நனைகின்றது நதியின் கரை 16(6)

“50 க்ரோர்ஸ்னு சொல்றேன்…..” அத்தனை நம்பிக்கை அவர் குரலில் இவள் மறுக்க மாட்டாள் என. ஒரு காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் அது தான் பாதுகாப்பான வாழ்வை தரும் என இவள் நினைத்தது உண்டுதான். அது ஒரு வகையில் அவளுள் ஒரு வெறியாக இருந்தது என கூட சொல்லலாம். ஆனால் அது கடந்த காலம்.

இன்று இவள் உடனிருந்து பார்க்கும் அரணுக்கோ, சுகவிதாவுக்கோ, அனவரதனுக்கோ திரியேகனுக்கோ பணம் ஒன்றும் பாதுகாப்பை தந்ததாக தெரியவில்லையே….இன்ஃபாக்ட் அவங்களோட முக்கிய ப்ரச்சனை, கஷ்டம் எல்லாத்துக்கும் காரணமாத்தான் அந்த பணம் இருந்திருக்குது….

திரியேகன் அனவரதன் டக் ஆஃப் வாராகட்டும், அந்த மன்யத் சுகாவை மிரட்டிய விஷயமாகட்டும், அரணை சுகா ஆரம்பத்தில் வெறுத்து அதனால் இரு குடும்பத்திற்குள் வந்த குழப்பம், வேதனை, வலி அந்த ஆக்சிடெண்ட் எல்லாவற்றிற்கும் அடிப்படையான அனவரதனின் திரியேகன் மீதான பொறாமையாகட்டும், பணம் தானே காரணம்.

அதே நேரம் அவர்கள் அனைவரும் அனுபவிக்கும் சந்தோஷமும் பாதுகாப்பு உணர்வும் கடவுள் நம்பிக்கைக்கு அடுத்தபடியாய் பாசத்தினாலும் காதலினாலும் சகோதர சினேகமாகிய நட்பினாலும் உண்டானதல்லவா….?

பண ஆசை என்றோ எங்கோ பறந்து போய் இருந்தது இவளுள்.

இப்பொழுதோ இவளுள் வரும் கோபத்திற்கு அருகிலிருக்கும் இரும்பு நாற்காலியைத் தூக்கி நச்சென இவர் நடுமண்டையில் போட்டால் என்னவாம் என்று இருக்கிறது…. ஆனாலும் அதை வச்சும் கிரிகெட்டர் ப்ரபாத் வைஃப் என் மண்டைய உடச்சுட்டான்னு நியூஸ் போடும் இந்த கிழம்…..தேவையில்லாம என் ஜோனத்துக்கு பிரச்சனை….

“நான் வந்தது ரெசிக்நேஷன் கொடுக்க….அதப் பத்தி பேசுறதுன்னா பேசுங்க…..இல்லனா இந்த லெட்டர் மட்டும் போதும்னா அக்செப்ட் செய்துக்கோங்க…கிளம்புறேன்….” முதல் முறையாக தன் முழுக் கோபத்தையும் அடக்கிக் கொண்டு எழுந்துவிட்டாள்.

“ஹேய் 50 க்ரோர்ஸ்னு சொல்றேன்…..அந்த ப்ரபாத் சரியான நரி… எதுக்காக உன் கூட வெட்டிங் டிராமா போட்றுகான்னு தெரியலை….ஆனா நீ பணத்துக்காக தான ஒத்துட்டுறுப்ப…..? எப்படியும் அவனால இந்த அளவு அம்வண்ட்லாம் தர முடியாது…..அவன் இதுவரைக்கும் சம்பாதிச்சுருக்கதே இவ்ளவு பக்கத்துலதான் இருக்கும்….”

“எங்களோடது ரியல் வெட்டிங்…. என் ஹஸ்பண்டை என் முன்னால மரியாதையா பேசனும்…” மூச்சை இழுத்துப் பிடித்து தன்னை அடக்கி….அந்த ச்சேரை நோக்கி ஓடும் கைகளை நிறுத்தி… உள்ளுக்குள் பெரும் போராட்டத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பியவள் வாசலை நோக்கி திரும்ப

“ஓ…ஓகே சாரி…..உட்கார் சங்கல்யா உனக்கு பிடிக்காத மாதிரி பேசலை” என இறங்கி வந்தார் வல்ல ராஜன்.

