நனைகின்றது நதியின் கரை 17(12)

 

“என் அம்மா எனக்காக என் சேஃப்டிகாகன்னு அந்த பன்னீர்செல்வம் அந்த பால்ராஜ் ரெண்டு பேர் செய்த அநியாயத்தை தட்டி கேட்காம அப்படியேவிட்டுடாங்க…..அது எனக்குள்ள கொதிக்குது…அதனால என் முன்னால எனக்கோ எந்த பொண்ணுக்கோ யார் கெடுதல் செய்தாலும் எனக்கு அந்த ராட்சசதனமான கோபம் வந்துடுதுன்னு புரியுது…பட் அந்த மொமன்ட் நான் என்ன செய்றேன்றதுல்லாம் அல்மோஸ்ட் என் கன்ட்ரோல்ல இல்லை……மர்டர் பண்னி உங்களுக்கும் ப்ரச்சனை இழுத்து வச்சுடுவனோன்னு பயம்மா இருக்குது”

“முதல்ல இப்படி கன்னாபின்னானு பயப்படுறத நிறுத்து…”

“இல்ல ஜோனத்….நான் எவ்ளவுதான் நிறுத்த ட்ரை பண்ணாலும் நிக்கவே மாட்டேங்குது….”

“இதுக்கு நாம சொல்யூஷன் கண்டு பிடிப்போம்….பட் ஒரு முக்கியமான விஷயத்தை நியாபகம் வச்சுக்கோ…நான் உங்கம்மாவுக்கு நடந்தது இன்ஜஸ்டிஸ் இல்லைனு சொல்லலை….பட் அவங்க இதையெல்லாம் இன்னும் பெட்டரா ஹேண்டில் செய்துறுக்கலாம்…”

“ம் கண்டிப்பா ஜோனத்….அது எனக்கும் புரியுது…ஆனா என் கோபத்துக்கு நிஜமாவே சொல்யூஷன் இருக்குதா…..இல்லைனா என்ன செய்ய?”

“இல்லனாலும் உன் டீம்ல நான் இருக்கேன்….எதையும் உன்னை தனியால்லாம் ஃபேஸ் செய்ய விடமாட்டேன்…ஓகேவா?”

“எனக்கு இதுக்கு என்ன சொல்லன்னு தெரியலை ஜோனத்…ஐ லவ் யூ…”

“மீ டூடா குட்டிப் பொண்ணு…..பைதவே உனக்கு உன் அம்மாவை தேடலையா லியாமா….நாம வேணா ட்ரேஸ் செய்யலாமா?”

“இல்ல வேண்டாம்…..என்னை அந்த ஆள் எதுவும் செய்துடக் கூடாதுன்னுதான் அம்மா என்னை டிஸ்வோன் செய்தது….இப்ப நம்ம மேரேஜ் பத்தி தெரிஞ்சிருக்கும்…..நிம்மதியா இருப்பாங்க…..இப்ப போய் நாம சேர்ந்தா அந்த ஆள் திரும்பவும் என்னை காண்பிச்சு அம்மாட்ட எதாவது மிரட்டலாம்……நமக்கும் ரிஸ்க்….அம்மாவுக்கும் கஷ்டம்….எல்லோரும் இருக்க இடத்துல நிம்மதியா இருக்கட்டும்…. எனக்கு யாரும் இல்லைன்ற ஃபீல் எல்லாம் இல்லை…..நீங்க இருக்கீங்கல்ல போதும்….”

அதன் பின்பு சங்கல்யாவும் ஜோனத்தும் பொன்மேட்டில் இருந்த வீட்டிற்கு வந்துவிட்டனர்.

நைட் சாப்பாடு முடிந்து சிறிது நேரம் அன்பரசி புஷ்பம் சுகா அரண் என அனைவரிடமும் தம்பதிகள் இருவரும் மொபைலில் பேசினர். சுகாவிடம் சங்கல்யா பேசிக் கொண்டிருக்கும் போது ஜோனத் குளிக்கப் போனான். மனம் மனைவியுடன் தேனிலவு காணும் நினைவில்.

“இல்ல  ப்ராப்பர் சர்ச் வெட்டிங் வேணும்னு ரொம்ப ஆசைதான்…..ஹாஸ்பிட்டல்ல இருந்து ஆன்டி வந்த பிறகு ஜோனத்ட்ட சொல்லனும்னு நினச்சுறுந்தேன்….பட் இப்படி ஹனிமூன்லாம் வந்த பிறகு அது தப்பு……முடிஞ்சா இந்த 2 வீக்‌ஸ்ல ரிசப்ஷன் அரேஞ்ச் செய்யலாமான்னு பார்க்கனும்….அதைப் பத்தி அவங்கட்ட பேசனும்…. “ சங்கல்யா சுகாவிடம் பேசுவது கணவன் காதில் விழுகிறது.

கல்யாணம் வர்றது வாழ்க்கைல ஒரு தடவை….இப்ப செய்யலைனா எப்ப அந்த ஆசையை நிறைவேத்றதாம்? சர்ச் வெட்டிங் முடித்த பிறகு ஹனிமூன் கண்டு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான் ப்ரபாத். பாவம் இதில் என்ன சதி இருக்கிறது என அவனுக்கு அப்போது தெரியாது.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 18

One comment

Leave a Reply