நனைகின்றது நதியின் கரை 16(3)

அதோடு அவன் சொன்னது போல் அவன் மீது அதற்கு முன்பாக காதலே இருந்திருந்தாலும் அவனது இந்த உரிமைக்கும் ஆசைக்கும் அவளது மனம் ஒத்துக் கொள்வது என்பது நிச்சயமாய் இந்த கல்யாண காரியத்தால் தான்……ஒரு வேளை அவன் சொல்றது போல் ட்யூ டு திஸ் வெட்டிங் இவள் மைன்ட் அவனுக்கு பேவராத்தான் இனி நடந்துக்குமோ..….நாளைப் பின்ன எந்த ப்ரச்சனை வந்தாலும் அவனுக்கு எதிரா எதையும் செய்ய மாட்டாளோ?

‘அப்ப அந்த பன்னீர் செல்வம் இவ அம்மாவை விட்டுட்டுப் போனாரே…..அவங்களுக்கும்தான் கல்யாணம் நடந்திருந்துது’ இவள் மனதில் இப்படி ஒரு கேள்வி ஓடியது.

இறங்க எத்தனித்தவன் இவள் புறமாக திரும்பி “அப்ப மேரேஜுக்கு பிறகு டிவோர்ஸ் செய்றவங்கல்லாம்னு யோசிக்றியா….? அவங்க யாரும் தன் ஸ்பவ்ஸோட அம்மா குட் ஹெல்த்ல இருக்றப்பதான் டிவோர்ஸ் செய்யனும்னு உன்னை மாதிரி வெயிட் பண்றவங்க இல்ல… உன்ட்ட அன்பு இருக்குது….அதுவும் உன் ஹஸ்பண்ட் மேல…. மேரேஜ்ல இருக்ற லவ்….அ ரைட்லி ப்ளேஸ்ட் ஒன்….தட் லவ் ஹோல்ட்ஸ் அண்ட் ஹீல்ஸ்…..பட் நெவர் ஹர்ட்ஸ்….”

கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்திருந்தாள். மீண்டுமாய் மென்மையாய் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்….”மனச போட்டு குழப்பிகாத….நான் திரும்ப வர்றப்ப என்னை ரிசீவ் பண்ண நீ தான் வருவ….பை…” என்றுவிட்டு கதவை திறந்து இறங்கினான்.

“டேக் கேர் ஜோனத்…..ஆல் த பெஸ்ட்” மனதிற்குள் மட்டுமாய் சொல்லிக் கொண்டாள்.

“யூ டூ ஸ்வீட் ஹார்ட்…தேங்க்யூ பொண்டாட்டி” அவள் சொன்னது காதில் விழுந்தது போல் பதில் சொன்னவன் கிளம்பிவிட்டான்.

இரவு அரண் வீட்டில் தன்னறையில் படுத்திருந்த சங்கல்யாவுக்கு தூக்கம் வரவில்லை. ஜோனத்தையும் இவளையுமாக பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த உறவில் இவள் என்ன செய்ய வேண்டும்?

முதன் முதலில் அவனைப் பார்த்த அந்த நாள் ஞாபகம். அதற்கும் முன்பாகவே அவன் ஃபோடோஸைப் பார்த்திருக்கிறாள்….. ஏனோ முதல் முறை அவன் புகைப்படத்தை பார்க்கும் போதே அவன் ஏற்கனவே அறிமுகமானவன் என்பது போல் ஒரு உணர்வு வந்தது. பின்னாளில் அவன் அன்பரசியின் மகன் என தெரிய வந்த போது தன் அம்மாவின் சாயல் ஏதாவது அவனுக்கு இருக்கும் அதனால் அப்படி உணர்ந்திருப்பாளாயிருக்கும் என அவள் காரணப் படுத்திக் கொண்டது உண்டு.

ஆனாலும் முன்பு அவனைப் பற்றி நினைக்கும் போதே வரும் ஒருவித இனம் புரியா சிறு டென்ஷனுக்கு என்ன காரணமோ? அடுத்தும் வல்லராஜன் அரண் சுகா ப்ராஜக்டை இவளிடம் சொன்னதும் அவள் அரணை விட ஜோனத்தை எண்ணித்தான் மிரண்டாள். ஏனோ அவனை எளிதாய் ஹேண்டில் செய்ய முடியாது என்பது போல்….அவனிடம் அவள் மாட்டிக் கொள்வாள் என்பது போல்…..அவனிடம் அவளுக்கு பயம் உண்டு. எவனை சந்திக்க கூடாது என நினைத்தாளோ அவனிடமே கொண்டு நிறுத்தினார் அனவரதன்.

அவள் பயந்தது நடந்தே விட்டது. அவள் நினைத்த வகையில் இல்லை எனினும் அவனிடம் மாட்டிக் கொண்டாயிற்று…..அவனை கையாளவும் தெரியவில்லை….இதில் எதிர் பார்க்காத ஒரே விஷயம் அவளிடம் அவனும் மாட்டிக் கொண்டதுதான்……ஏனோ இந்த நினைவில் இதுவரை வராத புன்னகை உதடில் பிறக்க அவன் அணிவித்த அந்த செயினை தன் கழுத்தை தடவி தேடி எடுத்து,  தூக்கிப் பிடித்துப் பார்த்தாள்.

