கரை 18(6)

டந்தவைகளை சுகா முழுதாய் புரிந்து கொள்ளும் முன்னம் அவளது மொபைல் சிணுங்க லைனில் சங்கல்யா.

“ பயப்படாதீங்க சுகவிதா மேம்….. உங்களுக்கே தெரியும்…..ஐ’ம் வெரி ஜென்டில் வித் விமன்…உங்களையோ ஹயாவையோ கஷ்டபடுத்ற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்….சேம் டைம் ஐ’ம் ஆம்பிஷியஸ்….லைக் டூ எர்ன் அ லாட்….அண்ட் யூ நோ மை ப்ரொஃபஷன். நான் உங்க வீட்டுக்கு வந்ததே அதுக்காகதான்…..நவ் மை மொமன்ட் ஹஸ் கம்…இதுக்காகத் தான் இவ்ளவு நாளா வெயிட் பண்ணது….”

“லியா என்னாச்சு லியா? யார் உங்களை கிட்நாப் செய்துறுக்காங்க…? த்ரெட் பண்றாங்களா லியா…? எவ்ளவு அமவ்ண்ட் கேட்டாலும் கொடுத்துடலாம்…நீங்க பயப்படாதீங்க….ஹயா குட்டி உங்க கூட தான இருக்கா….அவ உங்கட்ட இருக்ற வரைக்கும் எனக்கு பயமில்லை…நீங்க பார்த்துப்பீங்கன்னு தெரியும்…”

இங்கு இவளிடம் பேசிக் கொண்டே சுகா அவசர அவசரமாக தன் பேக்கிலிருந்து தேடி எடுத்து அடுத்த மொபைலில் ப்ரவீர் எண்ணை அழைக்கிறாள்.

“லூசு மாதிரி பேசாதீங்க சுகா….நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க…..என்னை யாரும் கிட்நாப் பண்ணலை நான் தான் ஹயாவை கிட்நாப் செய்துறுக்கேன்….இப்ப வழவழன்னு கதைய இழுக்காம நான் சொல்றதை செய்ங்க…..உங்க ஹஸ்பண்ட் அரண்க்கு போன் செய்து விஷயத்தை சொல்லுங்க….”

“இல்ல மேட்ச் ஆரம்பிக்கப் போகுது அவங்கட்ட பேச முடியாது….” சுகாவின் ஸ்டெர்ன் குரல்.

“ப்ச் பேசிகிட்டு இருக்கப்ப இதென்ன இடையில பேசுற லூசு….அவன் அங்க லாக்கர் ரூம்க்கே இப்பதான் போறான்….இந்த நேரத்துல உன் கால் தவிர யாரோடதையும் பிக் அப் பண்ண மாட்டானே உன் கேப்டன் ஹஸ்பண்ட்…. அதான் உன்னை சொல்ல சொல்றேன்…”

“ப்ரபு கூட அப்டித்தான்….அவன் வைஃப் காலை பிக் அப் செய்வானே…..அப்ப நீயே அவன்ட்ட சொல்லு லியா காசுக்காக ஹயாவை தூக்கிட்டு ஓடிட்டேன்னு.” இதை அவள் சொன்னது விஷயம் ப்ரவிருக்கு புரிய வேண்டும் என்பதற்காக…..

சுகா பேசும் அனைத்தும் அடுத்த இணைப்பை ஏற்றிருந்த ப்ரவீரின் காதுகளில். ப்ரவீர் தன் லேப்டாப்பை நோக்கி ஓடத் துவங்கி இருந்தான்.

“ப்ச்…அவன் ஒரு கேடுகெட்ட பொறுக்கி….அவன்ட்ட போய்…..சே….எப்பவும் எதாவது அசிங்கமா தொட ட்ரைப் பண்ணிட்டு இருப்பான்….அவன்ட்ட இருந்து என்னை காப்பாத்திக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு…..அந்த நாய்ட்ட போய் யார் பேச….? யூ சீ…இட்’ஸ் மை கரியர்….தட் டசின்ட் மீன் ஐ’ல் காம்ப்ரமைஸ் ஆன் திஸ்….அதோட நான் ஹயாவ தூக்கிட்டுப் போய்ட்டேன்னு  சொல்லி அவனை நம்ப வைக்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்….அவ்ளவு நம்பிக்கை என் லவ்மேல அந்த முட்டாளுக்கு…நீயானா ஹயாவை காணோம்னு சாட்சியோட சொல்லிவியே…..இன்னும் டைம் ரொம்ப கம்மியா இருக்கு…. ”

இந்த பதிலில் சுகாவுக்குள் சுனாமி தாக்கம்….மத்தவிஷயம் எப்படியோ….ப்ரபாத் சுபாவத்திற்கு சர்ச் வெட்டிங் போவதென்றால் அதுவரைக்கும்  நிச்சயமாய் காத்திருந்திருப்பான்……அவர்கள் முதலிரவில்  நடந்த கதை ப்ரபாத் லியா தவிர இவளுக்கு மட்டும் தான் தெரியும்… அப்படியானால்??? லியாவை யாரவது மிரட்டி பேசவைத்தால் யாருக்குமே தெரியாத இதை அவள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இப்பொழுது சுகா தன் மொபைல்களை  பிடித்திருந்த விதத்தில் இந்த சங்கல்யாவின் பேச்சுமே ப்ரவீருக்கு கேட்கிறது….

