நனைகின்றது நதியின் கரை 17(3)

ஆனால் அத்தனை பயமும் அந்த ப்ரவீர் ஜோசப்பை இவள் நேரில் பார்க்கவும் கவலையாக மாறிப் போனது.

பின்னே….  கிட்டதட்ட ஆறடி உயரத்தில் ஜோனத் சாயலில் அதே இரும்பு சிலை ஃபிட்னெஸில் வந்தவன் இவளைப் பார்த்தவுடன்…”ஹலோ அண்ணி….கன்ங்ராசுலேஷன்ஸ்….” என்றபடி இவளிடம் கையில் கொண்டு வந்திருந்த பொக்கேயையும் குட்டி ஜுவல் பாக்‌ஸையும் கொடுத்துவிட்டு…. இவள் எதிர்பாராத நொடி சட்டென இவள் முன் முழங்காலிட்டு “ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணி…..உங்க ப்ளெஸிங் எனக்கு ரொம்ப தேவை “ என்றால்…..

துள்ளி ஒரு எட்டு பின்னால் வைத்தாள் இவள்.

“ஏன்டா வந்ததும் வராததுமா அவட்ட வம்பு வளர்க்க…?” அவன் காதை பிடித்து தூக்கியது புஷ்பம் தான்.

அவர் பிடிக்குட்பட்டு எழுந்தவன்….” ஐயோ பெரியம்மா இது நிஜமாவே மரியாதை….அண்ணிட்டல்லாம் நோ வம்பு….ஒன்லி அன்பு…பண்பு….” என்றவன் நகர்ந்து நின்ற இவள் அருகில் வந்து அடுத்த அட்டெம்ட்

“அண்ணி நீங்க இன்னும் ப்ளெஸ் பண்ணலையே…”

“எந்திரிங்க முதல்ல” இவள் தான்.

“இது ஒரு ப்ளஸிங்கா….? இதுக்கு எக்‌ஸாக்ட் மீனிங் என்ன?”

“ப்ச் எனக்கு எதுக்காகவும் கால்ல விழுறது பிடிக்காது…”

“ஓ…சூப்பர் பாய்ண்ட்…” துள்ளி எழுந்துவிட்டான் அவன்.

“ஆக அண்ணா கால்ல விழாமலேதான் ப்ரபோஸ் செய்தானா? பாய்ண்ட் நோட்டட்”

கல்யாணம் என்றதும் கழுத்து நரம்பு புடைக்க ஜோனத் கத்திய கோலம் ஞாபகம் வந்தது இவளுக்கு. ஆனால் அதை நினைத்தும் வெறுப்போ பயமோ எதுவும் தோன்றாமல் ஒரு ரசனை இவள் முகத்தில் உதயம். அன்று இரவே ஜோனத் இவளிடம் நடந்து கொண்ட முறை காரணம். அவ்ளவு ஷாட் டைம் தானாடா உன் கோபம்….?

“அண்ணி….அண்ணி….விழிச்சுகோங்க அண்ணி…..சாரி ஃபார் த இன்டர்ஃபியரென்ஸ்… நீங்க இன்னும் என்னை ப்ளெஸ் செய்யலை….என் ப்ளெஸிங் உனக்கு எப்பவும் உண்டுனு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா நான்  என் ஸ்வீட்டை கவனிக்க போய்டுவேன்…..நீங்க அண்ணா கூட டூயட்ல செட்லாகிடலாம்…”

“நீ நிறுத்றதா இல்லையா…..?” இப்பொழுது அவன் பின் தலையில் ஒரு அடி உபயம் அரண்.

“இல்ல மச்சான் இது என் வாழ்க்கை ப்ரச்சனை….அண்ணி ப்ளஸிங் இல்லனா என் லைஃப் நல்லா இருக்காது…”

இப்பொழுது ஓங்கி விழுந்தது அடி அவனுக்கு.

“பாருங்க அண்ணி எத்தனை அடி வாங்குறேன்….ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன்….அந்த சுகா சுண்டெலி வேற தனியா பயாசத்தை கவனிக்க ஆரம்பிச்சுட்டா….”

