நனைகின்றது நதியின் கரை 15(2)

“போ சுகா அங்க அவன் தூங்காம உட்காந்துட்டு இருப்பான்…..நான் பார்த்துக்கிறேன்….”

சுகாவை அனுப்பி வைத்தவன் மீண்டும் அதே தவ கோலம். இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் என்று சங்கல்யாவுக்கு புரியவில்லை.

திரும்பி தன் உடைமைகள் இருந்த அறைக்குச் சென்றாள். போய் ட்ரெஸ் மாத்திட்டு வரலாம். அவள் கிளம்பிப் போனாள்.

ப்ரபாத்திற்கோ மனதில் ஆயிரம் கன்சர்ன்ஸ். முதல் விஷயம் அம்மா. நாளைக்கும் இவனோடு இருப்பாரா இந்த அம்மா என்ற நினைவிலிருந்து இன்னும் நாலு நாள் கழித்து யூகே கிளம்றப்ப அம்மாவை விட்டு போகனுமே என்பது வரை பலவித பாரம். அடுத்தது அவனது மனைவி.

இவனை வழி அனுப்ப ஏர்போர்ட் வந்துவிட்டு சென்ற பின் லியா இவனிடம் அரண் மொபைல் வழியாக பேசிய போதே அவனுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது அவள் அரணுக்கு எதிராக எதையோ செய்து வைத்திருக்கிறாள் என.

அது எங்கேஜ்மென்ட்டுக்கான பின்விளைவு என்பது அவன் புரிதல். அரண் பத்தி ஏதாவது மீடியாவுக்கு போட்டுக் கொடுத்திருப்பாள் என்பது வரை இவனது யூகம் இருந்தது.

அரணை அடித்தால் இவனுக்கு வலிக்கும் என்பதை வரை உணர்ந்து செய்திருக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டான்.

அரண் நடந்து கொண்ட விதம் விஷயம் கட்டுக்குள் இருக்கிறது என புரியவைக்க இவன் மிகவும் பதறினான் என்று சொல்வதற்கு இல்லைதான். சீக்கிரமாய் அவள் மனக் காயம் என்னவென்று அறிந்து சரி செய்ய வேண்டும்…..இல்லையெனில் இவளது ரிப்பென்டன்ஸ் எல்லாம் டெம்பஅரரி. இப்படித்தான் யோசித்திருந்தான்….

ஆனால் யூகே சென்றடைந்ததும்  ஆனதும் அம்மாவின் உடல்நிலை பற்றிய தகவலோடு கிடைத்த அரண் க்ரூப்ஸ் ஃபாக்ட்டரி பாம்ப்ளாஸ்ட் நியூஸில் அரண்டு போனான் இவன்.

அம்மா பற்றி ஒரு பக்கம் உயிர் தவிக்கிறது எனில், இவன் மேல் உள்ள கோபத்தில் இந்த ப்ளாஸ்ட்டை செய்தது அவனது லியாவா? என ஒரு எண்ணம் மனதை பிசைகிறது.

அரணிடம் பாம்ப்ளாஸ்ட் பற்றி கேட்டால் பெருசா ஒன்னும் இல்லை…… நோ டெத் டோல்….இப்ப எதுக்கு அதப் பத்தி பேச்சு என பேசவே மறுத்துவிட்டான். ஆக அத்தனை பெரிய ஃபாக்டரிக்கு சின்னதா ஒரு பாம் யார் எதற்காக வைக்கவேண்டும்?

லியா என்னை ரிவெஞ்ச் எடுக்கன்னு உன்னை எதுவும் தொந்தரவு செய்துட்டாளா என கேட்டுப் பார்த்தால்….அதற்கும் இப்ப எதுக்கு இந்த பேச்சு என்ற அதே பதில்….  ஒரு வேளை இந்த அளவுக்கு அவனது காயம் பட்ட குழந்தை ரியாக்ட் செய்துவிட்டாளோ?

ஓடுற ட்ரெயின்ல வெளிய விட்டு கதவை பூட்டியவள்…..என்ன செய்யமாட்டானு நினைக்கிறது? உயிர் சேதம் இல்லை என்பது மட்டுமே இவனுக்கு இருந்த ஆறுதல். மீடியாவிற்கு காசிப் லீக் பண்ற அளவுக்கு சின்ன விஷயமா பாம்ப்ளாஸ்ட்டை எடுத்துக்க முடியாதே!!

கூடவே இவனது அம்மா இந்த சூழலில் இப்படித்தான் கல்யாணம் செய்ய கேட்பாங்க என தன் அம்மாவை புரிந்து வைத்திருந்தவன், அந்த அம்மா ஹாஸ்பிட்டல் பெட்ல இருந்துட்டு கேட்கிறப்ப தன் காதலை உணராமலே இந்த லியா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு….பின்னால அதுக்காகவும் பயங்கரமா ரியாக்ட் செய்வாள் எனவும் நினைத்தான்.

பாம்ப்ளாஸ்ட் அளவு போகிறவளிடம் ரிஸ்க் எடுக்கவும் முடியாதே… அதே நேரம் இந்த நேரத்தில் அம்மாவிடம் போய் லியாவின் இந்த முகத்தையும் சொல்ல முடியாதே…..ஏனெனில் அம்மாட்ட இதுவரை அவளது ராட்சச கோபத்தை பற்றி அவன் சொன்னதே கிடையாது…..

