நனைகின்றது நதியின் கரை 17(9)

பொன்மேடு வெஸ்டர்ன் காட்ஸிலிருந்து தாமிரபரணி தரை தொடும் இடத்தில் உள்ள ஒரு வில்லேஜ்…..ப்ரபாத்தின் அப்பாவின் முன்னோர்கள் பூர்வீகமாம் அது. இவர்களுக்கு உறவினர்கள் என யாரையும் தெரியாது அங்கு. அவ்ளவு தூரம் டச் இல்லாமல் போயிருந்தது. இருந்தும் அன்பரசியைப் பொறுத்த வரை அதுதான் சொந்த ஊர் . கணவர் மேல் உள்ள பாசத்தில் மகன் சம்பாதிக்கவும் அங்கே ஒரு இடம் வேண்டும் என வாங்க வைத்திருந்தார்.

அது ஆற்றங்கரையில்  அமைந்திருந்த ஒரு ஃபார்ம். மெயின்லி வாழை தான் சாகுபடி. சில ஏக்கர் நெல் வயலும் உண்டு. போக வந்தால் தங்க என பொன்மேட்டில் ஒரு வீடு. தோப்பிற்குள்ளும் ஆற்றங்கரையில் ஒரு குட்டி வீடு….

காரிலேயே கிளம்பிவிட்டான் ஜோனத் இவளோடு… 7அவர்ஸ் ரைட்….அவள் வாழ்க்கையில் மிக சந்தோஷமான தருணங்களில் இதுவும் ஒன்று சங்கல்யாவிற்கு….நேரம் போனதே தெரியவில்லை…. எத்தனையோ பேச்சுக்கள்…கிண்டல்…சீண்டல்…. கொஞ்சல்…..இடையிடையே அவன் தோள் மீது சாய்ந்து குட்டித் தூக்கம்….

பொன்மேடில் நுழையும்போது இரவு வந்து சில மணி நேரங்கள் கடந்திருந்தது. இவர்களது வீட்டை அடையும் போது த்ரிலின் உச்சியில் இருந்தாள் சங்கல்யா. காட்டு வழிப் பாதை பயணம் காரணம்.

குளித்து முடித்து படுக்கையில் விழுந்தது தான் தெரியும்….பயண களைப்பு. சங்கல்யாவுக்கு  விழிப்பு வரும் போது மறு நாள் பொழுது புலர்ந்து வெகு நேரமாகி இருந்தது. அவளவன் இன்னும் அவளருகில் தூங்கிக் கொண்டிருந்தான்.

எழுந்து வீட்டை சுத்தம் செய்து, வாங்கி வந்திருந்த ப்ரவிஷன்ஸை வைத்து வீட்டிலிருந்த கிச்செனில் இவள் ஏதோ சமைத்து முடிக்கும் போதே மதியம் தாண்டி இருந்தது. ஜெட்லாக்…அதோடு லாங் ட்ரைவ்…..சோ ஜோனத் எழுந்து வரும் போதே அது டீ டைம்.

அதன் பின்பு “வா நம்ம ஃபார்ம்க்கு போய்ட்டு அப்டியே ரிவரை பார்த்துட்டு வரலாம்” என அழைத்தான் அவன்.

ஊருக்கு சற்று வெளியில் முதலில் வரப்பின் மீது சில நிமிட நடை. அதன் பின் வந்தது வாழை தோப்பு. தோப்பின் இறுதியில் ஓடிக் கொண்டிருந்தது தாமிரபரணி.  நீர் தேக்கும் நோக்கத்தில் ஆற்றின் குறுக்காக ஒரு சுவர் எழுப்பி இருந்தனர். ஆக சுவர் வரை நீர் நிரம்பி குட்டி அணை போல் காட்சி தந்தது நதி. சுவரை தாண்டி தெப்பி விழுந்து கொண்டிருந்தது தண்ணீர்.

காட்டுப் பூ வாடை சுமந்து வரும் சில் என்ற ஒரு காற்றும்….கரு மேகம் மிதக்கும் வானமும்….ஆள்கள் யாருமற்ற சூழலும்…..கசிந்து கொண்டிருந்த வெளிச்சமும்… ஆறும் அவனும் அவளும்…

முதலில் குறுக்காக இருந்த அந்த சுவரில் உட்கார்ந்து கொண்டாள் சங்கல்யா. ஜோனத் தான் அணிந்திருந்த டீ ஷர்டை மட்டும் கழற்றிவிட்டு ஜீன்சுடன் ஆற்றுக்குள் இறங்கி ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனையா ஆறையா எதை ரசிப்பது என்று புரியாத குழப்பத்தில் இவள்.

“இங்க ஆழமெல்லாம் இல்லை…..இவ்ளவு தான் டெப்த் உள்ள வர்றியா?”

