நனைகின்றது நதியின் கரை 16

காதில் விழுந்த வார்த்தைகளில், குரலில் ஸ்தம்பித்துப் போய் நின்றாள் சங்கல்யா. சுகாவா????!!!! இப்படியா????!!!!

இப்பொழுது இவள் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.

வீட்டிற்குள் நுழையும் வாசலிற்கு அருகில் தோட்டத்தில் ஒரு க்ளாஸ் ஹவுஸ் உண்டு. அதனுள் இரவு படுக்க செல்லும் முன் இவள் பார்த்த அந்த பீச் நிற நைட் ட்ரெஸில் சுகா.

கிளாஸ் ஹவுஸின் ஏதாவது ஒரு ஜன்னல் திறந்திருக்கிறதாயிருக்கும். அதனால் தான் அவள் பேசும் சத்தம் இவளுக்கும் கேட்கிறது. அடிக்கடி இப்படி வந்து பேசினால் அந்த சர்வென்ட்ஸுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். இப்படி பேசத் தான் இவள்  திருமண நாள் இரவில் சுகா வெளியில் வந்திருக்க வேண்டும்….

சுகாவின் அம்னீஷியா இன்னும் சரியாகவில்லை…..ஆக அரண்  மேலுள்ள  மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கில் அவள் இப்படி செய்கிறாள் என புரிகிறதுதான்…. ஐ’ல் மேக் யு டூ பே….என சில நாள்முன்பு தானே  இவள்  எதிரில் அரணிடம் கத்தினாள் சுகா…. அதன் பின் சமாதானம் போல் நடித்து நம்பவைத்து அரணுக்கு தன் மேல் சந்தேகம் வராதபடி இப்படி பழி வாங்குகிறாள் போலும்…..அதற்கு அவளது அப்பாவும் உடந்தை போலும்…. இத்தனை காலம் இளகாத அனவரதன் இப்பொழுது சட்டென இவள் பேசிய பேச்சில் இறங்கி வந்த போதே இவள் யோசித்திருக்க வேண்டுமோ?

இவளுக்கு ஜோனத் மேல் கோபம் வந்த போது நடித்து மறைத்து அரணை நம்ப வைத்து டைரியை எடுத்து விற்க போனாளே அப்படித்தான் சுகாவும் ரியாக்ட் செய்கிறாள்…… பாவம் வரும் காலத்தில் முழு நினைவு வந்த பின் செய்த காரியத்திற்காய் இவளைப் போலவே ஏன் இன்னும் அதிகமாய் கூட துடிக்கப் போகிறாள் சுகா….. இவள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

முதல்ல இதுக்கு மேல அடுத்த ப்ளன சுகா அவங்க அப்பாட்ட பேசாத படி செய்யனும். அந்த க்ளாஸ் ஹவஸிற்குள் நுழைந்தாள் சங்கல்யா.

“லியா வந்திருக்கா டேடி….நான் போய் அவளப் பார்க்க போறேன்….”

“……………”

“ம்….ஆமா….ப்ரபா இல்லாம அவளுக்கு கஷ்டமா இருக்கும்….நான் பார்த்துகிறேன்….நீங்க தூங்குங்க…..நாளைக்கு பேசலாம்….பை…குட்நைட்” இவள் வந்திருக்கும் செய்தியை இயல்பு போல் தன் தந்தையிடம் சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டு இவளிடம் வருகிறாள் அவள்.

“ஹாய் லியா…என்ன வாக்கிங்கா? எனக்கும் மூட் கொஞ்சம் டல் அடிச்சா திஸ்’ல் ஹெல்ப்….”

இதழ்களை இழுத்து சிரித்து வைத்தாள் சங்கல்யா.

இவள் கையை பிடித்துக் கொண்டு இப்போது இவளுடன் நடக்க ஆரம்பித்தாள் சுகா…

இவள் சுகவிதாவை ஓர் ஆழப் பார்வை பார்த்தாள்.

“என்னாச்சு லியா? இப்படி பார்க்க?”

