நனைகின்றது நதியின் கரை 17(8)

அவசர அவசரமாக அடித்து பிரண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினாள் இவள். அன்பரசி ஐ சி யூ விலிருந்து நார்மல் வார்ட் வந்து…ஸ்டேபிளாகத் தான் இருக்கிறார் இதுவரை. பின் இப்பொழுது என்னவாயிற்று?

மருத்துவமனை சென்ற பின் தான் தெரிகிறது “அன்பரசி மேமை  டிஸ்சார்ஜ் செய்துக்கலாம்….வீட்ல இருந்து அப்பப்ப செக் அப் வந்தால் போதும்…” என்று சொல்லத்தான் கூப்பிட்டிருக்கிறார்கள் என.

இதற்குள் ஜோனத் சென்னையில் லேண்டாகி அரணுடன் கார் ஏறி இருந்தான். நேராக ஹாஸ்பிட்டல் தான் வந்தான்.

தன் அம்மாட்ட சந்தோஷமாக பேசினான். இவள் அருகிலிருந்த ச்சேரில் உட்கார்ந்து கொண்டான் தான். ஆனால் இவள் புறம் திரும்பவும் இல்லை. மருந்துக்கு கூட ஒரு வார்த்தை பேசவும் இல்லை.

இவளை ஏர்போர்ட்டில் எதிர்பார்த்து ஏமாந்திருப்பான். கோபம் போலும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அருகிலிருந்த அவன் கையில் யார் கவனத்தையும் திருப்பாதவாறு மெல்ல தன் கையை வைத்தாள்.

அதே போல் மெல்ல அவன் அதை உருவிக் கொண்டான். அதோடு மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டியும் கொண்டான் இப்போது. அன்பரசியையும் இவன் பக்கவாட்டு முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி பரிதாபமாக அவனது லியா பொண்ணு.

“அம்மா இப்பவே டிஸ்சார்ஜ் ஆகிடலாம்மா….நேரே நம்ம வீட்டுக்கு போய்டலாம் தானே”  அவன் தான். அந்த சூழலில் எதிர் பார்க்க கூடிய கேள்விதான். ஆனால் பதில் தான் எதிர் பாரததாக வந்தது.

அன்பரசி வேறு ஒரு முடிவில் இருந்தார். மறுத்த மகனை எமோஷனல் ப்ளாக் மெயில் செய்து நடத்திய கல்யாணம்…..மகன் மருமகள் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு விருப்பம் உண்டு என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை தான்…இருந்தாலும் எதுவும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்குமோ….? லியா இவர் கேட்டதும் சம்மதிக்க, மகன் மறுத்ததும் இல்லாமல் அவளை இழுத்துக் கொண்டு வெளியிலும் அல்லவா சென்றான் அன்று?…..அடுத்தும் உடனே யூகே ட்ரிப்…இப்போதும் 2 வரத்தில் 4 மந்த்ஸ் ட்ரிப் ஆஸ்ட்ரேலியா வேற போய்ருவான்…. இளையவர்களுக்கு தேவையான தனிமை கொடுக்கப் படவில்லை எனில் ப்ரச்சனை எதுவும் பெரிதாகிப் போகலாம்…

“நான் இப்ப இருக்ற மாதிரி இன்னும் 10 டேஸ் இங்கயே இருந்துகிறேன்…..நீ அவளை பொன் மேடு கூட்டிட்டுப் போய்ட்டு வா….வெட்டிங் முடிஞ்சு இன்னும் அங்க போகலையே….” ரெண்டு பேரும் தனியா இருந்தால்தான் விஷயம் சரி ஆகும் என முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

“அம்மா என்னமா நீங்க? எந்த நேரத்துல என்ன பேசிகிட்டு…?” ஜோனத் மறுக்க….அன்பரசி  மொட்டையாய் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவங்க இந்த அளவு எமோஷனாலாகிறது நல்லதுக்கு இல்லை…அவங்க சொல்றபடியே செய்ங்களேன் என டாக்டர்ஸ் சொல்லுமளவு நிலைமை செல்ல வேறு வழி இன்றி ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டி இருந்தது.

“வா….” அவனது ஒற்றை வார்த்தையில் அவன் பின்னோடும் ஆட்டுக் குட்டிப் போல் சங்கலயா. அரண் வீட்டில் அவள் உடைமகள் இருக்கும் அறைக்குள் வந்தவன் அவளது உடைகள் சிலவற்றை எடுத்து ஒரு ரோலிங் டஃபெல்லில் வைத்தான்.

கலையாத அவன் மௌனம்….. சிரிப்பற்ற அவன் முகம்….வேக வேகமாக அவன் செய்யும் பேக்கிங்… அவனையே பார்த்துக் கொண்டிருந்த மனைவி வெகு தயக்கத்திற்குப் பின், குனிந்து கட்டில் மேலிருந்த அந்த டஃபெலில் இவள் திங்ஸை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவனை பின்னிருந்து அணைத்தாள்.

“சாரி ஜோனத்…அவசரமா ஹாஸ்பிட்டல் வர சொன்னதால தான் நான் ஏர்போர்ட் வரலை….”

“ஹேய்… “ என்றவன் சட்டென தன் பின்னிருந்தவளை தனக்கு முன்பாக இழுத்தான்.

“இதுக்கு இவ்ளவு நேரமா?” அவன் முகம் எங்கும் குறும்பு.

“நானும் ஏதாவது பெருசா அதா கிடைக்கும்னு இவ்ளவு நேரம் வெயிட் பண்ணிருக்கேன்…” அவன் கண் சிமிட்ட

“போங்க…” சிணுங்கும் குரலும் முகத்தில் சிரிப்பும் கண்ணில் சிறு நீர் கோர்த்தலும் இவளிடம்.

“நிஜமாவே கோபமா இருக்கீங்கன்னு நினைச்சுட்டேன்….”

“அப்ப நிஜமா கோபமா இருந்தா சமாதான படுத்த ட்ரை பண்ண மாட்டியா?….இப்படி தான் விலகி நின்னு வேடிக்கை பார்ப்பியா?”

மார்போடு அணைத்திருந்தான். அவன் இதய ஒலிக்குள் அவள் கரைந்தாள். கண்மூடிக் கொண்டாள்.

“சும்மா…..ஜஸ்ட் டு ப்ரேக் த ஐஸ்….ஹனி மூன்னு சொன்னதும் ரொம்ப திக்குன…அதான்….இப்ப பாரு டென்ஷன் போய்ட்டு தான…” அவன் தன் பக்க காரணத்தை சொல்ல

“எனக்கு கோபம் வந்தா கூட சமாதான படுத்துவீங்களா ஜோனத்?” அவள் தன் நினைவிலேயே நின்றிருந்தாள்.

அடுத்த பக்கம்