நனைகின்றது நதியின் கரை 15(3)

அதோடு ரிப்போர்ட் கொடுக்காமல் டீலை இவள் பிரேக் செய்துவிட்டாள் என இப்போதைக்கு அனவரதன் இவளை டிஸ்டர்ப் செய்யாமல் இருக்க இது உதவும்…. அபவ் ஆல் இவன் இன்டியா ரீச் ஆகிற வரை அவள் எங்கே இருக்கிறாள் என இவனுக்கு புரிந்திருக்கும்…

அதனால் லியாவை அனவரதனிடம்  போகச் சொன்னான். ஆனால் இவனிடம் எல்லாவற்றிற்கும் தலையாட்டிவிட்டு இவன் அங்கு ரீச் ஆகிற டைம் அப்படி ஹாஸ்பிட்டலில் வந்து நின்றாள் அவள். இவன் எதை தவிர்க்க நினைத்தானோ எக்‌ஸாக்ட்லி அதே சிச்சுவேஷனை உண்டுபண்ணி இருந்தாள்.

அதில் அம்மா கல்யாணத்துக்கு கேட்டதும் ஆமா சாமி வேற….ஆட்டம் பாம் வெடித்தது  அவன் மனதில் அப்போது…. ஆக கொட்டி தீர்த்துவிட்டான்……தேளாக கொட்டியும் தான்….

ஆனால் இவன் கோபத்தைப் பார்த்த அரண் அப்போதுதான் நடந்த அனைத்தையும் இவனிடம் விளக்கினான்.

“முன்னால எப்பயும் விட அவ இப்பதான்டா உன்னை அதிகமா லவ் பண்றா….பாம்ப்ளாஸ்ட் லியா வேலையா கண்டிப்பா இருக்காது….. ப்ளாஸ்ட் வெல்ப்ளான்ட் அன்ட் டெக்னிகலி வெல் அட்வான்ஸ்ட்….ஒரு தனியாள் இதை செய்துறுக்க முடியாது….

இப்டி ஒரு டீமை ஹயர் செய்யனும்னா அந்த கல்ப்ரிட் ஒரு ரிச் லோஃபரா இருக்கனும். நீ குழம்பாம இப்ப அவளை கல்யாணம் பண்ணு…..அம்மா, நீ, லியா உங்க மூனு பேருக்கும் இப்ப இந்த கல்யாணம் நல்லது பண்ணும்…..” என்றான்.

மனம் உருகிப் போனான் இவன். டைரி விஷயம் தப்புதான் என்றாலும்….. அதை அவள் செய்ய காரணம்….??? அனவரதன் அங்கிள் இப்படி மிரட்டினதாய் சொன்னாராமே…..

இதோ சூழ்நிலை நிமித்தம் இவன் அவளை பாம்ப்ளாஸ்ட் செய்துவிட்டதாக நினைத்து திட்டித் தீர்க்கவில்லையா?  அதே போல் இவனை தவறாக புரிந்து கொண்டு அவள் அஸ்யூஸ்வல் ராட்சச கோபத்தை காண்பித்துவிட்டாள்.

வித்யாசம் என்னவெனில், கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்களை நடை முறைப்படுத்தும் பலம் இவனுக்கு இருக்கிறது….அது அவளுக்கு இல்லை.

குருடனால் ராஜபார்வை பார்க்க  முடியாததைப் போல், இவள் கோபத்தை ராட்சச தனமாக வெளிப்படுத்தாமல் இருக்க அவளுக்கு இயலாது. அந்த இடத்தில் அவளுக்கு ஹீலிங் தேவை. அதற்கான ட்ரீட்மென்டுக்கு கணவனாய் இனி இவன் தான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.

வெட்டிங் லாக் நிச்சயம் அவளுக்கு அவன் மீது ஒரு நம்பிக்கையையும்….இவனுக்கு அவள் மனதை  கேட்டறிய உரிமையையும் கொடுக்கும்….அதை சுகபடுத்தவும் தான். அதோடு ஆயிரம் வார்த்தை தராத நம்பிக்கையை அன்பான நியாயமான நடவடிக்கைகள் தரத்தானே செய்யும்….கணவனாய் அவன் கேர் எடுக்கும் பட்ச்சத்தில் அவளும் இவனை புரிந்து கொள்வாள்.

