நனைகின்றது நதியின் கரை 17(6)

ர்ச்சில் வெகு நேரம் அமர்ந்துவிட்டாள் சங்கல்யா. வீட்டுக்கு போய் பயந்து பயந்து மேட்ச் பார்ப்பதை விட இது உத்தமம்.

“கடவுளே எது எப்படியோ….இன்னும் எத்தனை மேட்ச் விளையாடுவானோ…..ஆனா இதுல கண்டிப்பா ஜெயிக்க வச்சு கொடுத்துடுங்க….எனக்கு டென்ஷன் தாங்கலை….நிஜமா நீங்க சொல்றதெல்லாம் கேட்பேன்…” கேட்டிருந்த கடவுளுக்கு சிரிப்பு வரும் வண்ணம் சிறு குழந்தையாய் ஒரு ஜெபம்….

“எது எப்படியோ செக்க்ஷுவல் இம்மொரலிடி தவிர எதுக்காக டிவோர்ஸ் செய்றதுக்கும் பைபிள் பெர்மிட் பண்ணலை….மத்த விஷயத்துல என்னை கேட்டா குறை இல்லாத மனுஷங்களே இல்லைனு தான் சொல்லுவேன்….உன் குறைய உன் வைஃப் அனுசரிச்சுட்டு போற மாதிரி அவட்ட உனக்கு எது சரி இல்லைனு படுதோ அதை நீ அட்ஜஸ்ட் செய்துட்டுதான் போகனும். தென் சொல்யூஷன் வரும்…..விட்டுட்டு ஓடுறதைவிட ப்ரச்சனையை ஹேண்டில் பண்ணி பழகு” யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டு போவது இப்பொழுது இவள் காதுகளில்….

என்ன தைரியத்தில் இவள் டிவோர்ஸ் என்ற முடிவுக்கு வந்தாள்?

சோ எப்படினாலும் ஜோனத் கூட தான் லைஃப்…. ஒருபக்கம் மகா சந்தோஷமாகவும் ஒரு பக்கம் படு பயமாகவும் ஒரு ஃபீல்…..ப்ரச்சனையாகிடும்னு தப்பிச்சு ஓட ட்ரைப் பண்றதை விட அதை ஹேண்டில் பண்றது பெட்டர்….யோசைனையுடனே வீடு வந்து சேர்ந்தாள். முதல்ல  மேட்ச்சை பார்க்கிறதுல இருந்து ப்ரச்சனையை ஹேண்டில் செய்ற டெக்னிக்கை ஆரம்பிப்போம்.

வீட்டில் ஹாலில் அரண். அவன் இடக்கையோடும் தோளோடும் இணைந்து பிணைந்த படி கணவன் தோளில் முகம் நிறுத்திய நிலையில் சிலையாய் சுகா….. இருவர் பார்வையும் எதிரிலிருந்த சுவர் அகல டிவியில்

சங்கல்யாவும் நிமிர்ந்து ஸ்க்ரீனைப் பார்க்கிறாள்….

இப்பொழுது இங்லண்ட் பேட்டிங்.

45 ஓவர்ஸ் முடிந்திருக்கிறது. இங்லண்ட் ஜெயிக்க 6 ரன்ஸ் தேவை. லாஸ்ட் விக்கெட் இது. பௌலிங் ஜோனத்.

கடவுளே நான் கொஞ்சம் லேட்டா வந்திருக்க கூடாதா? ப்ரச்சனையை ஹேண்டில் பண்ற ட்ரெய்னிங்கை நாளைல இருந்து ஸ்டார்ட் செய்துறுக்கலாம் நீங்க….இவன் பௌலிங் செய்வான்னு கூட எனக்கு தெரியாதே….இப்ப நான் என்ன செய்யனும்?

இப்பொழுது அவன் பௌல் செய்ய போய்க் கொண்டு இருக்கிறான். அவளையும் மீறி மூடிக் கொள்கின்றன கண்கள். தென் ஒற்றைக் கண்ணை மெல்ல திறந்து பார்த்தாள்.

