நனைகின்றது நதியின் கரை 18(3)

இப்பொழுது இவனது மொபைல் சிணுங்கியது…  இவனது மனைவிதான்.

“ஜோனத் வந்திருக்கவங்க எனக்கு ரொம்ப க்ளோஸ்…..ரூம்க்கு வர சொல்லி மீட் பண்ணுங்கப்பா …ப்ளீஸ் எனக்காக..”

இங்கே இவனறையிலிருந்த இன்டர்காம் சிணுங்கியது…. “அனுப்பி வைங்க அவங்கள” சொல்லிவிட்டு

“யார்டா அது குட்டிபொண்ணு….உனக்கு க்ளோஸானவங்க… ?” மொபைலில் லைனில் இருந்தவளை கேட்டான். கண்டிப்பாய் குரலில் கொஞ்சமே கொஞ்சம் பொஸசிவ்நெஸ்…

அதே நேரம் இங்கு காலிங் பெல் சத்தம். சேஃப்டி செய்னை நீக்காமல் கதவை திறந்து பார்க்க…..

ஓ மை காட்!!!!!!!!!!!!!!!!!!

முழுதாய் கதவை திறந்து, முரட்டடியாய் தன்னுள் இழுத்து முதுகெலும்பு முறிந்திடுமோ என நினைக்கும் வண்ணம் மூர்க்கமாய் அணைத்தான் வந்து நின்றவளை.

வந்திருந்தது அவனது சிக்‌ஸராயிற்றே….

“இங்க என்னடி பண்ற…..? அணைப்பை இன்னுமாய் இறுக்கினான். திக்குமுக்காடிக் கொண்டிருந்தது இருவரும் தான்.

“உன் சேஃப்டிக்காக தான கூப்டுட்டு வரலை…..நாளைக்கு நீ தனியா இங்க இருந்து திரும்பிப் போகனுமே…? அரண்ட்ட சொல்லிட்டு வந்தியா?”

“இன்னைக்கு நைட் மட்டும் உங்க கூட இருந்துக்கிறேன் ஜோனத் ப்ளீஸ்….அரண் அண்ணா சுகான்னு யார்ட்டயும் சொல்லலை….அவங்களுக்கும் டென்ஷனாகும்…ப்ரவீர்ட்ட மட்டும் சொல்லிட்டு வந்திருக்கேன்…..நம்ம வீட்ல இன்னைக்கு அவங்க ஸ்டே பண்றாங்க…. அம்மா தூங்கியாச்சு…..மார்னிங் அவங்க விழிக்கிறப்ப நான் வீட்டுக்கு போய்ருப்பேன்…… உங்க ஃப்ளைட்டுக்கு முன்னால 4 ஓ க்ளாக் ஃப்ளைட்ல எனக்கு ரிட்டன் புக் செய்துறுக்காங்க ப்ரவிர். நீங்களே நின்னு என்னை அனுப்பிடலாம்…. ப்ளீஸ் ஜோனத் கோபப் படாதீங்கப்பா…ப்ளீஸ்…”

“அதெல்லாம் இல்ல சிக்‌ஸர்…… பக்காவா பனிஷ்மென்ட் உண்டு சிக்‌ஸர்….. நீங்க செய்து வச்சுருக்க காரியம் அப்படி சிக்‌ஸர்……எனக்கு கோபம் கோபமா வருது சிக்‌ஸர்….” தன்னவளை தன்னோடு இழுத்துக் கொண்டு அந்த வெண் விரிப்பு விஸ்தார படுக்கையில் பின்னோக்கி விழுந்தான்.

அவன் மார்பில் இவள் காதில் ஆனந்தத்தின் எல்லைக்கே நான் சென்றேன் என்றபடி துடிக்கும் அவனது இதய சத்தம்.

“வீட்ல பத்ரமா இருன்னு சொன்னதுக்கு சிக்‌ஸர்…. வெட்டியா டெல்லி வரைக்கும் ஓடி வந்திருக்கீங்க சிக்‌ஸர்…”

“வெட்டி இல்லைங்க சிக்‌ஸரோட மிஸ்டர்…..இதை கொடுத்துட்டுப் போக வந்தேன் கிஸ்ஸ….சே.. சிக்ஸரோட மிஸ்டர்……….…”

“ஹேய்….இது என்ன படு ரொமான்டிக்கா எதோ காதுல விழுது….?” தன் மார்பிலிருந்தவளை பக்கவாட்டில் சரிக்க…

“டங்க் ஸ்லிப் ஜோனத்…” எழுந்து கொண்டாள்.