இவள் எண்ணம் இப்படி ஓடிக் கொண்டிருக்க இவளது அறைக் கதவு சத்தமின்றி மெல்ல திறக்கிறது. ஒரு மென் வெளிச்சம் உள்ளே பரவுகிறது. வெளியே லாஞ்சில் லைட் எரிகிறது போலும். தூங்குபவள் போல் அசையாமல் படுத்துக் கொண்டாள் இவள். அந்த மெல்லிய வெளிச்சத்திலும் உள்ளே எட்டிப் பார்ப்பது சுகவிதா என தெரிகிறது.

சுகா அரணுடன் தங்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதைப் பார்த்துவிட்டுதான் வந்திருந்தாள் இவள்.

சற்று நேரம் நின்று பார்த்து இவள் தூங்குவதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் திரும்பிச் சென்றாள் சுகவிதா….பகலில் மயக்கத்திலிருந்ததால் இரவில் கதவை உள்ளே பூட்டாதே என இவளிடம் சொல்லி இருந்ததும் சுகாதான்…..எதற்கு இவளைக் கண்காணிக்கவா? அவள் சென்ற சற்று நேரத்தில் இவள் மெல்ல வெளியே சென்று தேடினாள்….அரண் சுகா அறை பூட்டி இருந்தது….லைட்டும் ஆஃப்…..சுகாவை வெளியில் எங்கும் காணவில்லை.

ஆக படுக்க சென்றுவிட்டாள் என்ற முடிவுடன் இவள் படுக்க வேண்டியதாயிற்று.

எப்பொழுது தூங்கினாளோ மீண்டும் விழிப்பு வரும்போது ஒரு உருவம் இவள் கழுத்திலிருந்த செயினை  வெட்டி எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

முதலில் ஒன்றும் புரியவில்லை எனினும் சங்கல்யாவுக்கு விஷயம் புரிந்த நொடி  இவள் கழுத்தில் எதையோ வைத்து “சத்தம் போட்ட கொன்னுடுவேன்….ஒழுங்கா செயினை கொடுத்துறு…..உன்ட்ட என்ன இருக்கோ எல்லாத்தையும் கொடுத்துடு…”  என மிரட்டினான் அவன்.

இருட்டில் முகம் தெளிவாய் தெரியவில்லை எனினும்….குரல் வந்த குறிப்பில் தன் காலைத் தூக்கி ஓங்கி ஒரு உதை….அவன் கையிலிருந்த அந்த ஏதோ வெப்பனை இவள் எய்ம் செய்ய  அது மிஸ்ஸாகி அந்த திருடன் நாடியில் விழுகிறது இவள் கால் என இவளுக்குப் புரிகிறது….இந்த தாக்குதலை எதிர்பாராத அவன் அருகிலிருந்த சுவரில் போய் பொத்தென விழ……”அண்ணா அரண் அண்ணா…. தீஃப்….. தீஃப்….ஹெல்ப் மீ….யாராவது வாங்களேன்….” இவள் அலறிக் கொண்டு திறந்திருந்த கதவை நோக்கிப் பாய்ந்தாள்….

இதற்குள் விழுந்து கிடந்த திருடன் எழுந்து அறைக்கு வெளியே ஓடி லாஞ்சிலிருந்த பால்கனி வழியாய் வெளியே குதித்தே விட்டான். அதே நேரம் அரண் வர….பின்னால் திரியேகன்…. அரண் இப்போது படி கட்டுகளை நோக்கி ஓடினான்…..இவள் அலறினாள்…

”சுகாவையும் குழந்தையையும் தனியா விடாதீங்க….”

இவர்கள் அட்டென்ஷனை இங்கு திருப்பிவிட்டு அவர்களை எதுவும் செய்துவிட்டால்?? என்பதுதான் இவள் பயம்.

திரியேகன் பின் தொடர அரண் அறைக்குள் இவள் ஓட….வெளியே செக்யூரிட்டி அலர்ட் சைரன் அலறுவது கேட்கிறது….

என்ன தேடி என்ன….யாரையும் கண்டு பிடிக்கவே முடியவில்லை….

ஆனால் இனி இவள் தனியாக படுப்பது சரி இல்லை என்ற காரணம் சொல்லி, தன் தாய் புஷ்பத்தை இவளுடன் தங்க வைப்பது என முடிவு செய்து, சுகவிதா தன் தாய் தந்தையை அந்த நேரத்தில் கிளம்பி வரச் வைத்து, அப்படியே அவர்களும்  வந்து புஷ்பம் இவள் அறையில் படுத்துக்கொண்டு “ஸ்ட்ரெயின் பண்ணிக்காம தூங்குமா” என்ற போது வந்த திருடன் யார் திட்டப்படி வந்தான் என சங்கல்யாவுக்கு புரிந்து போயிற்று.

ஆக இவள் வெளியே நடமாடி சுகாவை கண்காணிப்பதை தடுக்க இப்படி ஒரு நடவடிக்கை….

அடுத்த பக்கம்