“இல்ல….அவ்ளவு பெரிய ஸ்டார் ப்ளேயர்….அவ்ளவு ஃபேன் ஃபாலோயிங்……த ரிச்சஸ்ட் டென்னிஸ் ப்ளேயர்….என் கைய பிடிச்சுட்டு இவ்ளவு சிம்பிளா பழகுறீங்க?” கரியர் பத்தி எதாவது இவள் ஆரம்பிக்க, அதற்கு பதிலாக சுகா புலம்பினால் அதை வைத்தே அவளிடம் பேசிப் பார்க்க வேண்டும்…இந்த பழி வாங்கல் ஆட்டத்தை விட வைத்தாக வேண்டும் என இவள் நினைத்தாள்.

“இதென்ன இப்படி யோசிக்கிறீங்க….. எவ்ளவு ஃபேன்ஸ் இருந்தாலும்….மில்லியன்ஸ்ல ஏர்ன் செய்தாலும்…நானும் உங்கள மாதிரி சாதரண பொண்ணுதான….?” இயல்பாய் தான் இருந்தது சுகவிதாவின் முகம்.

அதற்குள் அவள் கையிலிருந்த மொபைல் சிணுங்க “என்ன ஜீவா?….இங்க தான் கீழ லியா கூட…”

“…………..”

“இதோ இப்ப வர்றேன்…அவ சரியா சாப்டாம தூங்கிட்டால்ல அதான் இப்ப எழுந்துகிட்டா போல…..பசில தான் அழுறா….இந்தா வர்றேன்…”

அதோடு அவரகள் உரையாடல் முடிவு பெற சங்கல்யா தன் அறையில் வந்து படுத்தாள்.

தூக்கம் தான் வர மறுத்தது. சுகா விஷயத்தை எப்படி கையாள? ஜோனத்திடம் சொல்லலாமா? இவளும் சுகாவும் சப்பாத்தி சுட்டுக் கொண்டு நிற்கும் போது ஜோனத் வந்து சுகவியிடம் மட்டும் பேசியது மனதில் தெரிந்தது.

என்னதான் அவன் இவளை காதலிக்கிறான் என்றாலும்….சுகாவுடன் அவனிற்கு இருக்கும் நட்பிற்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும்… இவள் அரண் வீட்டிற்குள் வர தேர்ந்தெடுத்த வழி முறைக்கும், அந்த டைரி தெஃப்டுக்கும்….இப்பொழுது நடந்து கொள்ளும் முகம் திருப்பல் முறைக்கும்….அவன் நிச்சயம் இவள்தான் எதையோ தவறாக புரிந்து கொண்டு உளறுகிறாள் என்றோ அல்லது திட்டம் போட்டு சுகவிதாவை எதற்கோ மாட்டிவிடப் பார்க்கிறாள் என்றோ தான் நினைப்பான்….ஆதாரமின்றி அவனிடம் போவது அபத்தம்.

அரணிடம் போனாலும் ஆதாரம் வேண்டும்.

ஆக சுகாவை ஃபாலோ செய்து எவிடென்ஸ் கலெக்ட் செய்யனும்….அதே நேரம் சாலிட் சாட்சி கிடைக்கும் வரைக்கும் சுகா இன்னுமாய் ஏதாவது பெரிதாய் செய்து விடாதபடி இவள்  அவளை தடுத்தும் வைக்க வேண்டும். இப்படியாய் ஒரு முடிவுக்கு வந்தாள் சங்கல்யா.

மறுநாள் காலை முதல் வேலையாக அரண் வீட்டு கேம்பஸிற்குள் யார் யார் தங்கி இருக்கிறார்கள் என்பதைத்தான் விசாரித்தாள். உள்ளே செர்வென்ட்ஸ் க்வார்ட்டஸ் உண்டு என இவளுக்குத் தெரியும்…. அதோடு மிகப் பெரிய கேம்பஸ் என்பதால் மூன்று புறம் கேட் உண்டு. ஒவ்வொரு கேட்டிலும் செக்யூரிட்டி.

அடுத்த பக்கம்