நனைகின்றது நதியின் கரை 15(9)

“ஹேய் விது என்ன சொன்ன நீ….வெட்டிங் நைட்ல பேசினோம்னா…..அதுல்லாம் தெரியுதா உனக்கு…”

“ம்….அதான் சொன்னேனே…இப்பலாம் நெகட்டிவா எதுவும் வரதில்லைனு….மனசுக்கு சந்தோஷமானதா வருது….முதல்ல ஹயா குட்டி பிறந்ததுல இருந்து….. அடுத்து இது….. நம்ம வெட்டிங் நைட்” அவள் குரலில் வெட்கம் ஏறி இருக்க

“ஆஹா இது தெரியாம போச்சே அப்ப பொண்ணுக்கு த ஹாப்பியஸ்ட் அக்கேஷன் அது தானாமா?….” அவன் குரலில் குறும்பும் சீண்டலும்…

“போங்க ஜீவா….ஹயா பிறந்ததுன்னு சொன்னனே….நம்ம வெட்டிங் அப்ப ஏதாவது டென்ஷன் இல்லனா பாதர்டா இருந்திருப்பேன்…… அம்மா அப்பா வரலைல…..அதான் அதுலாம் மோஸ்ட் ஹாப்பியஸ்ட்ல இல்லை போல…. இதுன்னா….” அதுக்கு மேல் ஏதும் சொல்லாமல் அவள் நிறுத்த….

இன்னொரு ஹாப்பியஸ்ட் அக்கேஷனைப் பார்த்து செல்லத் தொடங்கினான் அவன். ஐக்கியப் பட அவளுக்கும் ஏது தடை?

“ஐ லவ் திஸ் கால்ஃப் மூன் க்ரவ்ண்ட்”

அவள் நெற்றியில் இவன் தொடங்க…. ‘ஐ லவ் டு ப்ளே ஆன் திஸ் கோர்ட்…..இட்’ஸ் மை ட்ரீம் டு வின் த விம்பிள்டன், த லேடிஸ். இட் வாஸ் மை ட்ரீம் டு ஃபர்ஸ்ட் வின் ஜூனியர்ஸ்…..’ அவளது முதல் இன்டர்நேஷனல் டோர்னமென்ட், விம்பிள்டென் கேர்ள்ஸ் சிங்கிள்ஸ் டைட்டில் வெற்றி மனதில் விரிகிறது.

அஸ் அ ரெஸ்பான்ஸ் தன் வலக்கையால் தன்னவன் கன்னத்தை தொட்டாள். அவள் மாற்றத்தை உணர்ந்தவன் “என்ன விது ?” என்றான். கரிசனை வந்திருந்தது அவன் குரலில். “எதுவும் கஷ்டமா இருக்குதா?”

“ஒன்னும் இல்ல ஜீவா… ஜூனியர் விம்பிள்டென் ஞாபகம் வருது..”

“ஹேய் என் ஞாபகம் வரனும் இந்த நேரத்துல….இது என்ன டென்னிஸ் தாட்…?” மகிழ்ச்சியாய் ஒரு குறை சொல்லல்…. “மத்ததுல எப்படியோ இந்த விஷயத்துல உன் ஹஸ்பண்ட் ஜெலசி ஃபெல்லோதான்…”

“இது தான் நான் ஃபர்ஸ்ட்டைம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ண ஒரு ஈவன்ட் தெரியுமா….? அந்த அரண் வேணுக்கும்னு ஒன்னும் என் காலை வூன்ட் பண்ணலை…..நீங்க நினைக்கிறது தப்புன்னு என் அப்பாட்ட ப்ரூவ் பண்றதுக்காக அத்தனை வலியோட விளையாடி ஜெயிச்ச ஈவன்ட்….. அந்த வகையில இது முழுக்க முழுக்க நீங்க சம்பந்தபட்ட விஷயம்தான்…..உங்க ஜெலசிய பத்ரமா வச்சுகோங்க…”

“அப்ப அந்த வயசுலயே அத்தானை சைட் அடிச்சேன்ற…. சரியான கிரிமினல்டி நீ”

“ஆமா நினைப்புதான்…..நம்ம விடியல் பாயை விடாம பிடிச்சுகிட்டுறுக்கிற ஃப்ரெண்டாச்சே….நமக்கும் நல்ல ஃப்ரெண்டா வருவான்னு அப்போ நினச்சேன்….”

அவன் கழுத்தோடு மாலையாய் கை கோர்த்தாள் மனைவி.

