நனைகின்றது நதியின் கரை 15(5)

“அவள  பெரிய மனுஷின்னு நான் எப்ப நினச்சனாம்?” என தொடங்கியவன் “இப்ப ரெண்டு மணிக்கு தேவையான முக்கியமான ஆராய்ச்சிதான்….சீக்கிரம் போய் படு “ என முடித்தான்.

“நீ போ …..நான் அவள இப்ப அனுப்பி வைக்கிறேன்…..” சுகவிதா சொல்லவும்

“குட் நைட் “ என்றுவிட்டு இவர்களுக்கான அறைக்கு போக மாடிப் படிகள் ஏற ஆரம்பித்தான் அவன்.

“ஆல் த பெஸ்ட் பால்பாக்கெட்” சுகாதான். நின்று திரும்பிப் பார்த்தான். “இது எதுக்கு?”

அவள் முகத்தில் விஷமப் புன்னகை. “இன்னைக்கு உனக்கு சிக்‌ஸர் அன்ட் சீக்ரெட் கிடைக்க போகுதே…”

“உதபடப் போற பாரு நீ…” என ஆரம்பித்தவன் சட்டென உறைக்க “சுகா” என்றான். பெரும் பாசமிருந்தது அந்த குரலில். இதற்குள் அவளைப் பார்த்து இறங்கி வரவும் தொடங்கி இருந்தான்.

“ உனக்கு எல்லாம் நியாபகம் வந்துட்டா சுகா?”

“எல்லாம்னு இல்லை…பட் இதெல்லாம் வந்துச்சு….அன்னைக்கு ஏர்போர்ட்ல இருந்து பேசிகிட்டு இருந்தோமே அதெல்லாம்…”

“இனி எல்லாம் சரி ஆகிடும்…” நிறைவு இருந்தது அவன் குரலில். இவள் அம்னீஷியாவினால் அரணுக்கும் இவளுக்குமாய் நடக்கும் உணர்வுப் போரை அவனும் அறிந்திருக்கிறானே…..

“இப்பவே எல்லாம் சரியாத்தான்டா இருக்குது….எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க…இப்ப அப்பாவும் வந்தாச்சு…..ஆன்டி ஆப்ரேஷன் நல்ல படியா முடிஞ்சுட்டு….அபவ் ஆல் இன்னைக்கு என் பால்பாக்கெட்டை கிணறு தேடி வந்து தாண்டும் வைபோகம் வேற…. ஐ’ம் ஹஅப்பி” கடைசி ஐ’ம் ஹஅப்பியில் உணர்ச்சிகள் அதிகம்.

அவள் தலையில் பாசமாய் கை வைத்தான்.

“நீயும் சந்தோஷமா இருடா….அதான் அம்மாவுக்கு எல்லாம் சரியாகிட்டுன்னு டாக்டர் சொன்னாங்கல்ல….நீ நினச்சாலும் இந்த நாள், இந்த நேரம் திரும்ப வராது…..என்னைக்கினாலும் இது தான் உங்க வெட்டிங் லைஃபோட ஃபர்ஸ்ட் டே….” சுகாவின் அன்பான அட்வைஸ் மழை.

“சரிங்க பெரிய மனிஷி சொல்லிட்டீங்கல்ல……கேட்டுடுவோம்….” இருந்த இறுக்கம் போய் அவன் முகத்தில் சங்கல்யா எதைப் பார்க்க ஏங்கி நின்றாளோ அந்த சந்தோஷமும் சிறு குறும்பும்..

சுகா சொல்வதும் சரிதானே….பின்னாளில் லியாவோடு மனம் ஒத்து வாழப் போகிறான் தான்…இப்போது சூழல் கொஞ்சம் தகிட தக திமி தான்…ஆனாலும் இது வெட்டிங் லைஃபின் முதல் நாள்…..அவள் அவனுடையவளான நாள். மேக் இட் ஸ்பெஷல்….நோ முகம் திருப்பல்….  என்றிருந்தது அவனுக்கு.

