நனைகின்றது நதியின் கரை 16(1)

செர்வன்ட் க்வார்ட்டஸில் மூன்று வீடுகள் இருந்தன. இங்கு வீட்டிற்குள் வேலை செய்ய அனுமதிக்கபடும் பவளமும்  பஅரலடிக் அட்டாக்கினால் பேச்சிழந்து, நடையிழந்து படுக்கையில் இருக்கும் அவரது மகள் பெப்பியும் ஒரு வீட்டிலும், இன்னுமொரு செர்வன்ட் பெண் தனா அடுத்த வீட்டிலும், ஒரு நேபாளி குடும்பம் அலோக் அவன் மனைவி அஷிஷி குழந்தை நீனா அடுத்த வீட்டிலும் தங்கி இருந்தனர். இவள் பேசிப் பார்த்ததில் நேற்று பேசியது அந்த அலோக் மற்றும் அஷிஷி எனப் புரிகிறது. அவர்கள் பிறந்து வளர்ந்ததே தமிழ்நாட்டிலாம்….சோ ஆக்சன்ட் வரை எல்லாம் ஓகே.

நீங்க பேசுனதை கேட்டேன் என ஓபன் அட்டாக்கிற்கு செல்லாமல் முடிந்தவரை துருவினாள் அவர்களிடம் சுகாவைப் பத்தி. குறை என்று ஒரு வார்த்தை வரவில்லை அவர்கள் வாயிலிருந்து. நிச்சயமாய் அவர்கள் அரணிடமோ ஜோனத்திடமோ வந்து தைரியமாய் சுகாவை பத்தி குறை சொல்லப் போவதில்லை எனப் புரிகிறது இவளுக்கு.

ஆக அவர்கள் அறியாமல் அவர்கள் வீட்டில் ஒரு வாய்ஸ் ரெக்கார்டரை மறைத்து வைக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டாள். வெளியில் செல்லும் போது வாய்ஸ்ரெக்கார்டர் எடுத்து வர வேண்டும்.

செக்யூரிடிகளை சென்று சந்தித்தாள். இயல்பாய் பேசிப் பார்த்தாள். நேற்று நைட் ஷிஃப்ட் இவர்கள் தான் வேலை பார்த்திருக்கின்றனர். இவளுக்கு உதவும் என்றபடி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அடுத்து என்ன? தன் அறையில் வந்து தலையைப் பிடித்துக் கொண்டு இவள் உட்கார்ந்த நேரம் இவள் மொபைலில் அழைப்பு.

அழைத்தது வல்லராஜன். இவள் மொபைலை ஜோனத் இவளிடம் கொடுத்திருந்தானே…. ‘ஓ மேரேஜ் நியூஸ் மீடியாவுக்கு கொடுத்தாச்சுல்ல…..விஷ் செய்ய கூப்பிடுவாரா இருக்கும்…. ஜாபை பத்தியும் இவர்ட்ட பேசனும்ல…..ரிசைன் செய்றத பத்தி இப்ப சொல்லிட்டு அப்றமா போய் ஃபார்மாலிடீஸ் முடிச்சு கொடுக்கனும்….’ நினைத்துக் கொண்டே இணைப்பை ஏற்றாள்.

“சங்கல்யா நீ ஆஃபீஸ்க்கு வாம்மா….. ஒரு முக்கியமான ப்ராஜக்ட்….பேமென்ட் படு ஹெவியா இருக்கும்” என ஆரம்பித்தார் அவர். சுர் என ஏறியது இவளுக்கு. இப்ப வேலைக்கு வர்றேன்னு சொன்னாளாமா?

“இல்ல சார் நான் ஜாபை ரிசைன் பண்றேன்….என்ன ப்ரொசீரோ அதை சீக்கிரமா வந்து முடிச்சு தந்துடுறேன்… “ என்றாள்.

ஒரு கணம் மௌனம் அவர் புறம்.

“சரிமா என்னைக்கு வர்ற…? சீக்கிரம் ரெசிக்நேஷன் கொடுத்தன்னா நான் அடுத்தவங்கள கான்ஃபிடென்டா அப்பாய்ண்ட் செய்ய முடியும்…”

“ஓகே சார், சீக்கிரம் வர்றேன்…..”

“இன்னைக்கு தான ப்ரபாத் யூகே கிளம்புறார்? நாளைக்கு வாயேன்…இனி ஃப்ரீயாதான இருப்ப…?”

“சரி “ என முடித்தாள். ஜோனத் இன்று இரவு கிளம்புகிறான் என்பதை அவர் வாயால் கேட்க மகா கடுப்பாக இருக்கிறது. இந்த ஆள் குரல கேட்டாலே எரிச்சல்தான்….சீக்கிரமா போய் ப்ரோசீசர முடிச்சு கொடுத்துட்டு வல்லமை சேனலை அப்படியே மறந்தும் போகனும். நினைத்துக் கொண்டாள்.

