நனைகின்றது நதியின் கரை 17(11)

 

“அந்த ஜெயில் நாளுக்கு அடுத்து என் பாட்டி வீட்டுக்கு வந்த அந்த ஆள் என்னையும் பாட்டியையும் வீட்டை விட்டு வெளிய தூக்கிப் போட்டுட்டு கதவை பூட்டி சாவி எடுத்துட்டுப் போய்ட்டார்….அம்மாவும் வந்திருந்தாங்க….ஒரு வார்த்தை சொல்லலை அழுதுகிட்டே அவர் கூட போய்ட்டாங்க……

ஆக்சுவலி அந்த மூனு வீடும் தாத்தாவோடது….பாட்டி அம்மா ரெண்டு பேருமா அதை என் பேர்ல மாத்திருக்காங்க இந்த செகண்ட் மேரேஜுக்கு முன்ன……அந்த இடம் அப்ப ஸ்லம்….இப்ப சோஃபிஸ்டிகேட்டட் அப்பார்ட்மென்ட்ஸ் உள்ள பாஷ் ஏரியா….. அந்த மூனு வீடையும் அப்பார்ட்மென்ட் கெட்ட விலைக்கு கேட்றுக்கான் எவனோ…..மைனர் சொத்து…ஒன்னும் செய்ய முடியாது….

அம்மாவை என்னை எதுவும் செய்துடுவேன்னு சொல்லி மிரட்டி…..அப்படி மிரட்டதான் என்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போனது,,, என்னை அம்மாவோட டாட்டர் இல்லைனு லீகலி டிஸ்வோன் செய்து எழுதி வாங்கிட்டு….வீடை எதோ கோல்மால் செய்து அந்த பால்ராஜ் வித்துட்டார்….

அதுக்கு பிறகு அவங்களை நான் இப்ப வரைக்கும் பார்த்தது இல்லை. எங்க இருக்காங்கன்னே தெரியாது….பட் அன்னைக்கு பாட்டி ரோட்ல படுத்திறுந்தாங்க…..மழை பெய்ய ஆரம்பிச்சது…..நான் என்ன செய்யன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன்….எப்படியோ ஒரு மாதிரி இருந்துச்சு…. பயம்மா….எனக்குன்னு எதுவுமே இல்லாம….சூன்யமா….எது மேலயும் கன்ட்ரோல் இல்லாம…என்ன செய்யனும்னே தெரியாம… எப்படின்னு சொல்ல தெரியலை… இப்ப வரை அந்த ஞாபகம் வர்றப்ப ரொம்ப ஒரு மாதிரி ஆகிடும்….அன்னைக்கு நீங்க கிளம்புற அன்னைக்கு மயங்கி விழுந்தனே அது கூட இந்த ஞாபகத்துல தான்….

பன்னீர் செல்வம் செய்த தப்பாலதான எனக்கு அப்படி ஒரு நிலமை….

பக்கத்து வீட்ல இருந்தவங்கதான் அப்ப வேற ஒரு வீடு பார்த்து கொடுத்தாங்க…..எப்டியோ படிச்சு வளந்து இந்தா உங்க கூட மேரேஜும் நடந்தாச்சு….” இறுதி வரியில் மகிழ்ச்சி வந்திருந்தது அவளது குரலில்.

தன் கை வளைவுக்குள் வைத்திருந்தான் அவளை அவளது கணவன்.

“அம்மா வரவும் போய்டுவேன்னு சொல்லிட்டு கொஞ்ச நாள் என்ட்ட சரியா பேசாம இருந்தியே அதுக்கும் இதுதான் காரணமா?”

“ம்…ஆமா….நீங்களே கவனிச்சுருப்பீங்க…எனக்கு கோபம் வந்தா ராச்சஸதனாமா வரும்….உங்க மேல உள்ள கோபத்துல அரண் அண்ணா டைரிய கொடுத்தனே அதுவே சின்னதுன்ற மாதிரி கன்னா பின்னானு வரும்….இந்த பன்னீர் செல்வம்..பால்ராஜ்னால எனக்கு ஜென்ட்ஸ் மேல நம்பிக்கையே கிடையாது….சோ நீங்க செய்ற எது எப்ப எனக்கு தப்பா புரிஞ்சாலும்…உடனே உங்களை நம்பாம என் கோபத்தால உங்களை ஹார்ம் செய்துடுவனோன்னு பயம்…என்னதான் அப்படி செய்ய கூடாதுன்னு முடிவு செய்துகிட்டாலும் திரும்ப செய்ய மாட்டேன்னு நம்ப முடியலை….நீங்களே சொன்னீங்களே டெம்பரரி திருந்தின மூட்னு…..அதான் என் பேக்ரவ்ண்ட்ல வந்த பொண்ணுக்கு கல்யாணமே தப்பான விஷயம்னு பட்டுது…” பின் தன் முடிவை மாற்றிக் கொண்ட காரணத்தையும் சொன்னாள்.