“அதுக்கு முதல்ல அந்த சின்ன பொண்ண அனுப்பி வைங்க மேடம்….” சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் செல்ல இதுவரை இருந்த பயம் போய் இப்பொழுது சகல்யாவுக்குள் வேறுவிதமாய் கிலி.

செய்த சப்பாத்தியையும் அந்த பாலையும் எடுத்துக் கொண்டு சுகவிதாவிடம் குட் நைட் சொல்லி அவளது ஹக் அண்ட் ஆல் த பெஸ்ட்டை ஏற்று பின்னிய காலை பெரும் பாடு பட்டு அடி மேல் அடியிட்டு அவன் முன்னால் போய் நிற்கும் போது இவள் வியர்த்திருந்தாள்.

அவன் இன்னும் அந்த ஜன்னல் அருகில் தான். ஆனால் அறையின் உட்பக்கம் பார்த்து அதாவது அறைக்குள் இவள் நுழையும் வாசலைப் பார்த்து நின்றிருந்தான்.

‘காட்…..கை நடுங்குதே…. ட்ரேய கீழ போட்டு வைக்கப் போறனோ?’ அவனைப் பார்ப்பதை தவிர்த்து அவன் அருகிலிருந்த டேபிள் மீது சென்று வைத்தாள் கையிலிருந்த ட்ரேயை.

அடுத்து இவள் என்ன செய்ய வேண்டும்?

சற்று நேரம் செய்வதறியாது நின்றவள் கதவை பூட்டலாமா வேண்டாமா என்ற பலத்த குழப்பத்திற்குப் பின் முடிவாக சென்று தாழ் போட்டாள்.

அவன் இன்னும் அசையாமல் அதே இடத்தில் இவளைப் பார்த்த வண்ணம்.

எப்படி முழிக்கனும்னு சொல்லித் தாயேன்டா நான் அப்படியே முழிச்சுர்றேன்… இப்ப எப்படி முழிக்கனும்னு கூட எனக்கு தெரியலையே… இவள் மனம்.

“பால் என்ன டேபிளுக்கா?” அவன் தான்.

‘இதுக்கு இப்டிதான் மீனிங் எடுப்பியா நீ’ மனதுக்குள் முனங்கிய படி  போய் சப்பாத்தி தட்டை திறந்து எடுத்து வைத்து ச்சேரை அவன் உட்காரும் வண்ணம் நகர்த்தி  வைத்தாள். இன்னும் அசையாமல் அவன்.

“சாப்டுங்க…. ப்ளீஸ்”

“இத்தனை மணிக்கு சாப்ட சொன்னா எப்படி?…இதுக்கு தான் கீழபோனியா?”  இந்த சாப்பாடு கொடுக்ற ஐடியா யாரோடது? சுகா சொல்லி இவள் செய்றாளா? இல்லை இவளே இவனுக்காக யோசித்து செய்கிறாளா? என்பது இவனுக்கு தெரிய வேண்டும்.

“நாள் முழுக்க சாப்டாதவங்க இத்தனை மணிக்கு சாப்டலாம் ஒன்னும் தப்பு இல்லை….. உங்களுக்கு பால் எடுத்துட்டு வரலாம்னு போனேன்….சுகா தான் சப்பாத்தி செய்யலாம்னு………”

அவள் பதிலில் படு சந்தோஷமாக இவன். பால் வார்க்க நினைத்திருக்கிறாளே……

அவன் திரும்பி எதிர் திசையில் நடக்க “ப்ளீஸ் ஜோனத்…..என் மேல உள்ள….” இவள் பேச்சை தொடரா வண்ணம் இடையிட்டான் “ஹேய் ஹேண்ட் வாஷ் செய்துட்டு வர்றேன்…”

“அதுக்கு ஃபிங்கர் பவ்ல் வச்சிருக்கேன்….”

“வாட்…?” அவன் முகத்தில் புன்னகை உதயம் வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

அடுத்த பக்கம்