நனைகின்றது நதியின் கரை 16(4)

மறுநாள் பகலில் கூட இவளை எங்கு செல்லவும் அனுமதிக்கவில்லை சுகா அண்ட் கோ….”நேத்து பகல் முழுக்க மயக்கம்….நைட்டும் சரியா தூங்கலை…சோ ரெஸ்ட் எடு…” இப்படி சொல்லியே இவளை அறைக்குள் சிறை செய்தனர். இந்த அழகில் காலையிலேயே அந்த வல்லராஜன் வேறு கால் செய்து வைத்தார்.

“என்னமா ரெசிக்நேஷன் கொடுக்க இன்னைக்கு வர்றியா..?”

“இல்ல சார்….இன்னைக்கு முடியாது….நாளைக்கு பார்க்கலாம்…”

“எனக்கு தெரியும் சங்கல்யா….யூ ஆர் வெரி ஆம்பிஷியஸ்…பேமெண்ட் ஹெவின்னு சொன்னதும் நீ அந்த ப்ராஜக்டை ஏத்துப்பன்னு தெரியும்….அந்த ப்ராஜக்டுக்கு நீ தான் ஃபெர்ஃபெக்ட் ஃபிட்….நேர்ல வா பேக்கேஜ் பேசிக்கலாம்…..அதை ஹைக் பண்றதுக்காக நீ இப்டி ஒன்னும் ரெசிக்நேஷன் அது இதுன்னு இழுத்தடிக்க வேண்டாம்….. நீ எதிர் பார்க்றதவிட பேமண்ட் ரொம்பவே அதிகம்..”

எரிச்சல் ஏறி எள்ளும் கொள்ளுமாய் வெடிக்கிறது அவளுள். இந்த லூஸ் கான்டாக்டை முதல்ல கட் பண்ணனும்.

“சார் சும்மா கற்பனை வளக்காதீங்க….நான் நாளைக்கே வந்து ரெசிக்நேஷன் சப்மிட் செய்றேன்” இணைப்பை துண்டித்தாள்.

அடுத்து இவள் இணைப்பை ஏற்கவில்லை என்ற போதும் அவர் அவ்வப்போது அழைத்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது ஜோனத்திடம் இருந்து அழைப்பு. சென்று சேர்ந்த தகவலை சொல்ல அவன் அழைத்தான். பேசுவது அவன் என தெரிந்ததும் புஷ்பம் வெளியே போனார்.

இருந்த அத்தனை சூழலுக்கும் அவனிடம் புலம்பித் தள்ளிவிட்டாள். அதோடு சுகா அனவரதனை தன் திட்டத்திற்கு உள்ளிளுக்கிறாள் எனில் இவள் ஜோனத்தை இழுக்க மாட்டாளாமா?

“நீங்க என்னை என்னமோ ஃப்ரீபேர்ட் னு சொல்லிட்டு போனீங்க…..எனக்கு இங்க ப்ரிசன்ல இருக்க மாதிரி இருக்குது…..” என தொடங்கி திருடன் வந்த கதை, புஷ்பம் உடன் தங்கிய செயலை சொல்லி முடித்தாள். அது சுகவி அனவரதனின் எதற்கான நாடகம் என்பதை பற்றி மட்டும் குறிப்பிடவில்லை.

இவள் சதி செய்கிறாள் என நினைப்பான் என இப்போது தோணவில்லைதான். ஆனாலும் சாலிட் ஆதாரம் இல்லாமல் அதை சொல்ல தயக்கமாய் இருக்கிறது….அதோட நாளைக்கு அவனுக்கு மேட்ச்…. இருக்ற ப்ரச்சனைல விடை கிடைக்குமான்னு தெரியாத இந்த தலைவலி வேற எதுக்கு அவனுக்கு….? அவ்ளவு தூரத்துல இருந்து அவன் என்ன செய்துட முடியும் இதில்?

“ரெசிக்னேஷன் கொடுக்க கூட வெளிய போக விடமட்டேன்றாங்க….அந்த வல்லராஜன்  வேற மொட்ட பிளேடு போட்டு கழுத்த அறுக்காரு…..”

“தப்பா எடுத்துக்காத சிக்‌ஸர், அவங்க எல்லோரும் உன் சேஃப்டிகாக யோசிக்காங்க….இப்ப ஹாஸ்பிட்டல்ல வச்சு பார்த்தப்ப அனவரதன் அங்கிள் அரண்ட்ட திரியேகன் அங்கிள்ட்டலாம் பேசிட்டாலும் கூட வீட்டுக்கு கூப்டதுக்கு மழுப்பிட்டாங்க… வரலை..…இப்ப உனக்குன்னதும் வந்திருக்காங்க பாரு…..தே கேர் ஃபார் யூ… அனவரதன் அங்கிள் அவங்க ஆப்பொனென்ட்ட மட்டும் தான் rude….மத்தபடி ரொம்ப கேரிங் பெர்சன்….ஸ்டில்  நீ கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ற மாதிரி எல்லாம் செய்து தர்றேன்…கொஞ்சம் வெயிட் பண்ணு….. சேம் டைம் கேர்ஃபுல்லா இரு…”

