நனைகின்றது நதியின் கரை 17 (2)

இப்போது அரண் அங்கு வந்தான். இவள் உச்சந்தலையில் கை வைத்து சின்னதாய் ஒரு அசை.

பாசம், ஆறுதல், ஃபெல்ட் சப்போர்டட், நன்றி நவிலல், என ஆயிரம் உணர்வு அதற்கு இவளுள்.

“எப்டியும் நான் தனியா அவன்ட்ட மாட்ற வரைக்கும் துரத்திருப்பான்ணா….இப்பனா அவன் ப்ளான் என்னன்னு தெரிஞ்சுட்டே….” தன் செயலுக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என இவளுக்கு தோன்றியது….. இவளை கன்ட்ரோல் செய்வது போல் இவள் உணர்ந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இவளை தனியாக அனுப்ப அரண் சம்மதித்தது என இவளுக்கு தெரியுமே….

“நல்லா பேசுற ஜான்சி ராணி…” சொல்லியபடி வந்த புஷ்பம் மருமகன் கையில் ஒரு பாயாச கப்பைக் எடுத்துக் கொடுத்தார் “உங்களுக்கும் பிடிக்குமே…” என்று அவனைப் பார்த்து சொன்னபடி.

“இப்பவேவா…? “ என்றாலும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான் அவன்.

“ஆமா ஸ்வீட் சாப்ட ஆசைப் படுறவங்கல்லாம் இப்பவே சாப்டுறுங்க அந்த வளந்தவன் வந்துட்டான்னா யாருக்கும் எதுவும் கிடைக்காது” சொல்லியபடி வந்தது சுகா.

வந்தவள் அரண் கையைப் பிடித்து அவன் கப்பிலிருந்து இரு ஸ்பூன் பாயாசத்தை அவன் கையாலையே தன் வாயில் விட்டுக் கொண்டு “இருந்தாலும் என்னைவிட்டுட்டு சாப்டதுக்கு உங்களுக்கு பனிஷ்மென்ட் இருக்குது” என்று கேஷுவலாக அரணை மிரட்டிவிட்டுப் போனாள்.

இப்படில்லாம் ஜோனத்திடம் இவள் விளையாட முடியுமோ? சங்கல்யாவிற்கு  கற்பனை சுகம் செய்கிறது.

கப் முழுவதையும் தன்னவளிடம் கொடுத்த அரண் சங்கல்யாவைப் பார்த்து “லியா உன்ட்ட கொஞ்சம் பேசனும்” என்றபடி நடக்க தொடங்கினான்.

“மாப்ளைட்டு ஏன்டி பிடுங்கின….” புஷ்பம் சுகாவை திட்ட,

“இல்ல ஆன்டி அப்றம் சாப்டுக்கிறேன்…இப்ப வேலை இருக்கு அதான் கொடுத்தேன்…” என்றபடி அரண் ஒரு அறையை நோக்கிச் செல்ல விஷயம் கொஞ்சம் சீரியஸ் என தோன்றியது சங்கல்யாவுக்கு.

வீட்டிலிருக்கும் ஆஃபீஸ் ரூம் போலும் அது. திரியேகனும் அங்கு இருந்தார்.

“அப்பா விஷயம் கன்ஃபார்ம்ட் தானே…” அரண் கேட்டான்

“ஆமா….இப்பதான் டி ஜி.பி வந்தனா மேம்ட்ட பேசினேன்….அவங்க கன்ஃபார்ம் செய்துட்டாங்க..”

இவளிடம் அரண் தான் விஷயத்தை தொடங்கினான்.

“நம்ம ஃபேக்ட்ரி இன்வெஸ்டிகேஷன் ரொம்பவே ஸ்லோவா போகுது….அதோட வீட்ல நடக்கிற இன்சிடென்ட்ஸும் ரொம்பவே பெக்யூலியரா டேஞ்சரஸா இருக்குது….பட் இதையெல்லாம் நம்ம ஃபேக்ட்ரி கேஸை ஹேண்டில் பண்ற போலீஸ் ஆஃபீஸர்ட்ட பேச முடியலை….ஏன்னா அவருக்கு நம்மளை பிடிக்காது….முன்னாலயே சொல்லிருக்கனே எங்க ஊர்காரர் பட் எங்களை பிடிக்காதுன்னு….”

“ஆமா…..சுகா ப்ரச்சனையில அந்த அரெ… அவரா?”

“ம்…அவர் தான்….வீட்டு விஷயத்தை சொன்னா இன்னும் ஏதாவது வம்பு இழுத்து வைப்பாரே தவிர நல்லது எதுவும் நடக்காது…..அனவரதன் அங்கிளும் எங்க கூட சேர்ந்துட்டாங்கன்னு இன்னும் அதிக எரிச்சல்ல இருக்கார்…”

“வெரி பேட்…இப்ப என்னண்ணா செய்ய போறீங்க?”

“தஞ்சாவூர் எஸ்பி அதிரூபன் பத்தி கேள்விப் பட்டிருக்கியா லியா…?”

