நனைகின்றது நதியின் கரை 15(4)

ன் அறைக்கு உடை மாற்ற சென்ற சங்கல்யா அப்பொழுதுதான் அதை கவனித்தாள். அவள் வைத்துவிட்டு போயிருந்த நகை பெட்டிகள் மிஸ்ஸிங்…. பகீர் என்றது.

அறையை பூட்டி சாவியை வீட்டின் சாவிகள் இருக்கும் இடத்தில் தான் வைத்துப் போயிருந்தாள். நம்பிக்கையானவர்கள் தவிர யாரும் எளிதில் வர முடியாது.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்? அதுவும் நிச்சய நகைகள்….அவன் தந்த முதல் நகையல்லவா….அவன் அணிவித்த எங்கேஜ்மென்ட் ரிங் வரை காணாமல் போயிருக்கிறது….. இதயம் தாண்டியும் வலி….. இன்நேரம் இவள் இதை யாரிடம் சொல்ல முடியும்…?

கூடவே ஒரு எண்ணம் ஒருவேளை வீட்டிற்குரியவர்கள் பார்த்து பத்திரமாய் எடுத்து வைத்திருக்கலாம்…….சுகவிதாவாக இருக்க வேண்டும்….இவளது ஜோனத்திற்கான கடிதத்தை பார்த்திருப்பாளாய் இருக்கும்…. அதனால் தான் இவள் கம்ஃபர்டபிளாய் ஃபீல் பண்ண வேண்டும் என இன்று பார்த்து பார்த்து செய்கிறாள் போலும்….. அரண் அண்ணா மாதிரியே தான் சுகாவும்……இவள் கில்டியா ஃபீல் பண்ணக் கூடாதுன்னு இப்படி ஒரு கேர்…..இருவரும் தப்பை பனிஷ் பண்ற விதம் ரொம்ப அலாதி……

மனம் சற்று அமைதியுற சிறு குளியலுக்குப் பின் இன்னொரு காட்டன் சல்வாருக்கு மாறியவள் மீண்டுமாக தங்களுக்கான அறையை நாடிச் சென்றாள்.

இவள் உள்ளே நுழைவதை திரும்பி பார்த்தவன் மீண்டும் முந்தைய நிலை.

நேத்துல இருந்து ஒரே ட்ரஅவல்….இன்னைக்கும் இப்படி நின்னுட்டே இருந்தா எப்படியாம்? இன்னும் நின்று கொண்டிருப்பவனைப் பார்த்து இவள் மனதில் யோசனை ஓடியது.

‘பால்ல கொஞ்சம் மிளகும் மஞ்சளும் போட்டு குடிச்சா நல்லா தூக்கம் வரும்’  பாட்டி சொல்லி இவள் அவ்வப்போது செய்வதுதான்.  ட்ரை பண்ணலாம்.

கீழே இறங்கி கிச்சனுக்கு வந்தாள். வேலை ஆள் யாரும் இல்லை. இத்தனை மணிக்கு எதிர் பார்க்க முடியாதுதான்.

அடுத்த வீட்டு கிச்சன் என கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், அரணோ சுகவிதாவோ கண்டிப்பாக இதை வித்யாசமாக நினைக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் ஃப்ரிட்ஜை திறந்து பாலை தேடினாள்.

அதிகமாகவே இருந்தது. ஒரு பாக்கெட்டை எடுத்து காய்ச்சி….மிளகு பொடியை கண்டுபிடிக்க முடியாமல், மிளகை எடுத்து மிக்‌ஸியில் அடித்த போது சற்று தொலைவில் இருந்த ஹாலில் யாரோ போவது போல் உணர்வு..

சத்தத்தில் யாரையும் எழுப்பிவிட்டாளோ? ஹாலுக்குப் போய் பார்த்தாள். யாரும் இல்லை. ப்ரம்மையோ என்ற நினைவில் திரும்பினால் வெளிவாசல் கதவு சாவி துவாரத்திலிருந்த சாவிக் கொத்து ஆடிக் கொண்டிருந்தது.

