நனைகின்றது நதியின் கரை 18(4)

அதோட ஹாஸ்பிட்டல் வெட்டிங் மறுநாளே நீங்க நெருங்கி வந்தீங்க….அந்த நேரம் மனசுவிட்டு பேசுன பிறகு சரின்னு சொல்லிட்டு நீங்க மனசுவிட்டு பேசவும் உங்கட்ட முன்னால பேசுன அளவு கூட பேசாம ஒதுக்கி போயிருந்தேன்….அதோட அப்பப்ப உங்க கண்ணுல வரும் ஆசை…….. ஜஸ்ட் நமக்கு கிடைச்ச 14 டேஸ்…. இந்த வெட்டிங்காக இப்படி விரதம் இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்துதோ கண்டிப்பா இந்த வெட்டிங்கு நான் ஒத்துட்டு இருக்கவே மாட்டேன்…. வாட் ஐ மீன் இஸ்…எனக்கு இதப் பத்தி பேசிக் ஐடியாவே கிடையாது….அப்டி இருக்கப்ப நான் எப்படி கேட்பேனாம்….?”

“அப்படின்னா இதுக்கு என்ன அர்த்தம்?” கேட்கும் போதே அவன் அலர்ட்டாவதும் உடல் இறுக அவன் கரம் அவளை இறுக்கிப் பிடிப்பதும் மனைவிக்குப் புரிய…..

“ப்ச்…..பாத்ரூம் தண்ணி, அப்ப வெளிய பெய்துகிட்டு இருந்த மழை…இந்த சவ்ண்ட்ல நான் சுகாட்ட சொன்ன எதாவது உங்களுக்கு மாத்தி கேட்றுக்கும்…..அதுக்கு ஏன் இவ்ளவு யோசிக்றீங்க….” ஏதேதோ சொல்லி செய்து அவனை சமாதானம் செய்துவைத்தாள் அது ஒரு இயல்பான நிகழ்வுதான் என. அப்படியாகத்தான் இருக்கும் என இவளும் நினைத்தாள்.

இருந்தாலும் மறு நாள் சென்னை திரும்பி வந்தவள் இந்த விஷயத்தை ப்ரவிரிடம் சொல்லி வைத்தாள். இதற்கும் முன்பு சுகா குரலில் பேசி இவளை குழப்பிய அந்த நிகழ்வுக்கும் எதுவும் லிங்க் இருக்குமோ என்ற அறிவின் லாஜிக்கலி லாஜிக் இல்லாத கேள்வி காரணம்.

ப்ரவிரோ அவன் பக்க தகவல்களை இவளிடம் பகிர்ந்தான். “மன்யத்துக்கும் இங்க நடக்கும் எதுக்கும் சம்பந்தமில்லைனு தெளிவா தெரியுது அண்ணி…அவன் ஃபினான்ஸ் இன்னுமே அரண் க்ரூப்ஸை டிபென்ட்டாகி இருக்குது…. இதில் அரண் பிஸினஸ் கொஞ்ச நாள் நடக்காமல் இருந்தாலே அவனுக்கு ஹெவி லாஸ் ஆகும்…அப்படி தான் தலையில மண அள்ளிப் போட்டுகிற அளவு அவன் முட்டாள் கிடையாது…

“.ஃபெலிக்ஸ் இன்னும் சுகா மேலயும் அரண் மச்சான் மேலயும் படு கோபத்துல தான் இருக்கான்…..அவனை கொஞ்சம் கவனிக்கனும்….தன்னை அவமான படுத்தினதுக்கு அவமானபடுத்தனும்னு நினைச்சு இதை செய்துறுக்கமாட்டான்னு நிச்சயம் இல்லை….”

 

“அந்த சர்வென்ட் க்வார்ட்டஸ் வாய்ஸ் ரெக்கார்ட்ஸ் கேட்டதுல அந்த அலோக் அவன் வைஃப் அஷிஷி தங்களுக்குள்ள தமிழ்ழ பேசிக்கிறதே இல்லைனு தெரியுது….. உங்கட்ட அண்ணாவை சுகாவை தப்பா நினைக்க வைக்க செய்த ட்ராமாதான் அன்னைக்கு உங்க காதுல விழுந்த அந்த கான்வெர்ஷேஷன்……ப்ரபாத் அண்ணா ஒரு பொறுக்கி….. சுகாவும் சரியில்லைனு நீங்க நினச்சீங்கன்னா ஈசியா மீடியால சுகாவை ப்ரபாத்தோட வைஃப்ஃபா போட்டு கொடுப்பீங்கன்னு அவங்க நினச்சிருக்கனும் போல….”