“எந்திரிங்க…”

“ஏன் லியாப்பொண்ணு?” கேட்டாலும் எழுந்து கொண்டான்.

அவன் எதிரில் போய் நின்று அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் ஹேண்ட் பேக்கிலிருந்து அதை எடுத்தாள். S என்ற பென்டன்டுடன் அவனது முந்தைய செயினைப் போலவே ஒரு செயின்.

“எப்பவும் நீங்க இதை  போட்றுக்கனும்….”

அவள் சொல்லையும் செயலையும் ரசனையாய் ரசிகனாய் ரசித்தான் இவன்……

“உங்க செயின் அளவுக்கு இது காஸ்ட்லி கிடையாது…எதோ என்னால முடிஞ்சது…” சொல்லியபடி அவனுக்கு அருகில் சென்று, எக்கி அவன் கழுத்தில் அதை மாட்ட முயன்றாள்.

“அதுவும் இதப் போல வெறும் கோல்ட் செய்ன்தான்….பென்டன்ட் கூட அதுல கிடையாது….பின்ன அது என்ன காஸ்ட்லி?. “ அவள் உயரத்துக்கு சற்று குனிந்து கொடுத்தான் இவன்.

“அது வருஷகணக்கான உங்க எமோஷனல் பார்ட்னரா இருந்திருக்குது….அந்த வகையில அது எனக்கு ரொம்பவே காஸ்ட்லி அன்ட் ப்ரஷியஸ்…..பட் இது ஸிம்ப்ளி ஸ்டோர் bought…”

“கொடுக்றது நீன்றப்ப எனக்கிது ப்ரஷியஸ் ஆகாதா?”

இன்னுமே அவனது முன்புறம் நின்று கொண்டு பின்புறமாய் அந்த ஹூக்கை போட முடியவில்லை அவளால்.

அவளை இடையோடு வளைத்து தன்னோடு இழுத்து….அவள் தோளில் முகம் புதைத்தான். “இப்ப எட்டும் உனக்கு”

அவள் செய்ய முயன்றதை செய்து முடிக்கும் போது தொடங்கி இருந்தது சுத்த விவாகம் தரும் சுந்தர வைபவம். நாயகன் நாயகி சங்கமம்.

தென்றலாய் ஒரு சுனாமி முடிந்து சுக சாந்தி நிலவிய நேரத்தில் அவன் மார்பில் தன் பின் தலை வைத்து  அவன் இடக்கை விரல்களோடு தன் விரல்களை ஒப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவன் வெட்டிங் ரிங்கை கவனிக்கவும் “ எப்படிப்பா உங்களுக்கு இந்த சர்ச் வெட்டிங் ஐடியா வந்தது?” எனக் கேட்டாள்.

“நீ சுகாட்ட பொன்மேடு போன அன்னைக்கு ஃபோன்ல  பேசிட்டு இருந்தது குளிச்சுட்டு இருந்த என் காதுல விழுந்துச்சி சங்கல்ஸ்…”

“சுகாட்டயா சர்ச் வெட்டிங் பத்தியா…எப்போ? சான்ஸே இல்லை…பைதவே சங்கல்ஸ்னு கூப்டாதீங்க….என்னமோ செங்கல்ன்ற மாதிரி இருக்குது….”

அதுவரை இணைந்திருந்த அவர்களது விரல்களின் மேல் விழி நிறுத்தி இருந்தவன் குனிந்து அவளைப் பார்த்தான். “இல்ல லியாப் பொண்ணு….நீ ஆசைப் படுறன்ற ஒரே விஷயத்துக்காக மட்டும் தான் நான் இதை அரேஞ்ச் செய்ததே…..சுகாட்ட பேசுனதை மறந்திருப்பியா இருக்கும்…”

“மத்ததுன்னா மறந்துருப்பேன்னு சொன்னா ஏதோ ஒரு அளவு ஒத்துப்பேன் ஜோனத்…இது அப்படி இல்லை….எனக்கு கல்யாணம் செய்யனும்னே ஐடியா இருந்தது இல்லை….சோ அதை பத்தி கனவே கிடையாது… பொன்மேடுல வச்சு சர்ச் வெட்டிங் ஓகேவானு நீங்க கேட்டப்பதான் நல்லாருக்கும்லனு எனக்கு ஒரு தாட்…..மத்தபடி அதுக்கு முன்னால எனக்கு கற்பனையில கூட அப்படி தோணது இல்லை…

அடுத்த பக்கம்