நனைகின்றது நதியின் கரை 17(10)

சிறிது நேரம் கழித்து அவளை தன்னை விட்டு பிரித்து அமர வைத்தவன் கொண்டு வந்திருந்த டவலை எடுத்து வந்து அவள் தலையை துவட்ட ஆரம்பித்தான்.

நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் “கோபமா ஜோனத்?”

“இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்குது….”

“ஜோனத்”

“நான் யாரு உனக்கு?…உன் குடும்ப ரகசியத்தெல்லாம் என்னை நம்பி சொல்லலாமா? அது எவ்ளவு பெரிய தப்பு…?”

“எனக்கு ட்ரமடைஸ் செய்தெல்லாம் சொல்ல வராது ஜோனத்….என் அம்மாவுக்கு ஃபர்ஸ்ட் மேரேஜ்ல பிறந்த சைல்ட் நான்……”சொல்ல ஆரம்பித்தாள் அவள்.

“அந்த ஆளு பேரு பன்னீர் செல்வம் ஒரு டாக்டர்….ஃபில்தி ரிச் வீட்டுக்கு ஏக வாரிசு….என்  அம்மா வீடு நுங்கம்பாக்கம் ஜோசியர் ஸ்ட்ரீட் பக்கதுல இருந்த ஸ்லம்ல…. புரியும்னு நினைக்கிறேன் பினான்ஸியல் டிஃபரென்ஸ்….அம்மா படு அழகு….மூவில நடிக்கலாம் சான்ஸ் வந்ததாம்….ஜஸ்ட் ஸ்கூலிங் முடிச்சிருந்த வயசு…. ஏதோ வேகத்துல ரெண்டு பேரும்  வீட்டை எதிர்த்து கல்யாணம்….இம்மீடியட் ப்ரெக்னன்சி……நான் அம்மா வயித்துல 6 மந்த்ஸ்…..அந்த பன்னீர்செல்வம் வீட்ல இருந்து வந்து அவரு அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைனு கூப்பிட்டுப் போயிருக்காங்க……திரும்ப அவரை அம்மா பார்க்கிறப்ப உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனுட்டு போய்ட்டார்….அவர் அம்மா கேட்டாங்கன்னு அவருக்கு அவர் அம்மா பார்த்த பொண்ணோட கல்யாணமே ஆகிருந்ததாம் அதுக்குள்ள…… உங்க அம்மா ஹாஸ்பிட்டல்ல வச்சு என்னை கல்யாணம் செய்ய கேட்டப்ப நீங்க முடியாதுன்னு சொன்னீங்க தெரியுமா….நான் உங்கட்ட ரொம்ப செக்யூர்டா ஃபீல் பண்ண காரணம் அதுவும் தான்…..அம்மாவுக்காக கூட தப்புன்னு தோணுற மேரஜை செய்ய மாட்டீங்க தானே…..என்னை விட்டுட்டு போக மாட்டீங்க தான……

அந்த பன்னீர் செல்வம் என் அம்மாட்ட ஃபர்ஸ்ட் வைஃப்னு ப்ராப்ளம் செய்தா நடந்த கல்யாணத்துக்கு எந்த சாட்சியும் கிடையாது…..குழந்தைய கொன்னுட்டு உன்னை யாருன்னே தெரியாதுன்னுட்டு போய்டுவேன்னு  சொல்லிட்டார் போல….அப்பதான் பிறந்திருந்த என்னை தூக்கிட்டு என் அம்மா என் பாட்டிட்ட திரும்பி வந்தாச்சு…. தாத்தா அம்மா சின்னதா இருந்தப்பவே இறந்திருந்தாங்க….சோ பாட்டி மட்டும் தான் அம்மாவுக்கு இருந்த ஒரே சொந்தம்….தென் அம்மா கிடச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்காங்க….எனக்கு 8 வயசுல என் அம்மாவுக்கு அடுத்த கல்யாணம். எஸ் ஐ பால்ராஜ்….உங்க பொண்ணையும் அவ குழந்தையையும் என் குடும்பமா பார்த்துப்பேன்னு அந்த ஆளு என் பாட்டியையும் அம்மாவையும் கரைச்சு தான் கல்யாணம் செய்தது.

ஆனா அம்மாவுக்கு அடுத்து ட்வின்ஸ் பாய்ஸ் பிறக்கவும் என்னையும் பாட்டியையும் மட்டும் தனியா விட்டுட்டு அம்மாவை குழந்தைகளோட கூட்டிட்டுப் போய்ட்டார். அப்ப என் பாட்டிக்கு பரலடிக் அட்டாக் வேற வந்து படுத்த படுக்கை….அன்னைல இருந்து வீட்டு வேலைல இருந்து எல்லாம் நான் தான்….பாட்டி வீடு ஓட்டு வீடுதான் ஆனா மூனு வீடு…மத்த ரெண்டு வீட்டு வாடகையிலும் மிலிட்ரில இருந்து ரிடையர் ஆகி இருந்த தாத்தாவோட பென்ஷலயும் தான் எங்க லைஃப்…. ஒரு நாள் அந்த பால்ராஜ் வந்து என்னை கூப்பிட்டுட்டு போனார் ஸ்டேஷன்கு….அப்ப எனக்கு 10 வயசு கிட்ட இருக்கும்…..என்னை அங்க உட்கார வச்சுட்டு செல்ல இருந்த மூனு ஜென்ட்ஸ்…..அவங்க ட்ரஸ்ஸ கழற்றி ஷாட்ஸோட விட்டு அடி பின்னிட்டாரு…. இப்ப உங்க பக்கத்துல இருந்து சொல்றப்பா இது என்னமோ பயமா இல்லை…. பட் அப்போ ரொம்ப பயந்துட்டேன்….மறுநாள் என்னை அந்த செல்ல போட்டு பூட்டி நைட் முழுக்க உட்கார வச்சப்ப பயத்துல உயிரே போய்ட்டு….எப்ப என்ன செய்வாங்கன்னு ஒவ்வொரு நொடியும்……இப்பவரை ஸ்டேஷன்னா பயம் வரது இதால தான்…. அவங்க நம்மள என்ன வேணாலும் செய்யலாம்…பட் நமக்கு ஹெல்ப்க்குன்னு யாருமே வர முடியாத இடம் அதுன்னு தோணும்….”

தன்னோடு அணைத்துக் கொண்டான் சொல்லிக் கொண்டிருந்தவளை. “இப்ப கூட உனக்கு ஹெல்ப் வர முடியாத இடம்னு ஒன்னு இருக்றதா தோணுதா லியா பொண்ணு…?…உனக்காக நான் வர மாட்டனா?”

“அதான் இப்ப உங்க பக்கத்துல இருக்றப்ப பயமா இல்லைனுதானே சொல்றேன்…” அவள் பதிலில் தன்னவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்….

அடுத்த பக்கம்