நனைகின்றது நதியின் கரை 16(7)

“ஏய் நில்லுடி….” வல்லராஜன் தான்.

நெஞ்சில் கொதித்துக் கொண்டு எழுந்த கட்டுக்கடங்கா காட்டுத் தீ கோபத்தை கண்களை மூடி எச்சில் விழுங்கி எப்படியெல்லாமோ கட்டுபடுத்த முயன்றாள் இவள்.

“மயிலே மயிலேன்னா இறகு போடாதாம்….அதை பிடிச்சு வச்சு பிடுங்கனுமாம்…..பொட்ட கழுத எவ்ளவு திமிரு….சொல்லிக்கிட்டே இருக்கேன்…..”

இவளின் முப்பது கைகளை மானசீகமாக பார்க்க முடிந்தது அவளால். எதிரில் சுவரில் அலங்காரத்திற்காக வைக்கப்படிருந்த இரு வாள்களும் கேடயமும் நேர் பார்வையில். கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

இவள் வாளை தூக்கி அடிச்சுட்டான்னா நாளைக்கு ஜோனத் தலைய உருட்டாத பத்திரிக்கை இருக்காது. அதுல இவள் பக்க நியாயத்தை சொல்றேன்னு வல்லராஜன் மிரட்டலை வெளியே சொன்னா சுகா மேல கிரிமினல் கேஸாகி, அரெஸ்ட் அது இதுன்னு  போய்……அவள் அம்னீஷியாவ பைத்தியம் அது இது என ப்ரகடனபடுத்தி அவள பாடா படுத்திடும் சட்டம். அதோட அவள் பாம் வைக்கலைனு ப்ரூவ் பண்ற கட்டாயம் அவள் மேல விழுந்துடும்….அது சுகா அரண் ஜோனத் திரியேகன் என அனைவருக்கும் கொடுமை…. இவளால் அதை தாங்க முடியாது….ஹயா நிலையை நினைக்கவே முடியலை…. அத்தனை பேருக்கும் டார்ச்சர்….எல்லாத்துக்கும் மேல இவள் இப்ப வாளால போடுற போடுல இந்த கிழம் செத்துப் போய்ட்டுன்னா….??? ஜோனத்தை விட்டுட்டு நான் ஜெயில்ல போய் உட்கார்ந்திருக்கனும்…..

“நீ அந்த அரண் டைரிய விக்க பார்த்தியே….அதுக்கு அந்த பிபுள் ரிப்போர்ட்டர் நம்பர் நம்ம ஆஃபீஸ்ல கேட்டுதான் வாங்கின…..அப்பவே அந்த பையனை ட்ரேஸ் பண்ணி எல்லா டீட்டெய்லும் வாங்கிட்டேன்……அன்னைக்கு நீ  வெறும் ரிப்போர்ட்டர்….ஆனா இன்னைக்கு கிரிகெட்டர் ப்ராபாத்தோட பொண்டாட்டி…. ப்ரபாத் வைஃப் அரண் சுகவிதாவோட அந்தரங்க ஃபோட்டோஸ் மற்றும் செய்திகளை விலை பேசினாள்னு இன்னைக்கு நைட் எவிடென்ஸோட சேனல்ல கொடுப்பேன்….ஒழுங்கா சுகவிதாதான் பாம்ப்ளாஸ்ட் செய்தான்னு சொல்லிடு…” வல்ல ராஜன் என்ற ஓநாய் தன் கோரப் பல்லைக் காண்பிக்கிறது.

இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டாள். அந்த வாளை எடுக்காட்டாலும் அந்த கேடயத்த எடுத்து அந்தாளு தலைல அடிச்சே ஆகனும்…..30 கைகளும் கெஞ்ச கடகடவென்று வாசலைத் தாண்டி நடந்தாள். இப்பவே ஜோனத்தை எவ்ளவு கேவலப் படுத்தப் போறானோ இந்த நாய்….அதுல இது வேறயா?

மனமெங்கும் உலைகளம். எப்படிப் பார்த்தாலும் சுகா பாம்ப்ளாஸ்ட் செய்ததாக இவள் மீடியாவில் சொல்வதை விட இந்த டைரி விஷயம் வெளிவருவதன் வலி குறைவு தான்.  டைரிவிஷயம் ஜோனத் அரண் சுகவிதா அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்காக அவர்கள் இவளை மன்னித்த ஒன்றும் தான். ஆக இந்த செய்தியால் அவர்களுக்குள் உறவு நிலை பாதிக்கப் பட போவதில்லை. அதனால் இதற்காக பாம்ப்ளாஸ்ட் கதையை சொல்லி ஹயா உட்பட அனைவரையும் வதைக்க  இவளால் முடியாது…… ஆனாலும் இவள் செய்த அந்த டைரி காரியத்தால் இப்பொழுது உருளப் போவது இவளது ஜோனத்தின் தலை….

மனம் குமுறிக் கொண்டு வருகிறது. வல்லராஜன் கையில் ஆதாரம் இருக்கும் போது அவனை தடுக்க யாராலும் முடியாது என்பது இவள் அறிந்த விஷயம்….அதோடு அவன் சொல்லுக்கு ஆடாத கோபத்தில் பழி வாங்கும் வெறியும் இருக்கும் இப்போது…..

தாங்கவே முடியவில்லை…..ஐயோ ஜோனத் உனக்கு நான் என்ன செய்து வச்சுறுக்கேன்….. காரில் ஏறி அமர்ந்தவள் வீடு வந்தாள் புயல் செயல் மழை வரும் முந்திய வானம் போன்ற முகத்துடன்.

