நனைகின்றது நதியின் கரை 18(10)

மெல்பர்ன்:

ஃபுல் பிட்ச் பாலை அரணின் பேட் பதம் பார்த்த வேகத்தில் லெக் சைடில் இன்டியாவுக்கு  சிங்கிள் ரன். இப்பொழுது ஸ்ட்ரைகிங் என்டில் ப்ரபாத்.

சென்னை:

“என்ன இவனுங்க….. இப்படி வழி அடச்சுகிட்டு போறாங்க?” வைட் பஸ் படியில் நிற்கும் பாசஞ்சர் சொல்ல அது ப்ரவிர் ப்ளூடூத் உபயத்தில் அவன் காதுகளில்…

வைட் பஸ்ஸின் லக்கேஜ் லோட் செய்யும் பகுதியில் இருக்கும் ப்ரவிர் அதன் இடப்பக்கத்தை கையிலிருக்கும் இன்ஸ்ட்ரூமென்டால் மார்க் செய்யப்பட்டிருந்த இடத்தில் ஒரு செவ்வக கட். ஆள் நுழையும் அளவு ஓபனிங் உண்டாக்கி…..கழண்டு வந்த ஸ்டீல் ப்ளேட்டை எடுத்து தன் பஸ்ஸுக்குள் வைத்தான் அவன். .

தானிருக்கும் பஸ்ஸில் படுத்த வண்ணம், கால்களை அதற்காக பஸ்ஸின் தரைப் பகுதியில்  அப்பொழுதுதான் ஃபிட் செய்யப்பட்டிருந்த ஒரு கைப்பிடி போன்ற  கம்பியில் கொழுவிக் கொண்டு….கை நீட்டி…. உடலின் பெரும் பகுதியை நீட்டி….பக்கத்தில் இணையாக வந்து கொண்டிருந்த அந்த க்ரீன் பஸ்ஸின் லக்கேஜ் லோடிங் கதவில் வெண்ணிற பஸ்ஸில் உண்டாக்கிய அதே அளவு செவ்வக கட் செய்து கழற்றி எடுத்தான்.

 

இரண்டு பஸ்களும் ஒரே 30 km ஸ்பீடில் இப்பொழுதும்…..ப்ரவிர் கண்களில் க்ரீன் பஸ் லக்கேஜ் பகுதியிலிருக்கும் சங்கல்யா இவன் பார்வையில் படுகிறாள்….ஹயா இன்னும் அவள் கைகளில் தூக்கத்தில்……

இவனைப் பார்த்ததும் ஒற்றைப் புன்னகை அவள் முகத்தில்…

அவளை நோக்கி என்பது போல் சைகை செய்தவன் இப்பொழுது மீண்டுமாய் தன் வைட் பஸ்ஸிற்குள்  உடல் சுருக்கி சுருண்டு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த  ஆள் நுழையும் அளவு அகல செவ்வக ஸ்டீல் டக்டை எடுத்து க்ரீன் பஸ் லக்கேஜ் லோடிங் திறப்பையும் …இவன் வெண்ணிற பஸ்ஸில் போட்டிருக்கும் செவ்வக துழையையும் இணைத்து வைத்து….  இவன் புறம் இரண்டு மெகா சைஸ் ஸ்க்ரூ…..சங்கல்யா பஸ்ஸில் இரண்டு மெகா சைஸ் ஸ்க்ரூ…

இப்பொழுது சங்கல்யாவைப் பார்த்து வருமாறு சைகை செய்தான்….அந்த செவ்வக டக்ட் வழியாக இவன் பஸ்ஸிற்குள் மார்போடு குழந்தையை அணைத்தபடி வந்து சேர்ந்தாள் சங்கல்யா….

“அண்ணி மேல போய்….சீட்டுக்கு இடையில தரையில் படுத்துக்கோங்க….” சொல்லியபடி அந்த க்ரீன் பஸ்ஸோடு டக்டை இணைத்த ஸ்க்ரூவை கழற்றியவன்….. இவளைத் தொடர்ந்து மேலே வந்தான்….

மெல்பெர்ன்:

யாக்கராகி எகிறிய பால் ப்ரபாத்தின் மான்ஸ்டரஸ் ஹிட்டில் 112 ஃபீட் பயணம். 6….எழுந்து ஆடுகிறது கூட்டம்………….ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..

சென்னை:

லியா ப்ரவிர் சொன்னதை செய்த அதேநேரம்….அதாவது தரையில் படுக்க குனிந்த  நேரம்…..இவள் கண்களில் தெரிகிறது….எப்பொழுது இவளைத் தாண்டி போனானோ…….ப்ரவிர் இவர்களது வெண்ணிற பஸ் வாசலில் ஒரு கால் வைத்து , அடுத்த காலால் க்ரீன் பஸ்ஸின்  வின்டோ க்ளாஸில் ஓங்கி ஒரு கிக்….கண்ணாடி நொறுங்கி விழ…. இப்பொழுது க்ரீன் பஸ்ஸிற்குள் ப்ரவிர்….. வேட்டையாடும் புலி இவள் மனக் கண்ணில்…….