அவன் சொல்ல இவளுக்கு போடா என்றிருந்தது. ‘ஆமா எவ்ளவு கேர் எடுக்காங்க தெரியுமா….சொந்த மகளோட ஃபேக்ட்ரி….நாளைக்கு இவங்க பேத்திக்குன்னு வரப்போற  ஃபேக்ட்ரி அதுக்கு பாம் செட் செய்துட்டு அலையுறவங்க கேர் எடுத்துட்டாலும்…’

கால் முடிந்து வெளியே எட்டிப் பார்த்தால் “ஏம்மா லியாவ தனியா விட்டுட்டு வந்தீங்க….? பாவம் அந்த பால்பாக்கெட்டும் இல்லாம….இப்படின்றப்ப….பயந்து போய் இருப்பா…..நீங்க கூடவே இருங்கம்மா” என சுகா சொல்லிக் கொண்டிருந்தாள் தன் அம்மாவிடம்.

சோ புஷ்பத்திற்கு விஷயம் தெரியாது என்பது கன்ஃபார்ம்ட்…. இவள் மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

இதற்குள் அரண் இவளைத் தேடி வந்தான். “இப்போ ரெஸ்ட் எடு லியா….ஆஃப்டர் நூன் உன் ஆஃபீஸ் போய்ட்டு வா…..” என தொடங்கியவன் “உன்ன பிடிச்சு அடச்சு வச்சுறுக்க மாதிரி ஃபீல் பண்ணிட்டியோ….” என்றான்.

‘டேய் ஜோனத் இப்டியாடா போட்டுக் கொடுப்ப…’ மனதிற்குள் கணவனை சின்னதாக திட்டிக் கொண்டே அரணிடம் அசடு வழிந்தாள். எந்த வகையிலும் அரண் மனதை நோகடிக்க விருப்பமில்லை இவளுக்கு “ அப்டி கொஞ்சம்….அவங்க அப்படியா சொன்னாங்க…?’

“யாரு ப்ரபுவா…? அவன் சொல்லித்தான் இது தெரியனுமா….அவன் எதுக்கு எதை சொல்றான்னு எனக்கும் தெரியும்…அது எனக்கு புரிஞ்சிடும்னு அவனுக்கும் தெரியும்…. பைதவே சுகா ஃபோபியா பத்தி உனக்கு தெரியும் தானே……அப்படி எல்லாத்துக்கும் பயப்படுற குழந்தைய வளர்த்த பேரண்ட்ஸ் பொதுவா பொண்ணுங்களை டென்டரா ஹேண்டில் செய்ய தான ட்ரை பண்ணுவாங்க….அதான் உன்ட்ட அங்கிளும் auntyயும் இப்படி பிஹேவ் செய்றாங்க ….நீ முன்னால அங்கிளை த்ரெட் பண்ணின மாதிரி அங்கிளுக்கு ஃபீல் ஆகிருக்குமில்லையா அதான் முன்னால உன்ட்ட ஹார்ஷா அங்கிள் பிகேவ் செய்திறுப்பாங்களே தவிர கேர்ள்ஸ்ட்ட அவங்க பொதுவா பயங்கர சாஃப்ட்டா தான் மூவ் பண்ணுவாங்க….. நீ உன்னை சப்ரஸ் செய்ற மாதிரி எடுத்துகாத….அதோட இது மாதிரி இன்சிடென்டுக்கு பிறகு பொதுவா எல்லோருக்கும் பக்கத்துல யாரவது இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்….அதான் நானும் சரின்னு நினச்சேன்….”

மன்னிப்பும் விளக்குமுமாய் ஒரு தொனி அவன் குரலில். இவளை கஷ்டபடுத்தி விட்டதாய் நினைக்கிறான்.

“ஐயோ நான் அப்டில்லாம் எதுவும் உங்களை …… நீங்க எதுவும் என்னை கஷ்ட படுத்திட்டதா நினச்சுடாதீங்கண்ணா……” தவிப்பு வந்திருந்தது இவள் முகத்தில். “ சாரி….இனி எதுனாலும் உங்கட்ட நேர்ல கேட்டுடுறேன்….ஜோனத் வழியா வரப் போய் தான உங்களுக்கு ரொம்ப பெருசா ஃபீல் ஆகுது…”

”இல்ல அப்டில்லாம் நினைக்கலை…. ப்ரச்சனைனதும் நீ அவன்ட்ட சொல்லனும்னு நினைக்கிறதுதான் இயல்பு…. பட் எதாவது எமேர்ஜென்சின்னா அவன்ட்ட பேச முடியுற வரைக்கும் வெயிட் பண்ணாம என்னை கூப்டனும் ஓகேவா…..அவன் தூரத்துல இருக்றான் பார்த்தியா…”

ஆமான்ன….கஷ்டம்னதும் அவன்ட்ட தான சொல்லனும்னு தோணுது…என ஒரு தாட் மைன்டை கிராஸ் செய்தாலும் எதிரிலிருக்கும் அரணிடம் தலையை ஆட்டி வைத்தாள்.

அடுத்த பக்கம்