“அரணோட இ மெய்ல்க்கு ஒரு மெய்ல் அனுப்பி இருக்கேன்….…..அதுல அவன் எந்த பால்ல அவ்ட் ஆகனும்….எந்த ஓவர்ல யாரை பவ்ல் பண்ண சொல்லனும்…..அதுக்கு முன்னால என்ன சிக்னல் கொடுக்கனும்….  அப்படிங்கிற டீடெய்ல்ஸ் இருக்கும்…. அதை அவனை அப்படியே ஃபாலோ பண்ண சொல்லு…. அதோட இந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிக்கும்னு ஹெவி பெட்டிங்காம்…சோ இவன் எனக்கு மேட்ச்சை லாஸ் செய்து தரணும்….. எனக்கு அது போதும்….”

“வாட் மேட்ச் ஃபிக்ஸிங்கா…?”

“பிறகு வேறென்னவாம்…? க்ரோர்ஸ் அண்ட் க்ரோர்ஸாஃப் பெட்டிங்……பெட்டிங் பீபுள் எனக்கு தர்ற கமிஷன்  படு ஹெவியா இருக்குமே…”

“இதுக்கு ஒத்துக்குற ப்ளேயர் யாரையாவது தேடவேண்டியது தான…?”

“ப்ச் லூசுன்னா சரியாத்தான் இருக்குது…..இது வெறும் பிக்‌ஸிங்காவா உனக்கு தோணுது….இன்னைக்கு மேட்ச் முடியவுமே….அரண் இப்படி நாக் அவ்ட் ரவ்ண்டில் மேட்ச் ஃபிக்ஸ் செய்து இன்டியாவை தோற்கடித்தார்னு ஒவ்வொரு சேனல்லயும் எவிடென்ஸோட டெலிகாஸ்ட் செய்ய வைப்பனே….அதை அரண் சுய விருப்பத்துல செய்தேன்னு ப்ரஸ்ல…க்ரிகெட் போட்ட ஒத்துகிட்ட உடனே ஹயா சேஃபா உங்க கைக்கு வந்துடுவா. இந்த நியூஸ்காக  ஒவ்வொரு சேனலும்  போட்டி போட்டுகிட்டு எனக்கு பணம் கொட்ட மாட்டானா?”

“சோ இது ரெவஞ்ச் எடுக்றதுக்காக செய்ற வேலை….”

“சே….அரணோட ஸ்டார்டம்மை காசாக்குற வேலை…..ஹயா கைக்கு வரவும்….இப்படி என்னை த்ரெட் செய்தாங்கன்னு அரண் திருப்பியும் மீடியாக்குத்தான் வந்தாகனும்….அதுக்காகவும் சில சேனல்ஸ்ட்ட நான் டீல் பேசியாச்சு…..ஐ’ம் அ மீடியா பேர்சன்…எனக்கு தேவை ஹாட் நியூஸ் அவ்ளவு தான்….”

“அப்ப நீ மாட்டிக்க மாட்டியா லியா….?”

“நான் ஏன் மாட்றனாம்….? என் பேரை வெளிய சொல்லாத….இல்லைனா இதெல்லாம் செய்ய சொன்னதே என் ஆசை ஹஸ்பண்ட் தான்னு சொல்லிடுவேன்….அரண் ரிட்டனானதால ப்ரபாத்தோட டெம்பரரி கேப்டன்சி பறி போய்ட்டு….அது தான் மோட்டிவ்னு போட்டுவிட்டுடுவேன்னு உன் ஹஸ்பண்டை த்ரெட் பண்ணுவேன்……. 90% ப்ரபாத்த காப்பாத்தனும்னு நினச்சு அரண் என் மேல பப்ளிக்ல அக்யூஸ் செய்றத அவாய்ட் பண்ணுவான்….இல்லை மீதி 10% ஆப்ஷனா துணிஞ்சு என் பேரை இழுத்தாலும்….அதுவும் அடுத்த ஹாட் நியூஸ்…..சேனல்ல இருந்து பணம் வாங்கிட்டு நானும் பதிலுக்கு பதில் அறிக்கை கொடுப்பேன்….நம்ம லீகல் சிஸ்டம் பத்தி தெரியாதா? கேஸ்னு வந்தா பார்த்துகலாம்….மீடியாவுக்கு வர ரொம்பவே யோசிக்கிற நீங்களே அதை ஃபேஸ் செய்ய இறங்குறப்ப நான் மீடியா பெர்சன்….எவ்ளவு தூரம் இறங்குவேன்….ஐ நோ டு ஹேண்டில்…நீங்க எல்லோரும் பிக் ஷாட்ஸ் உங்கள தொடுற எல்லா நியூஸும் எனக்கு மனி.”

அடுத்த பக்கம்