நனைகின்றது நதியின் கரை 17

அனவரதனிடம் பேசியதுமே ஒருவகையில் ப்ரச்சனை முடிந்துவிட்டதாக ஒரு உணர்வு வந்திருந்தது சங்கல்யாவுக்கு. அடுத்து அனவரதன் வீட்டிற்கு வந்து இவளிடம் “இனி அந்த வல்லராஜன் நாய் நம்ம வீட்டு பக்கம் வரமாட்டான்மா….நீ நிம்மதியா இரு….அப்டியே ப்ரபாட்டயும் நீயே கூப்ட்டு பேசிடு….” என்ற போது நிம்மதியாக சம்மதமாக அவரிடம் தலையை ஆட்டி வைத்தாள்.

“கையோட கையா அவன்ட்ட பேசிடு….உன் நம்பர் வேற ஸ்விட்ச் ஆஃப்……கவலபட்டுகிட்டு இருப்பான்…..” என்றவர் அறை வாசலை நோக்கிப் போனார். “சுகியே பிரவாயில்ல போலயே…அந்த மன்யத் நாய் மிரட்னப்ப கூட இப்டி அழலையே அவ….இப்டி பயம் காட்டிடியேம்மா” என்றபடி.

அனவரதன் இயல்பாய் தான் சொல்லிவிட்டுப் போனார். இவளுக்குத்தான் இயல் நிலை பாதிப்பு. உண்மைதானே….சுகாவை எல்லோரும்  கொஞ்சம் பயந்த சுபாவமான பெண் என நினைப்பதுதான். இவள் ஒரு வகையில் நேர் எதிர் தான். ஆனால் ஏன் இப்படி துடித்துப் போனாள்….ஜோனத்திற்காகவா…? தான் நினைப்பதை விடவும் தனக்குள் இருக்கும் தன்னவன் மீதான காதலின் இவள் மீதான ஆளுகை அதிகமோ? இவள் பயப்படுற மாதிரி ஜோனத்தை அவ்ளவு ஈசியா ஹர்ட் செய்திட மாட்டாளோ…..அவனுக்காக இத்தனை அக்கறை இருக்கிறதே மனதில்….யோசிக்க வேண்டும். இப்பொழுது முதலில் அவனிடம் பேச வேண்டும்.

மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகும் வரைக்கும் அழுது வச்சுருக்கேன்…….பாவம் அந்த பக்கம் கேட்டுகிட்டு இருந்த அவனுக்கு எவ்ளவு கஷ்டமா இருந்திருக்கும்….??

சார்ஜரில் மொபைலை இவள் உயிர்பித்த நேரம் அவனே அழைத்தான். அவனது “லியா பொண்ணு உன் மொபைலும் ஸ்விட்ச் ஆஃப்……லேண்ட் லைன்லயும் நீ ரீச்லே வரலை ரொம்ப கஷ்டமாயிட்டுடா…..என்ன விஷயம்னு சொல்ல மாட்டியா? “ காதில்  விழ, இருந்த உணர்ச்சி வேகத்தில் நடந்த அனைத்தையும் அவனிடம் கமா புள்ளி இடம் மாறாமல் கொட்டித் தீர்த்தாள்.

“இப்ப எனக்கு உன் பக்கத்துல இருக்கனும் போல இருக்கு லியாமா ”என்று மட்டும் சொன்னான் கேட்டிருந்தவன். அவன் என்ன சொல்கிறான் என இவளுக்கும் புரிந்தது. உன் வலியை சுமந்து கொள்ள ஆசை என்கிறான். அவளுக்குமே மௌனமாய் அவன் மார்பில் ஒளிந்து கொள்ள திடும் திடும் என துடிக்கும் அவன் இதய ஒலியில் கரைந்து கொள்ள மட்டும் தான் இப்பொழுது இருக்கிறது வாஞ்சை.

“எனக்காகவா லியாப் பொண்ணு அவ்ளவு அழுத? எனக்காகவா அவ்ளவு தூரம் உன் கோபத்தை கன்ட்ரோல் பண்ணின? ”

அவன் கேள்வியில் தான் இந்த கோபக் கட்டுப்பாடு விஷயம் உறைக்கிறதே அவளுக்கு….. அவனை விட்டு விலகிவிட நினைக்கும் தன் முடிவு தவறோ என முதல் முறையாக சிந்தனையும் வருகிறது அவளுள். தன் கோபத்தில் அவனுக்கு கெடுதல் செய்துவிடுவேன் என்பது தானே அவளது பயமே? இன்றைக்கு அத்தனை சூழலில் அவள் இயல்புக்கு மீறி எத்தனையாய் பொறுமையாய் நடந்திருக்கிறாள் அதுவும் அவனுக்காக? இதில் இவன் மீது கோபம் வந்து இவனை காயப் படுத்துவாளாமா?? ஆனாலும்???