அடுத்து வந்த நாட்கள் ஒரு வகையில் ரொம்பவும் ஈவன்ட்லெஸ்…..எந்த வித புது ப்ரச்சனையும் முளைப்பிக்காமல் சென்றது காலம். அரண் ட்ரெயினிங்கில் இருந்தான். சுகா அவனை சுத்தி அலைந்தாள். ஹயா சூழ் உலகமாய் அவர்கள் நேரங்கள் இனிது. தினமும் ஒரு முறை குடும்பமாய் அன்பரசியையும் சங்கல்யாவையும் வந்து சந்தித்துவிட்டு போவது அவர்கள் வழக்கம்.

சங்கல்யா அன்பரசியுடன் தான் அதிக நேரம் செலவிட்டாள். தினமும் ஜோனத்திடம் அவன் தரும் ரேஷன்ட் டைமில் கடலை..காதல்…. அதோடு அவனது ஒவ்வொரு மேட்சுக்கும் டென்ஷனாகி அதற்கு பின் அவனிடம் அதைப் பற்றி புலம்பி……அதற்கான அவனது ரெஸ்பான்ஸில் மயங்கி…..ஒவ்வொரு நாளும் அவன் மீதான ப்ரமிப்பும் ரசனையும் கூடிக் கொண்டு போனது இவளுக்கு…

அடிக்கடி வரும் ப்ரவிர்.  என்னதான் அன்பரசி அவனது அம்மாவின் சொந்த அக்கா என்றாலும் ஜோனத் வீட்டில் தங்க அவன் சம்மதிக்கவில்லை. “என் டைமிங்க்கு என் க்வார்ட்டஸ் செக்யூரிட்டி தான் லாயக்கு” என காரணம் சொல்வான்.

அதே நேரம் “அடிக்கடி போலீஸ் வெகிகிளை வீட்டுப் பக்கத்துல பார்த்தாலே யாரும் ஈசியா உள்ள வர யோசிப்பாங்க” என தன் வருகைக்கும் விளக்கம் தருவான்.

வரும் போதெல்லாம் வாயாடுவான். அதோடு வீட்டுக்கு என்ன தேவையாய் இருக்கும் என கேட்காமலே செய்து வைப்பான்.

இதில் அவன் அந்த ப்ளாஸ்ட் செய்த டீமை  பிடித்துவிட்டானோ என சந்தேகம் வர தொடங்கியது சங்கல்யாவுக்கு…”ஜர்னலிஸ்ட் மேம் என்னைய இன்வெஸ்டிகேட் செய்யாம இருங்களேன்….”என்று மட்டும் அதுக்கு விளக்கம் தந்தான்.

எது எப்படியோ போலீஸைப் பார்த்தால் பயம் என்பது போய் ஆல் போலீஸ் ஆர் மை ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என சொல்லும் நிலைக்கு வந்து கொண்டிருந்தாள் சங்கல்யா. உபயம் இந்த வளந்த வால்.

இரண்டு மாதம் கடந்திருந்தது. அரண் ஃபிட்னெஸ் அவனை உலக கோப்பைக்கு தகுதி படுத்தியது. அவனும் ஆஸ்ட்ரேலியா கிளம்பிப் போனான்.

அதன் பின் ஃபேமிலி விசிட்டிற்கு க்ரிகெட் போர்ட் பெர்மிஷன் கொடுக்க….”இப்ப இருக்ற ஹெல்த் கண்டிஷன்ல அன்பரசி மேம் ஃப்ளைட் ட்ராவல் செய்ய வேண்டாம்” என்ற டாக்டர்ஸின் வார்த்தையாலும், அவரை தனியாக விட்டுப் போவது சரியில்லை என்பதாலும் சங்கல்யா செல்லவில்லை.

“ஜீவா அங்க போய் 15 டேஸ்தான் ஆகுது …சோ நான் இங்க அம்மா கூட வீட்ல இருக்கேன்…நீ போய்ட்டுவா லியா” என சுகா சொன்னாள் தான்…. ஆனால் அதுவரை கூட இருந்த அப்பாவை  காணாமல் அவ்வப்போது நச் நச்சென அழுவதும் அரணின் மொபைல் வழி “பால்குட்டி” பதத்தில் அமர்வதுமாய் இருந்த ஹயா முகம்…. அதை மறுக்க செய்தது சங்கல்யாவை. சுகாதான் ஹயாவோடு சென்று வந்தாள்.

அடுத்த பக்கம்