அவன் என்ன செய்தான் என இவளுக்குத் தெரியவில்லை….

கிரீன் பஸ் ட்ரைவர் புற கதவிலிருந்து இப்பொழுது அதன் ட்ரைவர் குதிக்க எப்படிப் பிடித்தான் எனத் தெரியவில்லை….அந்த ட்ரைவரின் ஒற்றைக் கால் ப்ரவீர் கையில்…..ஒற்றைக் கையால், அகப்பட்ட கால்காரனை விர் என தூக்கி….முழு வேகத்தில்,  இவர்களது வெண்ணிற பஸ்ஸில் ஓங்கி ஒரு அடி….துணி என விழுந்தான் அவன்…..இவளது முப்பது கை கோபமெல்லாம் இந்த ப்ரவிர் வெறி முன் வெறும் தூசு… புரிகிறது சங்கல்யாவுக்கு….

மெல்பெர்ன்:

வந்த பாலை ஸ்வீப் செய்து கல்லி ரீஜனில் ஃபோர் எதிர் பார்த்த ப்ரபாத்தின் எண்ணத்தை ஃபீல்டர் தடுத்து நிறுத்த சிங்கிள் ரன்னாகியது அந்த பால். அரண் இப்பொழுது ஸ்ட்ரைகிங் என்டில். அவன் எதிர்கொள்ளும் செகன்ட் பால்…. ஃபுல் டாஸ் பால் அரணின் அடியில் ஆட்டமெட்டிக்காக பறக்கிறது சிக்‌ஸர்…… அந்த ஓவர் அங்கு முடிய ஸ்ட்ரைகிங் என்டில் ப்ரபாத்.

சென்னை:

க்ரீன் பஸ் ஏற்கனவே நின்றுவிட்டது. லியா இருக்கும் வெண்ணிற பஸ்ஸும் இப்போது நிற்கிறது….மூவ்மென்ட் நிற்க, தூங்கி இருந்த ஹயா விழிக்க…..விழித்தவுடன் தான் தேடும் அம்மா முகம் காணாமல்….ம்கும்….ம்கும்…சிணுங்கி சிணுங்கி …. முகம் சுளித்து…..உதடு நெளித்து….”ம்மா…….” அவள் அழ ஆரம்பிக்க

“இப்ப சேஃப்தான் மேம்….எந்திருச்சுகோங்க…..” வைட் பஸ் ட்ரைவர் சொல்கிறார்….ப்ரவிர் டீம் எஸ் ஐ அவர்…

அடுத்த நிமிடம்…..அங்கு வந்திருந்த ஒரு போலேரோவில் இவளை ஏற்றிக் கொண்டு அரண் வீட்டை நோக்கி பறக்க தொடங்கி இருந்தான் ப்ரவிர் சுகாவை அழைத்து விஷயத்தை சொல்லியபடி….. ஹயா மூவிங் வெகிகிளில் மீண்டும் சிரிப்பு…..

மெல்பெர்ன்:

அடுத்து வந்த யாக்கர் பால் ப்ரபாத் எய்ம் செய்த சிக்‌ஸராகாமல் 4 லைன் பக்கத்தில் தரையில் விழுந்து  பீல்டரிடம் மாட்ட சிங்கிள் ரன்னாக முடிகிறது அது. இப்போது ஸ்ட்ரைகிங் என்டில் அரண்…..அவன் ஃபேஸ் செய்யும் தேர்ட் பால்……

சென்னை:

“ஜீவாட்டயோ ப்ரபுட்டயோ இப்ப விஷயத்தை சொல்ல வழியே இல்லையே….என்ன செய்ய ப்ரவிர்?” தவித்தாள் சுகா.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 19

2 comments

  1. Kathirunthi kathirundhu nethu oru ladu tdy oru laddu …huyaaayeee😂😂😅action blockkk awesome…..and satinu kurai solama how well they think the other side that wat I learnt from this story.❤️..Avaloo trust irukapoi than Santhegam varama they think of solution…..satinu next episode varatum ka…epoka ttn varum🙄😒😭🤔

    • Thanks ponney… ellaathilum enna oru aazhamana observation ungalukku…wow…woww…. Next epi mostly naalaiku post seythuduven… Book fair Jan la varuthu…ippo publish aana book aduthu publish aakura book rendum semma busyya vacuruku ennai…athanala TTN delay aakuthupa

Leave a Reply