அவனின் அழைப்பில் ஆசையில் இறங்கிவிடாலும் சென்னையை தாண்டி இராத அவளுக்கு இது கம்ப்ளீட்லி நியூ எக்‌ஸ்பீரியன்ஸ்….. அவன் கைகயை இறுக பற்றிக் கொண்டு காலில் படும் பறைகளில் அந்த குளிர் நீருக்குள் பேலன்ஸ் செய்து நிற்க படாத பாடு பட்டாள்.

இப்பொழுது அவளை இடையோடு பிடித்துக் கொண்டான் அவன்…

“பேலன்ஸ் செய்ய முடியலைனா விடு….இனி விழ மாட்ட…”

சிறுது நேரம் அவளையும் இழுத்துக் கொண்டு நீந்தினான். மீண்டுமாய் சுவரில் ஏறி அமர்ந்து கொண்டாள் அவள். இன்னும் அவன் ஆற்றிற்குள் தான்….

சூழ்நிலை மனோகரம். மெல்ல நிமிர்ந்து வானத்தைப் பார்த்தவள் அப்படியே அந்த சுவரில் வானத்தைப் பார்த்தபடி ஒரு காலை நீட்டி மறுகாலை மடித்தபடி ஓடும் நீரிற்கு குறுக்காக படுத்தாள். கண்கள் வானம் வசம்.

சுக சாம்ராஜ்யம்…எங்கோ மிதந்து கொண்டிருப்பது போல் உணர்வு…..கண்களை மூடிக் கொள்ள இப்பொழுது வேறு உலகிற்குள் நழுவிக் கொண்டிருந்தாள் மனதளவில்….எவ்வளவு நேரமோ….

முகத்தில் நீர் துளிகள் விழ மழையோ என இவள் கண் திறக்க….இவள் முகத்திற்கு அருகில் அவளுடையவனின் முகம்….அவனது ஈர முடிகற்றைகள் இவள் முகம் தொட்ட நீர் துளிகளுக்கு காரணம். அவனது கண்கள் பாவை இதழ் வசம்.

“யாராவது பார்க்கப் போறாங்க ஜோனத்…” சிணுங்கினாலும் மறுப்பு சொல்லும் எண்ணம் எதுவும் இல்லை…மீண்டுமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

“இப்பல்லாம் யாரும் வரமாட்டாங்க….” சொன்னாலும் தன் பின் தலையை தடவியபடி சிறு புன்னகையுடன் எழுந்துவிட்டான் அவன்….”கிறுக்காக்குதே மனுஷன….இந்த பொங்கல் ஃபேக்ட்ரி “ என்றபடி

அவன் இவள் தலை புறத்தில் நடக்கிறான் என்பது வரை இவளுக்கு புரிகிறது….இன்னேரம் மீண்டும் முகத்தில் விழும் நீர் துளிகள்…..கண் விழித்துப் பார்த்தாள். மழையின் முதல் துளிகள் தான் அவை.

முதல் நொடியின் துவக்கத்தில் ஒன்றும் தோன்றவில்லை. சட்டென இப்பொழுது இவள் பாட்டி தெருவில் வானம் பார்க்க படுத்திருந்த அந்த காட்சி….அப்பொழுது விழத் துவங்கிய மழை மனக்கண்ணில்…. அவ்ளவுதான்…. இது ஒன்றும் நல்லதிற்கில்லை எனப் புரிகிறது…அவசரமாக எழுந்து கொள்ள நினைத்தால் உடல் உடன் வர மறுக்கிறது….கழுத்து வரை நெரிக்கும் அந்த பயம்…

கத்த ஆரம்பித்தாள்…”ஜோனத்…ப்ளீஸ் ஹெல்ப் மீ….ஐயோ எனக்கு பயமா இருக்குது….பயமா இருக்குது…”

இதற்குள் இவளிடம் வந்திருந்தான் அவன்….

“லியா…..என்னாச்சு லியாமா….?” கைகளில் அள்ளினான் அவளை… அவனை கழுத்தோடு இறுக்கிக் கொண்டாள்.

“எனக்கு மழை வேண்டாம்….பயமா இருக்குது….” நிச்சயமாய் அவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு புரியவில்லை தான். அவசரமாக தோப்பிற்குள் இருந்த அந்த குட்டி வீட்டிற்குள் கொண்டு சென்றான் அவளை….

இன்னும் அவன் கழுத்தை விட அவள் தயாராய் இல்லை..

அவனும் எதுவும் பேசவில்லை….

மெல்ல மெல்ல இயல்புக்கு வந்தாள் அவள்.

இறுக்கி இருந்த பிடியை தளர்த்தி இப்பொழுது அவனை அணைத்துக் கொண்டாள்.

அடுத்த பக்கம்