உட்காரவில்லை அவள். ஆனால் நகரவும் இல்லாமல் அவர் புறம் நோக்கி திரும்பி அவர் முகம் பார்த்தாள். இந்த நரியோட திட்டம் என்னன்னு முழுசா தெரிஞ்சுகிறது நல்லது என்று சொன்ன அறிவு அதற்கு காரணம்.

“சோ உங்க வெட்டிங் உண்மை….இப்ப உன் ஹஸ்பண்ட் கைல 50 க்ரோர்ஸ் இருக்குன்னு  வச்சுக்கலாம்…..உன் கைலயும் அவ்ளவு பணம் இருந்தா நல்லதுதான….அதோட வெறும் கையா புகுந்த வீட்டுக்கு அதுவும் இந்த பணக்கார புகுந்த வீட்டுக்கு போய் நிக்றதுல என்ன மரியாதை இருக்கும் உனக்கு?…. 50 சி ன்ட்றப்ப உன் ஹஸ்பண்டே சரின்னு தான் சொல்வான்…ங்க… யாரு தன் ஃப்ரெண்டுக்காக இவ்ளவு பெரிய அமவ்ண்ட விட்டு கொடுப்பான்…? “

“என் ஹஸ்பண்ட் அவங்க ஃப்ரெண்ட் எல்லோருமே பணத்த விட்டுகொடுப்பாங்க….” அத்தனை உணர்ச்சிகளையும் அடைத்துப் போட்டு எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத குரலில் இவள். ‘சீக்கிரமா விஷயத்துக்கு வா நாயே’ என அலறுகிறது மனம்.

“நல்லாத்தான் ஏமாத்தி வச்சுறுக்காங்க உன்ன….சரி விடு….காதல்.. கல்யாணம்னு ஏதோ சொல்ற….50 பத்தலைனா  100 க்கு வழி பண்றேன்….நீ இன்டர்வியூ கொடுத்துட்டு வீட்ல போய் உன் ஹஸ்பண்ட்ட என்னை மிரட்டினாங்க அதான் உண்மைய சொல்லிட்டேன்…..அப்டி இப்டின்னு ஏதோ சொல்லி சமாளிச்சுக்கோ….நாடகம்தான் நல்லா போடுவியே…..பணத்த இப்ப கண்ல காமிக்காத….எதாவது ப்ராப்டியா வாங்கி போடு….பின்னால பரம்பர சொத்து அப்படி வந்துச்சு இப்படின்னு எதாவது சொல்லிகிடலாம்….” இன்னும் பணத்திலேயே நின்றான் அவன்.

“எனக்கு தெரிஞ்சு உங்கட்டயே இந்த 100 சி லாம் கிடையாது சார் …..ஏமார்றதுக்கு வேற ஆளப் பாருங்க…” தூண்டிலை தூக்கிப் போட்டாள். வா வந்து கவ்வு….இதுக்கு பின்னால யாருன்னு உண்மைய கக்கு.

“ஓ அதுதானா விஷயம்….? உண்மைதான் என்ட்ட கிடையாது….பட் அரண் ஃபேக்ட்ரி ஃபுல்லி இன்ஷூர்ட்….அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி இப்ப 200 சி அரண் க்ரூப்ஸுக்கு கொடுக்கனும்….பட் பாம் வச்சதே அவனோட வைஃப் தான் அப்படின்னு வர்றப்ப சூசைட்டுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் கிடையாதுன்ற மாதிரி அந்த பேங்க் இந்த அமவ்ண்ட கொடுக்க தேவை இல்லாம போய்டும்…..அதான்…200 க்கு 100 ல மேட்டர் செட்டிலானாலும் 100சி லாபம் தானே அவனுக்கு….அதான் உன்னை கூப்பிட்டேன்….”