“நின்னு பேஸ் செய்யனும்னு தெரியுது…பட் நிஜமா இது ரிப்பிட் ஆகாதுன்னு தோணலை ஜோனத்… வல்லராஜன் விஷயத்துல அந்த ஆள் ஜஸ்ட் மிஸ்தான்…..மர்டர் செய்துடுவனோன்னு கூட பயமா இருக்குது.”

“ப்ச்…அப்படில்லாம் ஆகாது லியாமா…”

“இல்ல ஜோனத் என் கோபம் பத்தி உங்களுக்கு தெரியலை…..ஒரு டைம் ட்ரெய்ன்ல லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஒருத்தன் ஏறிட்டான்…..கொஞ்சம் வயசானவன்….கண் பார்வை பத்தலைனு வேற சொன்னான்….எல்லோரும் விட்டுடாங்க…..கொஞ்ச நேரம் கழிச்சு டாய்லட் யூஸ் செய்துட்டு வெளிய வந்த பொண்ணை வெளிய வெயிட் செய்துட்டு இருந்த மாதிரி நின்னுட்டு இருந்த இவன் ஃபோர்ஸ்ஃபுல்லா தன்னோட சேர்த்து இழுத்துட்டு உள்ள போய் லாக் செய்துட்டான்….அட்டம்ட் ஆஃப் ரேப்…

ட்ரெய்ன் சவ்ண்ட்ல அந்த பொண்னு கத்துன சத்தம் முதல்ல கேட்கல….அவ ஃப்ரெண்ட்தான் போனவள ரொம்ப நேரம் காணோமேன்னு தேடிப் போன ஆள்…டாய்லட் உள்ள பூட்டிருக்கவும் முதல்ல இவ தப்பா நினைக்கலை…..திரும்புறப்ப அந்த கேர்ள் சவ்ண்ட் ….கதவு பூட்டை உடச்சு காப்பாத்தினோம்….அது வரை என் கோபத்தை சரின்னு சொல்லலாம்….தென் நெக்‌ஸ்ட் ட்ரெய்ன் கிளம்புறப்ப வேற ஒரு பையன் ஏறப் போனான்….நான் கதவை உள்ள லாக் செய்துட்டு போய்ட்டேன்…” அப்ப எனக்கு அது துளி கூட தப்பா தெரியலை….கண்மண் தெரியாத கோபம்…..செத்தா சாகட்டும்னு இருந்துது”

“சரி எப்ப அது தப்பா தெரிஞ்சிது…?”

“இப்ப அன்னைக்கு அரண் அண்ணா வீட்ல ரெண்டு பேர் பேசிகிட்டு இருந்தாங்கன்னு சொன்னேன்ல….அவங்க அது நீங்கன்ற மாதிரி ஏதோ சொன்னாங்கள்ள……அப்பதான் ஏறின பையன் ஒரு வேளை உங்க மாதிரி நல்ல டைப்பாவும் இருந்திருக்கலாமேன்னு தோணிச்சு….”

அவள் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் இவனை, அரணை, இவர்கள் சார்ந்த திரியேகன், அனவரதன், ப்ரவீரை மட்டுமாக அவள் மோசமானவர்கள் இல்லை என நம்ப ஆரம்பித்திருந்த நிலைக்கும் அடுத்தபடியாக,  சூழ்நிலைகளை ஆண் பெண் என்ற பேதமின்றி நடுநிலையில் இருந்து பார்க்க துவங்கி இருப்பதுதானே இப்போது அவள் சொல்லும் விஷயத்தின் சாரம்சம்…. அது கணவனுக்கு புரியாமல் போகுமா என்ன? அதை அவளும் புரிந்தாக வேண்டுமே….

“இப்ப நீயே பாரு லியாமா உனக்கு ஜென்ட்ஸ்னாலே மோசம்ன்ற எண்ணம் போய் அந்த பையன் நல்லவனா கூட இருக்கலாம்னு  சூழ்நிலைய நடுநிலமையில இருந்து பார்க்க வருது பாரு….. அதுவே ஹீலிங்கோட அடையாளம் தானே…..சோ உனக்கு தப்பால்லாம் கோபம் வராது தான்……” இவன் அவளுக்கு புரிய வைத்திட முனைய

அதற்குள் அவளோ “ அன்னைக்கு நான் செஞ்சது ஒரு வகையில அட்டெம்ட் ஆஃப் மர்டர் தானப்பா….? அந்த பையனுக்கு எதுவும் ஆகிருக்குமோ ஜோனத்….? நினைக்கிறப்பல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா….பயம்ம்மா… இருக்குது….” விழியும் மொழியும் படபடக்க கண்ணில் வேதனை நீராய் கோர்க்க….“மர்டர் பண்ணிருவனோன்னு பயமா இருக்கு” என அவள் புலம்புவதின் அடிப்படை காரணத்தை வெளியிட்டாள்.