“கடவுளே….சரி போங்க…எப்பவும் என் ப்ளெஸிங் உங்களுக்கு உண்டு….” இவள் சொன்ன அதே நேரம்

“ஜீவா அவனுக்கு இன்னும் ரெண்டு ஓங்கி போடுங்க…என்னை சுண்டெலினு சொல்லிட்டான்…” சாப்பிட ச்சேரில் அமர்ந்திருந்த சுகா ப்ரவீர் அருகில் நின்ற அரணிடம் சொன்னாள்..

“ஆமா நீ சுண்டெலிய எப்டி சுண்டெலின்னு சொல்லலாம்….?”  அரண் கேட்க அடுத்து கல கலவென கால் வாரல்கள்….

ப்ரவிர் அவ்வப்பொழுது விடுமுறைக்கு ஜோனத் வீட்டிற்கு வந்து சென்றிருந்தாலும் ஒத்த வயது என்பதால் முறைவைத்து அழைத்து, வாரி விளையாடும் அளவு  ஃப்ரெண்ட்ஷிப் இருக்கிறது போலும் ஜோனத்தின் நட்பு வட்டத்துடன்.

சட்டென யாரிடமும் அதுவும் ஒரு ஆணிடம்…..தட் டூ போலீஸ் ஆஃபீஸரிடம் ஒட்டிவிடும் குணம் சங்கல்யாவுக்கு சாத்தியமே கிடையாது எனினும் அவனது விளையாட்டுத்தனம் ப்ரவீர் மீது பயம் வராமல் செய்கிறதுதான் இவளுள். அதே சமயம் மரியாதையும் தான் வரமாட்டேன் என்கிறது.

இவ்ளவு மொக்கை போடுறவன் என்ன இன்வெஸ்டிகேட் செய்து என்ன கண்டு பிடிக்க? கவலையாகிப் போனது பெண்ணுக்கு.

ஆனால் சாப்பாடெல்லாம் முடிய, கேஸ் டிஸ்கஷென் என இவர்கள் உட்காரும் போது அவன் அப்படியே வேரோடு மாறிப் போனான்.

அரண் சங்கல்யா ப்ரவீர் மூன்று பேருமாக மட்டும் தான் டிஸ்கஷனுக்கு. மற்றவர்கள் தேவையில்லை என படு இயல்பாக கட் செய்துவிட்டான்.

இவள் சொன்னதையெல்லாம் எந்த எக்‌ஸ்ப்ரெஷனும் இல்லாமல் இமை கொட்டாது கேட்டிருந்தவன்

“செர்வன்ட்ஸ் க்வார்ட்டஸ் செக்யூரிட்டி கேபின்ஸ் எல்லாத்தையுமே ஆடியோ ரிக்கார்ட் செய்வோம்….சுகாவ மிமிக் செய்து உங்கட்ட மாட்டிவிடனும்னு நினைச்சவங்க அந்த நேபாளி ஃபேமிலியையும் மாட்டிவிட நினைச்சுருக்கனும்…..ஜஸ்ட் டூ மிஸ் லீட் அஸ்…. ரெண்டு நாள் ரிக்கார்டிங்ஸை பார்த்துட்டு தென் வி’ல் கம் டு நோ த ட்ரூத்….என்னதான் இங்க பிறந்து வளந்தவங்களா இருந்தாலும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் எதுக்கு மதர்டங்கை விட்டுட்டு தமிழ்ழ பேசிக்கப் போறாங்க?….. மிமிக் செய்தவங்க அண்ணாவ பத்தி தப்பா பேசிருக்காங்க……சுகாவ பத்தி தப்பா பேசிருக்காங்க…..ரெண்டு பேரும் நிரப்ராதின்னா…..அந்த ஃபேமிலியும் நிரப்ராதியா தான் இருப்பாங்க…..பட் என்ன இன்டென்ஷன்னு பார்க்கனும்….”

இது சங்கல்யா யோசிக்காத விஷயம் தான். அண்ட் கன்வின்சிங் டூ….

அடுத்த பக்கம்