நனைகின்றது நதியின் கரை 16(2)

“ப்ளீஸ் ஜோனத்….போய் குடுத்துட்டு வந்துடுறேனே….இல்லனா அத காரணமா வச்சு ஃபோன் பண்ணி ப்ராஜக்ட் ப்ராஜக்ட்னு உயிரை எடுப்பார்….சீக்கிரம் இந்த ஆள், இந்த சேனல் எல்லாத்தையும் மறக்கனும்னு நினைக்கிறேன்…எனக்கு நிம்மதி வேணும் ப்ளீஸ்”

இப்பொழுது அவன் முகத்தில் கனிவு வந்திருந்தது.

“உன் நிம்மதிதான் இங்க முக்கியம்….கண்டிப்பா போய்ட்டு வா….என்ன ப்ராப்ளம்னாலும்…….” அவன் சொல்லிக் கொண்டு போக

“அரண் அண்ணாவ கூப்டனும் அப்டித்தானே…..நான் தேவைனா திரியேகன் அங்கிளைக் கூட கூப்பிடுகிடுவேன்…” இவள் சொல்ல வந்தது நீ என்ன பத்தி பாதர் பண்ணாம நிம்மதியா போய்ட்டு வா என்ற அர்த்தத்தில் தான்.

அவனோ கிண்டல் தொனியில் “கல்யாணம் செய்துட்டதால என்னைத்தான் கழட்டி விட்டுட்ட, அவங்களயாவது அக்சப்ட் செய்துறுக்கியே அதுவரைக்கும் சந்தோஷம்” என்றவன் அடுத்து எதையோ சொல்லத் தொடங்க அதற்குள் அவள் முகம் போனப்போக்கில் பேச்சை நிறுத்திவிட்டான்.

அவன் ஓங்கி அறைந்திருந்தால் கூட அப்படி இருந்திருக்காது சங்கல்யாவுக்கு…. கல்யாணம் செய்துட்டு கழட்டிவிடுறதா? இவளா? இதை இவள் இப்படி யோசிக்கவில்லையே….மருண்டு கொண்டு போனது முகம், அடைந்து கொண்டு போனது சுவாசம்….அந்த 12 வயதில் பாட்டி கிடந்த படுக்கையும் இவளுமாக வீடிழந்து தெருவில் நின்றது கண்ணில் தெரிய, இருண்டு கொண்டு போனது பார்வை.

மீண்டும் அவளுக்கு சுயநினைவு வரும் போது “லியாபொண்ணு ப்ளீஸ்டா….கண்ண திறந்துக்கோ….உன்ன இப்படி விட்டுட்டு நான் எப்படி கிளம்புவேன்…ப்ளீஸ்மா….நான் சொன்னதுல உனக்கு எது பிடிக்கலைனு சொல்லு…..இனி நான் அப்படி பேசவே மாட்டேன்…..ஆனா இப்போ விழிச்சுக்கோ…” தவிப்போடு கெஞ்சிக் கொண்டிருந்தது ஜோனத்தின் குரல்.

மெல்ல உறைக்கிறது ஐயோ அவன் இன்னைக்கு கிளம்பனும்…. விழித்துப் பார்த்தாள். ஹாஸ்பிட்டலில் இவள். அவன் கிளம்ப வேண்டிய நாளில் காலையிலிருந்து இரவு வரை அத்தனை மணிநேரம் மயக்கத்திலிருந்திருக்கிறாள். அவன் நிம்மதியக் கெடுக்கனும்னே பிறந்தளோ இவள்? எவ்வளவு சீக்கிரம் இவனைப் பிரிகிறாளோ அத்தனையாய் அவனுக்கு நல்லது.

எல்லாம் அந்த பன்னீர்செல்வத்தால வந்தது….ஆனா கடைசில இவளும் அந்தாளப் போலத்தான்….கல்யாணம் செய்துட்டு கழட்டிவிட்டுட்டுப் போகப் போறா… கண்ணில் அதுவாக தண்ணீர் கொட்டுகிறது.

அடுத்த அரை மணி நேரத்தில் அரண் காரை செலுத்த இவள் ஜோனத்துடன் ஏர்போர்ட் நோக்கிப் பயணம்.

அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தபடி தன்னிடம் எதெல்லாமோ பேசிக் கொண்டிருக்கும் தன்னவனைப் பார்த்திருக்கிறாள். அவன் சொல்லும் எதுவும் இவள் மூளைக்கு செல்லவே இல்லை. வாயசைக்கும் ஊமைப் படம் போல் அவன் இவள் கண்களில். ஆனால் அவனது கண்ணில் தெரியும் அந்த காதலும் கன்சர்னும் மட்டும் புரிகிறது….கொல்கிறது அது அவளை…

ஏர்போர்ட். இவர்களுக்கு தனிமை கொடுத்து அரண் காரிலிருந்து இறங்கிக் கொண்டான்.

“கிளம்புறேன் லியாப் பொண்ணு……விஷ் மீ ஆல் த பெஸ்ட்” ஜோனத் கேட்க,

அத்தனை மணி நேரத்திற்குப் பின் வாயைத்திறந்தாள்.

“இல்ல சொல்ல மாட்டேன்…..லாஸ்ட் டைம் சொன்னேன்…..கடைசில நீங்க எதுக்காக திரும்பி வர வேண்டியதாச்சு பாருங்க…”

“அத்தனை சிச்சுவேஷன்லயும் அம்மா இப்ப சேஃபா இருக்காங்களே…….தட் இஸ் ரியலி பெஸ்ட், சோ விஷ் மீ….”