ரன் அப்….ஓடி வர தொடங்குகிறான் அவன். சற்றே முன்னோக்கி குனிந்து சின்ன சின்ன காலடிகளிலிருந்து நீளமான அடிகளுக்கு…இப்பொழுது சிறிது காற்றில் எழும்பி….இடது காலால் தரையில் இறங்கி….வலது காலை தரையில் ஊன்றி….….பால் ரிலீஸ்….ஃபாலோ த்ரோ…

ரிவர்ஸ் ஸ்விங்காகிக் கொண்டிருக்கும் பாலில் ஓரு பெர்ஃபெக்ட் அவ்ட் ஸ்விங்கர் டெலிவர் செய்ய பந்து ஃபுல் பிட்சாகி  எழும்பிய நேரம் ஒரு டிஃபென்சிவ் புஷ் பேட்ஸ்மேனிடமிருந்து…..கவர் ட்ரைவ் ஷாட்டில் ஃபீல்டரை துரத்தவிட்டு பவ்ன்ட்ரியாக முடிவடைகிறது பால்.

க்ளோசப் ஷாட்டில் இவளுடையவனின் முகம். அவன் எதையாவது நினைக்கிறானா இல்லையா என்பதே இவளுக்கு புரியவில்லை. இப்பொழுது அந்த பேட்ஸ்மேன் சிரித்தபடி ஏதோ சொல்கிறான். என்னவென்று இவளுக்கு புரியவில்லை எனினும் மஸ்ட் பீ சம் சர்காஸ்டிக் கமென்ட்.

ஜோனத் முகத்தில் இப்பொழுதும் எந்த மாறுதலும் இல்லை. ‘போடா உனக்கு இதுக்கு கூட கோபம் வரலை….அப்ப எனக்கு வர்ற கோபத்தைப் பார்த்தா உனக்கு எவ்ளவு ஓவரா ஃபீல் ஆகும்?’ இவள் மனம் புலம்ப அவளது கண்ணில் அதுவாக படுகிறது அவனது புடைத்த கழுத்து நரம்பு….

ஓ மை காட் அவ்ளவு கோபத்தில தான் இருக்கியா? ஆனா முகத்துல என்ன ஒரு செயின்ட் லுக்…?? ஐயோ இன்னும் 2 ரன்ஸ்தான் இங்லண்ட்க்கு வேணுமா? இப்பொழுதுதான் நிலைமை முழுதாக உறைக்க….

மீண்டுமாய் பௌல் செய்ய ஓடி வரத் தொடங்குகிறான் ஜோனத். ரன் அப்…

இவளுக்கு தொண்டை வறண்டது போல் ஒரு ஃபீல். பக்கவாட்டில் பார்வையில் படுகின்றனர் எழுந்து நிற்கும் அரணும் அவன் ஒற்றை கையால் தோளோடு அணைத்திருக்கும் சுகாவும். சற்று முன் பார்த்த ஜோனத்தின் அதே பாறை செயின்ட் முகபாவம் இவர்களிடமும்..

மீண்டுமாய் திரும்பி ஜோனத்தைப் பார்க்கிறாள்.

பால் பௌலாகிறது…..ஒரு இன் ஸ்விங்கர்….யாக்கர்…..ஆன் ட்ரைவ் ஷாட்டில் பவ்ன்ட்ரி எய்ம் செய்த பேட்ஸ்மேனின் பேட் காற்றை துழாவுகிறது.  பின்னால் பால் பட்ட மிடில் ஸ்டம்ப் பறக்கிறது….

தன் இரு கை ஆட்காட்டி விரல்களால் இரு காதுகளையும் மூடியபடி சில்லிட்டு விரைத்திருந்த கைகளால் கன்னங்களை தாங்கிய படி தான் நிற்பதே இப்பொழுதுதான் உறைக்கிறது சங்கல்யாவுக்கு.

ஜோனத் முகத்தில் இப்போழுதும் எந்த மாறுதலும் இல்லை….கை மட்டும் அதுவாக  தன் கழுத்துப் பகுதியை தடவிப் பார்த்து ஏதோ இல்லாமல், ஏதோ நினைவில் அவன் முகத்தில் சிறு புன்னகை.

செயினைத் தேடிவிட்டு இவளை நினைத்து சிரிக்கிறானா?

மங்கை மனதிற்குள் மலை அருவி சட்டென கொட்டுகிறது.

“அது அவன் மேனரிசம்….இப்படி சிச்சுவேஷன்ல்ல செயின பிடிச்சுப்பான்….” சுகாவின் விளக்கத்தில் திரும்பிப் பார்க்கிறாள். இவள் தோளைப் பிடித்து சந்தோஷமாய் குதித்து….இவளை அணைத்து….. அருகிலிருந்த கணவனிடம் தாவி அவன் கன்னத்தை மகிழ்ச்சியாய் பதம் பார்த்து….சுகா ஸ்டார்டட் த விக்டரி செலிப்ரேஷன்.

அடுத்த பக்கம்