நனைகின்றது நதியின் கரை 17(7)

ன்றைய ஜோனத்தின் காலுக்கு படு ஆவலாய் தவமிருந்தாள் மனையாள். அவன் அழைப்பின் ஆரம்ப நேரம் க்ரிகெட்டுக்கு செலவிடப் பட்டது. இவள் மேட்ச் பற்றி அனுபவித்த உணர்வுகளை சொல்ல சொல்ல அவன் சிரித்தான்.

“ஹயா குட்டிக்கு இப்ப பேச முடிஞ்சா  உன்னை மாதிரிதான் பேசுவா….”

“இல்ல ஜோனத் எனக்கு என்னமோ முன்னல்லாம் க்ரிகெட் அவ்ளவா பிடிக்காது…..ஸோ அதப் பத்தி அவ்வளவா தெரியாது…எதோ பௌல் பண்ணுவாங்க…பேட் பண்ணுவாங்க…ரன் எடுப்பாங்க…அவ்ட் ஆனா மேட்ச் முடிஞ்சுரும்ன்ற அளவுதான் தெரியும்….”

சின்னதாய் ஒரு சிரிப்பு அவன் புறம்.

“எனக்கு ஒரு க்ரிகெட் ஃபேன் வைஃபா வரக் கூடாதுன்னு நினைப்பேன்….என் கேர்ள்க்கு என்னை எனக்காக பிடிக்கனுமே தவிர கிரிகெட்டுக்காக பிடிக்க கூடாதுன்னு தோணும்….நீ அம்மாவுக்காக என்னை மேரேஜ் செய்துகிட்டாலும்…க்ரிகெட்காக செய்யலைன்றது சந்தோஷமான விஷயம் தான்..” அவன் மகிழ்ச்சியாகத்தான் சொல்லிக் கொண்டு போனான்….

‘நீங்க நினைக்கிற மாதிரி  அம்மாக்காகல்லாம் நான் மேரேஜுக்கு சம்மதிக்கலை…..’ என சொல்ல வேண்டும் என வருகிறது ஒரு ஆவல்….பட் தயக்கம் தடை போடுகிறது.

பின் பேச்சு நேற்று நடந்தவைகளைப் பற்றி திரும்பியது.

ப்ரவீர் வந்தது பேசியது என எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள் சங்கல்யா இப்பொழுது. அதை சொல்லிக் கொண்டு இருக்கும் போதுதான் அன்று ஜோனத்தை எதோ ஒரு பெண் பின் சுற்றியதாக அந்த குரல்கள் பேசிக் கொண்டதையும் குறிப்பிட்டாள். இதுவரை அவள் அதைப் பற்றி அவனிடம் பேசியது இல்லை.

“உனக்கு கேட்டப்ப கோபமே வரலையா லியா பொண்ணு?” ஜோனத் தான்.

“கோபம் கோபமாத்தான் வந்துது….கைல மாட்டியிருந்தா கடப்பாரையால பேசின வாயில போட்றுப்பேன்தான்…”

“ஹேய் நான் கேட்டது என் மேல கோபம் வரலையான்னு? என்ட்ட அது என்ன விஷயம்னு கேட்கனும்னு கூட தோணலையா?”

“சே…நீங்களாவது அப்படி செய்றதாவது…..” அவனிடம் சொல்லும் போதுதான் உணர்கிறாள் எப்படி துளிகூட சந்தேகமின்றி ஜோனதை நம்புகிறாள் என….அதுவும் பன்னீர் செல்வம் அவள் அம்மாவுக்கு செய்துவிட்டு போன கதை தெரிந்தும் கூட….

“உங்க அம்மா சுகா என்ட்ட எல்லோர்ட்டயும் நீங்க நடந்துக்ற முறை….எஸ்பெஷலி அம்மா வெட்டிங் வைக்கனும்னு கேட்டப்ப இருந்த சிச்சுவேஷன்க்கு பேருக்கு ஒரு ட்ராமா வெட்டிங் செய்துட்டு பின்னால பார்த்துகலாம்னு யோசிச்சுறுக்கலாம் நீங்க…பட் வெட்டிங் விஷயத்துல ஃபேக் பண்றத உங்களால ஒத்துக்கவே முடியலை….யூ ஹானர் த வெட்டிங்…அப்படி பட்டவங்க….ப்ளான் பண்ணி பொண்னு கூட கல்யாணம்னு சொல்லி சுத்திட்டு….காசு கொடுத்து செட்டில் பண்றதெல்லாம் ப்ச் சான்ஸே இல்லை….” இப்பொழுது அவன் கேட்டதும் தான் யோசித்து காரணம் சொல்கிறாளே தவிர முன்பு இந்த கேள்வியும் பிறக்கவில்லை அவள் பதிலும் தேடவில்லை.