சங்கல்யாவுக்கு எதோ பலமாக நெருடுகிறது. சட்டென உறைக்கிறது.

சுகா அனவரதன் போன்ற பிஸினெஸ் பேக்ரவ்ண்ட் பீபுளுக்கு கம்பெனி இன்ஷூர் ஆகி இருக்கும்னு கூடவா தெரியாது….? இவ்ளவு ப்ளான் பண்ணவங்க……ஃபினான்ஸியல் லாஸ் மட்டும் இருக்கனும்னு எய்ம் செய்தவங்க குறஞ்ச பச்சம் இதை கூடவா விசாரிச்சு இருக்க மாட்டாங்க….?

சுகாவின்  ‘200க்ரோர்ஸ் லாஸாம்’ என்ற சந்தோஷ அறிவிப்பு இப்பொழுதும் மனதினுள் கேட்கிறது இவளுக்கு. 200க்ரோர்ஸ் லாஸ்தான் முக்கியம்னு நினைச்சுட்டு இதை எப்படி கோட்டை விடுவாங்க? ‘200 க்ரோ….ர்…..ஸ்…’ இதுல தான் இருக்கு நெருடலுக்கான பதில்.

“மில்லியன்ஸ்ல ஏர்ன் செய்தாலும் நானும் உங்கள மாதிரி சாதாரண பொண்ணு….” சுகாவின் குரலே பதிலாக இவள் மனதில்.

புரிந்துவிட்டது…. சுகா அனவரதன் இருவருமே நிரபிராதி. இது அதை தாண்டின ப்ளாட். மனதிற்குள் அத்தனை நிம்மதி இப்பொழுது. ‘ஓ மை காட் நத்திங் வென்ட் ராங்…..சுகா அரண் அண்ணா எல்லோரும் சேஃப்….’

சுகா பிறந்தது 5த் வரை படித்தது எல்லாம் யு எஸ்ஸில்….அவள் க்ரோர்ஸுன்னு சொல்ல மாட்டா….மில்லியன்ஸ்தான் அவளோட டெர்மினாலஜி….ஜோனத்தும் பேசும் போது க்ரோர்ஸ்னு சொல்றதில்லை….மில்லியன்ஸ் தான்… ஆக அங்கு நின்றது சுகா தான். இவள் காதில் விழுந்த குரல்தான் வேறு யாருடையதோ?

வாய்ஸ் ரிக்கார்டர்ல இருந்து ப்ளே செய்துறுக்கனும்…..சுகா க்ளாஸ் ஹவுஸ்ல இருந்து பேசுன சவ்ண்ட் வெளிய வந்திறுக்காது……இங்க இவள் காது கேட்க சுகா குரல்ல இப்படி ஒரு செட் அப். இவட்ட சுகாவ மோசமானவன்னு ஏன் ப்ரூவ் பண்ணனும்.? ஓ இங்க இப்படி வல்லராஜன் இன்டர்வியூ கொடுக்க சொல்றப்ப கொடுக்றதுக்கா? அப்படின்னா இந்த இன்டர்வியூக்காக தான் அந்த பாம்ப்ளாஸ்ட்டேவா? முழுசா நம்ப முடியலை……ஆனா சுகாவ யாரோ டார்கட் செய்றாங்க….பட் ஃபார் வாட்…? எது எப்படியோ இது எல்லாத்தையும் வீட்ல போய் கவனிச்சுகலாம்…

மனதின் கண்டு பிடிப்பு எதையும் வெளிக் காட்டாமல் “சோ காசுக்கு வழி இருக்குன்னு சொல்றீங்க….பட் எனக்கு இதுல இஷ்டம் இல்ல….” கையில் வைத்திருந்த ரெசிக்னேஷன் லெட்டரை டேபிள் மீது வைத்துவிட்டு “இன்னொரு தடவை என்னை எதுக்காக கான்டாக்ட் செய்தாலும் நான் லீகல் ஆக்க்ஷன் எடுப்பேன்…” என்று விட்டு திரும்பி நடந்தாள்.

வாசலை அடைந்திருப்பாள்.

அடுத்த பக்கம்