மேலும் இவன் எதற்காக சொல்லியிருந்தாலும் அவள் அனவரதனை தேடிப் போனதின் நோக்கம்…அதுவும் இத்தனை மன உளைச்சலான சூழலில்….? நிச்சயமாக அதற்கு உள்நோக்கம் கடமை உணர்வு  கிடையாது….….அரணுக்காக, உங்களுக்காகதான் வந்தேன்னு அனவரதன்ட்ட சொன்னாளமே….. ஆண்களுக்காக யோசித்திருக்கிறாளே…

எல்லாவற்றிற்கும் மேல இவனின் இத்தனை கோபத்திற்கும் பலியாடு போல் தலையை கொடுத்துக்கொண்டு நின்றிருக்கிறாளே தவிர ஒரு வார்த்தை இவன் மனம் வலிக்கும் வண்ணம் பதில் சொல்ல அவள் முயல கூட இல்லைதானே? ட்ரெய்ன்ல வெளியவிட்டு கதவை பூட்டிய சங்கல்யாவுக்கும் இந்த லியாவுக்கும் எத்தனை வேறுபாடு??  அடிப்படையில் நல்லவள்.

ஐயோ என் செல்லகுட்டி உன்னை ரொம்ப படுத்திட்டனே என்று இருக்கிறதுதான்…..கல்யாணம் என முடிவு செய்துவிட்டான்தான்.

ஆனாலும் இத்தனையும் தாண்டி ஒரு ஓரத்தில் இவன் மீது அவளுக்கான காதலை உணராமல் இவனது அம்மாவுக்காகதான் இவள் இவனை திருமணம் செய்கிறாள் என்ற எண்ணம் சுடுகிறது வலிக்கிறது. அம்மா பாவம் ஜோனத்…அப்படின்னு தான வெட்டிங்க்கு ரீசன் சொன்னா?

ஒருவேளை தன் காதலை உணர்ந்துவிட்டாளோ எனவும் தோன்றுகிறதுதான்…. அப்படியானால் அதை இவனிடம் ஒத்துக் கொள்ள அவளுக்கு மனமில்லை என்றாகிறது…. இந்த விஷயம் இவனுக்கு முழுதாய் புரிகின்றது என்று சொல்வதற்கு இல்லை.

மேலும் இவன் இத்தனை நாளும் அவளிடம் பச்சை மிளகாயாய்தான் தன்னை காண்பித்திருக்கிறான். இதில் இன்றைய சூழலில் இத்தனை சண்டைக்கும் வாயடிக்கும் அடுத்த நிமிடம் இவன் காதல் பாராட்டினால், இவனோடதை காதல் என புரிந்து கொள்வாளா? அல்லது வெறும் பிசிகல் டிசையர் என நினைத்து வைப்பாளா?

அல்லது அதையும்விட மோசமாக இவன் திட்றப்பல்லாம் மறுப்பு சொல்லாம திட்டு வாங்கின மாதிரி…. மனசுக்கு பிடிக்கவில்லை எனினும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவாளா? அப்படியெனில் உள்ளுக்குள் துடித்துப் போவாள். அதோடு அது அவளது மனகாயத்தை கொடூரமாய் குதறிவிடும். அப்படி ஒரு கொடுமையை இவன் தவறிக்கூட செய்துவிடக் கூடாது.

ஆக அவள் தன் காதலை உணர்ந்து இவன் காதலை புரிந்து அதை இருவரும் மனம்விட்டு பேசி சரி செய்து கொள்ளும் வரை இவனுக்கு பொறுமை அவசியம்.

அவளாய் வந்து பழகும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் இவன் தன்னை தன் காதலை கன்ட்ரோல் செய்துதான் ஆக வேண்டும். ஹாஸ்பிட்டல்லயும் சுகா கையை பிடித்து கொடுக்க போய் இவன் பக்கத்தில் அமர்ந்தவள் தூங்கிய பின்தான் இவன் தோளில் சாய்ந்தாள்.

தூங்கின பிறகுதான் அவளை தன் மடியில் சாய்த்துக் கொள்ள இவனால் முடிந்தது. விழித்ததும் சாதரணமாக கூட எழுந்து கொள்ளவில்லை அவள்…என்னமோ தொடக் கூடாதவனை தொட்டுவிட்ட மாதிரி அப்படி ஒரு ரியாக்க்ஷன்…..

அம்மா சர்ஜரி முடிவை கேட்கும் அந்த நேரம் இவனுக்கு என்ன ஒரு ஸ்ட்ரெஸ்ஸான டைம்…..இவன் மனைவியாய் உணர்ந்திருந்தாள் அப்படி இவனோடு வர மறுத்திருப்பாளா? இப்பொழுது இவன் இவளிடம் எவ்வளவு தூரம் பழகலாம்…எப்படி பழக கூடாது?….

அடுத்த பக்கம்