நனைகின்றது நதியின் கரை 18 (2)

று நாளும் ஒரு துவண்ட துணி போல் தான் உணர்ந்தாள் அவள். மனமும் மிகவும் சோர்ந்திருந்தது. ஏறத்தாழ இன்னும் 4 மாதங்கள் அவனைப் பார்க்க முடியாது…..கூடவே நேற்றைய நிகழ்வு அவனுக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்திருக்கும் என்பது இவளது உணர்வு….

அவன் அப்படி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை எனினும் இவளுக்கு தெரியாதாமா? இந்த நாளுக்காய் அவன் எத்தனை எத்தனையாய் காத்திருந்தான்..?? திருமணமான மறுநாளிலிருந்து அவனும் இதை கேட்க…இவளும் தடை விதிக்க என ……இதென்ன

இவளது சின்ன சின்ன ஆசைகளையும் எத்தனை எத்தனையாய் கவனித்துக் கொள்கிறான்….? இவள்தான் அவன் புறத்தை கவனிப்பதே இல்லை…. ரிஷப்ஷன் முடிந்து வீடு வந்த நேரத்தில் அவளுக்கு தொடங்கிய வயிற்று பிரட்டல் இத்தனையாய் மாறிப் போகும் என அவள் நினைத்திருக்கவில்லை.

மறுநாள் “லியாபொண்ணு கொஞ்சம் விழிச்சுக்கோடா….கொஞ்சமாவது சாப்டுட்டு படுத்துக்கோ..” என கணவனது அழைப்பில் கண் விழித்தவளுக்கு எதிரிலிருந்த டேபிளில் சாப்பாடு காத்திருப்பதை கண்டவுடன் இருந்த மனநிலையிலும் இழுத்து சாய்த்த உடல் நிலையிலும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

அவன் எத்தனை பதறியும், என்ன அதட்டியும்,  ஏதேதோ சொல்லியும், கேட்டும் அழுகை அவள் ஸ்டைலில் வார்த்தையின்றி தொடர….சுகாவை அழைத்தான். பெண்ணுக்குப் பெண்ணாய் சில விஷயங்கள் இவனைவிடவும் அவளிடம் மனம்விட்டு பேசுகிறாள் தானே…சர்ச் வெட்டிங் வேண்டும் என அவளிடம் தானே சொன்னாள்.

விஷயத்தை சொல்ல கிளம்பி வந்துவிட்டாள் அவள் ஹயா குட்டியுடன்.

சுகாவைப் பார்த்தவுடன் சங்கல்யாவின் அழுகை கப்சிப்….என்ன சொல்வாளாம் அவளிடம்?

“நேத்து ஃபங்க்ஷன் ஸ்ட்ரெஸ்…நேரத்துக்க சாப்ட்றுக்க மாட்ட…ரொம்ப நேரம் நிக்க வேண்டி இருந்திருக்கும்…அதுவும் பேசிகிட்டே வேற இருந்திருப்ப……எக்‌ஸாஸ்ட் ஆகிருப்ப லியா இதுக்கா இவ்ளவு டென்ஷன்…? இப்ப ஒழுங்கா சாப்டு…நிறைய ஃப்ளூயிட் எடுத்துக்க யூ’ல் பி ரைட் அஸ் ரெய்ன்…..அதோட பாவம் பையன்….பதறிப் போய் இருக்கான்….கொஞ்சம் சிரிச்சு வை”

சொல்லிய படி சாப்பாடை சுகா எடுத்து வைக்க கட கடவென சாப்பிட்டு முடித்தாள் சங்கல்யா…. இவளிடம் பேச சுகாவை அழைக்க வேண்டும் என்றால் நிச்சயம் பையன் பதறித்தான் போய் இருக்கான் என்று வந்திருந்த தெளிவு காரணம். மதியம் அவன் கிளம்பனும்….

டெல்லி சென்று அங்கிருந்து நாளை அதிகாலை மொத்த டீமுடன் சிட்னிக்கு பறக்க போகிறான். ஆஸ்ட்ரேலியா நியூசிலாந்துடன் முதலில் ஒரு சீரிஸ்….அதன் முடிவில் சவ்த் ஆஃப்ரிக்கா ஸ்ரீலங்கா நியூசிலாந்துடன் அடுத்த சீரிஸ்….பின் 6 நாடுகள் பங்கேற்கும் ஒரு வேர்ல்ட்கப் ப்ரிபரேட்டரி சீரிஸ், தென் த ரியல் வேர்ல்ட்கப்…..