இதே பொறுமை அவளுக்கு தொடருமா? வல்லராஜன் மண்டை ஜஸ்ட் மிஸ் இன்னைக்கு….

தன் மனதை குழப்பும் பயத்தை அவனிடம் பேசாவிட்டாலும் அதன்பின் அவனிடம் ஓரளவு இயல்பாகவே பேசினாள். அவனிடம் பேசி முடித்தபின்பும் மனம் முழுவதும் அனாலிஸிஸ். ப்ரச்சனைனா அவன்ட்ட சொல்றதுதான் இயல்பு….என்ற அரணின் வார்த்தை….தூரத்துல இருக்றவன்ட்ட சுகாவைப் பத்தி சொல்லி குழப்ப வராத இவள் மனம்…..வல்லராஜன் மண்டையை உடைக்காமல் விட்ட இவள் கோபக் கட்டுப்பாடு….அவன் தருவதாய் சொன்ன அத்தனை பெரிய பணம் இவளுக்கு தேவையில்லை என தோன்றிய சிந்தனை…..சுகாவிற்காக அரண் ஜோனத் திரியேகன் ஹயா என அனைவருக்குமாக இவள் கஷ்டபட முடிவு செய்தது…ஜோனத்திற்காக அழுத அழுகை…..அனவரதனை நம்பி ஜோனத்திற்காக கேட்ட உதவி…..அவளது அழுகைக்கு அனவரதன் சொன்ன கமென்ட்….எல்லாம் யோசித்துப் பார்த்தவளுக்கு தன் மனம் திரும்பல் டெம்பரரி ரிப்பன்டன்ஸ் இல்லையோ என்று தோன்றுகிறது.

நைட் டின்னர்க்கு கீழே போகலைனா எல்லோருக்கும் கஷ்டமாக இருக்கும் என்று தோன்ற கீழே இறங்கி வந்தாள்.  “பிள்ள முகம் இப்பதான் தெளிஞ்சுருக்கு” என்று வரவேற்றார் புஷ்பம். எப்போதையும் விட அதிகமாக ஷி ஃபெல்ட் அட் ஹோம்.

வீடை கூடாகவோ கூண்டாகவோ உணரவைக்கும் திறன் ஒரு பெண்ணின் அன்புக்குத்தான் உண்டு போலும்.

டைனிங் டேபிளை கவனமாக செட் செய்து கொண்டிருந்தார் அவர். ரெண்டு மூனு வகை ஸ்வீட் தெரிந்தது அதில் “என்ன aunty இன்னைக்கு யாரும் கெஸ்ட் வர்றாங்களா?”

“ஆமா ஒரு வளந்த வாலு வருது…..மூனு வேளையும் ஸ்வீட் சாப்டுற வால்….ப்ரபுவோட கசின் ஒருத்தன் ப்ரவீர்னு சொல்லிருக்கானா அவன்தான் வர்றான்….டெல்லியில வளந்தவன்…..நம்ம ஊர் ஸ்வீட்னா படு இஷ்டம்….அதான் செய்தோம்… ஆமா ப்ரபுதான் என்ன ஆன்டினு கூப்டுறானே நீயும் ஏன்….?அழகா அம்மானு கூப்டு…” சொல்லியபடி ஒரு கிண்ணத்தில் சிறிது பாசி பருப்பு பாயசத்தை ஊற்றி ஸ்பூனிட்டு எடுத்து வந்தவர் இவள் வாயில் இரு ஸ்பூன் ஊட்டினார்.

சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை எனினும் சந்தோஷமாக இருந்தது சங்கல்யாவுக்கு.

“நல்லாருக்கா?”

“ரொம்ப நல்லாருக்கு ஆன்…அம்மா…”

“ப்ரபுக்கும் பிடிக்கும் செய்து கொடு……இருந்தாலும் இதைவிட அவனுக்கு சக்கர பொங்கல்தான் படு இஷ்டம்”

அவனது பொங்கல் ஃபேக்டரி ஞாபகத்தில் சட்டென புரையேற……..சமாளித்து, தலையை ஆட்டி வைத்தாள். வரும் வெட்கத்தை வேறு ஒளித்து வைக்க வேண்டியதாயிருந்தது.

அடுத்த பக்கம்