தன் மார்பில் தலை சாய்த்திருந்தவள்  கன்னத்தை தன் கையால் தாங்கி சின்னதே சின்னதாய் ஒரு புன்னகையுடன்

“ஆமா அந்த பையனுக்கு என்னமோ ஆகிட்டுதான்….அதுவும் உன்னால தான்….” அவன் சொல்ல ஆரம்பிக்கவும், அந்த வார்த்தைகளில் அவளோ அரண்டு மிரண்டு அதிர்ந்து…. எழமுடியாமல் தடுத்த அவனது பிடியினை தாண்ட முடியாமல் தவித்து…… தலையை மட்டுமாக திருப்பி பின்னிருந்த அவன் முகம் பார்க்க…..

முழு அளவும் விரிந்திருந்த அந்த மொட்டு கண்களை பார்த்தவன், தன் ஒற்றை விரலால் அவள் நெற்றியிலிருந்து நாசி வழியாய் இதழுக்கு கோடு வரைந்த படி “அவன் வளந்து பெரியாளாகி…..இந்த கண்ல விழுந்து …..காணாம போய்…. இனி இதைவிட்டு வெளிய வரவே மட்டேன்னு உன்னை கல்யாணம் வேற செய்துகிட்டான்….பாவம் பயித்தம் பிடிக்க வச்சுட்டியே  அவனுக்கு….” அவன் சொல்வது மெல்ல மெல்ல புரிய அதற்கு மேல் அவனை பேச விடவில்லை அவள்

“வாட்?????” அளவிடமுடியாதபடி அதிர்ந்து போனாள் அவள். என்ன சொல்கிறான் இவன்????? உயிரை உருவி ஓடுகிறது கொடும் வலி ஒன்று உள்ளுக்குள்…. இவனையா ? என்னவனையா? என்ன செய்துவிட்டேன் நான்??

அவள் வலியை உணர்ந்தவனாய் மறுப்பாக தலை அசைத்து, இப்பொழுது அவள் பக்கவாட்டு நெற்றியில் சரிந்த முடியை மென்மையாய் கவனமாய் மருத்துவம் போல் பின் நோக்கி தள்ளி வைத்தான் அவன். அத்தனை அக்கறையும் அன்பும் அவன் கண்களிலும் கையிலும்…..

அழுகையாய் வந்த வார்த்தையோடு அவனது அந்த கையைப் பற்றினாள் இவள். “ஜோனத் என் மேல கோபமே இல்லையா ஜோனத் உங்களுக்கு?” தன் இரு கைகளாலும் தன் முடி கோத வந்த அவன் ஒற்றை கையை பற்றி இருந்தாள் இவள் இப்போது.

“அது நடந்த அன்னைக்கு செம கோபம்தான்……ஆனா அடுத்து நீ லேடீஸ்ட்ட நடந்துக்கிறத பார்த்த பிறகு அது மாறிட்டு லியாமா…..” அவள் முகத்தைப் பார்த்து சொன்னவன்..

”ஏற்கனவே சொல்லியிருக்கேன் …..நான் உன்னை விரும்பி கல்யாணம் செய்தேன்னு….” அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து அவனின் அத்தனையும் அவளே என்றபடியான உணர்வை அவள் உயிரில் உண்டாக்கிய படி சொன்னான் அவன்.

இவளது அடுத்த வெடிப்பான  “ஜோனத்…” தில் அதற்கு மேல் அவள் பேச முடியாதபடி அவளை தன் மார்போடு இறுக்கி அணைத்திருந்தான். அவளை கரைய செய்யும் அவனது இதய ஒலி அவள் காதிற்குள்…. அருவமாய் மாறி அவனோடு கலந்து கொண்டிருந்தாள் உணர்வளவில்….உள்மன நிலையில்…… உயிர் வரையில்….

ஏதோ வகையில் ஏனோ அமைதி நதி அவளுள்…..

“ப்ளீஸ் லியாமா இதுக்காக வேற ஃபீல் பண்ணாத….இப்ப கவனிக்க வேண்டிய விஷயம் வேற…உனக்கு ஏன் கோபம் வருதுன்னு தெரியுதாடா?” உணர்வுகளை கட்டிப் போட்டு அறிவுக்கு வேலை கொடுக்கும் வேலையை செய்தான் அவன்…..கேள்வி கேட்டான் கணவன்….

“ம்…அதெல்லாம் தெரியுது….” அவளும் அவன் நடத்தலுக்கு ஒப்புக் கொண்டாள்….. அழுகையை மறந்து யோசிக்க தொடங்கினாள்.

அடுத்த பக்கம்