நனைகின்றது நதியின் கரை 15(8)

“ஏன்பா….. நான் எதுலயாவது உங்களை……” ஆரம்பித்தவள் நிறுத்திவிட்டாள் அவளுக்குமே அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்து விட்டது.

முகத்தில் செம்மை படர்ந்தாலும் தான் சொல்ல நினைத்ததைதான் சொல்ல முயன்றாள்.

“ஜீவா…..”

“ம்”

“நீங்க ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாதாம்…..நல்லா ரெஸ்ட் எடுக்கனுமாம்….”

“அதுக்கென்ன விதுக் குட்டி….செய்துட்டா போச்சு….அதுக்கும் இதுக்கும் என்ன?”

“மாப்ளய நல்லா பார்த்துக்கோன்னு அம்மா ஆயிரம் தடவை சொல்லிட்டாங்க…”

“இது கூட நல்லா பார்த்துகிறதுதான்”  குறும்பாய் சொன்னவன் வேறு எதுவும் சொல்லாமல் அவள் காது மடலை ஆராயத் தொடங்கினான்.

“நானா என்னன்னு கேட்க மாட்டேன்….”

“விது “ என்றான் இப்போது. டாபிக் எங்கு திரும்புகிறது என அவனுக்கும் புரிகிறதுதானே….

“ உங்களுக்கு ஏதோ ஆகிருக்குது…..அதுவும் 6 மந்த்ஸா என்ன தேடி வர முடியாத படி…” அவள் குரல் மாறிக் கொண்டு போகிறது.

“விதுமா இப்ப எதுக்கு இந்த பேச்சு….? வா தூங்கலாம் ரொம்ப லேட் ஆகுது….”

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது ஜீவா…..இதை நான் யார்ட்ட பேச….?” அழுகையின் அம்சம் குரலில்.

“குட்டிமா “ என்றவன் அவளை தன் புறமாக திருப்பினான்.

“சொல்லு…..என்ன சொல்லனும்….?”

“ இல்ல ஜீவா…எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சுதுல்ல அதுல என்னை யாரோ துரத்துறாங்கன்னு நான் பயந்து போய் தான வந்தேன்….அதுவரைக்கும் ஞாபகம் இருக்குது….”

“ம்…ஆமா சொல்லுடாமா…”

“அப்போ நான் எதிர்ல வந்த கார கவனிக்காம இடிச்சுட்டேன் தான… அது உங்களையாப்பா?…..ஐ மீன் உங்களைனு எனக்கு இப்ப ஒரு கெஸ்….” அவன் கண்களைப் பார்த்தாள்.

இப்பொழுது இவன் என்ன சொல்ல வேண்டும்?

அவள் புருவ மத்தியை தன் இரு விரல்களால் நீவி விட்டவன் “இப்ப எதுக்கு இப்படில்லாம் ஒரு ஆராய்ச்சி விதுமா.. எதுக்கு உன் மனசை தேவையில்லாம கஷ்டபடுத்திகிற?”

“இல்ல ஜீவா எனக்கு ஆக்சிடெண்ட் ஆகி 6 மந்த்ஸ் ஆகுது… நீங்க வரலை…உங்க ஹெல்த்தை பத்தி எல்லாரும் கவலைப் படுறாங்க….நான் பயந்து போய் ஆக்சிடெண்ட் செய்துறுக்கேன் ….அப்டின்னா பயந்து போய் நான் உங்களை கூப்டுறுப்பேன்….

ஏன்னா எனக்கு என்ன ப்ரச்சனைனாலும் உங்களதான கூப்டுறுப்பேன்….நீங்க எனக்காக வந்திருப்பீங்க….நான் உங்களையே இடிச்சுட்டேன்….” இது வரை விளக்கி கொண்டு வந்தவள் முழுதாய் அழ ஆரம்பித்தாள்.