லியா மாறிவிடுவாள் என்பது இவன் நம்பிக்கை…..தேவை இல்லாமால் அம்மாவிடம் ஏன் இவளை விட்டுகொடுத்ததாக இருக்க வேண்டும் அதோடு அம்மாவுக்கும் அது தேவையில்லாத டென்ஷன் என சொல்லி இருக்கவில்லை. தான் அவளை விரும்புவதாக மட்டும் சொல்லி இருந்தான்.

இப்போது அம்மா இருக்கும் உடல்நிலையில் அம்மாவுக்கு நிலையை புரிய வைப்பதை விட, அப்படி ஒரு நிலை வராமல் தவிர்ப்பதே நல்லது என்பது அவன் எண்ணம்.

அவள் அங்கே இல்லையெனில் அம்மாவை சமாளித்துவிடாலாம்…..அதோடு இப்பொழுது லியாவைப் பற்றி நெகடிவாக சொல்லிவிட்டு மீண்டும் நாளை அவளை மணக்க போவதாக அம்மாவிடம் போய் எப்படி சொல்வதாம்? ஆம் எந்த சூழ்நிலையிலும் அவளை மறப்பதாக ஒரு எண்ணம் இவனிடம் கிடையாது…. இவள் இவனது காட் கிவ்வன் ஈவ்.

ஆக சங்கல்யாவை கிளம்பிப் போகச் சொன்னான்…..என்னதான் காதல் இருந்தாலும் அந்த நேரத்தில் அவள் மீது இவனுக்கு கடும் கோபம் இருந்ததும் நிஜம். அவள் செய்து வைத்திருப்பது ஒன்றும் சிறு விஷயம் இல்லையே…..

அதில் ஒரு திருந்தின பாவித் தொனியில் அவள் பேச….அவன் நினைத்ததுதான் சரி என்று அவனுக்கு தோன்ற கத்தி தீர்த்துவிட்டான்.

அம்மா அப்பா இல்லைனு சொன்னாளே….மத்தவங்கட்ட அவ எவ்ளவு சாஃப்டா மூவ் பண்ணுவா….அவள போய் இப்படி திட்ட வேண்டி இருக்கேன்னு இன்னொரு பக்கம் மனசுக்குள்ள வலி…..இப்ப கிளம்பி எங்க போவா? என ஒரு தவிப்பு….அவன் அம்மா இருக்கும் நிலையில்….இவன் இதையெல்லாம் நினைத்து வேறு மறுகுவது என்றால்?

அடுத்து பேசிய அரணோ…..நீ பேசுனதுக்கு பிறகு லியா ரொம்ப அரண்டு போய் தெரியுறா…அவ ஆறுதல் படுற மாதிரி நீதான் பேச முடியும் என்றான்.

இருந்த மன அழுத்தத்தில் “அவ ஒரு ராட்சசி…அவ எதுக்கும் அசரமாட்டா” என இவன் விட்டேற்றியாய் பேச….

“அதெல்லாம் இல்ல..சில விஷயத்துக்கு ரொம்ப பயந்து பயங்கரமா ரியாக்ட் செய்றா” என அவன் பதில் சொல்ல,

“அப்படி என்ன விஷயம்?” என இவன் அழுத்தி கேட்டதில் லியாவின் பீச் விசிட்..…ரேப் அட்டெம்ட்… அவளது போலீஸ் பயம்…கத்தி வெட்டு என்பவற்றை சொன்னான் அரண்.

அப்ப கூட அரண் அந்த டைரி விஷயத்தை சொல்லவில்லை. இந்த நிலையில இவனை இன்னுமாய் ஏன் கஷ்டபடுத்த வேண்டும் என நினைத்திருக்கிறான் அவன்.

ஆக அவள் பயத்தில் கையை வெட்டிக் கொண்டாள் என கேள்வி படவும் இவனுக்கு மனது ரொம்பவும் பதறி விட்டது. சோ அவளுக்கு திரும்பவும் கால் பண்ணினான். அவள் சுகபத்திரம் தெரிந்தாக வேண்டும்….ஆனாலும் அவளை ஹாஸ்பிட்டலுக்கு திரும்பி வரவும் வைத்துவிடக் கூடாது.

அதோடு இவனுடன் லியாவுக்கு திருமணம் நடக்கும் முன்பாவது அனவரதன் அவளது அரண் பற்றிய ரிப்போர்ட்டை நம்பலாமாயிருக்கும்……ஆனால் அதன் பின் கண்டிப்பா நம்ப மாட்டார்……கூட்டு சதின்னு சொல்லிட்டு போய்டுவார்….

ஆக அரண் வீட்டைவிட்டு வெளியேறும் லியா அவளறிந்த ரிப்போர்ட்டை இப்போது கொடுத்து பார்க்கட்டுமே என்றிருக்கிறது……லெட் ஹெர் டூ சம்திங்க் குட் டூ அரண்.  இப்போது அவளிறுக்கும் டெம்பஅரரி திருந்தின மூடுக்கு நிச்சயமாக அரணைப் பற்றி மோசமான ரிப்போர்ட் கொடுக்க மாட்டாள். உண்மையை சொல்வாள்.

அடுத்த பக்கம்