நைட் ஃப்ளைட் ஜோனத்துக்கு. இன்னும் மூன்று வாரம் கழித்து தான் திரும்பி வருவான். அதன்பின்னும் உடனடியாக ஆஸ்ட்ரேலியா கிளம்ப வேண்டும் அது 4 மந்த்ஸ் ட்ரிப் எனவும் தெரியும்.

பிரிய நினைப்பவளுக்கு நியாயப் படி அவன் கிளம்புவது நிம்மதியாக இருக்க வேண்டும். இவளுக்கோ உயிர் வரை வலிக்கிறது. சுகவிதா அரணைப் பிரிந்து தவித்த விதம் ஞாபகம் வருகிறது. நாமளும் பேசாம குழந்தை வச்சுகலாமா? அவன் குழந்தை கூட இருந்தா தனியா இருக்ற மாதிரி தோணாதுல்ல? நினைவு ஒரு பறவை….எத்திசையிலும் பறக்கும். இப்போது அது சுக திசையில்….

எங்க குழந்தை எப்படி இருக்கும்? எங்க ரெண்டுபேருக்கும் கர்லி ஹேர் கிடையாது. சோ எங்க ஜூனியர்க்கு ஸ்ட்ரெயிட் ஹேர்தான் வரும்…எது எப்படியோ ஐஸ் அவன மாதிரிதான் இருக்கனும்…. காம்ப்ளெக்க்ஷன் ரெண்டு பேர்ல யார் மாதிரி இருந்தாலும் ஓகே… ஆனா நெத்தியும் ச்சீக் போன்ஸும் அவன மாதிரிதான் இருக்கனும்….அதுதான் அவன் ஒரு அழுத்தமான அமுக்குனினு தெளிவா காமிக்கும்…அது குழந்தைக்கும் வேணும்….நாடி அவனது தான்…..நோ காம்ப்ரமைஸ்…

ஆன் ஃபிங்கர்ஸ் முழுமுழுக்க ஜோனத் மாதிரிதான் வேணும்…என்ன ஒரு நீள ஃபிங்கர்ஸ்…..அடுத்த விஷயம் லெக்‌ஸ் அவன மாதிரி உயரமாய் வேணும்……இவள மாதிரி வேண்டாம்……சோ எல்லாமே அவன மாதிரியே இருந்தா அது எப்படி உன் குழந்தைனு தோணுமாம்…? இப்போ மனசுக்குள் ஒரு கேள்வி….அதான அப்ப எது என்னை மாதிரி இருந்தா ஓகேவா இருக்கும்….ம்…குழந்தை பையானா பொண்ணா அது தெரிஞ்சா இதெல்லாம் யோசிக்க வசதியா இருக்கும்….சற்று நேரம் அனைத்தையும் மறந்து சுகத்தின் பிடியில் இருந்தவள் காரணமின்றி இயல்புக்கு திரும்பினாள்.

இப்பொழுது அழுகை அழுகையாக வந்தது….முழுபைத்தியம் நான்……

அழுது கொண்டிருந்தவள் ஏதோ உறைக்க நிமிர்ந்து பார்த்தால் எதிரில் அவள் மனதுக்குரியவன். ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தான். இன்னைக்கு கிளம்ப வேண்டுமே…

அவனைப் பார்த்ததும் அமர்ந்திருந்த நிலையிலே தலையை குனிந்து கொண்டவள், மெல்ல கண்களை துடைத்துக் கொண்டாள். ஆனாலும் இவள் அழுதது அவனுக்கு தெரிந்திருக்கும். அருகில் வந்தவன் கவனம் அவள் கை அருகில் இருந்த மொபைலுக்குச் செல்ல அதை எடுத்துப் பார்த்தான். வல்லராஜன் நம்பர்.

“இந்த நாய் உனக்கு எதுக்கு கால் பண்ணான்? அவனால தான் அழுதுகிட்டு இருக்கியா?” இது உறுமலுக்கு ஒத்து வரும் குரல்.

விளக்கம் சொல்லவில்லை எனில் ஜோனத் அந்த வல்லராஜனிடம் சண்டைக்குப் போவது சர்வ நிச்சயம். ஆக வாயை திறந்து பதில் சொன்னாள்.

“இல்ல…அப்டில்லாம் எதுவும் இல்ல….ஏதோ ப்ராஜக்ட்னு ஆரம்பிச்சார்….நான் ரிசைன் பண்றேன்னு சொன்னேன்….வந்து சீக்ரம் ரெசிக்னேஷன் கொடுத்துட்டுப் போக சொன்னார்.”

“அதெல்லாம் தனியா போக வேண்டாம்…அவருக்கு இப்ப என்ன அவசரம்? நான் வரவும் போனா போதும்…சேர்ந்து போவோம்…” கிட்டதட்ட இது கட்டளைதான்.

அடுத்த பக்கம்