அரண் வீட்டில்  தன் அறைக்குள் சென்று விழுந்தாள். மறக்காமல் கதவை உள்ளே பூட்டிக் கொண்டாள்.

எங்கும் செல்லாமல் நினைவு ‘ஐயோ அவனுக்கு நான் என்ன செய்து வச்சுறுக்கேன்….’.லேயே தட்டாமாலை சுற்றுகிறது. வல்லராஜனிடம் பேசும் முன் ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் மொபைலை….. அது அங்குள்ள சட்டம்…அதற்காக ஆஃப் செய்த மொபைலை எடுத்து வந்தாளா என ஒரு சந்தேகம் வருகிறது இப்போது.

அதை வைத்து அந்த ஓநாய் என்ன செய்யுமோ? அவசரமாக தேடுகிறாள். அது அவள் பேக்கில் தான். ஆன் செய்து வைக்கவும் ஜோனத்தின் எண்ணிலிருந்து அழைப்பு.

இணைப்பை ஏற்றவள் கதறிவிட்டாள். வார்த்தை என்றோ பேச்சென்றோ எதுவுமில்லை…. வார்த்தையற்ற கதறல். எதிர் முனையில் அவன் என்ன பேசுகிறான் என்பது மட்டுமல்ல அவன் பேசுகிறான் என்பது கூட அவளுக்கு உறைக்கவே இல்லை…. எவ்வளவு நேரமோ? அதற்கு மேல் அழவே தெம்பு இல்லாமல், தொண்டை கட்டி கேவல்களாய் இவள் அடங்கும் போது கதவில் ஒரு சத்தம். திரும்பிப் பார்க்கிறாள் கதவின் பூட்டுப் பகுதியை கழற்றி எடுத்துக் கொண்டு உள்ளே வந்தது அனவரதன்.

“நீயும் எனக்கு சுகி மாதிரிதான்மா….பொம்ளபிள்ள இப்டி தனியா கிடந்து அழுதுகிட்டு இருக்றப்ப வெளிய அப்டி சும்மா நிக்க முடியல….“

இவள் கதறல் சத்தம் நிச்சயம் வெளியே கேட்டிறுக்கும் தான். அவசரமாக எழுந்து உட்கார்ந்தாள்.

“ஒரு அப்பாவா என் பொண்ண பாதுகாக்கனும்கிற வெறி எனக்கு எப்பவும் இருக்கும்…..….நீ என் பொண்ண  மீடியால போட்டுக் கொடுப்பேன்……ஒழுங்கா அதுக்கு நீயே உதவி பண்ணுனு மிரட்டலா சொல்லிகிட்டு வந்து நின்னப்ப உன் மேல எனக்கு கடும் கோபம்..…அதனால நான் உன்ட்ட அதுக்கேத்த மாதிரி நடந்துட்டு இருப்பேன்…..அத வச்சுகிட்டு என்னை யோசிக்காத…..எப்ப என் பிள்ள, மாப்பிள்ள பத்தி பேசி புரிய வச்சியோ அப்பவே எனக்கு உன் மேல இருந்த எல்லா கோபமும் போய்ட்டு….நீ முன்ன பேசுனதுக்கும் நான் பேசுனதுக்கும் சரிக்கு சரியா போச்சுனு விட்டுட்டேன்……உனக்கு நான் உன்ட்ட மன்னிப்பு கேட்டாதான்  சரியா படும்னா கேட்டுர்றேன்…..மன்னிச்சுக்கோ…”

“அது….நான் செய்ததும் தப்புதான…..சாரி…” திக்கி திணறி இவள்.

“இப்ப விஷயம் என்னனு சொல்லு……நீ அந்த வல்லராஜன பார்க்கப் போயிருக்கன்னு சுகி சொல்லிட்டுப் போனா…. மாப்ளயும் அவளும் ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க……உனக்காகத்தான் நானும் புஷ்பமும் இங்க உட்கார்ந்துட்டு இருக்கோம்….அந்த ப்ரபா பையன் ரொம்ப பொறுமை சாலிதான்….. சின்ன வயசுலயே சுகி படுத்துன பாடுக்கெல்லாம் தாங்கிட்டு போவான்தான் அவன்……ஆனாலும் அவன்ட்ட இங்க இருந்து இவ்ளவு அழுதன்னா பாவம் அவன் என்ன செய்வான்னு சொல்லு….? “

எது என்று தெரியவில்லை….ஒரு பெரிய ஸ்க்ரூட்ரைவருடம் கழற்றிய பூட்டுமாய் அவர் நின்ற கோலமா…..அவரது CEO பெர்ஃபெக்க்ஷன்  ட்ரெஸ் கோட்….சதர்ன் டின்ச் தமிழ் என்ற காம்பினேஷனா…..சுகா மேலுள்ள முரட்டுத்தன பாசமும் அதை முகத்தில் தட்டெறிந்து வெளிப்படுத்தும் முரணா…..விவரம் தெரிந்த காலத்திலிருந்து வெறுத்து பழகிய ஒரு குடும்பத்தை தன் பக்கம் நியாயமில்லை என்ற ஒரே உணர்வில் ஏற்றுக் கோண்ட செயலா….எதுவோ….எல்லாமேவோ…..வல்லராஜனை வழிக்கு கொண்டு வர இவர்தான் சரியான நபர் என தோன்றிவிட்டது அவளுக்கு…..

உள்ளூர உதறினாலும் கடகடவென சொல்ல வேண்டிய அனைத்தையும் சொன்னாள்……

அடுத்த பக்கம்