“6 மந்த்ஸா நீங்க இம்மொபைலா இருக்ற அளவுக்கு….” அவனோடு ஒண்டினாள்.

இதுக்கும் என் அப்பா உங்களை திட்டிருப்பாங்க என்னப்பா….”

“ஹேய் விதுக்குட்டி இப்ப எதுக்கு இதுக்கு அழுதுகிட்டு…? அங்கிள் இன்னைக்கு என்னை எப்படி பார்த்துகிட்டாங்க தெரியுமா……எதோ நான் ஒரு சைனா டால் மாதிரி…..உட்கார்ந்து எந்திரிச்சாலே உடஞ்சுருவேனோன்ற மாதிரி….” அவள் அப்பா நிமித்தம் குறுகுவதை தவிர்க்க இவன் ஆறுதல் சொல்ல முயன்றான்

‘”அப்ப அந்த அளவுக்கு உங்களுக்கு முன்ன அடி பட்டிருந்திருக்கும்…என் அப்பா அந்த அளவுக்கு உங்களை திட்டி இருந்திருக்கனும்…” அதையும் அவள் இப்படித்தான் இன்டெர்ப்ரெட் செய்தாள்.

“என்ன விது இது?”

“இல்ல ஜீவா ரொம்ப கஷ்டமா கில்டியா இருக்குது ஐ’ம் சாரிப்பா…”

“நீ என்ன வேணும்னா செய்த….” அவளை இறுக்கி அணைத்திருந்தான். “எல்லாம் முடிஞ்சுட்டு விதுமா….”

“………………….”

“இவ்ளவு நேரம் எல்லோர்ட்டையும் நல்லா பேசிட்டு என்ட்ட வந்ததும் அழுதுட்டு இருக்க பாரு…. ” கோழிக்குஞ்சாய் அவனுக்குள் அவள்.

சிறிது நேரத்திற்குப் பின் சட்டென நிமிர்ந்தாள். “ஜீவா எனக்கு ஒன்னு புரிஞ்சிட்டு”

“என்னது விது…?”

“எதுக்கு உங்களைப் பார்த்தா எனக்கு கஷ்டமான இன்சிடென்ட்டா நியாபகம் வருதுன்னு….. என் ப்ராப்ளத்தை கஷ்டத்தை அதோட ஃபுல் டெப்த்தோட உங்கட்ட தான் என்னால மனசுவிட்டு பேச முடியுது….

இப்ப ஹாஸ்பிட்டல்ல ஆன்டி சர்ஜரிக்காக நான் இருந்தப்பவோ, இங்க லியா கூட இருந்தப்பவோ எனக்கு இந்த ஆக்சிடென்ட் விஷயம் என்னை இவ்ளவு டிஸ்டர்ப் செய்துன்னே புரியலை…. உங்களை பார்க்கவும் தான் வாட் பாதர்ஸ் மீன்னு தெரியுது…..

அது மாதிரிதான் அந்த இன்சிடென்ட்ஸ்லாம்…..அன்னைக்கு அதைப் பத்தி உங்கட்ட பேசின பிறகு இப்ப அப்டி எதுவும் ஞாபகம் வரலை பாருங்க….. முன்னால நம்ம வெட்டிங் நைட்ல  இதல்லாம் பத்தி பேசிருக்கோம் தான்….

பட் எதுவும் எமோஷனல் பாய்ண்ட் ஆஃப் வ்யூல பேசிகிடலை…..ஏன் செய்தோம்னு சொல்லிட்டுப் போயிருப்போம்…. நான் எப்டி ஃபீல் பண்ணேன்னு யார்ட்டயும் பேசியிருக்கவே மாட்டேன்…… நான் நானா இருக்க முடிஞ்ச ஒரே இடம் நீங்க மட்டும் தான் ஜீவா”

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவனது அணைப்பு ஆயிரம் சொன்னது. மௌனமான நேரம்.

அடுத்த பக்கம்