“ம்..கொஞ்சம் கேள்விபட்டிருக்கேன்…ரொம்ப ஷார்ப் அண்ட் ஸ்ட்ரெய்ட் ஃபார்வட்னு…”

“குட்….அவர் நமக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட் அவர்ட்ட தான் சஜஷன் கேட்டேன்…..அவர் இப்பதான்  ட்ரெய்னிங் முடிஞ்சு ஜாப்ல ஜாய்ன் செய்ற ஒரு ஐ பி எஸ் ஆஃபீஸரை பத்தி சொன்னார்….இன்டெலிஜன்ட் அன்ட் ஃப்ரெண்ட்லி….உங்க ரிக்கொயர்மென்டுக்கு பெர்ஃபெக்ட் ஃபிட்னு…..டி ஜி பி மேம்ட்டயும் இதைப் பத்தி பேசிட்டோம்….ஷி ஆல்சோ ஃபீல்ஸ் இட் அஸ் அ குட் மூவ்…. அந்த ஆஃபீஸரை  இந்த கேஸை ஹேண்டில் செய்ற ஸ்பெஷல் ஆஃபீஸரா அப்பாய்ன்ட் பண்றாங்க”

“ஓகே..தட்ஸ் குட்”

டென்ஷன் ஏறுகிறது இவளுக்குள். அவன் இவட்டல்ல இன்வெஸ்டிகேஷன்னு வந்து நிப்பான்….. அரண் ஏன் இவ்வளவு விலாவாரியாக விளக்குகிறான் என்பதும் புரிகிறது. இவளது போலீஸ் பயம் அவனுக்கு தெரியுமே…

“அதிரூபன் வந்தனா மேம்லாம் ரெக்கமென்ட் செய்யனும்னா அந்த ஆஃபீஸர் கொஞ்சம் ட்ரெஸ்ட்வொர்த்தினு உனக்கு தோணுதுதானே லியா…?”

போலீஸ் டிபார்ட்மென்ட்ல இவளுக்கு மரியாதை உள்ள நேம்ஸ் இவங்கல்லாம்….சோ கொஞ்சம் ஓகேவாதான் படுது…இவளுக்காக அரணும் திரியேகனும் யோசிக்கும் அளவும் பிடிக்கிறது. அவ்ளவு ஈசியா இவளை யார்ட்டயும் மாட்டிவிட்டுட மாட்டாங்க….

“அதோட முக்கியமான விஷயம் அந்த ஆஃபிஸர் நமக்கு ரிலடிவ் அண்ட் ஃபேமிலி ஃப்ரெண்ட்….உன் மனசுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்க மாட்டான்…..”

“இது பெர்ஃபெக்ட் அண்ணா..…நம்ம வீட்டுக்குள்ள வந்து இன்வெஸ்டிகேட் செய்ய ரிலடிவா இருக்கிறதுதான் சரியா இருக்கும்….அதோட எனக்காக இவ்ளவு யோசிக்காதீங்க…எனக்கு போலீஸ்னா அவ்ளவா பிடிக்காதுதான்… பட் ஸ்டேஷன் போறதுன்னா தான் ரொம்ப பயப்படுவேன்…” இவளது பயத்துக்காக பார்த்துக் கொண்டு ப்ரச்சனையை இதற்கு மேலும் கவனிக்காமல் விட முடியுமா என்ன? இப்ப இருக்ற சிச்சுவேஷன்க்கு இதைவிட பெஸ்ட் மூவ் என்ன இருக்க முடியும்?

“தென் ஸ்டேஷன் போற மாதிரி சிச்சுவேஷன் வராம பார்த்துக்கலாம்…..அப்ப நம்ம ப்ரவீர் இந்த கேஸை ஹேண்டில் பண்ணினா உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே…பிகஸ் எப்டியும் நிறைய இன்ஃபோ உனக்குதான் தெரிஞ்சிருக்குது….. நீங்க ரெண்டு பேரும் தான் அதிகமா பேசிக்க வேண்டி இருக்கும்”

“ப்ரவீர்?”

“ம்…ப்ரபுவோட கசின் தான்…..இப்ப டின்னர்க்கு வர்றான்…. வீட்ல அவனுக்கு எப்படி இமேஜ் இருக்குன்னு உனக்கு இதுக்குள்ள புரிஞ்சிருக்கும்…..டிபார்ட்மென்ட்ல என்ன ரெபுடேஷன் இருக்கும்னு சொல்லிட்டேன்…..பயப்படாம இருப்பதானே…..? ”

“புஷ்பம் அம்மா பாயசம் செய்றதுலயே தெரியலையா ? ஒன்னும் ப்ராப்ளம் இல்லைணா…. “

சொல்லிவிட்டாளே தவிர ஜோனத்தின் கசின்…புஷ்பத்தின் பாயசம்….கன்சர்ன்ட் அரணின் செலக்க்ஷன்….இவள் மனதில் கொஞ்சமாவது மரியாதை சம்பாதித்திருக்கும் காவல் துறை காரர்களின் ரெக்கமென்டேஷன் என ஒருவித சமாதானம் இருந்தாலும், போலீஸ் ரிலடிவ் என்ற வார்த்தை ரொம்பவும் தான் கிளறிவிடுகிறது இவளை. வில்லிவாக்கம் ஸ்டேஷனும், எஸ் ஐ பால்ராஜும் வயிற்றில் புளியை கரைக்கின்றனர்தான்.

அடுத்த பக்கம்