“………………………..”

“போன தடவை மாதிரி நான் நாளைக்கே வந்து நிக்க மாட்டேன்….இன்னும் 3 வீக்‌ஸ் ஆகும்….”

“…………………….”

“அப்ப வரவும் ஸ்ட்ரெய்ட்டா ஹனிமூன்தான்……அதுக்கு பிறகு  எப்படி என்ட்ட பேசாம இருக்கன்னு நானும் பார்க்கேன்…..”

அவன் சொல்லில் ஒரு ஆனந்த அதிர்வு ஜிவ்வென எழுந்தாலும்..….இவள் திட்டத்திற்கும் அவன் எண்ணத்திற்கும் உள்ள முரண் மிரள வைக்க “அதெல்லாம் வர மாட்டேன்….அம்மா வீட்டுக்கு வரவும் நான் போய்டுவேன்” என்று மனதில் உள்ளதை உருப்படியாய் உளறி வைத்தாள்.

சொன்ன நொடியே ஐயோ கிளம்புறப்ப அவன்ட்ட என்ன சொல்லிட்டேன்…..என பதறியும் போனாள்.

ஆனால் அவனோ இவள் நினைத்தபடியெல்லாம் அப்சட் லுக், ஆங்க்ரி பார்வை, கண்ணீர் கண், கர்ஜனை கவனிப்பு என எதையும் செய்யவில்லை.

சிரித்தான். நன்றாகவே சிரித்தான். “குட் ஜோக்…”

“இல்ல நிஜமா…” இப்பொழுது இவளுக்கே இவள் முடிவின் மீது சிறு சந்தேகம் வந்திருக்கிறது. ஏன் சிரிக்கான்???

“அதெல்லாம் உன்னால முடியாதுடி பொண்டாட்டி….”

“இல்ல ஜோனத் என்னால உங்களுக்கு ப்ரச்சனைதான்…” விளக்கம் சொல்ல முற்பட்டாள்.

“ஆமா…..ரொம்பவே ப்ரச்சனைதான்”  எளிதாய் ஒத்துக் கொண்டான் அவன். இப்பொழுது அவள் தலைக்கு பின்னாக கை கொடுத்து இழுத்து அவள் காதை தன் மார்மீது சாய்த்தான்.

“கேட்குதா? என் ஹார்ட் பீட்..…எவ்ளவு ஃபாஸ்ட்டா இருக்குது பார்த்தியா?…..இப்பல்லாம் நீ பக்கத்துல வந்தாலே இப்படித்தான்……ஒரே ப்ரச்சனை….”

“இப்படி பிடிச்சு…..”சொல்லிய படி அவள் இடையோடு வளைத்தான்….”இப்படி சேர்த்து” இப்பொழுது முழு அவளையும் தன்னோடு சேர்த்திருந்தான்…”இப்படி பார்த்து” தன் மார்பில் சாய்த்திருந்த அவள் தலையை  சற்று பின்னோக்கி சாய்த்து அவள் உதடுகளைப் பார்த்தவன், “இந்த பொங்கல் ஃபேக்ட்ரில ஸ்வீட் எடுக்கனும்னு” இப்பொழுது சொன்னதை வெகு நிதானமாக செய்து முடித்தவன் “ஒவ்வொரு டைம் உன்னைப் பார்க்கும் போதும் இப்படித்தான் தோணுது……. ஒரே ப்ரச்சனைதான்….”

துளி கூட எதிர்ப்பின்றி அவன் காதலுக்கும் உரிமைக்கும் ஒத்துப் போன அவள் மனமும் உடலும் தன்னவனின் மார் மீது சாய்ந்து, அணைத்திருந்த அவன் கைகளுக்குள் சுக சுகமாய் கண் மூடிக் கொண்டது. சிறிது நேரம் மௌனம்.

“இதை ஒரு செவன் டேஸ் முன்னால செய்திருந்தா ஒத்துப்பியாடி நீ……நமக்கு நடந்திருக்கிறது மேரேஜ்….அதோட பலம் என்னன்னு தெரியலை உனக்கு….போன தடவை மாதிரி நான் உன்னை எங்கயும் காவல் போட்டு அடச்சு வச்சுட்டுப் போகலை….நவ் யூ ஆர் அ ஃப்ரீ பேர்ட்…..எங்க வேணாலும் போகலாம்….ஆனா நீ என்னை சுத்தி சுத்தி தான் பறப்ப…..”

அவளை தன்னை விட்டு விலக்கி அமர்த்தியவன்….”விட்டுடுட்டுப் போறாளாம் கழுத….” என்றபடி அந்த லேண்ட் ரோவரின் அவன் பக்க கதவை திறக்கப் போனான்.

இப்பொழுது அவள் மனதிற்குள் முன்பு வரை இருந்த பதற்றமும் தவிப்பும் பரிதவிப்பும் பாதிக்கும் கீழாக குறைந்திருந்தது. காரணம் இவள் போறேன்னு சொன்னதை கொஞ்சமும் நம்பாமல் அதற்காக பதறாமல் இவள் மனம் மீதும் இவர்கள் மணம் மீதும் அவன் காண்பிக்கும் நம்பிக்கை….

அடுத்த பக்கம்