துணை வந்த விடியல் உன்னால்

இயலவில்லை இரவுகள் என்னில்

தனி வழிப் பாதை என் பயணம்

தவறி இருப்பேன் நான், சாய்ந்தும் ஓய்ந்தும் தான்

பாதை மாறி பறந்தும் இருப்பேன்,

பயத்தில் பதராய் விளைந்தும் இருப்பேன்

தீங்கு செய் தீயாய்

தீது செறி கள்வனாய்

நோய் செய் உயிரியாய்

நேர்கண்ட சிதையாய் சிதறியும்தான்

தாகம் கொண்ட இதயத்தில்

தடமின்றி வந்து தங்கியவனே

நான் கண்ட நட்பே

நடைமுறைபடவில்லை இவை அனைத்தும்

துணை வந்த விடியல் உன்னால்

இயலவில்லை இரவுகள் என்னில்

போர்களம் தன்னில் நான்

போகும் முன்னே போர்வாள் தந்தவன் நீ

கவசமும் தான், கவசமாய் வந்தவனே

வில் அம்பு தந்தாய்

விளாமல் செய்தாய்

வெறும் விரல் கொண்டு

வெண்கல வில் வளைக்க

வழி வகை சொன்னாய்

விண்ணுலகில் உண்டு சொர்க்கம்

மண்ணுலகில் நட்பில்

அது நடைமுறைப்படும்

இடைவெளி இல்லாத,

ரகசியம் கொள்ளாத

நட்பிற்காய் ஜீவனை வார்ப்பதின் மேலான அன்பு ஏதுமில்லை

என்பது வேதம்.

நீ அதன் சாரம்

நம்மில் வரலாகாது தூரம்

மரணம்காதும்

நாம் என்பது ஓர் வரம்.

அட் அவளுக்கு அறிமுகமான அந்த கவிதை…. அட் டுடனான நட்பு…..ஜீவா என பெயரிட்டது…..பெண்ணிற்கு நியாபக ப்ராவகம். அந்த காதல் சடுகுடு நியாபகம் வரவில்லை எனினும் லாஜிக் புரிகிறதுதானே….அந்த ஜீவாதான் இந்த ஹஸ்பண்ட் என….

“அந்த பால்பக்கெட் பத்தி கவிதை எழுதிதான் என்னை ட்ரஅப் பண்ணீங்களா ஜீவா…? சே என்ன ஒரு அநியாயம்….எனக்கு இப்ப என்னப் பத்தி ஒரு கவிதை இன்ஸ்டென்ட்டா சொல்லலை இன்னைக்கு ஒன்னும் கிடையாது….” அவளுக்கு என்ன நியாபகம் வந்திருக்கிறது என அவனுக்கும் புரிகிறது தானே….

பாவை கொலுசுகளின் ஓசை கேட்க இங்கு

தினம் பாலை செவிகள் இரண்டு ஏங்குதே

அவள் பாதம் சூடு பட்டு மோட்சம் ஏகும்

பாதை மண்ணாகிட மனம் வேண்டுதே

காற்றில் அலையும் அவள்  கூந்தல் காட்டில்

தொலைய என் சுவாசம் அது போகுதே

நீரும் உண்டு அதில் நெருப்பும் உண்டு

எனும் அவள் விழிகள் தீண்டல் அது வேண்டுமே.

 

அன்பிட்டு உன்னில் அடைகலமாக

அருகினில் நெருங்கி வந்தேன்

அனலிட்டு என்னை எரித்துக் கொள் என்றாய்

எங்ஙனம் உன் மொழி மறுப்பேன்

 

மரண வாசல்களின் கதவின் தாழ் திறந்து

காற்றில் ஏறி நான் கரைகையில்

விரலில் ஏறி பின்பு விழுந்துவிட்ட உன்

மருதோன்றி துகளின் தொடுகையால்

கலைந்த உயிரும் இணைந்தே

இவன் இதயம் உள்ளே திரும்புதே

ஜீவன் கொண்டு எழுந்துவிட்ட

என் சரீரமெங்கும் உன் வாசமே

 

மரணங்கள் எல்லாம் மரணிக்கும் என்னுள்

மங்கை உன் மீதென் காதல் செயல்

என்னுடன் இணைய விலை எனக் கேட்டால்

நூறுமுறை இறந்தெழுவேன், சுகவிதை சொல்

 

அவன் சொல்ல, இப்பொழுது அவனை இறுக அணைத்திருந்தாள்.

“இப்டிலாம் எழுதிருந்தீங்கன்னா நான் உங்கள லவ் பண்ணாம இருக்றது எப்படியாம்…?”

ஜீவ சங்கமம்.

அடுத்த பக்கம்