நனைகின்றது நதியின் கரை 16(8)

“என் பிள்ளைக்காக பார்த்துட்டு தான் அழுதுட்டு கிடக்கியோ?” இவளைப் பார்த்து அவரது ஒரே கேள்வி…..வல்லராஜனை trap செய்துட்டார் அனவரதன் என புரிந்து போனது இவளுக்கு. அடுத்து என்ன நடந்தது என்பது இவளுக்கு தெரியாது.

அடுத்து கால் மணிநேரத்தில் அனவரதன் வல்லராஜனை மொபைலில் அழைத்தார்.

“ஏல நான் அப்ராட்லாம் போய்ட்டு வந்தாலும் பிறப்பில சுத்த காட்டான். தூக்கி வெட்டுனா உன் வீட்டு அருவா மட்டுமில்ல என் வீட்டு அருவாவும் வெட்டும்…. என்னமோ கதை சொல்லி எங்க வீட்டுப் பிள்ளய மிரட்டினியாமே….உனக்கும் ரெண்டு பிள்ள இருக்குன்னு மறந்துட்ட போல…..உன் பிள்ளைக படிக்கிற அந்த M.V ஸ்கூல் வாசல்ல தான் நிக்கேன்…. உன் ரெண்டாவது பிள்ள  பேரு கூட மானவாமே… இப்பதான் ஸ்கூல் விட்டு வெளிய வந்துட்டு இருக்கான்…..அவன் ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்து போய் இருக்கனும் தானே….”

தெறித்தான் வல்லராஜன். ”ஐயோ அவன ஒன்னும் செய்துடாதீங்க…. விட்டுடுங்க ”

“அப்ப மூத்த பிள்ளய பிடிச்சுட்டுப் போனா சரின்றியோ?”

“ஐயோ என் பிள்ளைங்கள எதுவும் செய்துடாதீங்க….உங்க வழிக்கே நான் வரலை….. இந்த சங்கல்யா உங்கள மிரட்ட வந்தவதானே சார்..…அதுவும் உங்க மாப்ளய….”

“ ஏய் பரதேசி…பொம்பிள பிள்ளய தனியா கூப்டு மிரட்டுற பயந்தாகொள்ளி…. உன் நீலிக் கண்ணீரை நீயே வச்சுக்கோ…..அவ மிரட்டுனத நியாபகபடுத்துன…..கண்டிப்பா உன் பிள்ளகள சும்மாவிட மாட்டேன்….அப்ப அவ வெறும் அம்பு… ஏவுன திருட்டு நாய் நீதாம்ல….இப்பவும் புத்தி வரலை என்ன….? இன்னும் என்ட்ட கத விட்டுகிட்டு இருக்க? இப்ப சொல்லிட்டேன் கேளு உன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட இந்த ஊர்ல நீ நிம்மதியா இருக்கனும்னு நினச்சன்னா இதோட என் வீட்டு விஷயத்துல மூக்க நுழைக்கத நிறுத்திக்கோ…..மீறி நுழச்ச வெட்டிறுவேன்…… ப்ரபாத் அவன் வீட்டுக்காரி எல்லோரும் என் வீடுதான் அத நீ மறந்துட்ட உன் பிள்ளைகள நீ மறந்துட வேண்டியதுதான்….என் மாப்ள வீடு மாதிரி அந்த ப்ரபு பையன் மாதிரி எதுக்குனாலும் சட்டத்தை பார்க்றவன் கிடையாது நான்…..மனசுக்கு நியாயம்னு பட்டா துணிஞ்சு தூக்கிடுவேன்…நானும் போகுது போகுதுன்னு பார்த்தால் உன் திமிரு அடங்கவே இல்லல…..”

வல்லராஜன் மிரண்ட விதத்தில் வல்லராஜன் வழிப் ப்ரச்சனை அதோடு முடிந்து போனதாகத்தான் அனவரதன் நம்பினார். இன்ஃபேக்ட் வல்லராஜனே அப்படித்தான் நம்பினான். பிள்ளைகளை எத்தனை காலம் ஒழித்து வைக்க முடியும்…? ஆக அவன் தன் திட்டத்தை ட்ராப் பண்ணி சங்கல்யாவிடம் மன்னிப்பு வேறு கேட்டு வைத்தான்.

அதிலெல்லாம் பிரச்சனை எதுவும் பிறக்கவில்லை. ஆனால் வல்லராஜன் “உங்க ப்ளானெல்லாம் என்னால வொர்க் அவ்ட் செய்ய முடியாது….அந்த அனவரதன் உன் பிள்ளய தூக்குவேன்னு சொல்றான்”னு அவன் தன்னை ஆட்டி வைத்த நபரிடம் சொல்ல வந்து நின்றது அடுத்த ப்ரச்சனை. அது அரணையும் ப்ரபாத்தையும் மட்டுமாக இல்லாமல் மொத்த இந்திய டீமையும் பந்தாட வகை பார்த்தது.

வாளெடுத்தவனுக்கு வாளால் வருமாம் சாவு….அப்படியானால் பிள்ளையை தூக்குவேன்னு சொன்னவனுக்கு என்ன வருமாம்???? அதுதான் வந்தது …..பட் கொஞ்சம் லேட்டா….டைம் எடுத்து வெல் ப்ளான்டா….

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 17

One comment

  1. 😁😁😁 awesome Aran….patukuti Prabhu…😍sweet Suga ..😉adavadi anavardhan 🤣🤣🤣😘😘😘😘😘aweo awesome ud👏👏👏ka..❤️

Leave a Reply