‘யாரோ இந்நேரம் வெளிய போயிருக்காங்க……’ கதவை இழுத்துப் பார்த்தால் பூட்டி இருந்தது. ஹவ்? சாவி உள்ள இருக்கும் போது வெளிய யார் எதுக்கு பூட்டனும்…? அதுவும் வீட்ல இருக்றது இவங்க 4 பேர் மட்டும் தான். ஹயா தான் ஐந்தாவது நபர்.

மணி இரவு இரண்டு. இத்தனை மணிக்கு???

இதற்குள் பால் பொங்கும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம். கிட்ச்சனைப் பார்த்து ஓடினாள். பாலை இறக்கி முடிக்கும் போது மீண்டும் ஆள் அரவம். திரும்பிப் பார்த்தால் சுகவிதா. ஓ சுகாதான் வெளிய போனாதா?

“ஏதோ சவ்ண்ட் கேட்குதுன்னு வந்தேன்…” சுகா நட்பும் கனிவுமாய்

“அது….மிளகு பால் குடிச்சா தூக்கம் வரும்னு…அவங்க தூங்காம….” விளக்க முயன்றாள். கான்ஃபிடென்ஸ் வர மாட்டேங்குது… ஏனோ திக்குகிறது.

“சாரி சாரி….நானே இதெல்லாம் கொடுத்றுக்கனும்….அவன் சாப்டவே இல்லை…யார் சொல்லியும் கேட்கலை….இதுல இத்தனை மணிக்கு பால் கொண்டு வந்து வச்சா இன்னும் கொஞ்சம் மூஞ்ச தூக்குவானோன்னு….. சாரி….. ஆக்சுவலி நைட் எப்ப வேணும்னாலும் சாப்டுறதுக்குன்னு ஒரு சப்ஜியும்…. பிசைந்த சப்பாத்தி மாவும் ஃப்ரிஜ்ல இருக்கும்……ரெண்டு போட்டுத் தாரேன்…..எப்டியாவது அவனை சாப்ட வைங்க…..”

சுகவி சப்பாத்தி தேய்க்க இவள் தவாவில் போட்டெடுக்க….அவனில் சப்ஜியை சூடு செய்யவென…..இப்பொழுது மீண்டும் ஆள் நடமாட்டம் ஹாலில்.

பார்த்தால் ப்ரபாத் தான். லியாவைக் காணாமல்தான் தேடி வந்திருந்தான்.

ய் அரைடிக்கெட் இங்க என்ன வேலை உனக்கு….? அப்பவே போய் தூங்கச் சொன்னேன்ல….” சுகவிதாவிடம் தான் பேசினான்.

“போடா பால்பாக்கெட் முதல்ல பொய் சொல்றத நிறுத்து….. உன் ஃப்ரென்ட் தூங்கனுமேன்னு சொன்ன….நான் தூங்கனும்னா சொன்ன….? அங்க அப்பாவும் பொண்ணும் அப்பவே தூங்கியாச்சு….அதோட இப்ப நீ வந்துறுக்கது லியாவைத் தேடி….இதுல எனக்காக பார்க்கிற மாதிரி சீன்..…கூட்டிட்டுப் போ உன் சிக்‌ஸரை….. அதோட தவத்தை முடிச்சுட்டு அவங்க தர்றதை சாப்டுட்டு தூங்கு….”

இது எதற்கும் பதில் சொல்லாமல் “அவள அவங்க இவங்கன்னு பேசுறத முதல்ல விடு…. உன்னை விட சின்ன பொண்ணுதான் அவ….” என்றான் அவன்.

“நாம குடுக்றதை சாப்டுவேன்னு சொல்றானா இல்லைனா? இவன் என்ன சொல்ல வர்றான்?” சங்கல்யா எண்ணம் இப்படி ஓட

“லியா சின்ன பொண்ணுன்ற நியாபகம் முதல்ல உனக்கு இருக்கட்டும்….அப்றம் எங்களுக்கு வந்து சொல்லு…” என்று வெட்டினாள் அவன் தோழி.

அடுத்த பக்கம்