“என்னை இவ்ளவு நம்புற….எனக்காக இவ்ளவு பார்க்கிற…..பட் என்னை எதுக்காக உனக்கு பிடிக்கலை…ஏன் என்னை விட்டுட்டுப் போறதுன்னு…” கேட்ட அவன் குரலில் வலி உணர்ந்தாளோ? கேள்வியை முடிக்க விடவில்லை அவனை இவள்.

“உங்கள பிடிக்கலைனு கண்டிப்பா இல்லை ஜோனத்….எனக்கு உங்கள பிடிக்கும்…..ரொம்ப ரொம்பவே பிடிக்கும்…பட் இது வேற….” தயக்கம் வரும் முன்னே உண்மை வெளியே வந்துவிட்டது.

கேட்டிருந்தவன் மனம் நிறைந்து போகிறது. முதல் முறையாக அவள் இவன் மீதான காதலை வாயால் ஒத்துக் கொள்கிறாளே…..

சொல்ல தொடங்கியாகிவிட்டது இனி சொல்லிவிட வேண்டியது தானே என்றாகிவிட்டது சங்கல்யாவுக்கு “நீங்க நினைக்கிற மாதிரி அம்மாக்காகல்லாம் நான் மேரேஜுக்கு சம்மதிக்கலை…” சிறு குரலில் என்றாலும் தெளிவாய் இவள்.

“பின்னே?”

“ப்யூர்லி அவ்ட் ஆஃப் லவ்தான் சம்மதம் சொன்னேன்….” முனங்கினாள்.

“லியா…..!!!!!” ஆனந்த அலையும், பறவையாய் மனமும் அவனுள்.

“ம்….”

“வேற என்னடா இஷ்யூ?”

“இ….து….நேர்ல வாங்களேன் பேசிப்போம்…”

அவனும் அவளை அதற்கு மேல் எதையும் கேட்டு கட்டாயப் படுத்தவில்லை. பொண்ணு காதலை ஒத்துகிட்டாச்சு….இனி சந்தோஷமா ஸ்வீட் நத்திங்ஸ்…..நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா கடலை பயிர் செய்து அறுவடை செய்தார்கள் மூன்று வாரமும் தினம் தினமும்.

இன்று ஜோனத் இந்தியா வருகிறான். “ பொங்கல் ஃபேக்ட்டரி கூட வீட்டுக்குள்ளயே ஹனி மூனும் சேரப் போகுது….. எல்லாம் ஸ்வீட் மயம்” என்றான் கிளம்பும் முன்பு…….அவனை ரிசீவ் செய்ய ஏர்போர்ட் போக ஆசை சங்கல்யாவுக்கு…. ஆனால் படு டென்ஷனாகவும் இருக்கிறது…. காதலை வாய்விட்டு ஒத்துக் கொண்டாகி விட்டது……ஃபோனில் பேசும் போது ஒன்றும் தோன்றவில்லை…இப்பொழுது ஜிவ் ஜிவ் என தாறுமாறாய் எகிறி ஓடும் எதோ உணர்வுகளும்….அவன் என்னவெல்லாம் செய்யப் போகிறானோ…என்ற எதிர்பார்ப்போடு கூடிய பெண்மைக்கான இனிய பயங்களுமாய்…..கண்டிப்பா அவன் முகம் பார்க்க கூட இவள் மூச்சு திணறிப் போவாள்……

ஆனால் இவள் கிளம்பி நின்ற நேரம் அன்பரசியின் ரிலடிவை பார்க்க வேண்டும் என டாக்டர் சொல்கிறார் என வருகிறது தகவல்.

அடுத்த பக்கம்