இதெல்லாம் முடிஞ்சாதான் இனி அவன இந்த பக்கம் தலைய வச்சு படுக்க விடுவாங்க….இடையில ஃப்யூ டேஸ் ஸ்பவ்ஸ் அலவ்டாம்….தென் வேர்ல்ட் கப்பிற்கு இவளுக்கு பெர்மிஷன் உண்டாம்….

அவசர அவசரமாக சாப்பிட்டு, முடிந்த அளவு ஜூஸ் குடித்து துவண்ட உடலை ஃபோர்ஸ்ஃபுல்லாய் ஃபிட்னஸுக்கு கொண்டு வந்த சங்கல்யா சுகா சொன்ன இன்ஸ்ட்ரெக்க்ஷன் படி அவனது பேக்கிங்கை சரி பார்க்க என, அவனை கவனிப்பதென தன்னவனை வால் பிடித்துக் கொண்டு அலைந்தாள்.

இவள் மனம் உணர்ந்து சுகாவும் அன்பரசியுடன் அமர்ந்து கொண்டாள். இல்லையெனில் எப்படியும் சங்கல்யா தன் மாமியாரிடம் தான் ஓடி ஓடி வருவாள் என.

முதலில் ரெஸ்ட் எடு லியா என சொல்லிக் கொண்டிருந்த ஜோனத்துமே அவள் மன நிலை உணர்ந்தவனாக அவளை சேர்த்துக் கொண்டே தன் வேலைகளை கவனித்தான்.  இடையிடே சின்ன சின்ன சீக்ரெட் ரொமன்ஸோடு…

லன்ஞ்சில் ஸ்வீட்டாக சர்க்கரை பொங்கல்…செய்தது சங்கல்யாதான்…. அதை ஸ்பூனில் எடுத்து அவன் வாயில் கொடுக்கும் போது சம்பந்தமில்லாமல் கண்ணீர் எட்டி பார்த்தது அவளுக்கு.

“அவ்ளவு கொடுமையாவடி இருக்கும் உன் பொங்கல்….?….சாப்டப் போறனேன்னு எனக்காக இவ்ளவு அழுற?” இவளை சீண்டி சிறியதாய் அடி வாங்கிக் கொண்டே சாப்பிட்டான் அவன்.

அதோ இதோ என அவன் கிளம்ப வேண்டிய நேரம் வந்தேவிட்டது. அரண் சுகா சூழ ஜோனத்தை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பி வைத்தாள் சங்கல்யா. அவள் அழுது வைப்பாளோ என தவித்திருந்த கணவனுக்கு சிரித்த முகமாவே பை சொல்லிய மனையாளை பார்க்க நிம்மதியாக இருந்தது.

அதுவரைக்கும் அவர்களையே கவனித்திருந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தமான முகத்தில் ஒரு வக்ரம் கலந்த நிம்மதி சிரிப்பு…

டெல்லியில் ஜோனத் லேண்டாகி க்ரிகெட் போர்ட் அலுவலகத்தில் சில ப்ரொசீசரை முடித்துவிட்டு அவன் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அந்த ஹோட்டலுக்கு சென்றவன் தன் அறையில் போய் விழுந்தான். மனம் முழுவதும் வீட்டில் விட்டு வந்திருக்கும் அவனது  பொங்கல் ஃபேக்ட்ரி என்ற  PF

“மிஸ் யூ டி குட்டி கழுத….”

“சார் உங்களைப் பார்க்கனும்னு  உங்க வைஃப்க்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க கேட்கிறாங்க…” இவனுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்டில் இருந்து ஆங்கிலத்தில்  கால்.

‘சிக்‌ஸருக்கு தெரிஞ்சவங்களா?’

“அவங்க நேம் என்ன…மத்த டீடெய்ல்ஸ் கேட்டுட்டு என்னை கூப்டுங்க….அப்றம் சொல்றேன்…”

அடுத்த பக்கம்